சுட்டெரிக்கும் சூரிய வெப்பம் நெத்திப் பொட்டில் பட்டுத்தெரிப்பது போல, சாளர கம்பிகளுக்குப்பின் இருந்துக்கொண்டு விடுதலைக்கான சுவாசக்காற்றினை ஒருபோதும் சுவாசிக்க முடியாது என்பதை உணர்ந்த மாணவ-இளைஞர் கூட்டம் போரட்டம் எனும் ஆயுதம் ஏந்த துவங்கியுள்ளது.
மிச்சசொச்சம் இருந்த அண்ணாச்சிகளோ, தொழில் என்னாச்சி எனக் கேட்டால், “எல்லாம் நாசமாப் போச்சு” என்கிறார்கள். மானம் மறைக்க கோவணம் கட்டியவனின் கோவணத்தையும் பறித்துக் கொண்டது ஜி.எஸ்.டி!
கல்வி உரிமைக்காகப் போராடக்கூடிய பல்வேறு அமைப்புகளும், இயக்கங்களும் இணைந்து மக்களிடம் சென்று, களப்போராட்டங்களைக் கட்டியமைக்க உதவும் இலக்கில் இந்த வெளியீட்டைப் பயன்படுத்திக் கொள்ள, எமது புரட்சிகர மாணவர் - இளைஞர் முன்னணியின் சார்பில் அழைப்பு விடுக்கிறோம்.
போதும், போதும், போதும், இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை வாழ்வதற்கு இடமும்மில்லை வாருங்கள் தோழரே
கல்குவாரிகளுக்குள்
புதைக்கப்படும் அப்பாவி உழைப்பாளி மக்கள்!
கந்தகத் துகள்களுக்குள்
சிதறிய உடல்களை பார்க்கும்
குடும்ப உறவுகளின் கண்ணீரும், கதறல்களும்
தொடர்ந்து கொண்டுத்தான் இருக்கின்றன.
அரசு அதிகாரிகளும், கல்குவாரி முதலாளிகளும்
இணைந்து அடிக்கும் கொட்டமும்
நீண்டு கொண்டுத்தான் இருக்கிறது.
முதலாளிகள் சொத்துகள் சேர்த்து உடல் வளர்க்க,
அற்ப கூலிக்காக உடல் சிதறி
அப்பாவி உழைக்கும் மக்கள் மட்டும்
மாண்டு போவது என்ன நீதி?
வெடித்த சத்தம் பல மைல் தொலைவில் இருக்கும்
ஊர் மக்களின் காதில்...
கரிம உமிழ்வுகளைக் கட்டுப்படுத்த தங்களது லாபத்தில் ஒருபகுதியை செலவு செய்ய வேண்டும் என்பதால் காலநிலை மாற்றம் ஒன்றே இல்லை என்பதுபோன்ற பிரசாரத்திற்கு பல மில்லியன் டாலர்களை இந்த பெருநிறுவனங்கள் செலவு செய்கின்றன
கோடான கோடி தாய்களுக்கு மகனாய், சகோதரர்களுக்கு சகோதரனாய், மாணவர் படையின் தலைவனாய், இளைஞர்களின் இதயம் நிறைந்த வீரனாய்.. நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய் தோழனே!!
ஆணாதிக்க வெறியாலும், போதை மற்றும் நுகர்வு கலாச்சார வெறியாலும் இங்கு 'பாரத மாதாக்கள்' தினம் தினம் சிதைக்கப்படுகிறார்கள். இந்தியாவிலுள்ள பெண்களுக்கு மட்டுமல்ல இங்கு சுற்றுலாவரும் பெண்களுக்கும்கூட பாதுகாப்பில்லை என்பதே இன்றைய நிலைமை.
வடக்கில் பிறந்த அவனையும்,
தெற்கில் பிறந்த என்னையும்
ஏனோ இணைக்கிறது
இந்த இரக்கமில்லா
இரு தண்டவாளங்கள்.
இந்த தண்டவாளத்தில் பயணிக்கும்
ஒரு ரயிலில், இரு வேறு வர்க்கங்களாய்
பயணம் நீள்கிறது.
பணம் இருப்பவனுக்கு
குளிர்சாதன அறையில் உயர் ரக உணவுகளுடன் உறக்கம் நீள்கிறது
மற்றொரு பெட்டியோ
ஆட்டையும், மாட்டையும்
அடைத்து சந்தையில் விற்க
கூட்டிச்செல்வது போல
நிரம்பி வலியும் மக்கள் கூட்டத்தில்
நிற்கக்கூட இடம் இல்லாமல்
நிற்கதியாய் பயணிக்கும்
ஒர் மனிதக் கூட்டம்
அவசரத்திற்க்கு மூத்திரம் வந்தாலும் அடக்கித் தான்...
