கேளாத செவிகள் கேட்கட்டும்.. | பகத்சிங் படுகேஷ்வர் தத்துக்கு எழுதிய கடிதம்
நான் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளேன். ஆனால் உனக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீ உயிருடன் வாழப் போகிறாய். நீ வாழும் போது, புரட்சியாளர்கள் தங்களது இலட்சியங்களுக்காக உயிரை விடுபவர்கள் மட்டுமல்ல; எத்தனை பேரிடர்களையும் வீரத்துடன் தாங்கவும் கூடியவர்கள் என்பதை இந்த உலகத்திற்கு நீ காட்ட வேண்டும்.
வரலாற்றில் இன்று: அம்பேத்கர் சட்ட அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நாள்
இந்துச் சட்ட மசோதாவை காங்கிரசுக்குள்ளிருந்து இந்து மகாசபையினரும் சனாதனிகளும் சர்தார் பட்டேலின் தலைமையில் மூர்க்கமாக எதிர்த்தனர். இம்மசோதா நிறைவேற்றப்பட்டால் தான் ராஜினாமா செய்து விடுவதாக இராசேந்திரப் பிரசாத் மிரட்டினார்.
அவன் ஜென் சி, நீ பகத்சிங்!
அன்றைய ஜென் சி, அன்றைய ஆல்ஃபா பகத்சிங்! இன்றைய பகத்சிங், நீதான்!
தாராளவாதத்தை எதிர்த்துப் போரிடுக! | தோழர் மாவோ | மீள்பதிவு
தாராளவாதம் என்பது குட்டி பூர்ஷ்வா வர்க்கத்தின் சுயநல உணர்விலிருந்து தோன்றுகிறது. அது தனிநபர் நலன்களை முதலாவது இடத்திலும், புரட்சியின் நலன்களை இரண்டாவது இடத்திலும் வைக்கின்றது.
கெளரி லங்கேஷின் நினைவை நெஞ்சிலேந்துவோம்!
கௌரி லங்கேஷ்க்கு இரண்டு தெரிவுகள் இருந்தது. ஒன்று வசதியான வாழ்க்கைப் பாதை. இன்னொன்று அநீதிக்கு எதிராக போராடும் கடினமான பாதை. இரண்டாவதை துணிந்து தேர்ந்தெடுத்தார்.
கீழடி: அறிவியல் உண்மைகளை வெறுக்கும் பாசிச கும்பல்
சமத்துவத்திற்கும் ஜனநாயகத்திற்கும் எதிரான பொய்களையும் ‘நம்பிக்கைகளையும்’ மட்டுமே ஆதாரங்களாகக் கொண்டு ஆதிக்கம் செலுத்தி வரும் பார்ப்பன பாசிச கும்பலால், கீழடி கூறும் உண்மைகளை ஏற்க முடியவில்லை.
கிருஷ்ணகிரி: பௌத்தப்பள்ளிக் கல்வெட்டும் ஸ்தூபக் குறியீடும்
தற்போது காவேரிப்பட்டினம் அருகே ஜெகதாப் என்கிற இடத்தில் பௌத்த பள்ளி குறித்த கல்வெட்டு தமிழ்நாட்டிலேயே முதல்முறையாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பின் மூலம் பல உண்மைகள் வெளிவந்துள்ளன.
மே 9: பாசிசத்தை வீழ்த்திய 80-ஆம் ஆண்டு நினைவுநாள்
இந்தப் போரில் 7 கோடி மக்கள் கொல்லப்பட்டனர், அவர்களில் 40 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் சோவியத் குடிமக்கள்.
மே தின வரலாறு | அலெக்ஸாண்டர் ட்ராச்டென்பர்க் | பாகம் 5
உழைக்கும் வர்க்கம் நாட்டின் முதுகெலும்பு என்பதை சந்தேகத்திற்கிடமின்றி இரண்டாவது உலக யுத்தம் நிரூபித்தது. உழைக்கும் மக்கள் மட்டும் பிளவுபட்டிருந்தால், பாசிசம் தனது அதிகாரத்திற்கு உலகையே நாசகர யுத்தத்தில் மூழ்கடித்திருக்கும்.
