பிப்ரவரி 16 வேலை நிறுத்தம் வெல்லட்டும் | புஜதொமு

பிப்ரவரி 16 நாடு தழுவிய தொழில் துறை வேலை நிறுத்தம் மற்றும் கிராமிய பந்த் போராட்டத்தில் புதிய ஜனநாயகத்  தொழிலாளர் முன்னணி (மாநில ஒருங்கிணைப்பு) பங்கெடுத்துக் கொண்டது.

பிப்ரவரி 16 நாடு தழுவிய தொழில்துறை வேலை நிறுத்தம் மற்றும் கிராமப்புற முழு அடைப்பு போராட்டத்தை ஒட்டி, சென்னை அண்ணா சாலையில் உள்ள தபால் நிலையம் அருகில் சாலை மறியல், முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் எமது புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மாநில ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பாக எமது தோழர்கள் பங்கு கொண்டு முழக்கமிட்டனர்.

***

பிப்ரவரி 16  நாடு தழுவிய தொழில் துறை மற்றும் கிராமப்புற முழு அடைப்பு போராட்டத்தை வெற்றி பெறச் செய்வோம்!” என்ற தலைப்பின் கீழ் இன்று (16-02-2024) காலை வேலூர் மாவட்டம் கணியம்பாடி பேருந்து நிலையம் அருகில், பொது வேலை நிறுத்தப்போராட்டத்தை ஆதரித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிளைச் சங்க செயலாளர் தோழர் முத்துகுமார் தலைமை தாங்கினார், பு. ஜ. தொ. மு. மாநில குழு உறுப்பினர் தோழர் சுந்தர் கண்டன உரையாற்றினார்.

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
(மாநில ஒருங்கிணைப்புக் குழு)
வேலூர் மாவட்டம்.

***

பிப்ரவரி 16 நாடு தழுவிய தொழில் துறை வேலை நிறுத்தம் மற்றும் கிராமிய பந்த் போராட்டத்திற்கு ஐக்கிய விவசாயிகள் முன்னணி மற்றும் மத்திய தொழிற்சங்கங்கள் அறைகூவல் விடுத்துள்ளது.

இதனை ஏற்றுக் கொண்டு நமது தலைமை சங்கமான புதிய ஜனநாயகத்  தொழிலாளர் முன்னணி – மாநில ஒருங்கிணைப்பு குழு இந்த போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டது.

இதன் அடிப்படையில் டி.ஐ மெட்டல் ஃபார்மிங் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பாக ஆலை வாயில் கண்டன கூட்டம்  நடத்தப்பட்டது. கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் தோழர் சரவணன் அவர்கள் தலைமை தாங்கினார்.

மோடி அரசின் விவசாய விரோத, தொழிலாளர் விரோத  செயல்பாடுகளை  முறியடிக்க டெல்லியை முற்றுகையிட்டு போராடி வருகிறார்கள். இந்த போராட்டத்தை எதிர்க்கட்சிகள் மற்றும் இந்தியா கூட்டணி நடத்தவில்லை. தொழிலாளர்கள்  விவசாயிகள்  தன்னெழுச்சியாக நடத்துகிறார்கள். இது போன்ற போராட்டங்கள் தான் பாசிசத்தை வீழ்த்த முடியும் என்று தனது உரையை நிறைவு செய்தார்.

அடுத்ததாக டி.ஐ மெட்டல் ஃபார்மிங் தொழிலாளர்கள் சங்கத்தின் சிறப்புத் தலைவர் தோழர் பா. விஜயகுமார் அவர்கள் கண்டன உரையாற்றினார்.

தாராளவாத பொருளாதார கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு தொழிலாளர்களின் உரிமைகள் பறிக்கப்படுகிறது. விவசாயிகள் வாழ்க்கை சீரழிக்கப்படுகிறது. இதை கண்டித்து ஓவ்வொரு ஆண்டும் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

திருப்புமுனையாக  இந்த ஆண்டு விவசாயிகளும் தொழிலாளர்களும் ஒன்று சேர்ந்து போராட்டத்தை நடத்துகிறார்கள். இதில் விவசாயிகள் முன்கை எடுத்து போராடுகிறார்கள்.

விவசாயிகள் போராட்டத்திற்கு தலைமை தாங்கக்கூடிய தொழிலாளர்கள் தங்களை தலைமை சக்தியாக வளர்த்துக் கொள்ள வேண்டும். தொழிலாளர்கள் தான் மாற்றத்தை  நிகழ்த்த கூடியவர்கள். பாசிசத்தை வீழ்த்த கூடியவர்கள் வாருங்கள் தோழர்களே! என்று அறைகூவல் விடுத்து தனது உரையை நிறைவு செய்தார்.

இறுதியாக சங்கத்தின் பொருளாளர் தோழர். மகேஷ் குமார் அவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

கூட்டத்தில் மோடி அரசின் மக்கள் விரோத பாசிச செயல்பாடுகளை அம்பலப்படுத்தி கண்டனம் முழக்கங்கள் எழுப்பப்பட்டது. கூட்டத்தில் தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

தகவல்:
டி.ஐ.மெட்டல் ஃபார்மிங் தொழிலாளர்கள் சங்கம்.
இணைப்பு.
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி. வடக்கு மண்டலம்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க