ஜூன் 24 அன்று மலை மாட்டிறைச்சி கடத்தப்பட்டதாக குற்றம்சாட்டி பாசுக் குண்டர் படை ஒருவரை கொடூரமாக தாக்கி கொலைசெய்துள்ளது.
சுமார் 450 கிலோ இறைச்சியை ஏற்றி கொண்டு மும்பைக்கு சென்று இரண்டு நபர்களின் வாகனத்தை, சின்னார்-கோட்டி சாலையில் 10-15 பேர் கொண்ட பசுக் குண்டர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். இருவரையும் பசுக் குண்டர் படை இரும்பு கம்பிகள் மற்றும் உருட்டு கட்டைகளை கொண்டு கொலைவெறியுடன் தாக்குதல் நடத்தியுள்ளது.
தாக்குதலுக்குள்ளான இருவர், 32 வயதான அஃபான் அப்துல் மஜித் அன்சாரி மற்றும் நசீர் ஹுசைன் ஷேக் ஆகியோர் ஆவர். படுகாயங்களுடன் இருவரும் மருத்துவமைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி அன்சாரி உயிரிழந்தார். ஷேக் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்றுவருகிறார். ஷேக் கொடுத்த புகாரின் அடிப்படையில் கொலை மற்றும் கொலை முயற்சி, கலவரம் போன்றவற்றுடன் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
படிக்க : ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு காவிக்கொடிக்கு வணக்கம் செலுத்திய கலெக்டர்!
இதற்கிடையில், இறைச்சி தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து நாசிக் ஊரக துணை எஸ்பி சுனில் பாம்ரே கூறுகையில், “அது எருமை இறைச்சியா அல்லது மாட்டிறைச்சியா என்பது குறித்து சோதனை நடத்தப்படும்” என்றார்.
ஷேக்கும் அன்சாரியும் தங்கள் காரில் அகமதுநகரில் இருந்து மும்பைக்கு சென்று கொண்டிருந்தார்கள் என்று நாசிக் கிராமப்புற எஸ்பி ஷாஹாஜி உமாப், கூறினார்.
“சின்னாரில் உள்ள ஒரு சுங்கச்சாவடியை கடக்கும்போது, அவர்களின் வாகனத்திற்குள் இறைச்சிகள் இருப்பதே யாரோ பார்த்திருக்கிறார்கள். அந்த நபர் தங்கள் காரைப் பற்றியும், இறைச்சியை எடுத்துச் சென்றதைப் பற்றியும் பசு குண்டர்களிடம் கூறியிருக்கலாம்” என்று ஷேக் சந்தேகிக்கிறார்.
இதேபோல் ஜூன் 10 அன்று, இந்த தாக்குதல் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து ஒரு 20-25 கிலோ மீட்டர் தொலைவில், ஒருவர் பசு குண்டர்களால் அடித்து கொலைசெய்யப்பட்டுள்ளார்.
கால்நடையை கடத்திசென்றதாக குற்றம்சாட்டி, 23 வயது லுக்மான் அன்சாரியை அடித்து கொலைசெய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள இகத்புரி அருகே அன்சாரி மற்றும் அவரது இரண்டு உதவியாளர்களான 36 வயதான பப்பு அதிக் பாடி மற்றும் 25 வயதான அக்யூல் குலாம் கவண்டி ஆகியோர் சட்டவிரோதமாக கால்நடைகளை கொண்டு செல்வதாக குற்றம்சாட்டி, ராஷ்ட்ரிய பஜ்ரங் தளத்தைச் சேர்ந்த 6 குண்டர்கள் மூவர் மீதும் கொலைவெறி தாக்குதல் நடத்தியதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டது.
குற்றம்சாட்டப்பட்ட ஆறு பஜ்ரங் தள் குண்டர்கள் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. தி இந்து செய்தியின் படி, மூன்று பேரும் இரண்டு பசுக்கள், ஒரு காளை மற்றும் ஒரு கன்றுக்குட்டியை எடுத்து செல்லும்போது காவிக் குண்டர்கள் அவர்களின் வாகனத்தை மறித்து, மூவரிடமும் பணம் கேட்டு தாக்கியுள்ளனர்.
படிக்க : சுரேஷ் சவாங்கே வெறுப்பு பேச்சு – காவி குண்டர்கள் வன்முறை வெறியாட்டம்!
குண்டர்களிடமிருந்து அதிக் பாடி தப்பியோடிவிட்டார். குலாம் கவுண்டி மற்றும் அன்சாரி மீது பசுக் குண்டர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால், அன்சாரி ஜூன் 10 ஒரு பள்ளத்தாக்கில் இறந்து கிடந்தார் என்று கூறப்படுகிறது.
“அன்சாரியின் உடலில் அவர் இழுத்துச் செல்லப்பட்டதற்கான அடையாளங்கள் உள்ளன. அவர்கள் சட்டவிரோதமாக மாடுகளை எடுத்துச் சென்றார்களா என்பது எங்களுக்கு இன்னும் தெரியவில்லை” என்று இந்த வழக்கின் விசாரணை அதிகாரி தி இந்துவிடம் தெரிவித்தார்.
இந்த இரண்டு முஸ்லீம் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்மகாராஷ்டிர மாநிலம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க சங் பரிவார குண்டர்கள் சுதந்திரமாக நடமாடுவதையும், முஸ்லீம் மக்களை நரவேட்டை ஆடுவதையும் நமக்கு உணர்த்துகிறது.
புகழ்