இராமநாதபுரம்: “பாசிச இஸ்ரேல் அரசே பாலஸ்தீனம்-லெபனான் மீதான தாக்குதலை உடனே நிறுத்து” || கண்டன ஆர்ப்பாட்டம்!

"பாசிச இஸ்ரேல் அரசே பாலஸ்தீனம்-லெபனான் மீதான தாக்குதலை உடனே நிறுத்து" என்ற முழக்கங்களின் அடிப்படையில் பெரியாரிய உணர்வாளகள் கூட்டமைப்பு ஒருங்கிணைத்து நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் இராமநாதபுரம் அரண்மனை வாசல் முன்பு 10.10.2024 காலை 10:30 மணியிலிருந்து 12.30 மணி வரை நடைபெற்றது.

“பாசிச இஸ்ரேல் அரசே பாலஸ்தீனம்-லெபனான் மீதான தாக்குதலை உடனே நிறுத்து” என்ற முழக்கங்களின் அடிப்படையில் பெரியாரிய உணர்வாளகள் கூட்டமைப்பு ஒருங்கிணைத்து நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் இராமநாதபுரம் அரண்மனை வாசல் முன்பு 10.10.2024 காலை 10:30 மணியிலிருந்து 12.30 மணி வரை நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர் ரவி தலைமை தாங்கினார். இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பாசிச மோடி அரசுக்கு எதிரான கண்டன முழக்கங்களுடன் ஆர்ப்பாட்டம் தொடங்கியது.

படிக்க : புனிதா தற்கொலை: நீட் தேர்வால் தொடர்ந்து கொல்லப்படும் மாணவர்கள்!

இந்நிகழ்வில் சுதந்திரத்திற்கான விவசாய சங்கத்தின் மூத்த தோழர் குமரேசன் கண்டன உரையை பதிவு செய்தார். RMPI தோழர் களஞ்சியம், CPIML தோழர் சந்தானமேரி, தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பில் தோழர் ரவிச்சந்திரன், CPIML MASS LINE மாநில குழுத் தோழர் யோகேஸ்வரன், வீரகுல தமிழர் படையின் ஒருங்கிணைப்பாளர் தோழர் கீழை பிரபாகரன், மனித நேய ஜனநாயக கட்சியின் மாவட்டச் செயலாளர் தோழர் செய்யது இப்ராகிம், புரட்சிகர இளைஞர் முன்னணியின் மாவட்ட பொறுப்பாளர் தோழர் தமிழ் முருகன், பெரியார் பேரவை தலைவர் தோழர் நாகேசுவரன், மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் இராமலிங்கம், ஆதித்தமிழர் கட்சியின் மண்டல செயலாளர் தோழர் பாஸ்கரன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

 

எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில பேச்சாளர் சகோ முகமது அயூப் புகாரி இமாம் அவர்கள் விரிவான வரலாறுகளை எடுத்துரைத்து நாம் போராட வேண்டிய தேவையை வலியுறுத்தி கண்டன உரையாற்றினார்.

படிக்க : கொல்கத்தா: மீண்டும் தொடங்கிய மருத்துவர்கள் போராட்டம்!

கலந்து கொண்டு பேசிய அமைப்புகளின் தோழர்களும் கலந்து கொண்டனர். முழக்கத்துடன் கூட்டம் இறுதி நிகழ்வை எட்டியது. தமிழ் புலிகள்கட்சியின் சார்பாக கிழக்கு மாவட்ட செயலாளர் தோழர் ரஞ்சித் அவர்கள் நன்றி உரையுடன் கூட்டம் முடிவடைந்தது.

நேரலையை காண :

தகவல் : மக்கள் அதிகாரம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க