உத்தராகண்டில் சுரங்கம் இடிந்ததில் சிக்கிய தொழிலாளர்கள் மீட்கப்பட்டது மோடியின் வெற்றியா?

பு.ஜ. உடன் ஓர் உரையாடல்

டந்த நவம்பர் மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள்.

கேள்வி: உத்தராகண்ட் மாநிலத்தில் ல்க்யாரா சுரங்கம் இடிந்ததில் சிக்கிய 41 தொழிலாளர்கள் 17 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டுள்ளனர். வழக்கம்போல சங்கிகள் இதனை மோடியின் வெற்றியாக முன்னிறுத்துகின்றனரே?

முதலில், மோடிக்கோ, பாசிச கும்பலுக்கோ இதை ஒரு வெற்றியாக சித்தரிக்க துளியும் அருகதையில்லை. உண்மையில் வளர்ச்சி திட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள அப்பகுதியில் தங்களது கார்ப்பரேட் ஆதாயத்திற்காக சுரங்கம் கட்டிவரும் மோடி கும்பல்தான் இவ்விபத்து ஏற்பட்டதற்கு முதன்மை குற்றவாளி. உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தனது பரிவாரங்கள் புடைசூழ செல்லமுடிந்த மோடிக்கு, விபத்து நடந்த இடத்திற்கு நேரில் சென்று விசாரிக்க நேரமில்லை.

மோடியின் எலும்புத்துண்டு ஊடகங்களோ இரண்டு வாரங்களாக இதனை பேசுபொருளாக்காமல் இருந்துவிட்டு, தொழிலாளர்களை மீட்பது உறுதியான பிறகு நேரலை போட்டு மோடி அரசுக்கு ‘பெருமை’ சேர்க்கும் வேலையில் இறங்கின.

இரண்டாவது, இதில் கொண்டாடுவதற்கு எதுவுமே இல்லை. நிலவின் தென்துருவத்தில் முதல் செயற்கைகோளை ஏவிய நாட்டில், ‘தெற்குலக நாடுகளின் தலைவனை’ கொண்டிருக்கும் நாட்டில், உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாட்டில் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்க தொழில்நுட்பம் ஏதுமில்லை.

இறுதியில், எலிகளை போல மலைகளில் வலைத்தோண்டி நிலத்துக்கு அடியில் உள்ள நிலக்கரியை எடுக்கும், எலிவலை சுரங்க தொழிலாளர்கள்தான் தங்கள் உயிரை பணயம் வைத்து 41 தொழிலாளர்களை மீட்டுள்ளார்கள்.

(புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2023 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க