Saturday, July 19, 2025
முகப்பு பதிவு பக்கம் 21

இஸ்லாமிய மக்களை அகதிகளாக்கும் காவி பாசிஸ்டுகள்: கரசேவையில் நீதித்துறை

ஸ்லாமியர்களின் வீடுகள், கடைகள், வணிக வளாகங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களின் மீதான ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பாசிசக் கும்பலின் தாக்குதல்கள் நாள்தோறும் அதிகரித்து வருகின்றன. ஒருபுறம், இஸ்லாமிய மக்களின் உரிமைகள் மறுக்கப்படுவதுடன் மற்றொருபுறம் அவர்களின் பொருளாதாரக் கட்டுமானங்களைத் தகர்ப்பதன் மூலமாக, சொந்த நாட்டிற்குள்ளேயே இஸ்லாமிய மக்களை அகதிகளாகவும் இரண்டாம்தரக் குடிமக்களாகவும் மாற்றி வருகிறது சங்கப் பரிவாரக் கும்பல்.

‘மசூதிகளுக்குள்ளே கோவில்கள்’
பாசிஸ்டுகளின் ‘ஆன்மீகத் தேடல்’

பாபர் மசூதிக்கடியில் ராமன் கோவில் இருந்தது என்ற கட்டுக்கதையின் மூலம் பாபர் மசூதியை இடித்துத் தரைமட்டமாக்கி அங்கு ராமனுக்கு கோவில் கட்டியுள்ள காவிக் குண்டர் படை, தற்போது வாரணாசி-ஞானவாபி மசூதி தொடங்கி இந்தியா முழுவதும் மசூதிகளுக்கடியில் கோவில்கள் இருப்பதாகக் கூறி கரசேவையை தொடங்கியிருக்கிறது.

★ மேற்கு உத்தரப்பிரதேசத்தில் சம்பல் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள ஷாஹி ஜாமா மசூதியானது ஹரிஹர இந்துக் கோவிலை இடித்து, முகலாய மன்னர் முகமது பாபரின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது என்று தீவிர இந்துத்துவவாதியான உச்சநீதிமன்ற வழக்குரைஞர் விஷ்ணு சங்கர் ஜெயின், சம்பல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதனை விசாரித்த நீதிமன்றம், மசூதியை மேற்பார்வையிட வழக்குரைஞர் ஆணையம் ஒன்றை அமைத்து உத்தரவிட்டது. அந்த உத்தரவின் பேரில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 19-ஆம் தேதி முதற்கட்ட சர்வே நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நவம்பர் 24-ஆம் தேதி நடைபெற்ற இரண்டாம் கட்ட சர்வே பணியின்போது, சர்வே பணிக்கு வந்த அதிகாரிகளுடன் இந்து மதவெறியர்களும் சேர்ந்துக் கொண்டனர். காவிக் குண்டர்கள் இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்தவே, தற்காப்புக்காக சம்பல் பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது உத்தரப்பிரதேச போலீசு மூலம் துப்பாக்கிச்சூடு நடத்தி அநியாயமாக ஐந்து இஸ்லாமியர்களை படுகொலை செய்தது யோகி ஆதித்யநாத் அரசு.

★ ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் உள்ள இஸ்லாமியர்களின் புகழ்பெற்ற தலமான, 850 ஆண்டுகள் பழமை வாய்ந்த குவாஜா மொய்னுதீன் சிஷ்தி தர்காவானது ஒரு பழமையான சிவன் கோவிலின் மேல் கட்டப்பட்டுள்ளது என்று இந்து சேனா என்ற அமைப்பு நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.

இதற்கான ஆதாரம் என்ற பெயரில் இந்து சேனா அமைப்பின் தேசியத் தலைவர் விஷ்ணு குப்தா மூன்று அம்சங்களை முன்வைக்கிறார்.

