உ.பி: தெருவில் சுற்றித்திரியும் கால் நடைகள் – பாதிக்கப்படும் விவசாயிகள்!

வடஇந்தியாவை குளிர்ந்த அலை வாட்டி வதைத்து வரும் நிலையில், தெருவில் சுற்றித்திரியும் கால்நடைகளின் தொல்லை பெரும் தொல்லையாக உள்ளது. விவசாயிகள் திறந்த வானத்தின் கீழ் தங்கள் வயல்களில் இரவுகளைக் கழிப்பதைத் தவிர வேறு வழியில்லை.

0

த்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத் தலைமையகத்தில் பிப்ரவரி 7 ஆம் தேதி பாரதிய கிசான் யூனியன் கீழ் விவசாயிகள் தெரு கால்நடைகள் பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்சல்கர் போலீசு நிலையத்திற்குட்பட்ட ஜமுன்வாலா கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள், அரசு ஆரம்ப பள்ளிக்குள் 80-க்கும் மேற்பட்ட தெருக் கால்நடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பள்ளியின் செயல்பாட்டிற்கு இடையூறாக கால்நடைகளை அடைத்த 15 கிராம மக்கள் மீதும் விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இருப்பினும், விலங்குகள் தங்கள் பயிர்களை அழித்து வருவதாகவும், பலமுறை புகார் அளித்தும் அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால், இப்படிப்பட்ட போராட்டத்தை செய்ததாக கிராம மக்கள் குற்றம் சாட்டினர். உ.பி.யில் கிராம மக்கள் மீது ஒரு மாதத்தில் பதிவு செய்யப்பட்ட இரண்டாவது எஃப்ஐஆர் இதுவாகும்.

ஜனவரி 8 ஆம் தேதி ஹசன்பூர் போலீசு நிலையத்திற்கு உட்பட்ட கரன் கால் கிராமத்தில் உள்ள அரசு முதன்மை மையத்திற்குள் தெரு கால்நடைகளை மேய்த்ததாக பெயரிடப்பட்ட 16 பேர் மற்றும் 20 அடையாளம் தெரியாத நபர்கள் மீது அம்ரோஹா போலீசுத்துறை வழக்கு பதிவு செய்தது.

படிக்க : காட்டில் மாடு மேய்க்க மக்களுக்குத் தடை, நாட்டையே ஏய்க்க முதலாளிகளுக்கு தடை இல்லை !

ஜமுன்வாலா கிராம மக்கள் கூறுகையில், பிற கிராமங்களில் இருந்து வெளியேறும் கால்நடைகள் தங்கள் கிராமத்திற்குள் தள்ளப்படுவதாகவும், அவை பயிர்களை சேதப்படுத்துவதாகவும், பாதைகள் மற்றும் வழித்தடங்களை ஆக்கிரமிப்பதாகவும் வேதனை தெரிவித்தனர்.

கடந்த சில மாதங்களாக, தெரு கால்நடைகள் பிரச்சினையை வலியுறுத்தி, பல மாவட்டங்களில் விவசாயிகள், பள்ளிகளில் இதுபோன்ற போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

பிரஜ் பிராந்தியத்தில் இப்பிரச்சினையை கூறிவரும் ஆக்ராவைச் சேர்ந்த விவசாயி தலைவர் ஷியாம் சிங் சாஹர், “அரசாங்கம் விவசாயிகளுக்கு எதிராக அட்டூழியங்களைச் செய்து வருகிறது. மோசமான கொள்கைகளால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். குற்றவாளிகளிடம் இருந்து மேய்ச்சல் நிலத்தை அரசு விடுவித்து, தரிசு நிலத்தை மேய்ச்சலுக்காக மாற்றும் வரை, இந்தப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது. பெரும்பாலான நிலங்கள் தனியார் விவசாயம் அல்லது பிற நடவடிக்கைகளுக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. மேலும், போதிய தண்ணீர் மற்றும் தீவனம் இல்லாததால், கௌசாலைக்கு மாற்றப்பட்ட மூன்று-நான்கு மாதங்களில் மாடுகள் இறக்கின்றன” என்று கூறினார்.

