அறிவிப்பு: மாநாடு பேரணி தேதி ஒத்திவைப்பு!

உயர்நீதிமன்ற கிளையின் உத்தரவுபடி, மாநாடு நடத்துவது என்பது உறுதி. மற்ற பேச்சாளர்களின் தேதியை முடிவு செய்த பிறகு கூடிய விரைவில் மாநாட்டு தேதியை அறிவிப்போம்.

அன்பார்ந்த தோழர்களே நண்பர்களே, வணக்கம்.

“ஆர்.எஸ்.எஸ் – பாஜக; அம்பானி – அதானி பாசிசம் ஒழிக!
சுற்றி வளைக்குது பாசிசப் படை:
வீழாது தமிழ்நாடு! துவளாது போராடு!” என்ற தலைப்பிலே மே தினத்தில் மதுரையில் மாநாடு நடத்த திட்டமிட்டிருந்தோம் என்பது தாங்கள் அனைவரும் அறிந்ததே.

ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிச சக்திகளின் தூண்டுதல் காரணமாக மதுரையில் பல இடங்களில் சுவரெழுத்துக்கள் அழிக்கப்பட்டன. சுவரெழுத்துக்கள் எழுதியதற்காக தோழர்கள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் மாநாட்டை நடத்தவிடாமல் செய்வதற்கு ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிச சக்திகள் போலீசிடம் புகார் மனு அளித்திருந்தன.


படிக்க : சுவர் விளம்பரத்தை அழித்த ஆர்.எஸ்.எஸ்-பாஜக பாசிச கும்பலும் அதற்கு அடியாள் வேலை பார்க்கும் போலீசும்!


மாநாடு நடத்துவதற்கான அனுமதியை தராமல் போலீசு இழுத்தடித்ததன் காரணமாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மூத்த வழக்கறிஞர் லஜபதி ராய் மூலமாக மனு தாக்கல் செய்தோம். மதுரையில் சித்திரைத் திருவிழா இருப்பதால் போலீஸ் பாதுகாப்பு அளிக்க முடியாது என்று தெரிவித்தது. அதை ஏற்றுக்கொண்டு நீதிமன்றம் மாற்றுத் தேதியில் நடத்த அனுமதி கொடுத்தது.

உயர்நீதிமன்ற கிளையின் உத்தரவுபடி, மாநாடு நடத்துவது என்பது உறுதி. மற்ற பேச்சாளர்களின் தேதியை முடிவு செய்த பிறகு கூடிய விரைவில் மாநாட்டு தேதியை அறிவிப்போம்.

அனுமதி பெற்று பல அமைப்புத் தலைவர்களையும் பங்கேற்க வைத்து ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசத்துக்கு எதிராக அனைவரையும் ஒன்று திரட்ட வேண்டிய வரலாற்றுக்கடமை நமக்கு இருப்பதால் இந்த மாநாட்டை நடத்த வேண்டியது நம்முடைய கடமை. அக்கடமையை நிச்சயம் செய்து முடிப்போம்.


படிக்க : மதுரை: மே 1 மாநாடு சுவர் விளம்பரங்களை அழித்த போலீசு மீது நடவடிக்கை எடுத்திடுக! | ம.க.இ.க மனு


சுற்றி வளைக்குது பாசிசப்படை என்று நம்முடைய மாநாட்டின் தலைப்பிலேயே ஒரு முழக்கம் இருக்கிறது. அதுதான் இப்போது நடந்திருக்கிறது. எவ்வளவு தடைகள் வந்தாலும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க, அம்பானி – அதானி பாசிசம் ஒழிக! வீழாது தமிழ்நாடு! துவளாது போராடு! மாநாட்டை நடத்திக் காட்டுவோம். ஆர்.எஸ்.எஸ் –  பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசத்துக்கு எதிரான ஒரு மாபெரும் எழுச்சியை தமிழ்நாட்டில் உருவாக்கி காட்டுவோம்.

தோழர்களே,
நண்பர்களே!
ஜனநாயக சக்திகளே!
பேச்சாளர்களின் தேதி உறுதி செய்யப்பட்ட பின்
விரைவில் மாநாட்டுத் தேதியை அறிவிக்கிறோம்!
ஆதரவு தாருங்கள்!

நன்றி!

மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
(மாநில ஒருங்கிணைப்புக் குழு),
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு – புதுவை

தொடர்புக்கு : 97916 53200, 94448 36642, 73974 04242, 99623 66321.


விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க