புதிய ஜனநாயகம்
கார்ப்பரேட் அதானியின் கோரப்பிடியில் காட்டுப்பள்ளி!
ஆண்டுக்கு ஒரு மீட்டருக்கு மேல் கடலரிப்பு ஏற்படும் பகுதிகள் அபாய பகுதிகளாக (ஹாட் ஸ்பாட்) அடையாளம் காணப்பட்டு, துறைமுகங்கள் போன்ற திட்டங்கள் அப்பகுதிகளில் மேற்கொள்ளக் கூடாது என்பது சுற்றுச்சூழல் விதிமுறையாகும். ஆனால், காட்டுப்பள்ளியில் துறைமுகங்கள் கட்டப்பட்டதன் காரணமாக கடலில் ஆண்டுக்கு 8.6 மீட்டருக்கு கடலரிப்பு ஏற்படுகிறது என்று அதானி துறைமுகத்தின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வே குறிப்பிடுகிறது.
இந்திய தண்டனைச் சட்டம்: இனி இந்துராஷ்டிர தண்டனைச் சட்டம்!
நிலவுகின்ற போலி ஜனநயாகக் கட்டமைப்பை தனது பாசிச சர்வாதிகாரத்தை நிறுவும் வகையில் மறு ஒழுங்கமைப்பு செய்துவரும் பாசிச கும்பல் அடுத்தக்கட்டமாக, தாம் அமைக்கவிருக்கும் இந்துராஷ்டிரத்திற்கான குற்றவியல் தண்டனைச் சட்டங்களையும் வகுத்து விட்டது.
காவிரி நீருக்கான போராட்டம் பாசிச எதிர்ப்புப் போராட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும்!
தஞ்சை டெல்டாவைப் பாலையாக்கும் கார்ப்பரேட் கொள்ளையில் அனைத்து கட்சிகளும் ஏதாவது ஒரு வகையில் உடன்படுவதால்தான், காவிரி நீர் பிரச்சினையை வைத்துக் கொண்டு லாவணி பாடுகின்றன. தமிழ்நாட்டிற்கு நீரைக் கொடுக்கக்கூடாது என்பதில் காங்கிரசும் பா.ஜ.க.வும் ஒரே குரலில் செயல்படுகின்றன.
“ஊழல் நாயகன்” மோடி!
பாசிஸ்டுகள் என்றைக்கும் ஊழல்வாதிகளே. அவர்களது ஊழல் ஒழிப்பு நாடகமெல்லாம், எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற்கே அன்றி, ஊழலை ஒழிப்பதற்கானதல்ல. இது ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. பாசிஸ்டுகளுக்கும் பொருந்தும்.
தமிழ்நாட்டின் அவமானச் சின்னங்கள்!
அரசியல் கட்சிகளை நடத்தும் இந்த சினிமா கழிசடைகளும், சாதிக்கட்சிகளை நடத்தும் சாதிவெறித் தலைவர்களும் தமிழ்நாட்டு பா.ஜ.க., அ.தி.மு.க., பா.ம.க., நா.த.க. போன்ற பிழைப்புவாத காரியவாத பொறுக்கித் திண்கிற, ஆளும் வர்க்கத்திற்கு நேரடியாக சேவைசெய்கின்ற கட்சிகளும் தலைவர்களும் தமிழ்நாட்டின் அவமானச் சின்னங்கள்!
ஒருவிரல் புரட்சியா, மக்கள் எழுச்சியா: பாசிசத்தை எதிர்கொள்ள, “சாத்தியமான மாற்று” எது?
ஆகப் பெரும்பான்மை மக்கள் நிராகரித்த ஒரு கட்சிக்கு 'பெரும்பான்மை' கிடைக்கச் செய்திருப்பது இந்தியாவின் போலி ஜனநாயக அமைப்பு முறைதானே ஒழிய, தேர்தல் மோசடிகள் அல்ல. இன்னும் சொல்லப் போனால், தேர்தல் மோசடிகளை அரங்கேற்றுவதற்கே இந்த போலி ஜனநாயக அமைப்பு முறைதான் அடிப்படையாக இருக்கிறது. "மோசடி" என்று சாட வேண்டுமென்றால், இந்த போலி ஜனநாயக அமைப்புமுறையைத்தான் சாட வேண்டும்.
அசாம் தொகுதிகள் மறுவரையறை: வாக்குவங்கியை காவிமயமாக்கும் புதிய மாடல்!
