மார்ச் 28, 29 – இரு நாட்கள் அகில இந்திய வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச்செய்வோம்!
வாழ்வுரிமையைப் பாதுகாக்க காவி – கார்ப்பரேட் பாசிசத்தை வேரறுப்போம்!
மாநிலம் தழுவிய பிரச்சார இயக்கத்தின் ஒரு பகுதியாக பு.ஜ.தொ.மு – மாநில ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் பூவிருந்தவல்லி பகுதியில் தொழிலாளர்களிடம் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. திருபெரும்புதூர் – ஒரகடம் சிறப்பு பொருளாதார மண்டலம் மற்றும் அதை ஒட்டியுள்ள தொழிற்பேட்டைகளில் உள்ள பன்னாட்டு கம்பெனிகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள் பல்லாயிரக்கணக்கில் குவித்து வைக்கப்பட்டுள்ள மையங்களில் ஒன்றாக பூவிருந்தவல்லி பகுதி இருக்கிறது.
15.3.2022 அதிகாலை 6 மணி முதலாகவே நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் சாரைசாரையாக குவியத் தொடங்கினர்.
படிக்க :
SRF மணலி தொழிற்சங்க தேர்தலில் பு.ஜ.தொ.மு (மாநில ஒருங்கிணைப்புக்குழு) தோழர்கள் மகத்தான வெற்றி!
ஃபாக்ஸ்கான் நிர்வாகத்தின் அடக்குமுறையை முறியடிப்போம் | புஜதொமு
ஹூண்டாய், யமாஹா, ஃபாக்ஸ்கான், சாரதா மோட்டார்ஸ், லூமக்ஸ், அசாஹி இந்தியா பிரைவேட் லிமிடெட், எல்&டி உள்ளிட்ட பல்வேறு ஆலைகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்களிடம் மார்ச் 28-29 வேலைநிறுத்தம் ஏன்? அதில் தொழிலாளி வர்க்கம் பங்கேற்க வேண்டிய அவசியம் என்ன என்பது குறித்து சிறு, சிறு கூட்டங்கள் நடத்தப்பட்டன.
ஒவ்வொரு ஆலையிலும் குறைந்தபட்சமாக 2000 தொழிலாளர்களும், ஹூண்டாய்  போன்ற ஆலைகளில் 20,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும், மொத்தமாக திருப்பெரும்புதூர் – ஒரகடம் தொழிற்பேட்டையில் இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் பாதிப்பேர் கூட நிரந்தம் இல்லை. பெரும்பாலான தொழிலாளர்கள் அப்ரண்டீஸ் – பயிற்சி தொழிலாளர்களாகவே இருக்கிறனர். சில ஆண்டுகள் வேலை செய்த பின்னர் வேலையிலிருந்து நீக்கப்படுவதும், அவ்வாறு நீக்கப்பட்டவர்கள் வேறு ஆலைக்கோ, வேறு வேலைக்கோ செல்வதைத் தவிர வேறு வழியில்லை.
இத்தகைய வேலைப் பாதுகாப்பும், பணியிடப் பாதுகாப்பும் அற்ற சூழலில்தான் தொழிலாளர்கள் இருக்கின்றனர். இந்த தொழிலாளர்கள் மொத்தமாக பிக்கப் பேருந்துகளில் ஏற்றிச் செல்லப்பட்டு ஆலைகளில் திணிக்கப்படுகின்றனர். பின்னர், வேலைநேரம் முடிந்த அடுத்த நிமிடத்திலேயே மீண்டும் பேருந்துக்குள் திணிக்கப்பட்டு அவரவர் குடியிருப்புப் பகுதியில் தள்ளப்படுகின்றனர். ஆகப்பெரும்பான்மையினர் வெளிமாவட்டங்களிலிருந்து கொண்டு வரப்பட்டவர்கள். இவர்களுக்கு உள்ளூர் தொடர்பு சாத்தியமற்றது. இவர்கள் மிகக்குறைந்த வயதுள்ளவர்கள். அதிகப்படியானோர் பெண் தொழிலாளர்கள். பாலிடெக்னிக் அல்லது எஞ்சினியரிங் கல்லூரி வாசல்களிலேயே பன்னாட்டுக் கம்பெனிகளின் ஆசை வார்த்தைகளில் சிக்கி, தங்கள் எதிர்காலத்தை கார்ப்பரேட்டுகளுக்கு காவு கொடுத்துள்ளனர்.

This slideshow requires JavaScript.

தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்கிற புதிய தாராளவாதக் கொள்கை காரணமாக நடக்கின்ற கார்ப்பரேட் காட்டாட்சியானது நாடு முழுவதும் கோடிக்கணக்கான தொழிலாளர்களை இப்படித்தான் ஏதுமற்றவர்களாக்கி வைத்துள்ளது. இந்த அவலம் ஒழிக்கப்பட வேண்டும் எனில், காவி – கார்ப்பரேட் பாசிசத்தை வேரறுக்கும் இலக்கை நோக்கி தொழிலாளர்களை அணி திரட்ட வேண்டிய அவசரத் தேவை உள்ளது.
தகவல் :

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
சென்னை, திருவள்ளூர், காஞ்சி, வேலூர் மாவட்டக்குழு
தொடர்புக்கு: 94448 31578.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க