கெளரி லங்கேஷின் நினைவை நெஞ்சிலேந்துவோம்!

கௌரி லங்கேஷ்க்கு இரண்டு தெரிவுகள் இருந்தது. ஒன்று வசதியான வாழ்க்கைப் பாதை. இன்னொன்று அநீதிக்கு எதிராக போராடும் கடினமான பாதை. இரண்டாவதை துணிந்து தேர்ந்தெடுத்தார்.

செப் 5 – 2017:
பத்திரிக்கையாளரும், சமூக செயற்பாட்டாளருமான கௌரி லங்கேஷ், இந்துத்துவ பாசிச பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட நாள்…

கௌரி லங்கேஷ் யார்?

அவரால் ஆங்கிலத்திலும் கன்னடத்திலும் எழுதப்பட்டு தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட கட்டுரைகள் அவரை நமக்கு கொஞ்சம் கொஞ்சமாக அறிமுகப்படுத்திக் கொண்டே வருகின்றன.

2000 ஆம் ஆண்டுவரை ஆங்கிலம் மட்டுமே தெரிந்த பத்திரிக்கையாளராக தில்லியில் பிரபல ஊடகங்களில் முக்கிய பொறுப்புகளில் பணியாற்றினார்.

கவிஞரும், எழுத்தாளருமான அவருடைய அப்பா ‘லங்கேஷ்’ என்ற முற்போக்கு பத்திரிகையை தொடர்ந்து நடத்தி வந்தார்.

அவருடைய இறப்புக்கு பிறகு பத்திரிக்கையை நடத்துவதா வேண்டாமா என பரிசிலீத்த பொழுது பணிபுரியும் ஊழியர்கள் கொடுத்த உற்சாகத்தால் ஆசிரியராகப் பொறுப்பேற்கிறார் கெளரி லங்கேஷ். கன்னடம் கற்கிறார் மெல்ல மெல்ல முன்னேறி தலையங்கத்தை அவரே கன்னடத்தில் எழுதுகிறார்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கைகள் ஏழைகளின் சாவுக்கே வழிவகுத்தது. மோடியின் ஆட்சி துக்ளக் தர்பார் என சாடினார்.

பாபாபுடன் கிரி என்ற இடத்தை மீண்டும் ஒரு அயோத்தியாக மாற்ற முயன்ற காவி கும்பலை களத்தில் நின்று எதிர்த்தார்.


படிக்க: பல்லாயிரம் போராளிகளை விதைத்துச் சென்ற கௌரி லங்கேஷ் !


இன்னொரு குஜராத்தாக கர்நாடகத்தை மாற்றுவதற்கு இந்துத்துவ சக்திகள் குவிந்து வேலை செய்த பொழுது ஜனநாயக சக்திகளோடு அறிவுத் தளத்தில் மட்டுமல்ல களத்திலும் உறுதியாக நின்றார்.

“தான் ஒரு எழுத்தாளர் என்ற முறையில் உண்மையை எழுதுகிறேன் அது என்னுடைய கடமை” என்றார் அருந்ததிராய். இது கௌரி லங்கேஷ்க்கும் பொருந்தும். பத்திரிக்கையில் உண்மையை எழுதியதற்காக தொடர்ந்து பல வழக்குகளை எதிர்கொண்டார்.

கௌரி லங்கேஷ்க்கு இரண்டு தெரிவுகள் இருந்தது. ஒன்று வசதியான வாழ்க்கைப் பாதை. இன்னொன்று அநீதிக்கு எதிராக போராடும் கடினமான பாதை. இரண்டாவதை துணிந்து தேர்ந்தெடுத்தார்.

அவர் செயல்பாடுகளைக் கவனிக்கிற பொழுது இந்துத்துவ பயங்கரவாத எதிர்ப்புப் போரில் ஒரு தளபதியாக நின்று போராடி இருக்கிறார்.

இந்துத்துவ பயங்கரவாத கும்பல் மிரட்டிப் பார்த்தார்கள். கௌரி லங்கேஷ் பணியவில்லை. இந்து சனாதனத்தை கருத்து தளத்தில் நிறுவ முடியாத கோழைகள், தங்களது ஸ்லீப்பர் செல்களை வைத்து சுட்டுக் கொன்றுவிட்டார்கள்.

“கௌரி மௌனமாகி விட்டாள்!
ஹா! ஹா!!
என்ன வேடிக்கை!!
சூரியகாந்தி விதைகளை போல்
அவள் திடீரென்று வெடித்துச் சிதறி அனைத்து இடங்களிலும் பரவினாள்.
இந்தியாவிலும்,
கடல்களையும் தாண்டியும்…
தற்போது மௌனம் கோஷிக்கிறது… எதிரொலிக்கிறது….
“நாங்கள் எல்லோரும் கெளரி”
– கெளரியின் சகோதரி எழுதிய கவிதையிலிருந்து…

நம்மில் பலரும் வேடிக்கைப் பார்ப்பதால் தான் கல்புர்கி, பன்சாரே, கெளரி என பலரும் கொல்லப்படுகிறார்கள். இதை அழுத்தமாய் நினைவில் வைப்போம்.

தோழர் கெளரி லங்கேஷின் நினைவை நெஞ்சிலேந்துவோம்!
ஆர் எஸ் எஸ் – பிஜேபி, அம்பானி – அதானி
பாசிசத்தை வீழ்த்த உறுதியேற்போம்!

மக்கள் அதிகாரக் கழகம்
கிருஷ்ணகிரி மாவட்டம்
தொடர்புக்கு : 8754674757

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க