வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம்! | அரங்கக்கூட்டம் | நெல்லை | செய்தி – படங்கள்

நெல்லை அரங்கக் கூட்டம்

ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசம் ஒழிக! சுற்றி வளைக்குது பாசிசப் படை: வீழாது தமிழ்நாடு! துவளாது போராடு!”
”2024 நாடாளுமன்றத் தேர்தல்: வேண்டாம் பிஜேபி! வேண்டும் ஜனநாயகம்! கோடி மக்களிடம் கொண்டு செல்வோம்” என்ற தலைப்பில் மகஇக, புமாஇமு, புஜதொமு, மக்கள் அதிகாரம் ஆகிய அமைப்புகள் இணைந்து தமிழ்நாடு முழுவதும் இந்த முழக்கத்தை இயக்கமாக மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் வேளையில், நெல்லை சமாதனபுரம் பகுதியில் ஏடிஎம்எஸ் மஹாலில் செப்டம்பர் 24 அன்று மாலை 4 மணி அளவில் நெல்லை மண்டல மக்கள் அதிகாரம் சார்பாக அரங்கக் கூட்டம் நடைபெற்றது.

நெல்லை மண்டலச் செயலாளர் தோழர் செல்வம் தலைமையில் கூட்டம் ஆரம்பமானது. நெல்லை மண்டல இணைச் செயலாளர் தோழர் கின்ஷன் அனைவரையும் வரவேற்று பேசினார்.

தோழர் செல்வம் தனது தலைமை உரையில், ஸ்டெர்லைட் முதல் பிள்ளையார் அரசியல் வரை காவியும் கார்ப்பரேட்டும் இணைந்து எப்படி இந்த நாட்டை துண்டாடுகின்றன என்பதை விளக்கிப் பேசினார். நெல்லை டவுண் பகுதியில் பிரச்சாரம் செய்த போது பிஜேபி, இந்து முன்னணி குண்டர்கள் பிரச்சினை செய்தனர். அப்போது தமிழர் உரிமை மீட்புக் களம், திராவிட தமிழர் கட்சி தமிழ் புலிகள் கட்சி உள்ளிட்ட ஜனநாயக அமைப்பு தோழர்கள் நம்முடைய தோழர்களுக்கு ஆதரவாக நின்றதைப் பற்றிக் குறிப்பிட்டு, இதுபோல அனைத்து ஜனநாயக சக்திகளும் இணைந்து பாசிச பாஜகவை ஒழிக்க வேண்டும் என்பதையும் எடுத்துரைத்தார்.

அடுத்ததாக மக்கள் அதிகாரம் மாநில இணைச்செயலாளர் தோழர் குருசாமி அவர்கள் விவசாயத்தை அழித்து கார்ப்பரேட்டுகள் கையில் ஒப்படைக்கும் பாஜகவின் சதித் திட்டத்தை விளக்கிப் பேசினார்.

இந்த அரங்க கூட்டத்தில் போலி ஜனநாயகத்திற்கான மாற்று கட்டமைப்பு குறித்தான ஒரு சிறு வெளியீடு வெளியிடப்பட்டது. ”தேவை, பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு” என்ற அந்த வெளியீட்டை தோழர் குருசாமி அவர்கள் வெளியிட்டார்.

அதன் பின்னர் புமாஇமு மாநில ஒருங்கிணைப்புக் குழு தோழர் ரவி அவர்கள் தனது உரையில், வேண்டாம் பிஜேபி என்கிற தலைப்பில் பிஜேபியின் பாசிச நடவடிக்கைகளைத் தோலுரித்துக் காட்டினார். நெல்லை டவுண் பகுதியில் பிரச்சாரம் செய்த நெல்லை மண்டல தோழர்களை பிரச்சாரம் செய்ய விடாமல் தடுத்தது போன்றவற்றை உதாரணம் காட்டி பாசிச பிஜேபியை அனைவரும் இணைந்து தேர்தலுக்கு வெளியே வீழ்த்த அணிதிரள்வோம் என்று பேசினார்.

இறுதியாகப் பேசிய மக்கள் அதிகாரத்தின் சென்னை மண்டல இணைச் செயலாளர் தோழர் புவன் பாசிசம் ஏறித்தாக்குகின்ற இந்த வேளையில்  உண்மையான ஜனநாயகத்தை மீட்டெடுக்க நாம் போராட வேண்டும் என்பதை தனது உரையில் குறிப்பிட்டுப் பேசினார்.

நிகழ்ச்சியின் இடையிலும், இறுதியிலும் மகஇக சிவப்பு அலை கலைக்குழுத் தோழர்கள் பாடிய பாடல்கள் மிக எழுச்சியூட்டுவதாக இருந்தது.

இறுதியாக நெல்லை மண்டல பொதுக்குழு உறுப்பினர் தோழர் முத்து வந்திருந்த ஜனநாயக சக்திகளுக்கும் கூட்டத்தில் கலந்து கொண்ட உழைக்கும் மக்களுக்கும் சிறப்புரை ஆற்றிய தோழர்களுக்கும் நன்றி கூறினார்.

நெல்லைப் பகுதியில் அடுத்தடுத்து சாதிய கொடுமைகளும், பாசிச இந்துத்துவா அமைப்புகளும் வளர்ந்து வரும் வேளையில், வேண்டாம் பிஜேபி வேண்டும் ஜனநாயகம் என்கிற இந்த தலைப்பில் அரங்கக் கூட்டம் நடத்தியது, ஜனநாயக சக்திகளுக்கும் உழைக்கும் மக்களுக்கும் பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியது என்றால் அது மிகையில்லை.


தகவல்:
மக்கள் அதிகாரம்,
நெல்லை மண்டலம்.
94889 02202



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க