எழுச்சிகரமாக நடைபெற்ற பு.ஜ.தொ.மு-வின் வெள்ளிவிழா!

02.4.2023 அன்று நடைபெற்ற பு.ஜ.தொ.மு-வின் வெள்ளிவிழாவில் தோழர்கள், மாற்றுக் கட்சி நண்பர்கள், ஆதரவாளர்கள், ஜனநாயக சக்திகள் மற்றும் எமது தொழிலாளர்கள் குடும்பத்தோடு கலந்து கொண்டார்கள்.

தமிநாட்டில் புரட்சிகர அரசியலை தாங்கி செயல்பட்டுவரும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தற்போது 2023-ல் தனது 25-ஆம் ஆண்டை நிறைவு செய்துள்ளது. ஏப்ரல் 2 ஆம் தேதி பட்டாபிராமில் புஜதொமு மாநில ஒருங்கிணைப்புக்குழுவின் சார்பாக வெள்ளிவிழா நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

பு.ஜ.தொ.மு-வின் வெள்ளிவிழாவில் எமது தொழிலாளர்கள் குடும்பத்தோடு கலந்து கொண்டார்கள். திருவள்ளூர், ஓசூர், வேலூர், காஞ்சிபுரம், மதுராந்தகம், மணலி (சென்னை), திருப்பெரும்புதூர், பூவிருந்தவல்லி, ஆவடி, அம்பத்தூர், பட்டாபிராம் என பல்வேறு மையங்களிலிருந்து தொழிலாளர்கள் எமது முன்னெடுப்பில் கலந்து கொண்டனர். பு.மா.இ.மு., ம.க.இ.க, மக்கள் அதிகாரம் ஆகிய சகோதர அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டார்கள்.

இடது தொழிற்சங்க மையம் (LTUC) அமைப்பின் மாநிலத் தலைவர் தோழர் A.S.குமார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில இணை கொள்கை பரப்புச் செயலாளர் திரு. திராவிடமணி, மக்கள் ஜனநாயக இளைஞர் முன்னணி அமைப்பின் சார்பில் தோழர்கள் ஞானம் மற்றும் புவனசேகர், புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பில் தோழர் வள்ளுவன், சமூக செயற்பாட்டாளரான தோழர் தம்மவேல், மணலி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு (FMTU) பொதுச் செயலாளர் தோழர் பொ.பிரகாஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

படிக்க : நேரலை | ஏப்ரல் 02, 2023: பு.ஜ.தொ.மு-வின் வெள்ளிவிழா!

பு.ஜ.தொ.மு (மாநில ஒருங்கிணைப்புக்குழு) தலைமையை ஏற்றுக் கொண்ட கிளை மற்றும் இணைப்புச்சங்க நிர்வாகிகள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

பு.ஜ.தொ.மு-வின் தொடக்ககாலம் துவங்கி, பிளவுக்குப் பின் மாநில ஒருங்கிணைப்புக்குழு உருவாகி இயங்கும் தற்காலம் வரை எம்மோடு பயணித்து வரும் தோழர்கள் ஆ.கா.சிவா, சு.பரசுராமன், எஸ்.சுந்தர், ம.சரவணன், சி.வெற்றிவேல்செழியன், பா.விஜயகுமார் ஆகியோர் தமது அனுபவ உரைகளை நறுக்கென தொகுத்தளித்தனர். தோழர் ப.சக்திவேல் அவர்கள்து வரவேற்புரையும், தோழர் து.இலட்சுமனண் வழங்கிய நன்றியுரையும் கூட அனுபவ பகிர்வுகளாகவே இருந்தன.

ம.க.இ.க புதியதாக உருவாக்கியுள்ள “சிவப்பு அலை” கலைக்குழு தோழர்களும், எமது பு.ஜ.தொ.மு தோழர்களும் இணைந்து கூட்டத்தின் இடை, இடையே தொழிலாளி வர்க்கக் குரலை இசையாய் ஒலிக்கச் செய்தனர்.

புஜதொமு 25-ஆம் ஆண்டை நிறைவு செய்வதை நினைவு கூறும் வகையில் தோழர்களுக்கு ஜனநாயக சக்திகளுக்கும் சிவப்பு அலை கலைக்குழுவிற்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.

பு.ஜ.தொ.மு-வின் வாரிசாக எமது மாநில ஒருங்கிணைப்புக்குழு இயங்கி வருவதையும், எமது அமைப்பு வரலாற்றின் வழிநெடுகிலும் இருந்த தனிநபர் பங்களிப்பு நினைவுகூரத்தக்கது என்கிற போதிலும் இந்த அமைப்பு முழுவதுமாக எந்த ஒரு தனிநபருக்கும் உடைமையாக இல்லாமல் கூட்டுத்துவ சிந்தனை, கூட்டுத்துவ செயல்பாடு கொண்டிருப்பதையும் எமது வெள்ளிவிழா நிகழ்ச்சிகள் நிலைநாட்டின.

நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்னதாக வெள்ளிவிழா நினைவாக புதிய கொடிக்கம்பம் நிறுவப்பட்டது. வடக்கு மண்டல பு.ஜ.தொ.மு-வின் பொதுச்செயலாளர் தோழர் ம.சரவணன் கொடியேற்றினார்.


தகவல்:
வடக்கு மண்டல பு.ஜ.தொ.மு
(இணைப்பு: பு.ஜ.தொ.மு – மாநில ஒருங்கிணைப்புக்குழு)
செல் :7397404242

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க