கிரையோலர் ஆசியா பசிபிக் தொழிலாளர் சங்கம்
கொடியேற்றும் விழா!
18.02.2024
பத்திரிகை செய்தி
மதுராந்தகம் அருகில் உள்ள பன்னாட்டு நிறுவனமான கிரையோலர் ஆசியா பசிபிக் தொழிலாளர் சங்கம் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (மாநில ஒருங்கிணைப்புக்குழு) தலைமையை ஏற்றுக் கொண்டு செயல்பட்டு வந்தது. தொழிலாளர்களது பிரச்சினைகள், எதிர்பார்ப்புகளை முன்வைத்து சங்கத்துக்கும், நிர்வாகத்துக்கும் இடையில் பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு ஊதிய உயர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. சங்கம் அமைத்து உரிமையை நிலைநாட்டியதை பறைசாற்றும் விதமாக நேற்று (18.02.2024 ) காலை 10.30 மணியளவில் சங்கக் கொடியேற்றுதல், செய்திப்பலகை திறத்தல் நிகழ்ச்சி குடும்ப விழாவாக நடத்தப்பட்டது.
சங்கத்தின் தலைவர் தோழர் இரா.முருகன் தலைமையில், செயலாளர் மு.முருகன் வரவேற்புரை நிகழ்த்தி நடைபெற்ற விழாவில் சிறப்புத் தலைவர் தோழர் பா.விஜயகுமார் சங்கத்தின் கொடியேற்றி உரையாற்றினார். சங்கத்தின் ஆலோசகர் தோழர் ப.சக்திவேல் பெயர்ப்பலகை திறந்து வைத்து உரையாற்றினார்.
பு.ஜ.தொ.மு – மாநில ஒருங்கிணைப்புக்குழுவின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஆ.கா.சிவா, வடக்கு மண்டல பு.ஜ.தொ.மு – வின் பொதுச்செயலாளர் தோழர் ம.சரவணன், இணைச்செயலாளர் தோழர் து.இலட்சுமணன், டி.ஐ.மெட்டல் பார்மிங் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் தோழர் மா.சரவணன், ஆலை அமைத்துள்ள கடமலைப்புத்தூர் கிராமத்தை உள்ளடக்கிய அச்சிரப்பாக்கம் ஒன்றியக்குழு உறுப்பினர் திருமதி.பொன்மலர் சிவக்குமார், கடமலைக்குண்டு ஊராட்சித்தலைவர் திரு.ஏ.ராஜன், ஊராட்சிமன்ற துணைத்தலைவர் திரு.கி.முரளி மற்றும் வார்டு உறுப்பினர்கள் வாழ்த்துரை வழங்கினர். தொழிலாளர்கள் தமது குடும்ப உறுப்பினர்களோடும், உள்ளூர் மக்களோடும் இணைந்து இந்த விழாவில் பங்கேற்றனர்.
சங்கத்தின் பொருளாளர் தோழர் அ.பாலாஜி நன்றியுரையுடன் விழா நிறைவுற்றது.
இந்த விழா மூலம் தொழிலாளர்கள் தமது குடும்ப உறுப்பினர்கள், உழைக்கும் மக்களை உள்ளடக்கி செயல்பட வேண்டும் என்கிற உத்வேகத்தை பெற்றுள்ளனர்.
தகவல்
வடக்கு மண்டல புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube