வினவு செய்திப் பிரிவு
ஆஸ்திரேலியாவில் இனவெறி செயல்பாட்டில் ஈடுபட்ட அதானி குழுமம்
"அதானியிடமிருந்து பல ஆண்டுகளாகப் பாகுபாடு மற்றும் அவதூறுகளை நாங்கள் சகித்துக் கொண்டிருக்கிறோம். இனி இதை நாங்கள் பொறுத்துக்கொள்ளப் போவதில்லை"
கோவா சர்வதேச திரைப்பட விழாவைக் காவிமயமாக்கிய மோடி அரசு
திரைப்பட விழாவின் திரையிலும், வெளிப்புறத்திலும் ராமர், அனுமான், விஷ்ணு உள்ளிட்ட இந்துக் கடவுள்களின் உருவங்கள் இடம்பெற்றிருந்தன. கோவா சர்வதேச திரைப்பட விழா அரங்கு முழுவதும் காவி நிறத்தில் வண்ணம் பூசப்பட்டு இருந்தது.
மார்க்சிய பேராசான் பிரடெரிக் ஏங்கெல்ஸ் கம்யூனிசத்திற்கு மாறிய வரலாறு! | மீள்பதிவு
ஜெர்மனியில் ஒரு தொழிலதிபரின் மகனாகப் பிறந்த எங்கெல்ஸ் ஒரு பொருள்முதல்வாதியாக - கம்யூனிஸ்ட்டாக மாறிய காலகட்டம் - அது அவர் மார்க்ஸை சந்திப்பதற்கு முந்தைய காலகட்டம். இக்காலகட்டத்தில் எங்கெல்சின் சமூகப் பார்வை மாற்றமடைந்ததன் அடிப்படை என்ன?
பல்கலைக்கழகங்களில் முற்போக்கு – ஜனநாயக சக்திகளைப் பழிவாங்கும் ஆளுநர் ரவி – ஆர்.எஸ்.எஸ் கும்பல்!
ஆர்.எஸ்.எஸ் - இந்துத்துவ சித்தாந்தத்திற்கும், தமது எடுபிடிகளின் ஊழல் முறைகேடுகளுக்கும் எதிராக இருக்கின்ற முற்போக்கு - ஜனநாயக சக்திகளைப் பழிவாங்கும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது காவி கும்பல்.
ஃபெஞ்சல் புயல் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த வஞ்சியூர் மக்கள்!
கன மழையால் பாதிக்கப்பட்ட வஞ்சியூர் கிராம மக்களுக்கு உடனடியாக அத்தியாவசியப் பொருட்களான பால் மற்றும் உணவுப் பொருட்கள் மற்றும் தங்குவதற்கு இடமும் தேவைப்படுகிறது.
இயற்கை பேரிடர்களால் அல்லல்படும் 3.5 கோடி ஆப்பிரிக்க மக்கள்
காப் 29 மாநாட்டில் இயற்கை பேரழிவுகளுக்கு முக்கியமாகப் பொறுப்பேற்க வேண்டிய மேற்குலக வளர்ந்த ஏகாதிபத்திய நாடுகளோ நாங்கள் மட்டும் பெரிதாய் என்ன செய்து விட முடியும் என்கிற ரீதியில் பொறுப்பைத் தட்டிக் கழித்துவிட்டன.
கனிமவளக் கொள்ளைக்காக பழங்குடிகள் அமைப்பைத் தடை செய்த சத்தீஸ்கர் அரசு!
"அடிப்படை வசதிக்காகவும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்கப்படும் எங்கள் காடுகள், நீர் மற்றும் நிலங்களைக் காப்பாற்றுவதற்காகவும் தொடர்ந்து போராடி வருவதால் ஆளும் அரசாங்கத்தால் வளர்ச்சிக்கு எதிரானவர்களாகவும் மாவோயிஸ்ட்டுகளாகவும் சித்தரிக்கப்பட்டுத் தாக்கப்படுகிறோம்"
அதானி ஊழல் விவகாரத்தை நாடாளுமன்றத்தில் பேச மறுக்கும் மோடி அரசு!
அதானியைப் பற்றி நாடாளுமன்றத்தில் விவாதித்தால் அது தேசத்திற்கு எதிரானது; எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் யாரும் அதானியைப் பற்றிப் பேசவே கூடாது என்பதையே பாசிசக் கும்பல் மீண்டும் கூறியுள்ளது.
உ.பி: நீதிமன்றத்தின் துணையோடு சம்பல் பகுதியில் கலவரத்தை உருவாக்கும் பாசிச கும்பல்
பல ஆண்டுகளாக நிலைத்துநின்ற இந்துக் கோவில்கள் அனைத்தும் தகர்க்கப்பட்டு தான் இஸ்லாமிய வழிப்பாட்டுத் தலங்கள் கட்டப்பட்டன என்று ஆதாரமற்ற மதவெறிப் பிரச்சாரத்தின்மூலம் ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க பாசிசக் கும்பல், மசூதிகளை இடித்து அங்கு இந்துக்கோவில்களைக் கட்டுவதில் தீவிர முனைப்புக் காட்டிவருகிறது.
நெல்லை: மகாராஜா நகர் உழவர் சந்தையைப் பராமரிக்காமல் சீரழிக்கும் மாவட்ட நிர்வாகம்
நாட்டிலுள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களை நசுக்கி, விவசாயிகள், சிறு வியாபாரிகள், தேசிய முதலாளிகள் ஆகியோரை நசுக்கி ஒட்டுமொத்த சந்தையை கார்ப்பரேட் பெருநிறுவனங்களிடம் தாரைவார்ப்பதே மோடி அரசின் நோக்கமாகும்.
நவம்பர் 26: மீண்டும் போராட்டம் அறிவித்துள்ள விவசாயிகள்!
நவம்பர் 26-ஆம் தேதி முதல் விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களுக்கு இடையேயான ஷம்பு மற்றும் கானௌரி எல்லைப் பகுதியில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கப் போவதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.
40 ஆம் ஆண்டில் புதிய ஜனநாயகம் | தோழர் சு.பஷீர்
40 ஆம் ஆண்டில் புதிய ஜனநாயகம் | தோழர் சு.பஷீர்
https://youtu.be/FeAJXzzVKmk
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram
ஆஸ்திரேலியாவில் அதானிக்கு எதிரான மக்கள் போராட்டம்!
கென்யா அரசு அதானி நிறுவனத்துடனான அனைத்து ஒப்பந்தங்களையும் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. அதேபோன்று தங்கள் நாட்டிலும் அதானி நிலக்கரி ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வாங்கன் மற்றும் ஜகலிங்கோ பழங்குடியின மக்கள் தங்களின் போராட்டங்களைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
அதானியை விரட்டியடித்த கென்ய மக்கள் போராட்டம்!
நியூயார்க் நீதிமன்றம் அதானிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது. இந்த செய்தியானது கென்ய அதிபர் வில்லியம் ரூட்டோவிற்கு மக்களின் நெருக்கடியை மேலும் அதிகரித்தது.
ஜார்க்கண்ட்: முஸ்லீம் வெறுப்பு பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்திய காவிக் கும்பல்!
பழங்குடி மக்களின் வாக்குகளைப் பெற்றுவதற்கு முஸ்லீம்கள் மீதான மத வெறுப்பு பிரச்சாரத்தை ஆயுதமாக எடுத்தது பாசிச கும்பல். அதற்கு ஏற்ற வகையில் தன்னுடைய கட்சியைச் சேர்ந்த அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவை தேர்தல் ஒருங்கிணைப்பாளராக நியமித்தது.