Friday, December 26, 2025

ஒடிசா: விவசாயத் தலைவர்களைத் தாக்கிய ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. குண்டர் படை

0
உருக்காலை திட்டத்திற்கு விவசாய நிலத்தை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று பொதுமக்கள் உறுதியாக இருக்கின்றனர். இந்த உறுதியைக் குலைக்க போலீசும் காவி குண்டர் படையும் இணைந்து பலமுறை கிராம மக்களைத் தாக்கியுள்ளன.

பஞ்சாப்: கார்ப்பரேட் ஆதரவு வரைவு மசோதாக்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம்!

2
டிசம்பர் 8- ஆம் தேதியன்று சம்யுக்த கிசான் மோர்ச்சா (SKM) தலைமையில் விவசாயிகள் மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மாநிலத்தின் மின்சார வாரியத்தின் (PSPCL) ஊழியர்களும் விவசாயிகளுடன் இணைந்து வரைவுகளின் நகல்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முளைக்கும் நெற்பயிர்கள் கழுத்தறுக்கும் அரசு மரணிக்கும் விவசாயம்!

“வட்டிக்கு கடன் வாங்கி, நிலத்தை குத்தகை எடுத்து விவசாயம் செய்து, மாட்டுக்கு வைக்கோல் போடுவதற்கு கூட எதுவும் தேறவில்லை” என்று விவசாயிகள் வடிக்கும் கண்ணீர் நம் உணவு வரை கரிக்கிறது.

அன்று டங்ஸ்டன், இன்று கல்லாங்காடு சிப்காட் – மக்கள் போராட்டமே வெல்லும்!

தங்கள் வாழ்வாதாரத்தையும் இயற்கை சுற்றுச்சூழலையும் பண்பாட்டு அடையாளங்களையும் அழிக்கும் கல்லாங்காடு சிப்காட் திட்டத்தை அனுமதியோம் என்று மக்கள் உறுதியுடன் போராடி வருகின்றனர்.

மரபணு திருத்தப்பட்ட பருப்பு வகைகள்: கார்ப்பரேட்மயமாக்கல்தான் தற்சார்பா?

ஏற்கெனவே மரபணு திருத்தப்பட்ட நெல் விதிகளைத் தடை செய்யக் கோரி விவசாயிகள் போராடிவரும் சூழலில், தற்போது மத்திய அரசு மரபணு திருத்தப்பட்ட பருப்பு வகைகளைப் பயிரிடுவதற்கான அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறது.

கிருஷ்ணகிரி: யானைகள் தாக்கி விவசாயிகள் பலி! மாவட்ட நிர்வாகமும், வனத்துறையுமே குற்றவாளிகள்!

வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் சோலார் மின்வேலி அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகமும், வனத்துறையும் வாக்குறுதி கொடுத்தும் நிறைவேற்றவில்லை. யானைத் தாக்குதலால் விவசாயிகள் உயிரிழக்கும்போது வாக்குறுதிகள் கொடுப்பது, அதன் பிறகு அலட்சியமாக இருப்பது என்ற போக்கிலேயே மாவட்ட நிர்வாகமும், வனத்துறையும் உள்ளன.

முறையற்ற நெல் கொள்முதல்: விவசாயத்தை கார்ப்பரேட் மயமாக்குவதன் அங்கம்

நெல் கொள்முதல் செய்யப்படும் இடத்திலிருந்து மையக்கிடங்குகளுக்கு 48 மணி நேரத்தில் நெல் மூட்டைகளை எடுத்துச் சென்று விட வேண்டும் என்று அரசு உத்தரவு இருக்கிறது. ஆனால் மாத கணக்கில் வெயிலிலும் மழையிலும் நனைந்து நெல் மூட்டைகள் முளைத்து கெட்டுப் போகும் வரை அதைப்பற்றி எந்த பதட்டமும் இன்றி அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது.

