இந்தியாவெங்கும் காஷ்மீர் மாணவரைத் தாக்கும் ஆர்.எஸ்.எஸ் கூட்டம்
ரசீத் காஷ்மீரின் பாம்ப்பூர் பகுதியை சேர்ந்தவர் என்பதே இவரை தாக்கியவர்களுக்கு தாக்குதலில் ஈடுபட போதுமான காரணமாக இருந்திருக்கிறது. காஷ்மீரின் நிலைக்கு நீங்கள்(காஷ்மீர் முஸ்லீம்கள்) தான் காரணம் என சொல்லி சொல்லி இம்மாணவர் தாக்கப்பட்டுள்ளார்.
பார்ப்பனியத்திற்கு எதிராக குஜராத் தலித் மக்கள் போர்க்கோலம் !
எந்த மாட்டைப் புனிதம் என்று பசப்பினார்களோ அதே மாட்டிறைச்சி இன்று குஜராத் முழுவதும் அரசு அலுவலகங்கள், பொது இடங்களில் அலையலையாகக் கொட்டப்படுகிறது.
குல்பர்க் சொசைட்டி தீர்ப்பு : பாம்பும் சாகாமல் தடியும் நோகாமல்…
குல்பர்க் சொசைட்டி படுகொலையில் நரேந்திர மோடிக்குப் பங்கில்லலை என நீதிமன்றம் ஒத்துக்கொண்டது முதல் அநீதி என்றால், தற்பொழுது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு இரண்டாவது அநீதியாகும்.
வினோதினி, வினுப்ரியா, சுவாதி கொலைகளுக்கு தீர்வு என்ன ?
பிறப்பிலேயே பெண்களை இழி பிறவிகளாகவும் பாலியல் அடிமைகளாகவும் வைத்திருக்கும் பார்ப்பனிய பண்பாட்டுக்கு, பெண்களை நுகர்ந்து எறிய வேண்டிய பண்டங்களாக கருதும் ஏகாதிபத்திய பண்பாடு கனகச்சிதமாக பொருந்தியது.
ஜாட் கலவரம் : சாதி என்றொரு பெருந்தீமை !
சாதி தன் இயல்பிலேயே ஒழுக்கமோ, நெறிகளோ இல்லாத ஒரு சமூக விரோத நிறுவனம் என்பதை அரியானாவில் பிற சாதியினர் மீது ஜாட் சாதிவெறியர்கள் நடத்தி தாக்குதல் காட்டியிருக்கிறது.
சுவாதி கொலை – பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர் பிரிவு பத்திரிகை செய்தி
லேட்டஸ்ட் செல் ஃபோன் வேண்டுமென்றால் திருடியாவது, கொள்ளை அடித்தாவது அல்லது கூலிப்படையாக கொலை செய்தாவது அதை வாங்கி விட வேண்டும் என்பது நுகர்வு கலாச்சாரம் போதித்திருக்கும் பாடம்.
செங்கம் போலீசு காட்டுமிராண்டித்தனம் மற்றும் களச் செய்திகள்
தோற்றுப் போய் திவாலாகி, மக்கள் விரோதமாக செயல்படும் காவல்துறை உட்பட அரசுக் கட்டமைப்பை தகர்த்திடுவோம்! தட்டிக் கேட்கவும், நிர்வகிக்கவும் அதிகாரமுள்ள மக்கள் அதிகார அமைப்புகளை கட்டியமைப்போம்
அபாயம் : அரசு பள்ளிகளில் RSS ஆசிரியர்கள் !
அரசு ஆரம்ப பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் வகுப்பெடுக்க மத்திய பிரதேச பா.ஜ.க அரசு ஒப்புதல் அளிக்க உள்ளது. இதன் மூலம் அம்மாநில ஆரம்ப பள்ளிகள் இனி அதிகாரபூர்வ ஷாகாக்களாக மாற்றப்படும்.
காஷ்மீரில் கொல்லப்பட்ட தலித் போலீசைப் புதைக்க கூட நாதியில்லை !
“என் மகன் நாட்டை பாதுகாக்க உயிரிழந்துள்ளான். ஆனால் அவனுக்கு இறுதி சடங்கு செய்ய நம் மக்களே இடம் தர மறுக்கிறார்கள்.” என வேதனையுடன் குறிப்பிடுகிறார் வீர் சிங்கின் தந்தை. இவர் ரிக்சா இழுக்கும் தொழிலாளி.
மாட்டுத் தோலுக்காக குஜராத் தலித்துக்கள் கொடூரமாக தாக்கப்பட்டனர் !
தலித் இளைஞர்களின் உடைகளை கழற்றி அரை நிர்வாணமாக்கிவிட்டு காரில் பின்புறத்துடன் சங்கிலியுடன் பிணைத்த இந்துத்துவவாதிகள் இரும்பு கம்பி மற்றும் மரகட்டைகளை கொண்டு அவ்விளைஞர்களை தாக்குவது நெஞ்சை பதற செய்வதாக இருக்கிறது.
RSS குருமூர்த்தியின் மெக்சிகோ தக்காளி தத்துவம் !
உணர்வுகளை தர்க்க ரீதியாக அணுக முடியாது. ஒரு பழக்கத்தை பாரம்பரியமாக பின்பற்றும் மக்களிடம் நீங்கள் தர்க்கம் பேச முடியாது. அறிவுஜீவியைப் போல் எல்லா விஷயத்தையும் அணுகாதீர்.
விழுப்புரம் பா.ஜ.க நேரலை : காசு துட்டு அடிதடி குத்து வெட்டு
இப்ப எல்லாருக்கும் போஸ்டிங் போட்டாங்க. அதுல சிலருக்கு குடுக்கல, ஒரு ஆளுக்கு 2 லட்ச ரூபா பணம் வாங்கினு தான் கொடுத்திருக்காங்க.. முக்கியமா, தலித்துகளுக்கு எந்த பொறுப்பும் குடுக்கல. அதனால தான் 50 பேர் வந்து கலவரம் பண்றானுங்க.
கல்வியுரிமை மாநாடு – சம்ஸ்கிருத எதிர்ப்பு – பச்சையப்பன் போராட்டம்
கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு உரைகள், மோடி அரசின் சமஸ்கிருதத் திணிப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டம், பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம்.
இசுலாமிய மன்னர்கள் மதவெறியர்கள் என்றால் இந்து மன்னர்கள் …?
இசுலாமியர் ஆட்சியை எதிர்த்தனர் என்பதற்காக ஆர்.எஸ்.எஸ் கும்பலால் புகழ் பாடப்படும் சிவாஜி போன்ற மராத்திய மன்னர்கள் வங்காளத்திலும், ஒரிசாவிலும் இந்துக்களைக் கொன்று குவித்ததையும், கொள்ளையடித்ததையும் என்னவென்று சொல்வது?
அம்பானிகளின் அடகுப் பொருளா மாணவர்கள் ? – புதிய கலாச்சாரம் ஜுலை 2016
படிப்பதற்கு நடுத்தர வர்க்கம் தனது ஆயுள் சேமிப்பை கொட்டி கனவு கண்டாலும் படித்து முடித்தவருக்கு வேலை இல்லை. இறுதியில் படிப்பதற்கே ஆளில்லை. கடைசியில் ஆள்பிடிப்பதற்கு அரசே பொதுத்துறை வங்கிகள் மூலம் கடன் கொடுத்தது.