இந்திய பொதுவுடைமைக் கட்சி (மா- லெ) முதலாவது மாநாட்டின் 51-ம் ஆண்டு நிறைவு! | மீள்பதிவு
நக்சல்பாரி எழுச்சி ஓர் உண்மையான, புரட்சிகரமான கம்யூனிஸ்டு கட்சிக்கு அடித்தளமிட்டது. ஆளும் வர்க்கங்கள் அச்சத்துடனும், வெறுப்புடனும், ஆத்திரத்துடனும் குறிப்பிடும் நக்சல்பாரிகளின் கட்சி, ஏப்ரல் 22, 1969 அன்று உதயமானது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாம் ஆண்டா இது? | மீள்பதிவு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொடக்கம் பற்றியும், அதன் ஆரம்பகால வரலாறு பற்றியும் விவரிக்கிறது இக்கட்டுரை. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி துவக்க கால வரலாறை அறிந்து கொள்வோம்.
ஆசான் ஸ்டாலினின் 146வது பிறந்த நாளை உயர்த்தி பிடிப்போம்!
உழைக்கும் மக்களைச் சுரண்டலுக்கு கீழ்ப்படுத்தும் அனைத்து வகையான அதிகாரங்களை, சதிகளை முறியடித்து கோடானுகோடி மக்களின் நம்பிக்கையையும் அன்பையும் பெற்றவராக இருந்தார் ஆசான் ஸ்டாலின்.
பாசிச எதிர்ப்பு முன்னோடி – தோழர் ஸ்டாலின் | ஸ்டாலின் 146
இறந்து 71 ஆண்டுகளுக்குப் பின்னரும் கூட முதலாளித்துவத்தால் கடுமையாக வெறுக்கப்பட்டு இன்றளவும் அவதூறு செய்யப்படுகிறார் தோழர் ஸ்டாலின்.
மோடி-அகர்வால் அழிக்கத்துடிக்கும் அரிட்டாபட்டி குறித்து சீனி வேங்கடசாமியின் குறிப்புகள்
அரிட்டாபட்டியிலுள்ள மலைகள் 2,200 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டுகள், குடைவரைக் கோயில்கள், சமணர் படுக்கைகள் என தமிழர் பண்பாட்டை தாங்கிநிற்கும் தொட்டிலாக விளங்குகின்றன. அப்படியிருந்தும் தமிழ்நாடு அரசிடம் எந்தத் தகவலும் தெரிவிக்காமல் மோடி அரசு திமிர்த்தனமாக ஏலத்தை நடத்தியுள்ளது.
ரசியப் புரட்சி நாள்: சோசலிச அரசின் சாதனைகளை நினைத்திட வேண்டும்!
ரசியப் புரட்சியைக் கொண்டாட வேண்டும்!
சோசலிச அரசின் சாதனைகளை நினைத்திட வேண்டும்!
கடந்த கால வரலாறு தெரியாதவருக்கு நிகழ்காலம் புரியாது.
நிகழ்காலம் புரியாதவருக்கு எதிர்காலமில்லை!
நவ-7,1917-ல் தோழர் லெனின் தலைமையிலான ரசிய கம்யூனிஸ்ட் கட்சி தொழிலாளர்களைத் திரட்டி சோசலிச கொள்கைகளைப் பரப்பி புரட்சி மூலம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. உலக அரங்கில் முதல்...
மண்ணுக்கேற்ற மார்க்சியமா? மரபு வழி மார்க்சியமா? | மீள்பதிவு
மார்க்சியத் துரோகிகளும் எதிரிகளும் அவதூறு செய்வதுபோல, எல்லாப் பிரச்சினைகளுக்கும், எல்லாக் காலங்களுக்கும், எல்லா நாடுகளுக்கும் பொருந்தக்கூடிய நடைமுறைகளை வைத்திருப்பதாக மரபுவழி மார்க்சியம் ஒருபோதும் உரிமை கொண்டாடவில்லை.
