இந்தியாவில் 2022 ஆம் ஆண்டு 194 பத்திரிகையாளர்கள் ஒடுக்கப்பட்டுள்ளார்கள்!

ஜனநாயகமற்ற பாசிச கும்பலிடமிருந்து முற்போக்கு பத்திரிகையாளர்கள் - ஊடகவியலாளர்களை பாதுகாக்க வேண்டியது உழைக்கும் மக்களாகிய நம் அனைவரின் கடமையாகும்.

0

2022 ஆம் ஆண்டில் இந்தியா முழுவதும் 7 பெண் பத்திரிகையாளர்கள் உட்பட மொத்தம் 194 பத்திரிகையாளர்கள் இலக்கு வைக்கப்பட்டதாக உரிமைகள் மற்றும் இடர் பகுப்பாய்வு குழு (RIGHTS & RISKS ANALYSIS GROUP – RRAG) தெரிவித்துள்ளது.

இந்த ஊடகவியலாளர்கள் அரசு நிறுவனங்கள், அரசு சார்பற்ற அரசியல் வாதிகள் மற்றும் குற்றவாளிகள் மற்றும் ஆயுதமேந்திய குழுக்களால் இலக்கு வைக்கப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீரில் அதிக எண்ணிக்கையிலான 48 பத்திரிகையாளர்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து தெலுங்கானாவில் 40 பத்திரிகையாளர்கள்.

ஒடிசா (14), உத்தரப்பிரதேசம் (13), டெல்லி (12), மேற்கு வங்கம் (11), மத்தியப் பிரதேசம் மற்றும் மணிப்பூர் (தலா 6), அசாம் மற்றும் மகாராஷ்டிரா (தலா 5), பீகார், கர்நாடகா மற்றும் பஞ்சாப் (தலா 5), சத்தீஸ்கர், ஜார்கண்ட் மற்றும் மேகாலயா (தலா 3), அருணாச்சல பிரதேசம் மற்றும் தமிழ்நாடு (தலா 2), மற்றும் ஆந்திரா, குஜராத், ஹரியானா, புதுச்சேரி, ராஜஸ்தான், திரிபுரா மற்றும் உத்தரகண்ட் (தலா 1) என்ற எண்ணிக்கையில் பத்திரிகையாளர்கள் நாடுமுழுவதும் இலக்கு வைக்கப்பட்டனர்.

படிக்க : பெரியார் பல்கலை: கருஞ்சட்டைக்கு விதித்த தடை நீக்கம்! இது தமிழ்நாடு! ஆர்.என்.ரவியே வெளியேறு! | பு.மா.இ.மு

103 ஊடகவியலாளர்கள் அரசு நிறுவனங்களால் இலக்கு வைக்கப்பட்டதாகவும், 91 ஊடகவியலாளர்கள் அரச சார்பற்ற அரசியல்வாதிகளால் இலக்கு வைக்கப்பட்டதாகவும் RRAG தெரிவித்துள்ளது.

103 பத்திரிகையாளர்களில், 70 பேர் கைது செய்யப்பட்டர் அல்லது தடுத்து வைக்கப்பட்டனர். 14 பேர் மீது முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டன. மேலும், நான்கு பேருக்கு போலீசு மற்றும் அமலாக்க துறையால் சம்மன் அனுப்பப்பட்டது. 15 ஊடகவியலாளர்கள் பொது அதிகாரிகள் மற்றும் போலீசிடமிருந்து உடல்ரீதியான தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள் மற்றும் துன்புறுத்தல்களை எதிர்கொண்டனர். மேலும், அவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதையும் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

RAAG-இன் இயக்குனர் சுஹாஸ் சக்மா கூறுகையில், “தெலுங்கானாவில் 40 பேர் கைது / காவலில் வைக்கப்பட்டனர்; அதைத் தொடர்ந்து உத்தரபிரதேசம் (6); ஜம்மு & காஷ்மீர் (4); மத்தியப் பிரதேசம் (3), அசாம், சத்தீஸ்கர், ஜார்கண்ட், மகாராஷ்டிரா, மணிப்பூர் மற்றும் ஒடிசா ( தலா 2); மற்றும் ஆந்திரா, டெல்லி, தமிழ்நாடு, உத்தரகண்ட் மற்றும் மேற்கு வங்கம் ( தலா 1)” கைது / காவலில் வைக்கப்பட்டனர் என்றார்.

இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் 14 பத்திரிகையாளர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவதூறு (பிரிவு 500), 295 A (மத உணர்வுகளை சீர்குலைக்கும் செயல்கள்), 153 A (வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவிக்கும் செயல்) பிரிவுகள் 124 A (தேசத்துரோகம்); தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 66-சி, பிரிவு 67 மற்றும் பிரிவு 69 மற்றும் பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டம் ஆகியவற்றில் வழங்கு பதிவு செய்யப்பட்டன.

2022-இல், 4 பத்திரிகையாளர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர். அவர்களில் 3 பேர் – ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த கௌஹர் கிலானி மற்றும் யாஷ் ராஜ் சர்மா மற்றும் மணிப்பூரைச் சேர்ந்த வாங்கெம்சா ஷாம்ஜாய் – போலீசு அழைத்து சென்றது. மகாராஷ்டிராவை சேர்ந்த சுசேதா தலாலுக்கு டெல்லியில் அமலாக்க இயக்குனரகம் சம்மன் அனுப்பியது.

3 பத்திரிகையாளர்கள் – ஆகாஷ் ஹுசைன், சன்னா இர்ஷாத் மட்டூ மற்றும் ராணா அய்யூப் – வெளிநாட்டிற்கு செல்லவிடாமல் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

நாடு முழுவதும் அரசு சாராத அரசியல்வாதிகள் மற்றும் குற்றவாளிகளால் தாக்கப்பட்ட 91 பத்திரிகையாளர்களில், ஒடிசா மற்றும் உத்தரபிரதேசத்தில் (தலா 5) பத்திரிகையாளர்கள் மீது அதிக எண்ணிக்கையிலான தாக்குதல்கள் பதிவாகியுள்ளன.

அரசு சாரா அரசியல்வாதிகள் மற்றும் குற்றவாளிகளால் 7 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர். 26 வயதான சுபாஷ் குமார் மஹ்தோ என்ற பத்திரிகையாளர் பீகாரில் மணல் மற்றும் நில மாஃபியா குறித்து செய்தி வெளியிட்டதற்காக கொல்லப்பட்டார். மீதமுள்ளவர்கள் தனிப்பட்ட விரோதத்தால் கொல்லப்பட்டனர்.

படிக்க : மகாராஷ்டிரா: முஸ்லீம் மக்களை படுகொலை செய்யும் பசு குண்டர் படை!

கடந்த டிசம்பர் 1, 2022 நிலவரப்படி, பத்திரிகையாளர்களைப் பாதுகாக்கும் குழு (Committee to Protect Journalists – CPJ) 363 பத்திகையாளர்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டதாகக் கூறியது.

பத்திரிகை சுதந்திரத்தில் இந்தியா வேகமாக பின் தங்கிய நிலைக்கு சென்றுகொண்டிருக்கிறது என்பதற்கு மேற்கண்ட உரிமைகள் மற்றும் இடர் பகுப்பாய்வு குழு வெளியிட்ட புள்ளிவரங்கள் உதாரணமாக அமைகின்றன. இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் – பாஜக பாசிச கும்பல் மற்றும் பல்வேறு மாஃபியாக்களை அம்பலப்படுத்து பத்திரிகையாளர்கள் தொடங்கி அமெரிக்காவில் மோடியை கேள்விகேட்ட பெண் பத்திரிகையாளர் வரை மோடி தலைமையிலான ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க சங் பரிவார கும்பல் இலக்கு வைத்து டிஜிட்டல் மற்றும் நேரடியாக தாக்குகிறது அல்லது ஒடுக்குகிறது என்பதே உண்மை.

இந்த ஜனநாயகமற்ற பாசிச கும்பலிடமிருந்து முற்போக்கு பத்திரிகையாளர்கள் – ஊடகவியலாளர்களை பாதுகாக்க வேண்டியது உழைக்கும் மக்களாகிய நம் அனைவரின் கடமையாகும்.

கல்பனா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க