தோழர் ஸ்டாலின் பிறந்த நாள் | மாணவர்களுக்கு அறைக்கூட்டம்

தோழர் ஸ்டாலி 146 வது பிறந்த நாளை முன்னிட்டு கடலூர் மண்டல மக்கள் அதிகாரம் தோழர்கள் சார்ப்பாக பள்ளி மாணவர்களுக்கு அறைக்கூட்டங்கள் எடுக்கப்பட்டன.

தோழர் ஸ்டாலின் அவர்களின் 144வது பிறந்த நாள் விழா விருத்தாச்சலம் பகுதியில் நடை பெற்றது. தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தி, கூட்டத்தைத் தொடங்கி வைத்த, தலைமை ஏற்ற தோழர் அருண், தோழரும் ஆசானுமான ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை நாம் ஏன் இன்று கொண்டாட வேண்டிய தேவை உள்ளது என்று விளக்கிப் பேசினார்.

அடுத்து பேசிய மக்கள் அதிகாரம் அமைப்பின் கடலூர் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் முருகானந்தம் அவர்கள் ஸ்டாலின் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை எளிமையாக விளக்கிப் புரிய வைத்தார்.

அடுத்ததாகப் பேசிய தோழர் பாலன் அவர்கள் நடப்பு இந்திய அரசியல் சூழல், பார்ப்பன பாசிச கொடூரங்களை அரங்கேற்றும் ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி கும்பல், அவர்கள் உருவாக்க இருக்கும் இந்துராஷ்டிரம், அதன் கோரங்களை விளக்கி, ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி-யை முறியடிக்காமல் எளிய உழைக்கும் மக்களுக்கு வாழ்வு இல்லை என்பதைப் புரிய வைத்தார்.

அடுத்துப் பேசிய இரு தோழர்கள் நெருங்கி வரும் பாசிச இருளை முறியடிக்காமல் உழைக்கும் மக்களுக்கு வாழ்வு இல்லை என்பதை விளக்கிப் புரிய வைத்தனர்.

இறுதியாகப் பேசிய தோழர் நகுலன் ஸ்டாலின் சோசலிசத்தைக் கட்டியமைத்ததை விளக்கினார்.  ஹிட்லரின் பாசிசக் கொடுங்கோன்மை உலக மக்களுக்கு எதிரானது, அது முறியடிக்கப்பட வேண்டிய அவசியத்தை விளக்கிய தோழர் ஸ்டாலின் ஒரு விரிந்த ஐக்கிய முன்னணி கட்ட முயன்றதையும், இங்கிலாந்து, பிரான்சு போன்ற பிற வல்லரசு நாடுகள் அதை இழுத்தடித்து, இளம் சோசலிச ரஷ்யாவை ஹிட்லரைக் கொண்டு ஒழிக்க முயன்றதை முறியடித்தது மட்டுமின்றி அந்த இரண்டாம் உலகப் போரில் பாசிசத்தை முறியடித்தது உலகைக் காத்தது மட்டுமின்றி, அடிமைப் பட்ட இந்தியா போன்ற காலனி நாட்டு மக்களின் விடுதலைக்கு கலங்கரை விளக்காக வழிகாட்டியதைப் புரிய வைத்தார். பார்ப்பன பாசிசக் கொடுங்கோன்மையான இந்துராஷ்டிரியத்தை ஒழிக்க ஐக்கிய முன்னணி கட்ட வேண்டியதைப் புரிய வைத்தார்.

வந்திருந்த அனைவரும் இறுதிவரை அமைதியாக இருந்து உரைகளைக் கேட்டு கைதட்டி வரவேற்றனர். பாட்டாளி வர்க்க சர்வதேச கீதத்துடன் கூட்டம் முடிவுற்றது.

000

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் பாலி கிராமத்தில் மக்கள் அதிகாரம் சார்பில் தோழர் கார்த்திகேயன் தலைமையில் தோழர் ஸ்டாலின் டிசம்பர் 21 பிறந்த நாள் முன்னிட்டு அறைக்கூட்டம் மற்றும் வெண்மனி நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதில் தோழர் வினாயகம் தோழர் சுபாஷ் தோழர் தினேஷ் தோழர் பவன் ஆகியோர் மற்றும் பகுதி இளைஞர்கள்  கலந்து கொண்டனர் மேலும் தலித் மீதான தாக்குதல் புதிய ஜனநாயக வெளீயீடு வழங்கப்பட்டது.

மக்கள் அதிகாரம்
கடலூர் மண்டலம்
7200112838

நன்றி: மக்கள் அதிகாரம் முகநூல்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க