மக்கள் சீனக் குடியரசு – 75
தோழர் மாவோ தலைமையிலான சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, நிலப் பிரபுக்களையும் பிற்போக்கு முதலாளிகளையும் ஏகாதிபத்திய தாசர்களையும் வீழ்த்தி மக்கள் சீனக் குடியரசை 75 ஆண்டுகளுக்கு முன்னர் 01-10-1949-ல் நிறுவியது.
மாணவர்கள் அரசியலில் பங்கெடுக்க வேண்டும் || தோழர் பகத்சிங் || மீள்பதிவு
மாணவர்களின் பிரதான கவனம் அவர்களது படிப்பில் இருக்க வேண்டியது சரிதான். ஆனால் நமது நாட்டின் நிலைமையை மேம்படுத்துவதற்கான வழிவகைகளையும் திறனையும் வளர்த்துக் கொள்வது படிப்பில் ஒரு பகுதி அல்லவா?
ஏ.ஜி.நூரானி: பாசிசத்தை தோலுரித்துக் காட்டிய ஆய்வாளர்!
நூரானி அரசியல் அமைப்பை நிராகரிக்கவும் இல்லை, கண்மூடித்தனமாக உயர்த்திப்பிடிக்கவும் இல்லை. அதன் பலவீனங்களைச் சரியாக அடையாளம் காட்டுகிறார். அவரது எழுத்துகள் சமகால பாசிச சூழலை அதன் உண்மையான நிறத்தில் புரிந்துகொள்ள அடிப்படையாக அமைகிறது.
கால்டுவெல்-ஐ நினைவு கூர்வோம்!
கால்டுவெல்-ஐ நினைவுகூர்ந்து தமிழ் மொழி – தமிழ்நாட்டு மக்களின் பார்ப்பன எதிர்ப்பு மரபை வளர்த்தெடுப்போம். ஆர்.எஸ்.எஸ்.-பாஜக கும்பலை விரட்டியடிக்கும் பாதையில் வீறு நடை போடுவோம்.
கீழ்வெண்மணியின் நெருப்பு நம் நெஞ்சில்
டிசம்பர் 25 இரவு 8 மணிக்கு திடீரெனப் புகுந்தது கோபாலகிருஷ்ண நாயுடுவின் வெறிநாய்ப்படை. கண்ணில் கண்டவர்களையெல்லாம் வெட்டித் தள்ளியது. தப்பி ஓடிய மக்கள் கூலித்தொழிலாளி ராமையாவின் குடிசையில் தஞ்சம் புகுந்தனர். குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என மொத்தம் 48 பேர் எல்லாம் கரிக்கட்டைகளாக அடுத்த நாள் காலையில்.
டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் மனு ஸ்மிருதியை பகிரங்கமாக எரித்தது ஏன்? | மீள்பதிவு
டிசம்பர் 25, 1927 அன்று, அண்ணல் அம்பேத்கர் தலைமையில் மனு ஸ்மிருதி எரிக்கப்பட்ட வரலாற்று பின்னணியை விளக்குகிறது இக்கட்டுரை. படியுங்கள்.. பகிருங்கள்...
சிவப்பின் அடையாளம் சாம்பவான் ஓடை சிவராமன்
போராளிகளின் இரத்தம் எங்கெங்கு சிந்தப்படுகிறதோ அங்கெல்லாம் புதிய போராளிகள் துளிர்விட்டுகொண்டுத் தான் இருக்கிறார்கள். அதைபோல தான் சிவராமன் ஓர் முடிவல்ல நாளை நாம் அடைய போகும் பொன்னுலகிற்கான ஆரம்பம்.
மகத்தான மக்கள் விஞ்ஞானி மேக்நாட் சாகா
பின்தங்கிய சூழ்நிலையில் இருந்து கல்வி கற்க வரும் மாணவர்களிடம் மேக்நாட்டைக் கொண்டுபோய்ச் சேர்த்தால், அவர்கள் எதிர்மறைச் சூழல்களை வென்று எப்படிச் சாதிப்பது என்பதற்கான பாடத்தை அவரது வாழ்க்கையில் இருந்து கற்றுக் கொள்வர்.