வாசகர்களுக்கு வணக்கம்.

வினவு தளத்தின் முகநூல் பக்கங்களான “வினவின் பக்கம்”, “வினவு காணொளிகள்”, “வினவு களச்செய்திகள்”, “வினவு கேலிச்சித்திரங்கள்” ஆகியவை சங்கி கும்பலால் ஹேக் செய்யப்பட்டிருந்த நிலையில், அவற்றை மீட்டுவிட்டோம். ஆனால், முகநூல் பக்கங்களின் பெயர்களை பழையபடி மாற்றுவதற்கு 60 நாட்கள் ஆகும் என்று “மெட்டா” நிறுவனம் கூறிவிட்டது.

எனவே, சங்கி கும்பலால் திருத்தப்பட்ட முகநூல் பக்கத்தின் பெயரினால் குழப்பங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கவும் வாசகர்களின் வசதிக்காகவும் “Vinavu.com” என்ற பெயரில் ஒரு புதிய முகநூல் பக்கத்தைத் தொடங்கியுள்ளோம். இப்பக்கத்தில், மேற்குறிப்பிட்ட பக்கங்களில் வெளியிடப்படும் அனைத்து பதிவுகளும் பதிவிடப்படும்.

வாசகர்கள் “Vinavu.com” என்ற புதிய முகநூல் பக்கத்தையும் பின்தொடர்ந்து ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்வதோடு, பிற முகநூல் பக்கங்களிலும் வழக்கம் போல் பதிவுகள் வெளியாகும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.


சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க