ஹலால் சான்று பெற்ற பொருட்கள் விற்க தடை விதித்த யோகி!

ஹலால் செய்யப்பட பொருட்கள் என்றபெயரில் மத பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது என்று கூச்சலிடுகிறது சங்கிக்கூட்டம். ஆனால், பதஞ்சலி என்ற நிறுவனத்தின் மூலம் இந்துமதவெறியை பிரச்சாரம் செய்யும் பாபா ராம்தேவ் பற்றி வாய்த்திறக்காது.

த்தரப்பிரதேச மாநிலத்தில் ஹலால் சான்றிதழ் பெற்ற அனைத்து விதமான பொருட்களுக்கும் நவம்பர் 18-ஆம் தேதி அதிரடியாக தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது ரவுடி சாமியார் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாசிச அரசு. இது சிறுபான்மை முஸ்லிம் மக்களை ஒடுக்க பாசிச கும்பல் மேற்கொள்ளும் வெறுப்பு நடவடிக்கையாகும்.

உ.பி.யில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் ஹலால் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், உ.பி.யில் ஹலால் சான்றிதழ் பெற்ற உணவுப் பொருட்களை தயாரிக்கவும், சேமித்து வைத்திருக்கவும், விநியோகிக்கவும் தடை விதிக்கப்படுகிறது என ஆதித்யநாத் உத்தரவிட்டார்.

படிக்க: கார்ப்பரேட் திட்டங்களுக்கு எதிராகப் போராடும் மக்கள் மீது பொய்வழக்கு! | தோழர் ரவி

இதனடிப்படையில் பால் பொருட்கள், சர்க்கரை, பேக்கரி பொருட்கள், சமையல் எண்ணெய், மருந்து உபகரணங்கள், அழகு சாதனப்பொருட்கள் போன்ற ஹலால் சான்று பெற்ற அனைத்து பொருட்களுக்கும் இத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

சைலேந்திர குமார் ஷர்மா என்பவர், “ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்த மக்களிடையே தங்களது விற்பனையை அதிகப்படுத்துவதற்காக, சில்லறை வியாபாரத்தில் ஹலால் சான்றளிக்கப்பட்ட பொருட்களை விற்க தொடங்கியுள்ளனர்” என புகார் அளித்தார். இவரது புகாரை அடிப்படையாகக் கொண்டு நவம்பர் 17-ஆம் தேதி லக்னோ போலீசாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

சென்னையிலுள்ள ஹலால் இந்தியா பிரைவேட் லிமிடெட், டெல்லியின் ஜமீயத் உலெமா இந்த் ஹலால் டிரஸ்ட், மும்பையின் ஹலால் கவுன்சில் ஆஃப் இந்தியா மற்றும் ஜமியத் உலெமா உள்ளிட்ட நிறுவனங்கள் சட்டவிரோதமாக ஹலால் சான்றளிக்கப்பட்ட பொருட்களை விற்பதாக லக்னோ போலீசு வழக்கு பதிந்துள்ளது. இதைதவிர்த்து, அடையாளம் தெரியாத உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் அதன் உரிமையாளர்கள் மீதும், தேசவிரோத செயல்களில் ஈடுபடுடோர் மீதும், பயங்கரவாத அமைப்பினருக்கு நிதிவுதவி செய்வோர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

ஹலால் நிறுவனங்கள் மீது இந்திய தண்டனை சட்டப் பிரிவு 120-பி, பிரிவு 153-ஏ (இரு பிரிவினரிடையே பகையை வளர்ப்பது), பிரிவு 298 (மத உணர்வுகளை புண்படுத்தும் விதமான வார்த்தைகள் உபயோகிப்பது), பிரிவு 384 (பணப்பறிப்பு), பிரிவு 467 (ஏமாற்றுதல்), பிரிவு 505 (பொதுவில் அவதூறுகளை உபயோகிப்பது) உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

இதேநேரத்தில், அம்மாநில பிஜேபி செய்தித் தொடர்பாளர், ஹலால் என்று குறிக்கப்பட்டிருக்கும் சொல்லானது மத உணர்வை தூண்டுவதாகவும் ஒரு சமுதாயத்தை பற்றி பிரச்சாரம் செய்வதாகவும் இருப்பதாக கூறிய சிலமணி நேரத்திலேயே இத்தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதுதொடர்பாக, “உணவு மற்றும் அழகு சாதனப் பொருட்களுக்கு முறையான அனுமதி இல்லாமல் ஹலால் சான்றளிக்கப்பட்டு விற்கப்படுவதை யோகி ஆதித்யநாத் தடுத்து நிறுத்துவார். ஹலால் சான்றளிக்கப்பட்ட எந்த பொருளும் உ.பி.யில் இனி விற்கப்படாது” என ஆணவமாக பேசியவர், “ஹலால் மூலம் மதப் போர்வையில் ஒரு குறிப்பிட்ட பிரிவினரிடையே கட்டுப்பாடற்ற பிரச்சாரம் செய்யப்படுகிறது” என்று முஸ்லிம் மக்களை தாக்கிப் பேசினார்.

படிக்க: திமுகவுக்கு பாடம் எடுக்க மருதையனுக்கு தகுதி உள்ளதா? | Part 3 | தோழர் மருது

ஹலால் செய்யப்பட பொருட்கள் என்றபெயரில் மத பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது என்று கூச்சலிடுகிறது சங்கிக்கூட்டம். ஆனால், பதஞ்சலி என்ற நிறுவனத்தின் மூலம் இந்துமதவெறியை பிரச்சாரம் செய்யும் பாபா ராம்தேவ் பற்றி வாய்த்திறக்காது. அறிவியலுக்கு புறம்பான கருத்துக்களையும் மருந்துகளையும் கவர்ச்சிகரமாக விற்கும் செயலையும் கண்டிக்காது. ஏனெனில், சங்கிகளின் நோக்கம் முஸ்லீம் வெறுப்பு மட்டுமே.

பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்தது முதல் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவந்துள்ளது. ஹிஜாப் தடை, பாங்கு ஓதத்தடை, லவ் ஜிகாத், நில ஜிகாத், வெள்ளம் ஜிகாத் (flood jihad), ஹலால் ஜிகாத் என அடுத்தடுத்து வெறுப்பு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது காவிக்கும்பல்.

ஆதினி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க