தமிழ்நாட்டு வரிப்பணத்தில் உல்லாச வாழ்க்கை! வெட்கங்கெட்ட ரவியே வெளியேறு ! | மக்கள் அதிகாரம்

தொடர்ந்து தமிழ், தமிழ்நாடு, தமிழினத்திற்கு எதிராக செயல்படும் ரவிக்கு பொங்கல் விழா நடத்த எவ்வித உரிமையும் தகுதியும் இல்லை. ஆகவே ரவி நடத்தவுள்ள பொங்கல் விழாவினை  ஊடகங்கள் புறக்கணிக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

11.01.2023

தமிழ்நாட்டு வரிப்பணத்தில் உல்லாச வாழ்க்கை!
வெட்கங்கெட்ட ரவியே வெளியேறு !

பத்திரிகை செய்தி

காவி – கார்ப்பரேட் பாசிஸ்டுகள் நிறுவிக் கொண்டிருக்கும் இந்து ராஷ்டிரத்திற்கான உளவாளியே தமிழ்நாட்டின் ஆளுநர் ரவி. அதனால்தான் தமிழ்ப்பெருமை, திருவள்ளுவர் பெருமை என்று பேசிக்கொண்டே தமிழினத்திற்கு எதிரான அனைத்து செயல்களையும் செய்து வருகிறார்.

தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைப்பதே பொருத்தமாக இருக்கும் என்றார். தமிழ்நாட்டு சட்டசபையில் அமைச்சரவை எழுதி கொடுத்ததற்கு மாறாக உரையாற்றினார். அதற்கு எதிராக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானத்தை கண்டித்து சட்டசபையில் இருந்து வெளியேறினார்.

தமிழ்நாட்டில் உள்ள ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளை அழைத்து மத்திய அரசு சொல்வதை மட்டுமே கேட்க வேண்டும் என்ற மிரட்டுகிறார்.

படிக்க : தமிழ்நாட்டை தமிழகம் என்று சொல்வதா? ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கண்டனம் | தோழர் மருது வீடியோ

இப்போது ஆளுநர் மாளிகையில் பொங்கல் விழா நடைபெறும் என்று அறிவிக்கும் அழைப்பிதழில் தமிழ்நாடு என்ற பெயரையும் தமிழ்நாட்டின் லட்சினையையும் நீக்கி இருக்கிறார் ஆரிய ரவி.

தமிழ்நாட்டு அரசின் தமிழ்நாட்டு மக்களின் வரிப் பணத்தில் உண்டு கொழுத்த ரவிக்கு, தமிழ்நாடு என்று சொன்னால் மட்டும் கசக்கிறதா என்ன? தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு எதிராக செயல்படும் ஆளுநர் மாளிகைக்கு அடிப்படை வசதிகள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட்டு ஆரிய ரவி வெளியேற்றப்பட வேண்டும்.

மொழிப்போர் தியாகிகள் போராடிய இம்மாதத்தில் தமிழ்நாடு, தமிழ் இனத்தின் மீது இப்படிப்பட்ட ஒரு தாக்குதலை தொடுத்திருக்கிறார் ரவி. தமிழ்நாட்டு மக்களாகிய நாம் இதை இனியும் அனுமதிக்க கூடாது. கோ பேக் மோடி என்று மோடியை விரட்டியடித்த தமிழ்நாடு, தன்னுடைய போர்க்குணமான போராட்டங்களை தொடர வேண்டும்.

படிக்க : தமிழ்நாட்டின் பெயரை மாற்ற வேண்டுமா? ஆரிய ரவியை விரட்டியடிக்க வேண்டுமா? தமிழ்நாடே முடிவெடு! | மக்கள் அதிகாரம்

நாகாலாந்திலே ரவி நடத்திய அக்கிரமங்களுக்கு எதிர்வினையாகத்தான் அந்த மக்களாலேயே அவர் விரட்டியடிக்கப்பட்டார். அவருடைய பிரிவு விழாவில் கூட எந்த ஒரு ஊடகமும் கலந்து கொள்ளாமல் நாகாலாந்து மாநில மக்களின் உணர்வை பிரதிபலித்தன.

அதைப்போலவே தொடர்ந்து தமிழ், தமிழ்நாடு, தமிழினத்திற்கு எதிராக செயல்படும் ரவிக்கு பொங்கல் விழா நடத்த எவ்வித உரிமையும் தகுதியும் இல்லை. ஆகவே ரவி நடத்தவுள்ள பொங்கல் விழாவினை  ஊடகங்கள் புறக்கணிக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.


தோழமையுடன்,
தோழர் சி.வெற்றிவேல்செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
9962366321

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க