குறைந்த பட்ச ஆதார விலை கோரிக்கை மற்றும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மோடி அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததை அடுத்து தலைநகர் புது டெல்லியை நோக்கி மீண்டும் பேரணியை துவங்கியுள்ளனர் விவசாயிகள். அவர்கள் மீது போலீசு ட்ரோன் மூலம் கொடூர தாக்குதல்களை நடத்தி வருகிறது.

சில வாரங்களுக்கு முன்பு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து டெல்லி நோக்கி பேரணி செல்லும் போராட்டத்தை இலட்சக்கணக்கான விவாயிகள் தொடங்கினர். ஆனால், தலைநகரில் இருந்து 200 கி.மீ தொலைவில் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் 2020-21 ஆம் ஆண்டுகளில் விடாப்பிடியான போராட்டத்தை நடத்தி மோடி அரசை பணியவைத்தனர். எனவே தற்போதையப் போராட்டத்தில், போராடும் விவசாயிகளை தலை நகருக்குள் நுழைய விடக்கூடாது என்பதற்காக மிகவும் கடுமையாக அடக்குமுறையை ஏவி வருகிறது பாசிச மோடி அரசு. அவர்களை தலை நகருக்குள் நுழைய விடாமல் தடுக்க காண்கிரீட் தடுப்புக்கள், இரும்பு தடுப்புக்கள், இரும்பு முட்கம்பிகள், இரும்பு கூர்முனைகள் ஆகியவை மூலம் நெடுஞ்சாலைகளை அடைத்தனர். எனினும் பல்வேறு இடங்களில் விவசாயிகள் தடுப்பரண்களை உடைத்து முன்னேறினர்.

பஞ்சாப், ஹரியானா இடையேயான எல்லைக்கு அருகில் உள்ள ஷம்பு நகரில் இருந்த விவாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தியது அரசு. அதில் மக்காச்சோளம், தானியம், பருப்பு வகைகள் மற்றும் பருத்தி உள்ளிட்ட சில குறிப்பிட்ட பயிர்களுக்கு உத்தரவாத விலையில் ஐந்தாண்டு ஒப்பந்தங்களை வழங்கும் அரசாங்கத்தின் முன்மொழிவை அவர்கள் நிராகரித்தனர். அவர்கள் வைத்த அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என்று மீண்டும் விவசாயிகள் டெல்லியை நோக்கிய பேரணியை துவங்கியுள்ளனர். அவர்கள் மீது ட்ரோன் தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறது பாசிச மோடி அரசு.

பஞ்சாப் – ஹரியானா மாநிலங்களுக்கு இடையேயான எல்லையில் உள்ள ஷம்பு என்ற இடத்தில் விவசாயிகள் புது தில்லியை நோக்கி செல்லும் போது போலீசு அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
போலீசு கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியதால் விவசாயிகள் பதற்றத்துடன் செல்கின்றனர்.
ஒருவர் கண்ணீர் புகைக் குண்டு வழியாக நடந்து செல்கிறார்.
அரசாங்கம் விவசாயிகளை பேச்சு வார்த்தைக்கு அழைத்தமையால், விவசாயிகள் ஷம்பு பகுதியில் தஞ்சமடைந்துள்ளனர்.
விவசாயிகள் மற்றும் நிஹாங்குகள் ஷம்பு பகுதியில் இரும்புக் கவசங்களைப் பிடித்துள்ளனர்.
ஒரு நிஹாங் ஷம்பு பகுதியில் சாலையில் இருக்கும் கான்கிரீட் தடுப்பின் மீது அமர்ந்திருக்கிறார்.

இன்று(21.02.2024) சுமார் இலட்சக்கணக்கான விவசாயிகள் ஷாம்பு எல்லையில் இருந்து புறப்பட்டனர்.

புகழ்
நன்றி: அல்ஜசீரா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க