RIP ராமா !!!
சீதைக்கு, காலை சமையலுக்கு
காய்கறி வாங்க காசு இல்லை.
1200 கொடுத்து வாங்கின சிலிண்டரும்
நேற்று இரவே தீர்ந்து போக..
நீர் தண்ணி வடிச்சு லவனுக்கும் குசனுக்கும்
ஆளுக்கு ஒரு டம்ளர் கொடுத்தா, சீதா.
எப்போதுமே குடிச்சிட்டு தெருவுல விழுந்து கிடக்கும் ராமனுக்கு,
இன்றைக்கு குடிக்க காசு இல்லை.
வாங்கி கொடுக்க ஆளும் இல்ல.
வீட்டு குண்டாவை திருடி
விற்று குடித்துவிட்டு வந்து
சீதையை தரந்தாழ்ந்து பேசினான் ராமன்.
இருந்த கோவத்துல, ராமன்
நெஞ்சில் எட்டி உதைத்தாள் சீதா.
லவனும் குசனும் ராமனை போட்டு புரட்டி எடுக்க,
அனுமனும் அவன் பங்கிற்கு இராமன் வாயிலேயே எட்டி மிதிச்சான்.
புல்லட்டில் வந்த இராவணன்,
சண்டையை தடுத்து
மண்டை உடைந்த ராமனை
ரத்தம் சொட்ட சொட்ட
அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றான்.
மருத்துவமனைக்கு பூட்டு போட்டு இருந்தது.
ஏன்? என்று அக்கம் பக்கம் கேட்டான் இராவணன்.
ஏதோ, ராமர் கோயில் திறப்பாம்..
அதான் எல்லோருக்கும் விடுமுறையாம்..
இரத்தம் சொட்ட சொட்ட
ராமன் உயிர் பிரிந்தது !!!
RIP ராமா!!!
கவின்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube