நமக்கு மட்டும் ஏம்ப்பா நாள் முழுக்க சோளச்சோறு !
நெற்கதிர்களை நேர்த்தியாக அறுப்பதில் அப்பா லாவகமானவர் ஏதோ ஒரு சிந்தனையில் கதிர்களை இழுத்து அறுத்தபோது விரல்களையும் சேர்த்து அறுத்துக்கொண்டார் அன்று - அறுவடை நிலத்தில் சிந்திய அந்த குருதித்துளிகள் மண்ணுக்கு உரமாகிப்போனது.
வெள்ளாற்றை பாதுகாப்போம் ! கூடலையத்தூர் மணல் குவாரி முற்றுகை !
வெள்ளாற்றை காக்க விவசாயத்தை காக்க மக்கள் தானே களத்தில் இறங்கி போராட முடியும். அதற்கு போலீசு பாதுகாப்பு கொடுக்காமல், ஏன் மக்களை அச்சுறுத்துகிறது? நடப்பது சுதந்திர ஆட்சியா? ஆங்கிலேய காலனி ஆட்சியா?
பிரதம மந்திரி பயிர்க் காப்பீடு திட்டம் : கார்ப்பரேட்டுகளுக்கு நேரடி மானியம் !
தனியார் காப்பீட்டு நிறுவனங்களிடம் ஒப்படைப்பதன் மூலம், அவர்களை இயற்க்கச் சீற்றம், விலை வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு இடர்பாடுகளிலிருந்து காக்க வேண்டிய தனது கடமையைத் தட்டிக் கழிக்கிறது இந்திய அரசு.
விவசாயக் கடன் தள்ளுபடி – மருமகள் உடைத்தால் பொன்குடம் !!
கார்ப்பரேட் முதலாளிகளுக்குத் தரப்படும் கடன் த்ள்ளுபடியைக் கைதட்டி வரவேற்கும் முதலாளித்துவ நிபுணர்கள், விவசாயக் கடன் தள்ளுபடியைப் பொருளாதாரச் சீர்கேடு என நரம்பின்றிச் சாடுகிறார்கள்.
உணவுப் பொருள் இறக்குமதி : ஆதாயமடைவது யார் ?
இந்தியாவில் விளையும் கோதுமையைவிடக் குறைவான விலைக்குக் கிடைக்கும்பொழுது, அது நேரடியாக விவசாயிகளைப் பாதிக்கும் என்கிற சாதாரண பொருளாதார அறிவின் மூலமாகவே இந்த அபாயத்தை யாரும் விளங்கிக் கொள்ள முடியும்.
சோறுடைத்த சோழநாடு அரைப்பட்டினியில் தவிக்கிறது !
தின்னச் சோறில்லை, குடிக்கத் தண்ணீர் இல்லை, கௌரவத்தோடு வாழ வேலையில்லை என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள காவிரி டெல்டாவின் கடைமடைப் பகுதி கூலி, ஏழை விவசாயிகளின் வேதனைக் குரலைக் கேட்கவும் ஆளில்லையோ?
தரணிக்கு சோறிடும் தஞ்சையைக் கடல் கொள்ளப் போகிறதா ?
''பூமியின் அடியாழத்திலிருந்து ஹைட்ரோ கார்பன்களை எடுக்கும்போது பாறைகள் மீது பெருமளவு அழுத்தம் செலுத்தி வந்த வாயுக்கள் அகற்றப்பட்டு விடுவதால்தான் அவற்றுக்கிடையிலான சமநிலை குலைந்திருக்கிறது''
சிறப்புக் கட்டுரை : குத்தகை விவசாயிகளாகும் கார்ப்பரேட்டுகள் !
மோடி அரசு கொண்டுவரவிருக்கும் விவசாய நிலக் குத்தகை சட்டம், சிறு, நடுத்தர விவசாயிகளின் நிலங்களை அபகரித்து, கார்ப்பரேட் முதலாளிகளுக்குச் சமர்ப்பணம் செய்யும் சதித்தனங்களோடு உருவாக்கப்பட்டிருக்கிறது.
பெட்ரோ கெமிக்கல் முதலீட்டு மண்டலம் : மற்றுமொரு பேரழிவு ஆயுதம் !
இம்மண்டலம் அமைய நாம் அனுமதித்தால், விவசாயம் அழிந்து போவது மட்டுமல்ல; அக்கிராம மக்கள் ஊரையே காலிசெய்து விட்டு அகதிகளாக வெளியேறும் நிலைகூட ஏற்படக் கூடும்.
விவசாயி தீராத கடனாளியாவது ஏன் ?
புதிய தாராளவாதக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்ட பிறகு, பணப்பயிர்களுக்கான வாரியங்கள் தங்களது பணிகளை முழுமையாக நிறுத்திக் கொண்டன. இந்திய உணவுக் கழகம் தனது கொள்முதல் கொள்கையைச் சில பயிர்களுக்கு மட்டுமெனச் சுருக்கிக் கொண்டது.
பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டம் : விவசாயிகளுக்கு பட்டை நாமம் !
நாடு முழுவதும், 100 -க்கு 5 விவசாயிகள் கூட இந்தக் காப்பீடு திட்டத்திற்கு சொந்த முறையில் பிரீமியம் கட்டவில்லை. எந்த விவசாயியிடமும் பாலிசிக்கான ஆவணமும் இல்லை. 95% விவசாயிகளை அவர்களுக்கே தெரியாமல் காப்பீடு திட்டத்தில் சேர்த்திருக்கிறார்கள் வங்கி அதிகாரிகள்.
கர்நாடக தமிழக எல்லையில் மாடுகளுக்குத் தடை போடும் பார்ப்பனக் கூட்டம் !
காஞ்சி சங்கர மடமும், மெரினா புகழ் பீட்டா அமைப்பும் நாட்டு மாடுகளை பாதுகாக்கிறோம் என்ற பெயரில், மாடுகளை தமிழகத்திற்கு விற்பனை செய்ய கொண்டு செல்வதை தடுத்து வருகின்றனர்.
கணக்கில் வராத ஒரு தற்கொலை – ஒரு மரணம் !
மாணிக்கத்திற்கும் நான்கு வருடம் தொடர்ந்து நட்டத்தை ஏற்படுத்திய விவசாயம் “போர்” போடும் எண்ணத்தை தூண்டியது. ஆனால் ஊரைச் சுற்றி வாங்கி வைத்த கடனோ ஆசையை நிராகரித்தது.
இந்தியா வல்லரசாகுது ! எங்க ஊரு காலியாகுது !
ஊர் என்று சொல்ல ஒரு காக்கை குருவி இல்லை உறவென்று சொல்ல ஒரு புழு, பூச்சி இல்லை யார் என்று கேட்க குரல் ஒன்றுமில்லை...
தமிழகத்தின் கலங்கரை விளக்காக மக்கள் அதிகாரம் – தோழர் ராஜு உரை
கந்துவட்டி முதல், மைக்ரோ பைனான்ஸ் வரை எல்லா கடன்களையும் கட்ட மறுப்போம். கடன்களை நாமே தள்ளுபடி செய்து கொள்ளுவோம். கட்ட முடியாது என்றால் என்ன செய்து விடுவான் என்று பார்ப்போம்.