பரந்தூர் விமான நிலையம் கார்ப்பரேட் சேவையில் தீவிரம் காட்டும் திமுக அரசு!

பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 797 நாட்களுக்கும் மேலாக போராடி வருகின்ற ஏகனாபுரம் உள்ளிட்ட 20 கிராம மக்களுக்கு ஆதரவாக ஜனநாயக சக்திகள் அனைவரும் துணை நிற்க வேண்டும்.

செப்டம்பர் 30 ஆம் தேதியன்று திமுக அரசானது பரந்தூர் விமான நிலையத்திற்காக ஏகனாபுரம் கிராம நிலங்களை கையகப்படுத்துவதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு அருகே உள்ள பரந்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள 20 கிராமங்களை  அழித்துவிட்டு  5.476 ஏக்கர் பரப்பளவில் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்கு கடந்த 2022 ஆம் ஆண்டு அரசாணை வெளியிட்டது திமுக அரசு.

அரசாணை வெளியானதிலிருந்து எங்களின் “விவசாயத்தை அழித்து விமான நிலையம் அமைக்காதே!” என்று இன்று வரை விமான நிலையம் அமைப்பதற்கு எதிராக தொடர்ச்சியாக பல்வேறு வடிவங்களில் போராடி வருகின்றனர்.

படிக்க : இஸ்ரேல் தாக்குதல்: சிரியாவில் அகதிகளாக தஞ்சமடையும் லெபனான் மக்கள் | படக்கட்டுரை

கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி ஏகனாபுரத்தில் உள்ள நிலங்களை கையகப்படுத்துவதற்கான அரசாணையை திமுக வெளியிட்டத்தை அடுத்து அனைவரும் ஏகனாபுரத்தில் ஒன்று கூடி நிலத்தை கையகப்படுத்துவதற்கான அரசாணையை திமுக அரசானது மீண்டும் வெளியிட்டால் ஏகனாபுரத்தில் அனைத்து கிராம மக்களும் ஒன்று கூடி அனைவரும் தற்கொலை செய்துகொள்வோம் எங்கள் உயிரிழப்பிற்கு காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசுமே பொறுப்பேற்க வேண்டும் என்று அறிவித்திருந்தனர்.

ஆனால், மக்களின் போராட்டங்களை எல்லாம் துளியும் பொருட்படுத்தாத திராவிட மாடல் அரசு ஏகனாபுரம் மக்களை மீள்குடியேற்றம் செய்வதற்கான குடியேற்ற இடங்களை தேர்வு செய்வது, அதற்கான திட்டத்தை தயாரிப்பதற்கான மேலாண்மை ஆலோசகரை நியமிப்பதற்கான ஒப்பந்த புள்ளியினை வெளியிடுவது, நிலத்தை கையகப்படுத்துவது என தொடர்ச்சியாக விமான நிலையம் அமைப்பதற்கான பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது.

இந்நிலையில், திராவிட மாடல் அரசானது செப்டம்பர் 30-ஆம் தேதி (திங்கள்கிழமை)  ஏகனாபுரத்தில் உள்ள 445 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்துவதற்கான அரசாணையை  வெளியிட்டு விமான நிலையம் அமைவதற்கு ஏதாவது ஆட்சேபனை இருந்தால் நில  உரிமையாளர்கள் ஒரு மாதத்திற்குள் கருத்து தெரிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.

ஏற்கனவே, விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் தங்களுடைய  கருத்தை தெரிவித்தபோது திமுக அரசானது தன்னுடைய கார்ப்பரேட் நலனுக்காக போலிசை  வைத்து மக்களின் கருத்துக்களையும் விமான நிலையான அமைப்பதற்கு எதிரான அவர்களின்  குரல்களையும் எப்படி ஓடுக்கியது என்பது அனைவரும் அறிந்ததே!.

படிக்க : சிந்தப்பள்ளி பட்டாசு ஆலை பயங்கர வெடிவிபத்து – 30 வீடுகள் சேதம்!

எனவே, மக்கள் மீண்டும் இதனை நம்பத் தயாராக இல்லை என்பதை தொடர்ச்சியான அவர்களின்  போராட்டம் நமக்கு உணர்த்தியுள்ளது..

பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 797 நாட்களுக்கும் மேலாக போராடி வருகின்ற ஏகனாபுரம் உள்ளிட்ட 20 கிராம மக்களுக்கு ஆதரவாக ஜனநாயக சக்திகள் அனைவரும் துணை நிற்க வேண்டும்.

இன்குலாப்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க