திருவாரூரில் ஆர்.எஸ்.எஸ் கும்பல் நடத்திய படுகொலை! அன்று நடேச. தமிழார்வன்! இன்று வி.சி.க- வின் கவியரசன்!

திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து சாதி, மத மோதலை உருவாக்க ஆர்எஸ்எஸ் - பாஜக பாசிஸ்டுகள் தொடர்ந்து முயற்சி செய்கிறார்கள் .இதற்கு திருவாரூர் மாவட்ட காவல்துறையும் உடந்தையாக இருக்கிறது.

02.02.2023

திருவாரூரில் RSS கும்பல் நடத்திய படுகொலை!
அன்று நடேச. தமிழார்வன்!
இன்று வி.சி.க- வின் கவியரசன்!

பத்திரிகை செய்தி

டந்த வருடம் திருவாரூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் தோழர் நடேச. தமிழார்வன் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலால் கொலை செய்யப்பட்டார். இப்பொழுது விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி கவியரசன் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.

திருவாரூர், அம்மையப்பன் பகுதி, அக்கறைத் தெருவில் பா.ஜ.க.வினர் யாரும் இல்லை என்ற போதிலும் கொடியேற்ற பா.ஜ.க.வினர் தொடர்ச்சியாக பல்வேறு முயற்சிகளை ஈடுபட்டிருக்கின்றனர். இதனை இறந்து போன கவியரசன் உள்ளிட்ட விடுதலை சிறுத்தை கட்சியினரும் அப்பகுதி தாழ்த்தப்பட்ட மக்களும் தொடக்கம் முதலே எதிர்த்து வந்திருக்கின்றார்கள்.

இதனால் அப்பகுதி இளைஞர்கள் பாரதிய ஜனதா கட்சியினால் தாக்கப்பட்டு இருக்கிறார்கள். இதற்கு எதிராக மக்கள் போராடினார்கள் . தாக்குதலில் ஈடுபட்ட பா.ஜ.க. ரவுடிகள் மீது புகார் கொடுத்த மக்களையே, புகார்களை திரும்பப் பெற வலியுறுத்தி கொரடாச்சேரி இன்ஸ்பெக்டர் இளங்கோ மிரட்டி இருக்கிறார் . விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி கவியரசன் மட்டும் அப்புகாரை திரும்ப பெறவில்லை. 31.01.2023 அன்று 10 பேர் கொண்ட பிஜேபி ரவுடி கிரிமினல் கும்பல் கவியரசனை வெட்டிக் கொலை செய்துள்ளது.


படிக்க: மதுரை: தலித்துகள் மீதான ஆதிக்க சாதியினரின் கொலைவெறித் தாக்குதல்!


ஆர்.எஸ்.எஸ் – பாஜக பாசிஸ்டுகளுக்கு எதிராக போராடி உயிரிழந்த கவியரசனுக்கு மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மற்றும் மக்கள் அதிகாரம் ஆகிய அமைப்புகள் வீரவணக்கம் செலுத்துகின்றன.

தமிழ்நாடு முழுக்க ரவுடிகளையும் கிரிமினல்களையும் கட்சியில் சேர்த்திருக்கும் பாரதிய ஜனதா கட்சி, குறிப்பாக திருவாரூரைச் சேர்ந்த கருப்பு முருகானந்தம் என்ற ரவுடியைத் தான் தமிழ்நாட்டின் மாநில பொதுச் செயலாளராக்கி வைத்திருக்கிறது. இந்த கருப்பு முருகானந்தம் உள்ளிட்ட பாஜகவினர் தான் கவியரசனின் படுகொலை காரணமானவர்கள். அவர்கள் உடனடியாக வன்கொடுமை தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து ஆர்எஸ்எஸ் – பாஜகவுக்கும் ஆதிக்க சாதி வெறிக்கும் எதிராக செயல்படும் அமைப்பினர் தொடர்ச்சியாக அச்சுறுத்தப்படுவதோடு, பலரும் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து சாதி, மத மோதலை உருவாக்க ஆர்எஸ்எஸ் – பாஜக பாசிஸ்டுகள் தொடர்ந்து முயற்சி செய்கிறார்கள் .இதற்கு திருவாரூர் மாவட்ட காவல்துறையும் உடந்தையாக இருக்கிறது.

ஆகவே ஆர் எஸ் எஸ் – பாஜக ஆகிய பாசிச அமைப்புகள் உடனடியாக தடை செய்யப்பட வேண்டுமென்று மேற்கண்ட அமைப்புகளின் சார்பாக கேட்டுக்கொள்கின்றோம்.


படிக்க: சேலம் ஆதிக்க சாதி வெறியனின் ஆபாச பேச்சு! | மக்கள் அதிகாரம் கண்டனம்


மேலும் இக்கொலையில் தொடர்புடைய கருப்பு முருகானந்தம் உள்ளிட்ட பிஜேபியினரும் கொரடாச்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டரும் உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட வேண்டும். படுகொலை செய்யப்பட்ட தோழர் கவியரசனுக்கு உரிய இழப்பீடும் அவர் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் ஆர் .எஸ் .எஸ் – பா.ஜ.க பாசிஸ்டுகளுக்கு எதிராக போராடி உயிர் நீத்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி கவியரசனுக்கு எமது அமைப்புகள் சார்பில் வீரவணக்க நிகழ்ச்சி நடத்தப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

  • பாசிச ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலுக்கு தெருவில் இறங்கி பதிலடி கொடுப்போம்!
  • கம்யூனிஸ்ட்டுகள், ஜனநாயகவாதிகள் மீதான ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளது கொலைவெறிக்கு முடிவுகட்டுவோம்!
  • ஆர்.எஸ். எஸ் – ன் கருப்பு முருகானந்தம், கோ.வி.சந்துரு, கொரடாச்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோ ஆகிய கிரிமினல்களை கொலை மற்றும் வன்கொடுமைச்சட்டத்தின் கீழ் கைது செய் – சிறையில் அடை!
  • நாடு முழுவதும் சாதி,மத மோதல்களை தூண்டி மக்களை பிளவுபடுத்தும் பாசிச ஆர்.எஸ். எஸ் – ஐ தடை செய்ய போராடுவோம்!

மக்கள் கலை இலக்கிய கழகம்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி(மாநில ஒருங்கிணைப்புக் குழு),
மக்கள் அதிகாரம் – தமிழ்நாடு
தொடர்புக்கு:
97916 53200, 94448 36642, 73974 04242 ,99623 66321

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க