இராமர் கோயில் திறப்பை பாசிஸ்டுகள் எந்தளவிற்கு கொண்டுப்போவார்கள்?

எப்படி மோடி பெயரில் மைதானத்தை குஜராத்தில் உருவாக்கி அங்கு உலக கோப்பை இறுதி போட்டியை நடத்தி, மோடி பிம்பத்தை தூக்கி நிறுத்தலாம் என கனவு கண்டு அதற்கான நடவடிக்கைகளில் காவிக்கும்பல் ஈடுபட்டதோ, அதுபோன்ற நடவடிக்கைகளை கூடுதலாகவோ குறைவாகவோ இராமர் கோயில் திறப்பிலும் மேற்கொள்ளும்.

பு.ஜ. உடன் ஓர் உரையாடல்

டந்த நவம்பர் மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள்.

கேள்வி: உலக கோப்பை போட்டியில் பா.ஜ.க-விற்கு சரியான அடி விழுந்துள்ளது. பா.ஜ.க. எதிர்பார்த்த எதுவும் நடக்கவில்லை. இருப்பினும் அடுத்தது இராமர் கோயில் திறப்பு விவகாரம் உள்ளது. அதனை பாசிஸ்டுகள் எந்தளவிற்கு கொண்டுப்போவார்கள்?

இராமர் கோயில் விவகாரத்தில் அடுத்து என்ன நிகழும் என்று இப்போது நம்மால் சொல்ல முடியாது. தோல்விமுகத்தில் இருப்பதால் பா.ஜ.க. எதிர்பார்க்கக் கூடிய விளைவு இருக்காது என்று மட்டும் உறுதியாக சொல்லமுடியும். ஆனால், அதற்காக பா.ஜ.க. முயற்சியை கைவிடாது. எப்படி மோடி பெயரில் மைதானத்தை குஜராத்தில் உருவாக்கி அங்கு உலக கோப்பை இறுதி போட்டியை நடத்தி, மோடி பிம்பத்தை தூக்கி நிறுத்தலாம் என கனவு கண்டு அதற்கான நடவடிக்கைகளில் காவிக்கும்பல் ஈடுபட்டதோ, அதுபோன்ற நடவடிக்கைகளை கூடுதலாகவோ குறைவாகவோ இராமர் கோயில் திறப்பிலும் மேற்கொள்ளும். ஆனால் இராமர் கோவில் திறப்பு, பாசிச கும்பலின் தோல்விமுகத்தை சரிசெய்வதற்கான எந்த வாய்ப்பையும் தரப்போவது கிடையாது. எனவே, பா.ஜ.க-வை உறுதியாக ஏறி அடிக்க வேண்டும், ஒவ்வொரு செயலையும் நடவடிக்கையும் சரியாக அம்பலப்படுத்த வேண்டும்.

செய்திகளை தொடர்ந்து கவனித்து வந்தால் இதை புரிந்துக்கொள்ள முடியும். உத்தரப்பிரேதச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவின் பேரில், கிரிக்கெட் வீரர் ஷமி ஊரில் மைதானம் கட்டப்போவதாக செய்தி வெளிவந்துள்ளது. பா.ஜ.க. ஏன் முஸ்லிம் வீரர் ஒருவருக்கு மைதானம் கட்டவேண்டும்? ஒரு விஷயம் சமூகமயமாவதை பா.ஜ.க-வால் தவிர்க்க முடியாது. அதுதான் எதார்த்தம். அதன் தொடர்ச்சியாகத்தான் இதையும் பார்க்கவேண்டும். அதே போல, இராமனுக்கு கோயில் கட்டினால் ‘இந்துக்களில்’ சிலர் மகிழ்வார்களே ஒழிய, பெரும்பான்மை ’இந்துக்களுக்கு’ இராமன் கோயில் பற்றிய கருத்து கிடையாது. இராமன் கோயில் கட்டினால் தங்கள் வாழ்வில் விடிவு வந்துவிடும் என்று மக்கள் யாரும் நினைப்பது கிடையாது.

(புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2023 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க