காவிக் கும்பல் உருவாக்க இருக்கும் ‘புதிய’ இந்தியாவில் முஸ்லிம் மக்களின் வாக்குகள் அவர்களுக்கு தேவையில்லை என்ற நிலைமையை உருவாக்கி வருகிறது.
பொதுப் பாடத்திட்டம்: தி.மு.க. அரசின் மற்றொரு கார்ப்பரேட் சேவை!
கல்வியைக் கார்ப்பரேட் மயமாக்கும் நோக்கத்தில் தி.மு.க. அரசு மேற்கொண்டுவரும் பல்வேறு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, உயர்கல்வித் துறையில் பொதுப் பாடத்திட்டம் என்ற திட்டமும் அமைந்துள்ளது.
புதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2023 | மின்னிதழ்
புதிய ஜனநாயகம் செப்டம்பர் 2023 இதழை மின்னிதழ் வடிவில் பெற 94446 32561 என்ற எண்ணிற்கு ஜி-பே மூலம் ரூ. 20 செலுத்தி அதே எண்ணிற்கு வாட்சப்பில் பணம் செலுத்திய விவரத்தை அனுப்பவும்.
சந்திரயான்-3: போலி தேசப்பெருமித போதை!
இந்தியா சொந்தத் தொழில்நுட்பத்தாலும் சொந்த அறிஞர்களின் முயற்சியாலும் இந்த விண்வெளி சாதனையை நடத்தியிருக்கிறது என்பது உண்மைதான். ஆனால், இந்த விண்வெளி ஆராய்ச்சியின் வெற்றி யாருக்கு பயன்படப்போகிறது என்பதுதான் நமது கேள்வி.
புதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2023 | அச்சு இதழ்
புதிய ஜனநாயகம் - செப்டம்பர் 2023 இதழின் அச்சுப் பிரதியைப் பெற 94446 32561 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் ! விலை - அச்சு இதழ் : ரூ 20 தபால் செலவு : ரூ. 5. மொத்தம் ரூ. 25
அம்பலப்பட்டுப்போன பாசிச மோடி அரசின் ’ஊழல் ஒழிப்பு’ நாடகம்
சாரதா ஊழல் செய்த ஹிமந்த பிஸ்வா சர்மா, பாசன ஊழல் செய்த அஜித் பவார், வியாபம் ஊழல் செய்த சிவராஜ்சிங் சௌகான் உள்ளிட்ட ஊழல்வாதிகளை தனது கட்சியில் சேர்த்துக் கொண்டு அவர்களை உத்தமர்களாக்கியதுதான் பாசிஸ்டுகள் செய்த ஊழல் ஒழிப்பு.
தலையங்கம்: கோழைகளின் வீராவேசம்!
பெரும்பாலான இந்த ஆதிக்கச்சாதிக் கட்சிகள், அமைப்புகளின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.விற்குப் பங்குள்ளது. எனவே, இன்று தலித் மக்கள் மீது அதிகரித்து வரும் வன்முறைகள் நாளை இனப்படுகொலைகளாக, பெண்கள், கிறித்தவர்கள் - இஸ்லாமியர்கள், ஜனநாயக சக்திகள் மீதான வன்முறைகளாக வளரும். தமிழ்நாடு மணிப்பூராக மாறும்!
கழன்றது முகமூடி | பாகம் 2
பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு என்ற மாற்றுக் கட்டமைப்பை நிறுவுவதற்காக பரந்துபட்ட உழைக்கும் மக்களையும், பாசிச எதிர்ப்பு சக்திகளையும் தட்டியெழுப்புவதே, இன்று புரட்சிகர அமைப்புகள் மேற்கொள்ள வேண்டிய வழிமுறையாகும்.
தலித்துகள் – சிறுபான்மையினர் மீது பெருகிவரும் தாக்குதல்கள்: தீர்வு என்ன?
நாடெங்கும் சாதி - மதவெறியர்களால் நிகழ்த்தப்பட்டு வரும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், தலித்துகள், முஸ்லிம்கள், இதர சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் ஆகிய அனைத்தும் தற்செயல் நிகழ்வுகள் அல்ல. காவி பாசிஸ்டுகள் அமைக்க விரும்பும் இந்துராஷ்டிரத்தில் அன்றாடம் நிகழப்போகும் சம்பவங்களின் முன்னோட்டம்தான்.