டிசம்பர் 6: மீண்டும் டெல்லி சலோ

இன்று (டிசம்பர் 6) காலை 9 மணிக்கு டிராகடர்களில் பேரணி செல்வதற்குப் பதிலாக முக்கியத் தலைவர்களின் தலைமையின் கீழ் தனித்தனி குழுக்களாகப் பிரிந்து பாதயாத்திரையாக நடந்தே டெல்லிக்குள் செல்லப் போவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

ஞ்சாப் மாநில விவசாயிகள் பாசிச மோடி கும்பலின் மக்கள் விரோத திட்டங்களுக்கு எதிராகவும் தங்களின் பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை (MSP) உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் இன்று (டிசம்பர் 6) முதல் மீண்டும் “டெல்லி சலோ” பேரணியைத் தொடங்கப்போவதாக அறிவித்துள்ளனர்.

இக்கோரிகைகளை வலியுறுத்தி கடந்த பிப்ரவரி மாதம் கிசான் மஸ்தூர் மோர்ச்சா (Kisan Mazdoor Morcha) சம்யுக்த கிசான் மோர்ச்சா (Samyukta Kisan Morcha) விவசாய சங்கங்களின் கீழ் டெல்லியை நோக்கி டிராக்டர் பேரணியை அறிவித்திருந்தனர். ஆனால்,பாசிசக் கும்பலால் மாநிலத்தின் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

அன்று முதல் ஷம்பு மற்றும் கனௌரி எல்லையில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்த விவசாயிகள் தற்போது தீவிரமான முறையில் “சாகும் வரை உண்ணாவிரத” போராட்டத்தையும் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் விவசாயிகளின் தலைவர்களில் ஒருவரான பாந்தர் (Sarwan Singh Pandher) “தற்போது வரை தீர்வு கிடைக்காததால் எங்களின் போராட்டத்தை மாற்ற முடிவு செய்துள்ளோம். நாங்கள் அமைதியான முறையில் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் டெல்லியை நோக்கி பேரணி நடத்துவதற்கு எங்களை மாநிலம் வழியாகச் செல்ல அனுமதிக்குமாறு ஹரியானா போலீசிடம் அனுமதி கேட்டோம்.

ஆனால் நாங்கள் டிராக்டர்களிலும், டிராலிகளிலும் ஹரியானா வழியாக டெல்லிக்குள் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பாசிச கும்பலின் அடக்குமுறைகளுக்கும் எதிர்ப்புகளுக்கும் பணியாத விவசாயிகள் தங்களின் போராட்ட வடிவத்தை மாற்றியுள்ளனர்.

அதனடிப்படையில் இன்று (டிசம்பர் 6) காலை 9 மணிக்கு டிராகடர்களில் பேரணி செல்வதற்குப் பதிலாக முக்கியத் தலைவர்களின் தலைமையின் கீழ் தனித்தனி குழுக்களாகப் பிரிந்து பாதயாத்திரையாக நடந்தே டெல்லிக்குள் செல்லப் போவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

ஆனால் டெல்லியில் போராட்டம் நடத்துவதற்கு தங்களுக்கு உறுதியான இடம் கிடைக்கும் வரை மாநிலத்தின் எல்லைகளில் உள்ள போராட்டப் பந்தல்களை அகற்றமாட்டோம் என்று கூறி விவசாயிகள் உறுதியான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

எனவே, பாசிச கும்பலின் மக்கள் விரோத திட்டங்களுக்கு எதிராக மீண்டும் போராட்டத்தைத் தொடங்கியுள்ள விவசாயிகளுக்கு அனைத்து ஜனநாயக சக்திகளும் ஆதரவளிக்க வேண்டும்.


ஆசாத்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க