பற்றி எரிகிறது மணிப்பூர்! பற்ற வைத்தது காவி பாசிஸ்டுகள்! | ஆர்ப்பாட்டம் | மதுரை

காஷ்மீர் போன்றே கார்ப்பரேட் நலனுக்காகவே அங்குள்ள நிலங்களை தாரை வார்த்து கொடுப்பதற்காகவே இது போன்ற கலவரங்கள் திட்டமிட்டு ஆர்.எஸ்.எஸ் - பி.ஜே.பி போன்ற காவி கும்பல்களால் மணிப்பூரில் நிகழ்த்தப்படுகிறது.

ற்றி எரிகிறது மணிப்பூர்! பற்ற வைத்தது காவி பாசிஸ்டுகள்!” என்கிற தலைப்பில் ஜூலை 1 தேதி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் மக்கள் கலை இலக்கியக் கழகம் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இதில் 60-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

காஷ்மீர் போன்றே கார்ப்பரேட் நலனுக்காகவே அங்குள்ள நிலங்களை தாரை வார்த்து கொடுப்பதற்காகவே இது போன்ற கலவரங்கள் திட்டமிட்டு ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி போன்ற காவி கும்பல்களால் மணிப்பூரில் நிகழ்த்தப்படுகிறது என்பதையும் இதனை முறியடிக்காமல் விட்டு விட்டால் மணிப்பூர் போன்று பல மாநிலங்கள் பற்றி எறிய வாய்ப்புள்ளது ஆகவே இதனை முலையில் கிள்ளி எறிய வேண்டும் இந்த பாசிஸ்டுகளை மக்களிடம் அம்பலப்படுத்தி  அந்நியப்படுத்த வேண்டும் என்கிற கருத்துக்களை அனைத்து ஜனநாயக சக்திகளும் முன் வைத்தனர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மக்கள் அதிகாரம் மதுரை மண்டல பொறுப்பாளர் தோழர் சிவகாமு, விடுதலை சிறுத்தைகள் கட்சி- வழக்கறிஞர் சரவணன், ஐக்கிய விவசாயிகள் சங்கம் தோழர் ரவிவர்மா, திராவிட விடுதலைக் கழகம் மாவட்ட செயலாளர் தோழர் மா.பா. மணியமுதன், எஸ்.டி.பி.ஐ கட்சி தெற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் சிக்கந்தர், தமிழ் தேசிய குடியரசு இயக்கம் தென் மண்டல பொறுப்பாளர் தோழர் மெய்யப்பன், இந்திய தேசிய லீக் தென் மண்டல செயலாளர் தோழர் அம்ஜத் கான், மனிதநேய மக்கள் கட்சி வடக்கு மாவட்ட துணை செயலாளர் பிலால் ராஜா, ஆதித்தமிழர் கட்சி மாநில ஆலோசகர் தோழர் விடுதலை குமார், மக்கள் சட்ட உரிமை கழகம் தோழர் அண்ணாதுரை போன்றோர்கள் சிறப்புரை  ஆற்றினர்.

தகவல் : மக்கள் அதிகாரம் மதுரை மண்டலம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க