பணி நிரந்தரம் செய்யக் கோரி பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம்!

ணி நிரந்திரம் செய்யக்கோரி தமிழ்நாடு பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கம் சார்பாக சென்னை பள்ளிக்கல்வித்துறை அலுவலக வளாகத்தில் செப்டம்பர் 25 அன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

திமுக தேர்தல் அறிக்கையில் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என அறிவித்தனர். ஆனால் ஆட்சி அமைந்து 2 ஆண்டுகள் முடிவடைந்த நிலையிலும் அவர்களின் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. கடந்த போராட்டத்தின் போது நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வுடன், பி.எப் (PF), இ.எஸ்.ஐ (ESI) போன்றவையும் வழங்கப்படும் என அறிவித்தனர். ஆனால் அவை எதுவும் இதுவரையில் வழங்கப்படவில்லை.

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க