மாநில கால்நடைத் துறை அமைச்சர் தரம்பால் சிங் கருத்துப்படி, மாநிலத்தில் 6,222 பசுக் காப்பகங்களில் 8.55 லட்சம் வீடற்ற கால்நடைகள் உள்ளன” என்று கூறினார்.

0-0-0

பிப்ரவரி 2 ஆம் தேதியன்று தெரு கால்நடைகளால் அதிக அளவில் பயிர்களை சேதமடைந்ததால் மனமுடைந்த 26 வயதான விவசாயி குல்தீப் சிங், உ.பி.யின் ஜஸ்புரா பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு அருகில் உள்ள கால்நடைத் தோட்டத்தில் பிப்ரவரி 2 அன்று மாலை தற்கொலை செய்து கொண்டார்.

இறந்த குல்தீப் சிங், கிட்டத்தட்ட மூன்று பிகா (நிலத்தின் பரப்பளவை அளவிடுவதற்கான ஒரு பாரம்பரிய அலகு) நிலத்தில் விதைத்து நல்ல விளைச்சலுக்காக காத்திருந்தார். ஆனால், மழை குறைந்ததால், பாசனத்துக்கு கூடுதல் செலவு செய்ய வேண்டியிருந்தது. பிப்ரவரி 2 அன்று, அவரது வயல் தெரு கால்நடைகளால் முழுமையாக சேதப்படுத்தப்பட்டது.

உறவினர்கள் கால்நடைத் தோட்டத்தை நோக்கிச் சென்றபோது குல்தீப் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக குல்தீப் சிங்-ன் மாமா ராஜேந்திர சிங் தெரிவித்தார். குல்தீப்பின் மாமா ராஜேந்திர சிங் கூறுகையில், “அவர் ஏற்கனவே சில கடன்களில் சிக்கி இருந்தார். அவரது தந்தை சுரேந்திர சிங்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இதே பிரச்சினையை சந்தித்தார். குல்தீப் மத்திய வங்கியில் ரூ.2.50 லட்சம் கடன் வாங்கி இருந்தார். தனது பயிர்களை தெரு கால்நடைகள் சேதப்படுத்தியதால் மனமுடைந்திருந்தார் குல்தீப். இந்நிலையில் கடன் தொகையை வட்டியுடன் திருப்பிச் செலுத்துமாறு வங்கி அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. ஏற்கனவே வாங்கியக் கடன்களுக்காக அவரது வீடும் அடமானம் வைக்கப்பட்டது. வேறு வழியின்றி அவர் தனது வாழ்க்கையை முடித்துக் கொள்ள முடிவு செய்தார்” என்று ராஜேந்திரா கூறினார்.

படிக்க : அசாம் : புதிய கால்நடை பாதுகாப்பு மசோதா – 2021

“குல்தீப்பின் தந்தைக்கு 9 பிகா நிலமும், சகோதரர்கள் மூவருக்கும் தலா 3 பிகா நிலமும் இருந்தது. குல்தீப்பின் தந்தை பழனி நகரில் உள்ள ஒரு வங்கியில் 3 ஆண்டுகளுக்கு முன்பு கடன் வாங்கி இருந்தார். அந்த கடனை கட்ட முடியாமல் அதே ஆண்டு அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்” என்று ராஜேந்திர சிங் மேலும் கூறினார்.

வடஇந்தியாவை குளிர்ந்த அலை வாட்டி வதைத்து வரும் நிலையில், தெருவில் சுற்றித்திரியும் கால்நடைகளின் தொல்லை பெரும் தொல்லையாக உள்ளது. விவசாயிகள் திறந்த வானத்தின் கீழ் தங்கள் வயல்களில் இரவுகளைக் கழிப்பதைத் தவிர வேறு வழியில்லை.

கால் நடைகளுக்கு முக்கியத்துவம் தருகிறோம் என்ற பெயரில் தெருக்களில் கால்நடைகளை திரியவிடுகிறது யோகி அரசு. இதனால் பல்வேறு இடையூறுகள், பயிர் சேதங்கள் விவசாயிகளுக்கும், பொது மக்களுக்கும் ஏற்படுகின்றன. மாடு புனிதம் என்ற பெயரில் கால் நடைகளுக்கு அதிகமாக செலவு செய்யும் யோகி ஆட்சியில் விவசாயிகளின் தற்கொலை குறையப்போவதில்லை.

சந்துரு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க