12.02.2024

பாசிச மோடியின் ஆட்சியை வீழ்த்த
டெல்லியை முற்றுகையிடும் விவசாயிகளை வரவேற்போம்!

பத்திரிகை செய்தி

பாசிச மோடியின் ஆட்சியை தகர்க்க பஞ்சாப், அரியானா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநில விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட வருகிறார்கள். ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி; அம்பானி- அதானி பாசிசம் வீழ்த்த வந்து கொண்டிருக்கிறார்கள்.

கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான வேளாண் சட்டத்திருத்தத்திற்கு எதிராக 2020 ஆம் ஆண்டு நவம்பரில் டெல்லி எல்லைகளில் விவசாயிகள் வீரம் செறிந்த போராட்டத்தை நடத்தினர். ஒரு வருடத்திற்கும் மேலாக தொடர்ந்த இந்த போராட்டத்தில் 700-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்தனர். புதிய வேளாண் சட்ட திருத்தம் திரும்ப பெறப்படும் என்று அறிவித்து அவர்களை ஏமாற்றி போராட்டத்தை திரும்பப் பெற்றவுடன் துரோகம் விளைவித்த பாசிச மோடி அரசுக்கு எதிராக பிப்ரவரி 13 ஆம் தேதி டெல்லியை முற்றுகையிட விவசாயிகள் தீர்மானித்தனர்.

விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை திரும்பப்பெறும் வரை திரும்ப மாட்டோம் என்று சூளுரைத்து டெல்லியை முற்றுகையிட வருகிறார்கள். அவர்கள் வருவதை தடுக்க 144 தடை உத்தரவு சட்டம் பல இடங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் உள்ளிட்டப் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராஜஸ்தான், உத்தரபிரதேசம், பீகார் கேரளா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் இந்த போராட்டத்தில் பங்கேற்கின்றனர்.

டெல்லி எல்லையையொட்டிய மாவட்டங்களான அம்பாலா, குருஷேத்ரா, கைதால், ஜிந்த், ஹிசார், பதேஹாபாத் மற்றும் ஹிசாரில் இணையதள சேவை மற்றும் எஸ்எம்எஸ் சேவைகளை துண்டித்த பாசிஸ்டுகள் டிராக்டர்கள் வரும் வழியெல்லாம் இரும்பு முட்களை பொருத்தியுள்ளார்கள். எல்லைகளின் முக்கிய சாலைகளில் தடுப்பு வேலிகளும் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து விதமான தடைகளையும் மீறி விவசாயிகள் வந்து கொண்டிருக்கிறார்கள். மக்கள் அதிகாரம் நீதி கேட்டுப் போராடும் விவசாயிகளை வரவேற்கிறது. விவசாயிகளின் போராட்டத்திற்கு இந்த நாட்டு மக்களின் ஆதரவு எப்போதும் உள்ளது. விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் மக்கள் போராட்டங்களை உருவாக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.


தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க