தமிழ்நாடு அரசே! நெல் கொள்முதலை முறையாக செய்திடு! | தோழர் குருசாமி

தமிழ்நாடு அரசே! நெல் கொள்முதலை முறையாக செய்திடு! | தோழர் குருசாமி https://youtu.be/WjmxmqaSNLQ காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

தமிழ்நாடு அரசே! நெல் கொள்முதலை முறையாக செய்திடு! | ம.அ.க

அறுவடை செய்த நெல்லை உடனடியாக கொள்முதல் செய்யாமல் பல வாரங்கள் காலம் கடத்துவதாலும், கொள்முதல் நிலையங்கள் தேவையான இடவசதியும் முறையான பாதுகாப்பு வசதியும் இல்லாததாளும் டன் கணக்கில் நெல் மூட்டைகள் வெயிலிலும் மழையிலும் கிடந்து சேதமடைந்து வருகின்றன.

மஞ்சள் பட்டாணி இறக்குமதி வரி விலக்கு நீட்டிப்பு: அதானி-குஜராத்திகளுக்காக ஒழித்துக்கட்டப்படும் இந்திய விவசாயிகள்

உள்நாட்டு பருப்பு வகைகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக குவிண்டாலுக்கு 7,000 - 8,000 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், அதைவிட இரண்டு மடங்கு குறைவாக அதுவும் இறக்குமதி வரியே இல்லாமல் மஞ்சள் பட்டாணி இறக்குமதி செய்யப்பட்டு குவிண்டாலுக்கு 3,500 ரூபாய் என சொற்ப விலைக்கு விற்கப்படுகிறது. இது உள்நாட்டு விவசாயிகளை ஒழித்துக்கட்டும் நடவடிக்கையாகும்.

தஞ்சாவூர்: பாதுகாப்பாக நெல்லை சேமிக்க மறுக்கும் அரசு | தோழர் வெற்றிவேல் செழியன்

தஞ்சாவூர்: பாதுகாப்பாக நெல்லை சேமிக்க மறுக்கும் அரசு | தோழர் வெற்றிவேல் செழியன் https://youtu.be/xLlReoBPRbQ காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

தென்காசி வியாபாரிகள் போராட்டம் வெல்லட்டும்!

இதற்கு முன் நகராட்சி நிர்வாகம் மார்க்கெட்டை குத்தகைக்கு விட்டிருந்தது. தற்போது அதிக வருவாயை ஈட்டுவதற்காக தானே நேரடியாக அதிக தொகைக்கு ஏலம் விட்டு வியாபாரிகள் வயிற்றில் அடிக்கிறது.

கிருஷ்ணகிரி: விவசாயத்தை நாசமாக்கும் காட்டுப்பன்றிகளும் வனத்துறையின் அலட்சியமும்

நடைமுறையில் ஒரு சில கண்துடைப்பு நடவடிக்கைகளைத் தாண்டி, ஒருங்கிணைந்த முறையில் காட்டுப்பன்றிப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது என்ற வகையில் வனத்துறை செயல்படுவதில்லை.

கிருஷ்ணகிரி: விவசாயத்தை நாசமாக்கும் போலி விதைகள்

கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை நிர்வாகமானது, தனியார் விவசாய பொருட்கள் விற்பனை நிலையம் மற்றும் விதை, நாற்று உற்பத்தி நிறுவனங்களை உடனடியாக ஆய்வு செய்து போலியான விதைகள், நாற்றுகள் விற்பனை செய்யும் தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மோடி அரசின் E20 திட்டம்: கேள்விக்குறியாகும் உணவுப் பாதுகாப்பு

0
தற்போது அமல்படுத்தப்படும் E20 திட்டத்திற்கு கரும்பிலிருந்து 55 சதவிகிதம் எத்தனாலும், அரிசி போன்ற தானியங்களிலிருந்து 45 சதவிகிதம் எத்தனாலும் எடுக்கப்போவதாக மோடி அரசு கூறியுள்ளது. ஏற்கெனவே, இத்திட்டதிற்காக 2024-2025ஆம் ஆண்டில் 52 லட்சம் மெட்ரிக் டன் அரிசியை மோடி அரசு ஒதுக்கியுள்ளது.

அண்மை பதிவுகள்