முதலாவதாக, ஆங்கிலேயர் ஆட்சியின் போது அஜ்மீர் நகராட்சி ஆணையராக இருந்த ஹர்பிலால் சர்தா, 1911-ஆம் ஆண்டு எழுதிய புத்தகத்தில் இந்த தர்கா ஒரு கோவிலின் மேல் கட்டப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாவதாக, இந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ள கருத்துகளை ஆதாரமாகக் கொண்டு இந்து சேனாவின் சார்பாக ஒரு குழு சொந்த முறையில் அந்த தர்காவில் ஆய்வு மேற்கொண்டதாகவும், அந்த ஆய்வில் தர்காவின் சுவர்கள் மற்றும் கதவுகளில் இந்து கோவில்களில் உள்ள சிற்பங்கள் போன்றவை அமைந்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.

மூன்றாவதாக, எங்களது முன்னோர்கள் உட்பட அஜ்மீரில் உள்ள பலர் தர்கா இருந்த இடத்தில் ஒரு சிவலிங்கம் இருந்ததாகவும் அங்கு ஒரு இந்து கோவில் இருந்ததாகவும் கூறுகின்றனர். எனவே, அந்த இடம் சிவலிங்கத்திற்கு சொந்தமாகும். அந்த அடிப்படையில் நிலத்தை மீட்டுத் தரவேண்டும் என்று கூறியுள்ளனர்.

இந்த மூன்று காரணங்களையும் சான்றுகளாக வைத்துக்கொண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரிக்க அனுமதி வழங்கியுள்ள அஜ்மீர் நீதிமன்றம், சிறுபான்மையினர் விவகார அமைச்சகம், தர்கா கமிட்டி மற்றும் இந்திய தொல்லியல் துறை ஆகிய மூன்று தரப்பினருக்கும் நவம்பர் 27-ஆம் தேதி நோட்டீசு அனுப்பியுள்ளது.

★ ஏற்கெனவே, உத்தரப்பிரதேசம் மாநிலம் மதுராவில் உள்ள ஷாஹி ஈத்கா மசூதி, இந்துக் கடவுளான கிருஷ்ணரின் பிறப்பிடமாகக் கருதப்படும் கேசவ் தேவ் கோவிலுக்குச் சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டுள்ளது என்று காவிக் கும்பல் வதந்தியைக் கிளப்பியது. இந்நிலையில், இதனை அடிப்படையாக வைத்து மசூதியை அகற்றுவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட மனுவை விசாரிக்க மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

★ குதுப்மினாரை விஷ்ணுமினார் என்று அறிவிக்க வேண்டும் என்றும் அது இந்து கோவிலை இடித்துக் கட்டப்பட்டது என்றும் காவிக் குண்டர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

எரிகின்ற கொள்ளியில் எண்ணெயை ஊற்றுவது போல, ஒன்றிய அரசின் தொல்லியல் துறையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அதிகாரி தரம்வீர் சர்மா, “டெல்லியில் இருப்பது குதுப்மினார் இல்லை. அது குதுப்-அல்-தீன் ஐபக்கால் கட்டப்பட்டதில்லை. அது, ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த மன்னர் விக்ரமாதித்யாவால் கட்டப்பட்ட சூரியக் கோபுரம்” என்று ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

★ கர்நாடகாவில் உள்ள ஸ்ரீரங்கப்பட்டிணத்தில் திப்பு சுல்தானால் கட்டப்பட்ட சுமார் 240 ஆண்டுகள் பழமையான ஜமா மசூதிக்குள் இந்துக்களை வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று மாண்டியா மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கோரியுள்ளது, நரேந்திர மோடி விசார் மஞ்ச் என்னும் இந்துத்துவ அமைப்பு.

மசூதி இருந்த இடத்தில், அனுமன் கோவில் இருந்தது என்று பாரசீக ஆட்சியர்களுக்கு திப்பு கடிதம் எழுதியதற்கான ஆவண ஆதாரங்கள் உள்ளது என்றும் மசூதியின் தூண்கள், சுவர்களில் உள்ள கல்வெட்டுகள் இந்து மதத்தைச் சார்ந்தது என்றும் எனவே வழிபாடு நடத்த மசூதியின் கதவுகளைத் திறக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார் மஞ்ச் அமைப்பின் செயலாளர் மஞ்சுநாத்.

