08.03.2024

ஆசிரியர் உமா மகேஸ்வரி மீதான
பணியிடை நீக்க உத்தரவை திரும்ப பெறுக!

மக்கள் அதிகாரம் கண்டனம்

ல்வி செயற்பாட்டாளரும், மக்கள் கல்வி கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவருமான ஆசிரியர் உமாமகேஸ்வரி அவர்கள் தமிழ்நாடு அரசால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது. அவர் மீதான பணியிடை நீக்கத்தை தமிழ்நாடு அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.

“எங்கே பயணிக்கிறோம் கல்வி பாதையில்” என்ற கட்டுரையை முகநூலில் பதிவிட்டதற்கு விளக்கம் கேட்பது என்ற பெயரில் விசாரணை அதிகாரிகளால் துன்புறுத்தப்பட்டிருக்கிறார். குற்றச்சாட்டு குறித்து முறையாக விளக்கம் கேட்காமலேயே பணியிலிருந்து தற்காலிக பணியிடை நீக்கம் செய்துள்ளதுள்ளனர் தமிழ்நாடு அரசு கல்வித்துறை அதிகாரிகள்.

தேசியக் கல்விக் கொள்கையை எதிர்ப்பதாக தமிழ்நாடு அரசு கூறுகிறது. தேசியக் கல்விக் கொள்கைக்கு எதிராக தொடர்ந்து போராடி வரக்கூடிய ஆசிரியர் உமா மகேஸ்வரி அவர்களின் மீதான நடவடிக்கை தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகிறது.

ஒன்றிய அரசின் பாசிச – அராஜக செயல்பாடுகளை விமர்சிக்கும் திமுக அரசின் இந்த நடவடிக்கை ஜனநாயக மறுப்பாகும்.

அரசு பள்ளிகளை பாதுகாக்க வேண்டும், ஏழை எளிய மக்களுக்கு தரமான கல்வியை அரசு வழங்கிட வேண்டும் என்ற நோக்கத்திற்காக தமிழ்நாட்டில் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் ஆசிரியர் உமா மகேஸ்வரி.

அவருடைய பணியிடை நீக்கத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.


தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம் ,
தமிழ்நாடு – புதுவை
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க