கார்ல் மார்க்ஸ்: ஊடகங்களின் ஆன்மீகத் தணிக்கையை கட்டுப்படுத்தும் பொருளாதாரத் தணிக்கை! | மீள்பதிவு
முதலாளித்துவ அரசின் அதிகார வர்க்க எந்திரம், அதன் தணிக்கை, ஊடகங்களின் சுதந்திரம் குறித்தும், தணிக்கை முறை எப்படி அதை ஏவிவிடும் அரசை முடக்கும் என்பதை இந்த அத்தியாயத்தில் விளக்குகிறார் இளம் கார்ல் மார்க்ஸ்.
மே தின வரலாறு | அலெக்ஸாண்டர் ட்ராச்டென்பர்க் | பாகம் 4
"மே தினத்தைப் போராட்ட தினமாக அனுஷ்டிப்பதற்கு பதிலாக கேளிக்கை மற்றும் ஓய்வு தினமாக மாற்றுவதன் மூலம் பல கட்சிகளின் சீர்திருத்தத் தலைவர்கள் மே தினத்தின் முக்கியத்துவத்தை சீர்குலைக்க முயற்சித்தார்கள். சீர்திருத்தத் தலைவர்களுக்கு மே தினம் பூங்காவில் விளையாடுவதற்கும், கலை நிகழ்ச்சிக்குமான உலக விடுமுறை நாளாகும்." - எங்கெல்ஸ்
மே தின வரலாறு | அலெக்ஸாண்டர் ட்ராச்டென்பர்க் | பாகம் 3
"எல்லா நாடுகளிலும் எல்லா நகரங்களிலுமுள்ள உழைக்கும் மக்கள் 8 மணி நேரத்தை சட்டபூர்வமாக்கக் கோரி அரசாங்கத்திடமும், நிர்வாகத்திடமும் போராட வேண்டும். இதை உலகம் தழுவிய ஆர்ப்பாட்டமாக நடத்தவும், பாரிஸ் மாநாட்டு முடிவுகளை நிறைவேற்றக் கோரியும் இம்மாநாடு தீர்மானிக்கிறது."
மே தின வரலாறு | அலெக்ஸாண்டர் ட்ராச்டென்பர்க் | பாகம் 2
தொழிலாளர்களின் விரோதிகள் வெறுமனே இருக்கவில்லை. முதலாளிகள் மற்றும் அரசின் இணைந்த சக்தி, ஊர்வலம் சென்ற சிக்காகோ தொழிலாளர்களைக் கைது செய்தது. போர்க்குணமிக்க தலைவர்களை அழித்தொழிப்பதன் மூலம் சிக்காகோ நகரின் தொழிலாளர் இயக்கத்தையே நசுக்கிவிடலாம் என கனவு கண்டார்கள்.
மே தின வரலாறு | அலெக்ஸாண்டர் ட்ராச்டென்பர்க் | பாகம் 1
அமெரிக்காவில் ஆரம்ப நாட்களில் பல வேலை நிறுத்தங்கள் நிகழ்ந்தன. ‘அதிக ஊதியம் வேண்டும்’ என்பதுதான் இந்த வேலை நிறுத்தங்களில் முக்கிய கோரிக்கையாக எழுப்பப்பட்டது. இருந்தபோதிலும் குறைந்த வேலை நேரம், சங்கம் சேரும் உரிமை போன்ற பிரச்சினைகளை தொழிலாளர்கள் முன்வைத்தனர்.
லெனின்: ஓர் அமெரிக்கரின் குறிப்பிலிருந்து | ரைஸ் வில்லியம்ஸ் | பாகம் 10
பிற்போக்குச் சர்ச்சின் கண்களுக்கு லெனின் கிறிஸ்து விரோதி. ஆனால் குடியானவர்களோ, "அவர் கிறிஸ்து விரோதியாக இருக்கலாம். ஆனால் எங்களுக்கு நிலமும், விடுதலையும் கொண்டு தருகிறார். அப்படியிருக்கும்போது அவருக்கு எதிராக நாங்கள் எதற்காகச் சண்டை செய்ய வேண்டும்?" என்று சொல்லுகிறார்கள்.






