இவை மட்டுமல்ல, மத்தியப்பிரதேசத்தில் உள்ள கமல் மௌலா மசூதி, உத்தரப்பிரதேசத்தில் உள்ள வாரணாசி ஞானவாபி மசூதி, மதுரா-ஷாஹி ஈத்கா மசூதி, ஆக்ரா-ஜாமா மசூதி, ஜாவுன்பூர்-அடாலா மசூதி, பதாவுன்-ஷம்சி ஜாமா மசூதி, லக்னோ-திலா வாலி மசூதி, கர்நாடகாவில் உள்ள பாபா புதன்கிரி தர்கா போன்ற மசூதிகள், தர்காக்கள் என 12 வழிபாட்டுத் தலங்கள் இந்து கோவில்களை இடித்துக் கட்டப்பட்டதாக பல்வேறு வழக்குகள் காவிக் கும்பலால் தொடரப்பட்டுள்ளன.

பொதுப்பணித்துறை அதிகாரிகளை இணைத்துக்கொண்டு உத்தரப்பிரதேச நூரிஜாமா மசூதியை இடித்து நொறுக்கிய காவி கும்பல்.

“பாபர் மசூதி வெறும் முன்னோட்டம்தான்; காசி, மதுரா மசூதிகளும் இலக்கில் உள்ளன”, “இன்னும் 1,800 கோவில்களை மீட்க வேண்டியுள்ளது” என்று கொக்கரித்தவாறே இம்மசூதிகளையும் தர்காக்களையும் வேட்டையாடத் துடிக்கிறது காவிக் கும்பல்.

இஸ்லாமியர்களின் உரிமையை பாதுகாக்குமா நீதித்துறை?

மசூதிக்கடியில் இந்து கோவில் இருப்பதாக வெறுப்பு-பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும் காவிக் கும்பல், உத்தரப்பிரதேசத்தில் சாலையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளதாகக் கூறி நூரிஜாமா மசூதியின் ஒரு பகுதியை சட்டப்பூர்வமாகவே இடித்துத் தள்ளியிருக்கிறது. 68 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சாலையை, 158 ஆண்டுகள் பழமையான நூரிஜாமா மசூதி ஆக்கிரமித்துள்ளது என்ற அப்பட்டமான பொய்க் குற்றச்சாட்டை சுமத்தி, டிசம்பர் 10 அன்று பொதுப்பணித்துறை அதிகாரிகளின் துணையுடன் சட்டப்பூர்வமாகவே மசூதியை இடித்தது காவிக் கும்பல்.  இது இந்தியா முழுவதும் பெரும் பேசுபொருளாகி ஜனநாயக சக்திகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நூரிஜாமா மசூதி இடிக்கப்பட்ட இரண்டே நாட்களில், 1991-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் சட்டத்திற்கு எதிராக பா.ஜ.க-வைச் சேர்ந்த சுப்பிரமணிய சுவாமி உள்ளிட்டோர் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்தது. அப்போது வழக்கின் தீர்ப்பு வரும்வரை, வழிபாட்டுத் தலங்கள் தொடர்பாக நாட்டின் எந்த நீதிமன்றங்களிலும் புதிய வழக்கு தொடரத் தடை விதித்து உத்தரவிட்டது.

உச்சநீதிமன்ற உத்தரவை வரவேற்ற ஜனநாயக சக்திகளும் ஆளும் வர்க்க ஊடகங்களும், உச்சநீதிமன்றம் பாசிசக் கும்பலுக்கு சம்மட்டி அடி கொடுத்துவிட்டதாக தெரிவித்தனர். உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு இஸ்லாமிய மக்களின் மத வழிபாட்டுத் தலங்களையும் உரிமையையும் பாதுகாக்கும் என்றனர்.

ஆனால், உச்சநீதிமன்றம் திடீரென இஸ்லாமிய மக்களுக்கு ஆதரவாக ‘சீற்றம்’ கொண்டு இத்தகைய உத்தரவுகளைப் பிறப்பிப்பது இது முதன்முறையல்ல. அப்படி வழங்கப்பட்ட உத்தரவுகளும் தீர்ப்புகளும் இஸ்லாமிய மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதாகவோ பாசிச சக்திகளுக்கு நெருக்கடி கொடுப்பதாகவோ இருந்ததில்லை என்பதே கடந்த கால அனுபவமும் வரலாறுமாகும்.

