02.02.2024

நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் என்.ஐ.ஏ சோதனை !
மக்கள் அதிகாரம் கண்டனம்!

தமிழ்நாட்டில் 6-க்கும் மேற்பட்ட இடங்களில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை செய்த சோதனையை மக்கள் அதிகாரம் கண்டிக்கிறது. விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுக்கும் உள்ள தொடர்பு குறித்து இச்சோதனை நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் படத்தை வைத்திருப்பதும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசுவதும் இந்திய அரசியல் சட்டத்திற்கு புறம்பானது அல்ல சட்ட மீறலும் அல்ல என்பதை ஏற்கனவே நீதிமன்றங்கள் தெளிவுபடுத்தியுள்ளன.

படிக்க : ஞானவாபி மசூதியும் இந்திய நீதித்துறையும்!

எனினும் தமிழ்நாட்டில் போராடுகின்ற இயக்கங்களை ஒழித்துக் கட்டும் திட்டத்திற்கு முதல் படியாகவே இந்த தேசிய புலனாய்வு முகமை நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் சோதனை செய்துள்ளது.

விடுதலைப் புலிகள் இயக்கத்தோடு தொடர்பு என்று தொடங்கும் இந்த சோதனையை நாம் எதிர்க்காவிட்டால் விரைவில் மோடிக்கு எதிராக பேசும், மக்கள் உரிமை இன விடுதலை என்று பேசும் அனைவரின் வீட்டுக்கும் தேசிய புலனாய்மை முகமை சோதனை செய்ய வருவதற்கு அனைத்து வகையான வாய்ப்புக்களும் உள்ளன. ஆகவே தேசிய புலனாய்வு முகமை மேற்கொண்ட இந்த சோதனையை மக்கள் அதிகாரம்  கண்டிக்கிறது.  தமிழ்நாடு அரசு தேசியப் புலனாய்வு முகமைக்கு கொடுத்த அனுமதியை உடனே திரும்ப பெற வேண்டும் என்றும் மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.


தோழமையுடன்,
தோழர் மருது,
செய்தித் தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு –  புதுவை
9962266321

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க