04.08.2023
தோழர் சாலமன் மீது போடப்பட்ட குண்டர் தடுப்புச் சட்டத்தை திரும்பப் பெறு!
மக்கள் அதிகாரம் கண்டன அறிக்கை
தென் கொரியாவைச் சேர்ந்த “ஊசு” கார் உதிரிப் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையானது கட்டுமானப் பணியின் போது ஆற்று மணலைச் சட்ட விரோதமாகத் திருடி விற்பனை செய்தது. அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து திருவள்ளூர் மாவட்டம் நரசிங்கபுரம் கிராம சபையில் தீர்மானம் இயற்றப்பட்டது. மேலும் தோண்டி எடுக்கப்படும் மணலை ஊர் மக்கள் பயன்பாட்டிற்கே வழங்க வேண்டும் என்றும் கோரிக்கையை மக்கள் முன்வைத்து போராடினார்கள்.
அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட அம்பேத்கர் பொதுவுடைமைத் முன்னணியின் மாநிலத் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் சாலமன் உட்பட 11 பேரை போலீசு கைது செய்து சிறையில் அடைத்தது. நீண்ட சட்டப் போராட்டத்திற்கு பிறகு 10 பேர் விடுதலை செய்யப்பட்ட போதும் தோழர் சாலமனுக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
படிக்க : பத்ரி சேஷாத்ரி கைது – பாசிசக் கருத்துகளுக்கு ஜனநாயகம் வழங்க முடியுமா?
மேலும் தோழர் சாலமனை குண்டர் சட்டப் படியும் சிறையிலடைக்க மாவட்ட கலெக்டர் ஆணையிட்டுள்ளார்.
மக்களுக்காக போராடும் போராளிகளைத் திட்டமிட்டு ரவுடிப்பட்டியலில் சேர்ப்பது, பொய் வழக்குகள் போடுவது, குண்டர் தடுப்புச்சட்டத்தில் அடைப்பது ஆகிய அடக்குமுறைகளை அரசு மேற்கொண்டு வருவது கண்டிக்கத்தக்கது.
ஊசு நிறுவனத்தின் மீதும் அதன் சட்டவிரோத செயல்பாடுகளுக்குத் துணை போன மாவட்ட கலெக்டர், போலீசு, நிர்வாக அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டுமென்றும் தோழர் சாலமன் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறது.
தோழமையுடன்,
தோழர் சி.வெற்றிவேல்செழியன்,
மாநிலச் செயலாளர், மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை. 9962366321