மன் கி பாத்: கேட்காத மாணவர்களை விடுதிக்குள் அடைத்த கல்லூரி!

நர்சிங் மாணவர்கள் 36 பேர் மீது விடுதில் அடைத்து வைக்கும் தண்டனை ஏவப்பட்டுள்ளது. இது சிறையில் அடைத்துவைக்கும் தண்டனைக்கு ஒப்பானதாகும்.

0

மோடியின் “மன் கி பாத்” வானொலி நிகழ்ச்சி ஏப்ரல் 30 அன்று ஒலிபரப்பட்டது. அது 100-வது எபிசோட் என்பதால் பல்வேறு இடங்களில் கட்டாயமாக கலந்து கொள்ள மாணவர்கள் நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக சண்டிகர் உள்ள முதன்மை சுகாதார நிறுவனமான முதுகலை மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (PGIMER) 100-வது எபிசோட்டில் கலந்து கொள்ளாத 36 நர்சிங் மாணவர்களை ஒருவாரம் விடுதியை விட்டு வெளியேவர தடைவிதித்துள்ளது.

இந்த செய்தி மே 10 அன்று ஊடகங்களில் வெளிவந்து கொந்தளிப்பதை ஏற்படுத்தியுள்ளது. நிகழ்ச்சியில் மாணவர்கள் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டுமென்று PGIMER நிறுவனத்தின் இயக்குனர் கூறியுள்ளார். PGIMER நர்சிங் கல்லூரியில், நேஷ்னல் இன்ஸ்ட்டியூட் ஆப் நர்சிங் படிக்கும் 28 மூன்றாம் ஆண்டு மாணவர்கள் மற்றும் 8 முதலாம் ஆண்டு மாணவர்கள் ஆகிய 36 மாணவர்கள் மன் கி பாத் நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை என்று குற்றம்சாட்டபட்டார்கள்.

மாணவிகள் தங்கியிருந்த விடுதி வார்டன் “ஏப்ரல் 29-ஆம் தேதி இரவும், 30-ஆம் தேதி காலையும் மாணவர்களுக்கு மன் கி பாத் 100 எபிசோட்டில் கலந்துகொள்ள வேண்டும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அந்த 36 மாணவர்கள் மட்டும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை” என்று மாணவர்கள் மீது புகாரளித்துள்ளார்.

படிக்க : மோடியின் மன் கி பாத்: கேட்க ஆள் இல்லையென்றால் அபராதமா?

இதனை அடுத்து மே 3 அன்று கல்லூரி நிர்வாகம் தண்டிக்க பிறப்பித்த உத்தரவில், ஒரு வாரத்திற்கு மாணவர்கள் விடுதியை விட்டு வெளியே செல்ல தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

செவிலியர்கள் நலன் சங்கத்தின் தலைவர் மஞ்சீக் சாத், “மன் கி பாத் நிகழ்வானது அனைத்து மாணவர்களின் கட்டாய வருகையைக் கோரும் ஒரு முக்கியமான கல்வி விரிவுரை அல்லது கருத்தரங்கம் அல்ல. இதுபோன்ற கருத்தரங்குகள் அல்லது விரிவுரைகளைத் தவிர்ப்பது கூட தண்டனையை ஈர்க்காது” என்று கூறினார்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஒரு தனியார்பள்ளியில் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாத மாணவர்களுக்கு அபராத விதிக்கப்பட்டது என்பது நாம் அறிந்திருப்போம். தற்போது நர்சிங் மாணவர்கள் 36 பேர் மீது விடுதில் அடைத்து வைக்கும் தண்டனை ஏவப்பட்டுள்ளது. இது சிறையில் அடைத்துவைக்கும் தண்டனைக்கு ஒப்பானதாகும். மோடியின் உரையை கேட்காதது அடைத்துவைக்கும் அளவிற்கான ஒரு குற்றமா? இல்லை இல்லவே இல்லை!

ஒரு பொது நிகழ்வில் கலந்துகொள்வது கலந்துகொள்லாமல் இருப்பதும் மாணவர்களின் தனிப்பட்ட விருப்பம். ஆனால் பாசிஸ்டு மோடியின் மன் கி பாத் நிகழ்வை அனைத்து மாணவர்களும் கட்டாயம் கேட்க வேண்டும் என்று வலியுறுத்துவதும், கலந்து கொள்ளாத மாணவர்களை தண்டிப்பதும் பாசிஸ்டு மோடி தலைமயிலான ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல் நடத்தும் ஓர் பாசிசஅடக்குமுறை.

கல்பனா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க