தமிழ்நாட்டின் பெயரை மாற்ற வேண்டுமா? ஆரிய ரவியை விரட்டியடிக்க வேண்டுமா? தமிழ்நாடே முடிவெடு! | மக்கள் அதிகாரம்

தமிழ்நாட்டைப் பற்றி பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லாத ரவியின் பேச்சை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.

07.01.2023

தமிழ்நாட்டின் பெயரை மாற்ற வேண்டுமா?
ஆரிய ரவியை விரட்டியடிக்க வேண்டுமா? தமிழ்நாடே முடிவெடு!

பத்திரிகை செய்தி

மிழ் மொழியையும் தமிழ் பண்பாட்டையும் ஒழிக்கும் நோக்கத்துக்காக ஏற்பாடு செய்யப்பட்டதே காசி தமிழ்ச் சங்கமம். அந்த நிகழ்ச்சியை   நடத்திய   அமைப்பாளர்கள் மற்றும் தன்னார்வலர்களை கெளரவிக்கும் நிகழ்ச்சி ஆளுநர் மாளிகையில் நடைபெற்றிருக்கிறது. அதில் பேசிய தமிழின விரோதியான ரவி, தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைப்பது பொருத்தமாக இருக்கும் என்று தெரிவித்திருக்கிறார். தமிழ்நாட்டைப் பற்றி பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லாத ரவியின் பேச்சை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.

இது இந்தி எதிர்ப்பு மொழிப்போரின் 58 ஆம் ஆண்டு! தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர் வைக்க வேண்டும் என்று 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து போராடி உயிர் நீத்த தியாகி சங்கரலிங்கனாரின் 67 நினைவு ஆண்டு!


படிக்க : ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்: ஒப்புதல் அளிக்காத ஆர்.என்.ரவியை வெளியேற்று! | மருது வீடியோ


தமிழ் மொழியையும் தமிழ் பண்பாட்டையும் தமிழினத்தையும் அழிப்பதையே நோக்கமாகக் கொண்டிருக்கும் ஆரிய – பார்ப்பன சாம்ராஜ்ஜியம் தமிழ்நாட்டின் பெயரை மாற்ற வேண்டும் என்று நமக்கு சவால் விடுகிறது.

தமிழையும் தமிழ் பண்பாட்டையும் தமிழ்நாட்டையும் ஒழித்துக்கட்டும் இந்த இந்துராஷ்டிரத்துக்கான போரின் பாசிச உளவாளியான ரவி,  ஆளுநராக பதவி ஏற்றது முதல் தொடர்ச்சியாக தமிழ் நாட்டரசுக்கு எதிராகவும் தமிழினத்திற்கு எதிராகவும் செயல்பட்டு வருகிறார்.

தமிழ்நாடு எதிர்க்கும் அனைத்துத் திட்டங்களையும் பார்ப்பனிய – இந்துமதவெறி சக்திகளையும் தூபம் போட்டு தமிழ்நாட்டில் இன்னொரு இணை ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்.

இதற்கெல்லாம் மிகப்பெரிய எதிர்ப்பு தமிழ்நாட்டில் எழுந்தபோதும் அதை கொஞ்சமும் காதில் வாங்காமல் இப்பொழுது தமிழ்நாட்டின் பெயரை மாற்ற வேண்டும் என்று சொல்கிறார் இந்த பார்ப்பன பாசிஸ்டு. இப்படி சொல்வதற்கு என்ன ஒரு நெஞ்சழுத்தம் வேண்டும்?


படிக்க : ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநர் ஆர்.என்.ரவி! | மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி!


ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிஸ்டுகள் ஒருபுறம் காசி தமிழ் சங்கமம் என்று மக்களை ஏமாற்றுவதும், இன்னொரு புறம்  தமிழ்நாட்டின் பெயரை மாற்ற வேண்டும் என்றும் கொக்கரித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இந்த அக்கிரமத்தை இனியும் நாம் அனுமதிக்கக் கூடாது. பாசிச உளவாளி ஆர்.என்.ரவி.யின் கொட்டத்தை அடக்குவதற்கான போராட்டத்தை தமிழ்நாடு முன்னெடுக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கிறது.

தோழமையுடன்,
தோழர் மருது
செய்தித்தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை,
9962366321

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க