உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் நில மாஃபியா குறித்து செய்தி வெளியிட்டதற்காக பத்திரிகையாளர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். பாரதிய ஜனதா கட்சியினரால்தான் அவர் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பார் என்று பத்திரிகையாளரின் குடும்பத்தினர் குற்றம்சாட்டி போலீசில் புகார் அளித்துள்ளனர்.
ஜூன் 24 அன்று இரவு கோட்வால் போலீசு நிலைய எல்லைக்கு அருகில் உள்ளூர் நாளிதழில் பணியாற்றிய 30 வயதுள்ள பத்திரிகையாளர் மன்னு அவஸ்தி பலந்த காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டார். அவஸ்தி கான்பூரில் உள்ள ஹாலெட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்த ஆண்டு மார்ச் மாதம் உள்ளூர் போலீசு நிலையத்தில் அவஸ்தி தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக புகார் அளித்தார். “நில முறைகேடுகள் அப்பலப்படுத்தி கட்டுரை எழுதியதை தொடர்ந்து நகரத்தின் நில மாஃபியாவைச் சேர்ந்த நான்கு நபர்கள், மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார்கள். அன்ஷு குப்தா, பங்கஜ் குப்தா மற்றும் தீபக் சிங் ஆகியோரின் அச்சுறுத்தல்களால் நான் அஞ்சுகிறேன்” என்று மார்ச் 17, 2023 அன்று உன்னாவ் எஸ்பி மற்றும் பிற மூத்த அதிகாரிகளிடம் அவஸ்தி எழுத்துப்பூர்வ புகாரில் கூறியுள்ளார்.
படிக்க : மகாராஷ்டிரா: முஸ்லீம் மக்களை படுகொலை செய்யும் பசு குண்டர் படை!
பத்திரிகைக்கு அவர் அனுப்பிய கடிதத்தில், “நான் நில மாஃபியா கும்பலுக்கு எதிராக செய்திகளை வெளியிட்டத்திலிருந்து உன்னாவ் பகுதில் என் வாழ்க்கை மிகவும் கடினமாக மாறிவிட்டது. என்னைக் கொல்ல அழைப்புகள் வருகின்றன. பதிவு எண்கள் இல்லாத கார்கள் என்னைப் பின்தொடர்கின்றன. நான் தாக்கப்பட்டாலோ அல்லது என் குடும்பத்தைச் சேர்ந்த எவரேனும் தாக்கப்பட்டாலோ இவர்களே பொறுப்பு” என்று மூவரின் பெயரையும் குறிப்பிட்டிருந்தார்.
ஜூன் 24 அன்று இரவு 10.25 மணியளவில் அவஸ்தி தனது ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் துப்பாக்கியால் சுட்டனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் வலது தோள்பட்டையில் காயமடைந்து விழுந்துகிடந்த அவர் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது போலீசு உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அவஸ்தியின் தந்தை குற்றம் சாட்டினார். “ஒரு செய்திக்காக சிலர் தன்னைக் கொன்றுவிடுவேன் என்று மிரட்டுவதாக என் மகன் மார்ச் மாதம் புகார் அளித்தாள். அவள் பாதுகாப்பு கோரினாள், ஆனால் அவளது உயிரைக் காப்பாற்ற எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவள் கொலை செய்யப்பட்டதற்கு யார் பொறுப்பு?” என்று அவர் குற்றம் சாட்டினார்.
அவஸ்தியின் தந்தை கொடுத்த புகாரின் பெயரில், ஜூன் 26 அன்று துப்பாக்கிச்சூடு நடத்தியதாக அன்ஷு குப்தா மற்றும் தீபக் ஆகிய இரண்டு பேர் மீதும் 147, 148, 307, 506 ஆகிய பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. “மார்ச் மாதம் பத்திரிகையாளர் அவஸ்தி தனது புகாரில் குறிப்பிட்ட இரண்டு பேர் மீதும் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை நடைபெற்று வருகிறது. முழுமையான விசாரணைக்குப் பிறகு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உன்னாவ் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சஷி சேகர் சிங் தெரிவித்தார்.
இதேபோன்று பத்திரிகையாளர்கள் தாக்கப்படுவதும் கொலை செய்யப்படுவதும் தொடர் கதையாக உள்ளது. இந்த ஆண்டு பிப்ரவரி 26 அன்று உத்தரபிரதேச மாநிலம் ஜான்பூர் மாவட்டத்தில் தொலைக்காட்சி சேனலில் பணியாற்றிய பத்திரிகையாளர் மீது அடையாளம் தெரியாத இருவர் பைக்கில் வந்த துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.
தேவேந்திர கரே மற்றும் அவரது நண்பர்கள் சந்த்பூர் பாலு மண்டியில் உள்ள அவரது அலுவலகத்தில் அமர்ந்திருந்தபோது, முகமூடி அணிந்து வந்த இரண்டு பேர் அவரை இரண்டுமுறை துப்பாக்கியால் சுட்டனர். தோட்டாக்கள் அவரது வயிற்றிலும் வலது கையிலும் பாய்ந்துள்ளது.
படிக்க : சுரேஷ் சவாங்கே வெறுப்பு பேச்சு – காவி குண்டர்கள் வன்முறை வெறியாட்டம்!
இதேபோல், 2020 ஆம் ஆண்டும் ஜூன் 19 அன்று உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் பட்டப்பகலில் மணல் மாஃபியாவிற்கு எதிராக செயல்பட்ட இளம் பத்திரிகையாளர் ஒருவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.
உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள கங்காகாட் பகுதியில் உள்ள தூத் மண்டி அருகே பத்திரிகையாளர் சுபம் மணி திரிபாதி என்ற நிக் (25) ஜூன் 19, 2020 அன்று தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளது.
உ.பி.யில் பாசிச யோகி ஆதித்யநாத் ஆட்சியில் மாஃபியா கும்பல்கள் வெளிப்படையாகவே பல்வேறு கொலை – கொள்ளைகளை அரங்கேற்றி வருகின்றன. அதை அம்பலப்படுத்தும் பத்திரிகையாளர்களையும் கொலை செய்து வருகின்றன. உ.பி மாடல் பாசிச சக்திகளுக்கும் மாஃபியா கும்பல்களுக்குமானது, உழைக்கும் மக்களுக்கும் நேர்மையான பத்திரிகையாளர்களுக்கு எதிரானது என்பதே இந்த படுகொலைகள் நமக்கு உணர்த்து செய்தியாகும்.
காளி