பட்டாசு ஆலை தொழிலாளர்களின் வலிகளும் வேதனைகளும்!
காலையில போனவள
மாலையில காணலையே!
கரிக்கட்டைய பார்த்து கலங்கி நானும் போனேனே!
காலையில போய் வாரேன்னு சொல்லிவிட்டு போனா....
போனவ வரலையே
பொழுதும் கூட போகலையே...
ஒரு நாள் லீவு போட்டிருந்தா
ஒரு மாதம் வாழ்ந்திருப்பா...
ஓடாய் தேஞ்சு உழைச்சவ
இன்னைக்கு ஓலையில கெடக்குறா....
இறந்தவன் குடும்பங்களுக்கு இழப்பீடு கொடுக்கிறான்...
இறக்கிற தேதிய எங்களுக்கும் குறிக்கிறான்....
முதலாளிகளின் அடியாளாய் அரசுதான் இருக்குது...
எங்களோட வேர்வையில்தான்
உங்க பொழப்பே நடக்குது...
உங்களிடம்...
RIP ராமா !!!
சீதைக்கு, காலை சமையலுக்கு
காய்கறி வாங்க காசு இல்லை.
1200 கொடுத்து வாங்கின சிலிண்டரும்
நேற்று இரவே தீர்ந்து போக..
நீர் தண்ணி வடிச்சு லவனுக்கும் குசனுக்கும்
ஆளுக்கு ஒரு டம்ளர் கொடுத்தா, சீதா.
எப்போதுமே குடிச்சிட்டு தெருவுல விழுந்து கிடக்கும் ராமனுக்கு,
இன்றைக்கு குடிக்க காசு இல்லை.
வாங்கி கொடுக்க ஆளும் இல்ல.
வீட்டு குண்டாவை திருடி
விற்று குடித்துவிட்டு வந்து
சீதையை தரந்தாழ்ந்து பேசினான்...
காதலும் உழைப்பும்தான் மனித குலத்தின் ஆதாரவேர்கள்...
ஆம் தோழர்களே காதல்தான் இந்த உலகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது...
நுகர்வு கலாச்சாரத்தில் சிக்கி தவிக்கும் காதலை மீட்டெடுக்க வேண்டிய தருணம் இது.
எது காதல் ஆண் பெண் மீதும் பெண் ஆண் மீதும் கொள்வது மட்டுமா காதல்..
விதவிதமான ஆடைகளையும் நகைகளையும் வாங்கி கொடுப்பது காதலா,
அது இல்லை தோழர்களே,
அடுத்த மனிதனின் நலனுக்காக உரிமைக்காக...
நாங்குநேரி, மேல்பாதி, வேங்கைவயல் மற்றும் சமீப காலங்களில் நடந்த இதுபோன்ற சாதிய வன்கொடுமைகளை இந்த மாநிலத்தில் மேல் விழுந்த சில "கருப்பு புள்ளிகள்" என்று ஒதுக்கிவிட முடியாது. இவற்றையெல்லாம் பட்டியல் சமூக மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட வன்முறையின் ஒரு பகுதியாகவே பார்க்க வேண்டும்.
மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் உதிரித்தனமான சிந்தனையை அவரது திரைப்படங்கள் எந்தளவுக்கு உருவாக்கியதோ, அதைவிட மோசமான சிந்தனையைத்தான் அவரது அரசியல் வருகையும் ஏற்படுத்தும்.
அயோத்தியின் இராமனும்
அதானியின் இராமனும்
இதோ
இப்போது வந்திருப்பது
அயோத்தியின் இராமன் அல்ல இது
இராமன் 2.0
இரண்டு இராமன்களும் மனைவியோடு வாழவில்லை
அன்று ஒரு வானரம் இலங்கையை எரித்தது
இன்று பல்லாயிரம் வானரங்கள் நாட்டை எரித்துக் கொண்டிருக்கின்றன
அந்த இராமனுக்காக சூர்ப்பனகையின் முலையறுத்து
பெருமிதம் கொண்டான் இலக்குவன்
இந்த இராமனுக்காக கர்ப்பிணியின்
வயிற்றைக் கிழித்து
சிசுவை அறுத்து
வன்புணர்வு செய்தார்கள் நவீன இலக்குவன்கள்
விவசாயத்தின் வயிற்றைக்கிழித்து
கனிம வளங்களை அதானிகளுக்கு படையல் போடுகிறார்
2.0 இராமன்
அசுவமேத யாகத்தில்...