நேரலை | மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம்!

சுவர் விளம்பரங்களை அழித்த போலீசு: மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம்!

“ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி; அம்பானி – அதானி பாசிசம் ஒழிக!” என்ற முழக்கத்தின் அடிப்படையில் 2024 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி ”வேண்டாம் பி.ஜே.பி வேண்டும் ஜனநாயகம்” என்ற முழக்கத்தை முன்வைத்து தமிழ்நாடு முழுவதும் எமது அமைப்புகளின் சார்பாக சுவர் விளம்பரங்கள் செய்து வருகிறோம். அதன் ஒரு பகுதியாக மதுரையிலும் இருபதுக்கும் மேற்பட்ட இடங்களில் இந்த இயக்கத்தின் சுவர் விளம்பரங்களை செய்து வந்தோம்.

ஆகஸ்ட் மாத இறுதியில் பத்து நாட்களாக இந்த சுவர் விளம்பரங்கள் செய்யப்பட்டன. இந்த சுவர் விளம்பரங்களை பார்த்து ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பல் எந்த அளவிற்கு எரிச்சல் அடைந்ததோ அதே அளவிற்கு போலீசிற்கும் எரிச்சல் வந்துள்ளது. சுவர் விளம்பரத்தில் எழுதப்பட்டிருந்த ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி அம்பானி அதானி பாசிசம் ஒழிக! வேண்டாம் பி.ஜே.பி என்ற முழக்கங்களில் சுண்ணாம்பை கரைத்து ஊற்றி அழித்துள்ளது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க