எங்கள் நிலத்தை விடு ! | கவிதை

விவசாய நிலத்தை யாருக்கு விலை பேச போகிறாய் ? விடியும் என நம்பி ஓட்டு போட்டவர்களை ஏன் வீதியிலே நிறுத்துகிறாய்

எங்கள் நிலத்தை விடு ! | கவிதை

ர் பிடிச்ச கையில் ரேகை இல்லை
உலகின் பசி போக்கும் அவனுக்கு
தன் குடும்பத்தின்
பசிபோக்க தெரியவில்லை
அரசாங்கம் AC அறையிலே
உழவன் அதே ஓட்டை கூரையிலே
விலைமதிப்பற்ற விவசாயிக்கு
விலையை தீர்மானிக்க உரிமையில்லை
எல்லாம் விலை உயர்ந்து போனது
இவன் வலுவிழந்து போனான்

யாரைக் கேட்டு நிலத்தில்
கை வைத்தாய் ?
யாருக்கு விற்க
விலை பேசினாய் ?

தூத்துக்குடியில் துச்சமென
சுட்டவன்
நாட்டுக்குள்ளே
கொள்ளையடித்தவன்
வீட்டுக்குள்ளே
சுரண்டி பிழைப்பவன்
சுக வாழ்விலே
கார்ப்பரேட் கைக்கூலி அதிகாரத்திலே
ஏனோ ?

மண்ணுக்கு போராடுபவன் ஜெயிலுக்குள்ளே
உரிமையை கேட்பவன் கூண்டுக்குள்ளே

குண்டர் சட்டம் குறிவைக்கிறது
குடிசைகளை மட்டும்

விவசாய நிலத்தை
யாருக்கு விலை பேச போகிறாய் ?
விடியும் என நம்பி ஓட்டு போட்டவர்களை
ஏன் வீதியிலே நிறுத்துகிறாய்

திருப்பிக் கொடு !
எங்கள் நிலத்தை விடு !

மக்கள் சக்திக்கு முன்னே
மலையும் தவிடாகும்
மறந்து விடாதே .‌ . .

அறிவு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க