சென்னை:
ஆவடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி வடக்கு மண்டல பொருளாளர் தோழர்.சக்திவேல் தலைமை தாங்கினார். தோழர்.நாகராஜன் (த.பெ.தி.க), தோழர்.மாறன் ( பு.மா.இ.மு ), தோழர் மா.சேகர் (தொழிலாளர் சீரமைப்பு இயக்கம்), வழக்கறிஞர். மோசஸ் (வி சி.க), தோழர்.வெற்றிவேல் செழியன் (ம.அ.க), தோழர் ம.சரவணன் (வடக்கு மண்டல பு.ஜ.தொ.மு) ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
தோழர்.மு.சரவணன் (பு.ஜ.தொ.மு) நன்றியுரையுடன் ஆர்ப்பாட்டம் முடிவடைந்தது.
பல்வேறு ஆலைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் திரளாகக் கலந்து கொண்டு எழுச்சிமிகு முழக்கமிட்டனர்.



***
காஞ்சிபுரம்:
டிச.14 தொழிலாளர் உரிமை தினத்தை ஒட்டி காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தோழர் பழனிவேல் (கிளைத்தலைவர், ஆக்சில்ஸ் இந்தியா கிளைச்சங்கம்) தலைமை தாங்கினார். பு.ஜ.தொ.மு மாநில ஒருங்கிணைப்புக்குழு தோழர் சுந்தர் கண்டன உரையாற்றினார்.
மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர்.ஆ.கா.சிவா முன்னிலை வகித்தார்.
பு.ஜ.தொ.மு செயற்குழு உறுப்பினர் தோழர்.சரவணன் நன்றியுரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் காஞ்சி, வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் திரளாகக் கலந்து கொண்டு “தொழிலாளர் விரோத சட்டத்தொகுப்புகளை திரும்பப்பெற போராடுவோம்!” என முழங்கினர்.

***


சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











