பட்டாசு ஆலை தொழிலாளர்களின் வலிகளும் வேதனைகளும்!

காலையில போனவள
மாலையில காணலையே!
கரிக்கட்டைய பார்த்து கலங்கி நானும் போனேனே!

காலையில போய் வாரேன்னு சொல்லிவிட்டு போனா….
போனவ வரலையே
பொழுதும் கூட போகலையே…

ஒரு நாள் லீவு போட்டிருந்தா
ஒரு மாதம் வாழ்ந்திருப்பா…
ஓடாய் தேஞ்சு உழைச்சவ
இன்னைக்கு ஓலையில கெடக்குறா….

இறந்தவன் குடும்பங்களுக்கு இழப்பீடு கொடுக்கிறான்…
இறக்கிற தேதிய எங்களுக்கும் குறிக்கிறான்….

முதலாளிகளின் அடியாளாய் அரசுதான் இருக்குது…
எங்களோட வேர்வையில்தான்
உங்க பொழப்பே நடக்குது…

உங்களிடம் எங்களுக்கு பாதுகாப்பு இல்ல…
உலகத்துக்கே தெரியும் இது கார்ப்பரேட் கொள்ள…

உங்களிடம் உரிமைகளை கேட்பதில் நியாயம் இல்ல…
போராட்டம் இல்லாமல் எதற்கும் தீர்வு இல்ல…

தொழிலாளர் வர்க்கமாய் அணி திரள்வோம்…
தோல் சேர்ந்து தோட்டாக்களையும் எதிர்த்து நிற்போம்…

புதிய உலகம் படைத்திட புறப்படுவோம்…
பூமி நமக்கே சொந்தம் என முழங்கிடுவோம்…

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க