தமிழ்நாடு வெள்ளப் பாதிப்பும், நிவாரணத்திற்கான மக்களின் போராட்டமும்

கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்கள் மிகப்பெரிய இழப்புகளை சந்தித்தன. அல்ஹம்துலில்லாஹ் (Alhamdulillah) மலையின் மேல் ஏற்பட்ட மன்சரிவில் 5 சிறுமிகள் உள்பட 7 பேர் உயிரிழந்த நிகழ்வானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

டந்த நவம்பர் 30-ஆம் தேதி கரையைக் கடந்த பெஞ்சல் புயலினால் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை பெய்து பல ஊர்கள் வெள்ளத்தால் பெரிதும் பாதிப்புக்குள்ளானது.

குறிப்பாக கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்கள் மிகப்பெரிய இழப்புகளை சந்தித்தன. அல்ஹம்துலில்லாஹ் (Alhamdulillah) மலையின் மேல் ஏற்பட்ட மன்சரிவில் 5 சிறுமிகள் உள்பட 7 பேர் உயிரிழந்த நிகழ்வானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் புயலினால் ஏற்பட்டவெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தி. மு. க அரசானது முன்னறிவிப்பின்றி சாத்தனூர் அணையை திறந்துவிட்டதால் மக்களின் வீடுகளுக்குள் புகுந்ததுடன் ஆடு, மாடுகளையும் அடித்துச் சென்றது. எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக அரசானது வெள்ள நிவாரணம் கணக்கிடப்பட்டு ரேஷன் அட்டைக்கு 2000 வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது.

ஆனால் பல இடங்களில் இன்று வரை நிவாரணத் தொகை வழங்கப்படாததால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

000

கடலூர் மாவட்டம் சன்னியாசிப்பேட்டையில் 2000 ரூபாய் நிவாரணம் வழங்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை போலிஸ் கைது செய்தது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள கோவடி கிராம மக்கள் நிவாரணம் வழங்க வலியுறுத்தி கடந்த 13-ஆம் தேதி திண்டிவனம்- புதுச்சேரி நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டத்திற்கு உட்பட்ட மேல்சேவூர் கிராம தங்களுக்கு 2000 நிவாரணத் தொகை வழங்க வலியுறுத்தி இன்று ( 17.12 2024) ரெட்டணை- செஞ்சி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வானூர், கொந்தமூர்,அருவம்பாக்கத்தைச் சேர்ந்த மக்கள் தங்களுக்கும் வெள்ள நிவாரணம் வழங்கப்படாததைக் கண்டித்து நேற்று திண்டிவனம்- புதுச்சேரி நெடுஞ்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வெள்ள நிவாரணம் வழங்க வலியுறுத்தி வடப்புதூர் கிராம மக்கள் 14-ஆம் தேதி செஞ்சி -திண்டிவனம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று ( 16.12.2024) நிவாரணம் வழங்க வலியுறுத்திவிழுப்புரம் மாவட்டத்தின் ஓமந்தூர், உப்புவேலூர், கிரியனூர், வடசிறுவலூர், ஆதனப்பட்டு உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க