உற்சாகமாகக் கொண்டாடப்பட்ட நவம்பர் புரட்சி தின விழா!

நவம்பர் 7: ரஷ்ய சோசலிசப் புரட்சி நாளை உயர்த்திப் பிடிப்போம்!
பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசைக் கட்டியமைப்போம்!

“நவம்பர் 7: ரஷ்ய சோசலிசப் புரட்சி நாளை உயர்த்தி பிடிப்போம்! பாசிச எதிர்ப்பு ஜனநாயக குடியரசை கட்டியமைப்போம்!” என்ற தலைப்பில்  புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (மாநில ஒருங்கிணைப்புக் குழு), மக்கள் அதிகாரம் – சென்னை மண்டலம் ஆகிய புரட்சிகர அமைப்புகள் இணைந்து மேற்கண்ட தலைப்பின் அடிப்படையில் அரங்கக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சென்னை பட்டாபிராமில் மாலை 5.30.மணி அளவில் தியாகிகளுக்கு வீர வணக்கத்துடன் விழா தொடங்கியது.

விழாவிற்கு தோழர்.ஆ.கா.சிவா (தலைவர், வடக்கு மண்டல புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி) தலைமை தாங்கினார். அவரது தலைமை உரையில் ரஷ்ய சோசலிசப் புரட்சி நாளை நாம்  ஏன் உயர்த்திப் பிடிக்க வேண்டும் என்பது குறித்து சுருக்கமாக விளக்கியதோடு, நம் நாட்டில் பாட்டாளி வர்க்க  அரசை நிறுவுவதற்கு உறுதி ஏற்க வேண்டும் என அறைகூவல் விடுத்தார்.

அதன் தொடர்ச்சியாக, தொழிலாளர்களது குழந்தைகள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் ம.க.இ.க-வின் சிவப்பு அலை கலைக்குழு தோழர்கள் பாடிய பாடல்கள் மற்றும் கவிதைகளையும் பாடியதோடு தங்களது பிற திறமைகளையும் வெளிப்படுத்தினார்கள்.

இதைத் தொடர்ந்து மக்கள் அதிகாரத்தின் மாநிலப் பொருளாளர் தோழர். அமிர்தா அவர்கள் சிறப்புரையாற்றினார்.

ரஷ்யப் புரட்சி என்ன சாதித்துக் காட்டியது; எவ்வாறு ஜாரின் கொடுங்கோல் ஆட்சியை வீழ்த்தி அங்கு ஆட்சி அதிகாரத்தை உழைக்கும் மக்கள் கைப்பற்றினர்  என்பதை  விவரித்ததோடு, ரஷ்ய சோசலிசப் புரட்சியின் விளைவாக அங்கே அனைவருக்கும் இலவச கல்வி, மருத்துவம் இதை எல்லாம் சாதித்ததும் பெண்களுக்கு முழு சுதந்திரம் நிலைநாட்டப்பட்டதும் பெண்கள் உலக நாடுகளுக்கு அனைத்துக்கும் ஒரு முன்னோடியாக திகழ்ந்திருந்ததையும் பெருமிதத்துடன்  எடுத்துக்கூறினார். இன்று உலகம் முழுவதும் தொழிலாளி வர்க்கம் அனுபவித்து வருகின்ற 8 மணி நேர வேலை உரிமை அங்கிருந்து தான் தொடங்கியது என்றும், ஓய்வூதியம் என்ற ஒரு திட்டம் அங்கிருந்துதான் தொடங்கியது என்றும் சுட்டிக்காட்டினார். ஆனால், அந்த  சட்டங்கள் எல்லாம்  ஒழிக்கப்பட்டு தொழிலாளி வர்க்கம் வரம்பின்றிச் சுரண்டப்படுகிறது என்பதைச் சுட்டியதோடு தொழிலாளர்கள் எந்த அளவுக்கு கொத்தடிமை ஆக்கப்பட்டுள்ளனர் என்பதையும் பட்டியலிட்டார்.  மேலும், இந்தியாவில்  ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. பாசிச ஆட்சியானது  மக்களை மேலும் மேலும் ஒட்டச் சுரண்டுவதும், அதிலிருந்து மக்கள் விழிப்படையாதவாறு சாதி – மத மோதல்களை திட்டமிட்டு அரங்கேற்றி  நாட்டை அழிவுப் பாதைக்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறது, என்பதையும் இங்குள்ள கனிம வளங்களையும், இயற்கை வளங்களையும் கார்ப்பரேட்டுகளுக்கு வாரிக்கொடுத்துக் கொண்டிருப்பதை அம்பலப்படுத்தினார்.

இதைத் தொடர்ந்து, இன்று குறிப்பாக பாலஸ்தீன இஸ்ரேல் போர் என்பது பாலஸ்தீனத்தின் மீதான ஒரு அடக்குமுறை, ஒரு இன அழிப்பு என்பதையும் அங்கே பாலஸ்தீனத்தில் மக்கள் எப்படி கொத்துக்கொத்தாக கொல்லப்படுகின்றனர் என்பதையும் தங்களுடைய குடியிருப்புகளையும், உடைமைகளையும் விட்டு அகதிகளாக வெளியேறுவதையும் தொகுத்து கூறியதோடு, மருத்துவமனையின் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேலை கண்டித்தும் அங்கு நடக்கின்ற அவலங்களை விளக்கியும் பேசினார்.

உலகெங்கும் உள்ள உழைக்கும் மக்கள் ஓரணியில் நின்று நம்முடைய உரிமைகளுக்காக போராடி,  சோசலிசப் பாதையை நோக்கி நகர்வதின் மூலமாக இந்த பிரச்சனைகளுக்கெல்லாம் தீர்வு கிடைக்கும் என்றும்  பாசிச எதிர்ப்பு ஜனநாயக குடியரசை கட்டி அமைப்போம் என்றும்  அறைகூவல் விடுத்து தன்னுடைய சிறப்புரையை நிறைவு செய்தார்.

அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கெடுத்த குழந்தைகள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் தோழர். யுவராஜ் அவர்களது  நன்றியுரையின் இறுதியாக தியாகிகளுக்கு வீர வணக்கத்துடன் விழா நிறைவு பெற்றது.

தகவல்:
வடக்கு மண்டல புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.

***

”நவம்பர் 7: ரஷ்ய சோசலிசப் புரட்சி நாளை உயர்த்திப் பிடிப்போம்!
பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசைக் கட்டியமைப்போம்!” என்ற தலைப்பின்கீழ் ஓசூர் பகுதியில் கமாஸ் வெக்ட்ரா கிளையில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

தொடர்ந்து கிளை சங்கத்தின் தலைவர் தோழர் தி. செந்தில் குமார் கொடியேற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் பு.ஜ.தொ.மு மாவட்ட பொதுச்செயலாளர் தோழர். பரசுராமன் அவர்கள் ரஷ்ய புரட்சி நாளை நாம் ஏன் உயர்த்திப் பிடிக்க வேண்டும் என்பதை விளக்கிப் பேசினார்.

மேலும் கிளை சங்க பொருளாளர் தோழர். சம்பத் குமார் அவர்கள் நன்றியுரையாற்றினார்.

தொழிலாளர்களுக்கு  இனிப்பு வழங்கி கூட்டம் நிறைவு பெற்றது.

தகவல்:
தோழர்.பரசுராமன்,
பொதுச்செயலாளர்,
24/KRI, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.
ஓசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்கள்.

***

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – மாநில ஒருங்கிணைப்பு குழுவின் இணைப்பு சங்கமான டி.ஐ. மெட்டல்  ஃபார்மிங் தொழிலாளர்கள் சங்கத்த்தின் சார்பாக “நவம்பர் -07 ரஷ்ய சோசலிச புரட்சி நாளை உயர்த்தி பிடிப்போம்! பாசிச எதிர்ப்பு ஜனநாயக குடியரசை கட்டியமைப்போம்!” என்ற முழக்கத்தின் கீழ் நவம்பர் – 07 புரட்சி நாள் ஆலை வாயில் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் தோழர். சரவணன் அவர்கள் தலைமை தாங்கினார். தனது தலைமை உரையில் சோசலிசப் புரட்சி நாளை நாம் ஏன் உயர்த்திப் பிடிக்க வேண்டும் என்பதை விளக்கிப் பேசினார்.

பின்னர் சங்கத்தின் சிறப்புத் தலைவர் தோழர். பா.விஜயகுமார் அவர்கள் சங்கத்தின் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். தனது சிறப்புரையில் தொழிலாளி வர்க்கம் , இன்று அரங்கேறிக் கொண்டிருக்கின்ற உழைப்பு சுரண்டல், அடக்குமுறைகள் பாசிச அபாயத்தை முறியடிக்கின்ற வகையில், இந்த மகத்தான சோசலிசப் புரட்சி நாளை நவம்பர் புரட்சி நாளை நெஞ்சில் ஏந்துவோம் என்று விளக்கிப் பேசினார்.

அனைவருக்கும் புரட்சி நாள் வாழ்த்துகளை தெரிவித்து தனது சிறப்புரையை நிறைவு செய்தார்.

சங்கத்தின்  பொதுச் செயலாளர் தோழர். சக்திவேல் அவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் சங்க தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. தொழிலாளர்கள்  வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.

இத்துடன் கூட்டம் நிறைவுபெற்றது.

தகவல்:
டி.ஐ.  மெட்டல் ஃபார்மிங் தொழிலாளர்கள் சங்கம்,
இணைப்பு -புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி -மாநில ஒருங்கிணைப்பு குழு
வடக்கு மண்டலம்.

***

நவம்பர் 7: ரஷ்ய சோசலிசப் புரட்சி நாளை உயர்த்திப்பிடிப்போம்! பாசிச எதிர்ப்பு ஜனநாயக குடியரசை கட்டியமைப்போம்! என்ற தலைப்பில், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மாநில ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பாக நவம்பர் புரட்சி நாள் விழா முன்னெடுக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக வடக்கு மண்டல பு.ஜ.தொ.மு. சார்பாக பட்டாபிராம் பகுதியில் கொடியேற்றும்  நிகழ்ச்சியில் தோழர் ப. சக்திவேல் வடக்கு மண்டலத்தின் பொருளாளர் தலைமை தாங்கினார். தொடர்ச்சியாக வடக்கு மண்டலத்தின் பொதுச்செயலாளர் தோழர் மா. சரவணன் கொடியேற்றி நவம்பர் புரட்சி நாளை நாம் ஏன் உயர்த்திப் பிடிக்க வேண்டும் என்று உரையாற்றினார். இறுதியாக பாதசாரிகளுக்கும் பொது மக்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

தகவல்:
வடக்கு மண்டல புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

***

வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறை பகுதியில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி கிளைச் சங்கம் சார்பில் ரசிய சோசலிசப் புரட்சியின் 107 ஆம் ஆண்டு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கிளைச் சங்க தோழர் தாமைரைச் செல்வி அவர்கள் தலைமை தாங்கினார். கிளைச் சங்க செயலாளர் தோழர் முத்துக்குமார் கொடி ஏற்றினார். மாவட்ட செயலாளர் தோழர் சுந்தர் சிறப்புரையாற்றினார்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க