பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து இந்திய மருத்துவர்கள் ஆகஸ்டு 18 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த ஆகஸ்ட் 9-ஆம் தேதியன்று மேற்கு வங்கம் மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் ஓர் அறையிலிருந்து 31 வயதான பெண் பயிற்சி மருத்துவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவர் அதிகாலை 3 மணியில் இருந்து 6 மணிக்குள் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது கழுத்தை நெறிக்கப்பட்டுள்ளதாகவும், கழுத்தெழுப்பில் முறிக்கப்பட்டுள்ளதாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படிக்க : மேற்குவங்க மருத்துவ மாணவி பாலியல் வன்கொலை: வலுக்கும் போராட்டங்கள் | புகைப்படங்கள்
அதிகாலை 4 மணிக்கு ஒரு நபர் கொலை நடந்த கட்டிடத்தில் நுழையும் சிசிடிவி காட்சிகள் கிடைத்துள்ளதாகவும், கொலை நடந்த இடத்தில் அந்த நபர் தனது புளுடூத் எட் செட்டை விட்டு சென்றுள்ளதாகவும் விசாரணையில் கூறப்படுகிறது. இக்கொலை தொடர்பாக கொல்கத்தாவில் போக்குவரத்து காவல் தன்னார்வலராக பணியாற்றிவரும் சஞ்சய் என்பவரை குற்றவாளி என கூறி போலீசு கைது செய்துள்ளது. ஆனால், உண்மையான குற்றவாளியை இன்னும் பிடிக்கவில்லை என்று மருத்துவரின் குடும்பத்தினரும், போராடும் மருத்துவ மாணவர்களும் கூறுகின்றனர்.
பெண் மருத்துவர் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்ட சம்பவம் நாடுமுழுவதும் மிகுந்த சோகத்தையும் கொந்தளிப்பான சூழலையும் ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், அமைப்புகள் பெண் மருத்துவரின் பாலியல் வன்கொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பெண் மருத்துவரின் படுகொலையை கண்டித்து கொல்கத்தாவில் ஆயிரக்கணக்கானோர் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். “குணப்படுத்தும் கைகளில் இரத்தம் வரக் கூடாது” என்பது போன்ற பல்வேறு முழக்கங்களை கைத்தட்டிகளாக வைத்திருந்தனர்.
படிக்க : மேற்குவங்கம்: மருத்துவ மாணவி பாலியல் வன்கொலையை எதிர்த்து மருத்துவர்கள் போராட்டம்
இந்நிலையில் ஆகஸ்ட் 18 ஆம் தேதியன்று நாடுமுழுவதும், மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள், மருத்துவப்பணியாளர்கள் என பலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பஞ்சாப்
***
***
பெங்களூரு
***
ஜம்மு
***
உத்தரப்பிரதேசம்
***
கொல்கத்தா
***
மும்பை
***
புதுடெல்லி
***
குஜராத்
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை இந்தியாவில் ஒரு முக்கியப்பிரச்சினையாகும். 1.4 பில்லியன் மக்கள் வசிக்கும் இந்நாட்டில் கடந்த 2022-ஆம் ஆண்டில் சராசரியாக ஒரு நாளைக்கு 90 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube