ற்போது நடைமுறையில் உள்ள தேசிய மருத்துவ ஆணையத்தின் மருத்துவக் கல்வி பட்டப் படிப்புக்கான ஒழுங்குமுறைகள் 1997-இன்படி, மேல்நிலைப் பள்ளிக் கல்வி அல்லது அதற்கு சமமான கல்வியில் இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது உயிரியல் தொழில்நுட்பம் ஆகிய பாடங்களுடன் ஆங்கிலம் படித்திருந்தால் அந்த மாணவர்கள் நீட் தேர்வு எழுதி மருத்துவம் படிக்கலாம்.

இந்நிலையில், நவம்பர் 22 அன்று தேசிய கல்விக் கொள்கையை விரிவுபடுத்தும் வகையில் தேசிய மருத்துவ ஆணையம் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் அறிவியல் பாடங்கள் எடுத்து படிக்காவிட்டாலும், தனியாக இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களை மட்டும் படித்து தேர்வு எழுதிவிட்டு மருத்துவம் படிக்க நீட் தேர்வை எழுதலாம் என்று புதிய அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதன்படி, கணக்கு, கணினி அறிவியல், கணக்குப் பதிவியல் படித்த மாணவர்கள்கூட தனியாக இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் உயிரியல் தொழில்நுட்பம் போன்ற பாடங்களை படித்து தேர்வு எழுதிவிட்டு மருத்துவம் படிக்கலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.

இந்த அறிவிப்பு வெளியாவதற்கு முன்னர் மேல்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்தவர்களுக்கு இந்த புதிய விதிகள் பொருந்தாது என்று இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


படிக்க: தொடரும் நீட் படுகொலைகள்! | வேண்டாம் நீட்! வேண்டும் ஜனநாயகம்!


பிளஸ் 2 முடித்த மாணவர்கள் மருத்துவம் படிக்க நீட் பயிற்சி மையங்களில் சேர்ந்து பயிற்சி பெற்றால்தான் நீட்டில் தேர்ச்சி பெற முடியும் என்ற நிலை உள்ளது. ஏற்கெனவே, நாடு முழுவதும் நீட் பயிற்சி மையங்கள் பெருகி வரும் சூழலில், இது போன்ற நடவடிக்கை லாப வெறி கொண்ட கார்ப்பரேட் பயிற்சி நிறுவனங்கள் கொள்ளையடிப்பதற்கே உதவும்.

மேட்டுக்குடி வர்க்கத்தின் பிள்ளைகள் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றாலும் கூட 20 – 30 லட்சம் ரூபாய் பணத்தை கட்டி தனியார் கல்லூரியில் மருத்துவம் பயில்கின்றனர். இந்த புதிய அறிவிப்பால் இவர்கள் இனி அறிவியல் பாட பயிற்சி மையங்களுக்கு கூடுதலாக செலவிட வேண்டும்; அவ்வளவுதான். “அறிவியல் கற்பதற்கான பயிற்சிக்கூடம்” என்ற பெயரில் தனியார் பயிற்சி நிறுவனங்கள் ஏராளமாய் உருவெடுக்கும்.

ஏற்கெனவே நீட் தேர்வால் இதுவரை தமிழ்நாட்டில் மட்டும் 21 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். அடித்தட்டு உழைக்கும் மக்களின் குழந்தைகள் யாரும் டாக்டர் ஆகலாம் என இனி கனவில் கூட நினைக்க முடியாது என்பதுதான் இந்த ஒன்றிய மோடி அரசின் அறிவிப்பு நமக்கு உணர்த்துகிறது. கல்வியே வணிகச் சந்தையின் கட்டுப்பாட்டில் இருக்கும்போது மருத்துவம் மட்டும் சேவையாக இருக்குமென எப்படி நாம் எதிர்பார்க்க முடியும்.

இப்படிப்பட்ட நீட் தேர்வை ரத்து செய்ய மாட்டோம் என்று ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி சங்கி கும்பல் கூச்சலிட்டுக் கொண்டு இருக்கிறது. அரசும் கார்ப்பரேட்டும் இணைந்து உழைக்கும் மக்களின் பிள்ளைகளின் டாக்டர் கனவில் மண்ணை வாரிப் போட்டுள்ளன. மாணவர்கள், இளைஞர்கள், பெற்றோர்கள் என உழைக்கும் மக்கள் அனைவரும் ”நீட் தேர்வு வேண்டாம்” என்று களத்தில் இறங்கிப் போராடாமால் தீர்வு கிடைக்கப் போவதில்லை.


கவி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க