சான்றாக, பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் இஸ்லாமிய மக்களின் வீடுகள், கடைகளை புல்டோசரால் இடித்துத் தள்ளுவதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை, உச்சநீதிமன்றம் செப்டம்பர் மாதத்தில் தாமே முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. கட்டடங்களை புல்டோசரால் இடிப்பதற்கு இடைக்காலத் தடைவிதித்தது. அதன் தொடர்ச்சியாக, கடந்த நவம்பர் 13-ஆம் தேதியன்று இத்தகைய வழக்குகளில் கட்டடங்களை இடிப்பதற்கு முன்பாக பின்பற்றப்பட வேண்டிய பத்து வழிகாட்டுதல்களை உச்சநீதிமன்றம் உத்தரவாகப் பிறப்பித்தது. அந்த உத்தரவில், “கட்டடத்தை இடிப்பதற்கான இறுதி உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கும் நீதித்துறை ஆய்வு செய்வதற்கும் உரிமையாளருக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். மேல்முறையீட்டு ஆணையம் உத்தரவுக்கு தடை விதிக்கவில்லையென்றால் இடிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்” என்றது.

இதுவரை பாதிக்கப்பட்ட இஸ்லாமிய மக்களுக்கு நீதி வழங்குவது குறித்தும் இழப்பீடு தருவது குறித்தும் வாய்திறக்காத, காவிக் குண்டர்களைத் தண்டிப்பது குறித்து மூச்சுக்கூட விடாத இந்த அயோக்கியத்தனமான தீர்ப்பை பலரும் வரவேற்றனர்.

ஆனால், தீர்ப்பு வந்த ஒரு மாதத்திலேயே அந்த உத்தரவை காற்றில் பறக்கவிட்டு, நூரிஜாமா மசூதியை இடித்துத்தள்ளி மீண்டும் தனது புல்டோசர் ராஜ்ஜியத்தை தொடர்ந்துள்ளது, உத்தரப்பிரதேச யோகி அரசு. சொல்லப்போனால், நூரிஜாமா மசூதியை இடிப்பதற்கு எதிராக அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் இருக்கும் போதுதான் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. அதிலும், மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணை டிசம்பர் 13-ஆம் தேதி விசாரணைக்கு வரும் நிலையில் திட்டமிட்டே டிசம்பர் 10-ஆம் தேதி மசூதியை இடித்துள்ளது யோகி அரசு.

இந்நிலையில்தான் தற்போது மற்றுமொரு உத்தரவையும் உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இதுவும் களத்தில் எந்த விளைவையும் ஏற்படுத்தாத பெயரளவிற்கான உத்தரவு மட்டுமே. ஏற்கெனவே சில மசூதிகளில் வழிபாடு நடத்துவதற்கான அனுமதியை சங்கப்பரிவார கும்பல்கள் நீதிமன்றத்தில் பெற்றுள்ளதால், அங்கெல்லாம் சங்கப் பரிவாரக் கும்பல் தனது நடவடிக்கையை நிறுத்தப்போவதில்லை. அதுகுறித்து உச்சநீதிமன்றம் வாய்திறக்கவும் இல்லை.

உண்மையில், உச்சநீதிமன்றத்தின் இத்தகைய உத்தரவுகளும் தீர்ப்புகளும் இக்கட்டமைப்பு மீதான மக்களின் நம்பிக்கை குலைந்துவிடக் கூடாது என்ற வர்க்கப் பாசத்திலிருந்தே பிறப்பிக்கப்படுகிறது.

பாசிச மோடியின் மூன்றாவது ஆட்சிக்காலத்தில் இஸ்லாமிய மக்கள் மீதான பாசிச ஒடுக்குமுறை என்பது நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. இதுவரை இஸ்லாமியர்கள் மீது கும்பல் வன்முறையை நிகழ்த்திவந்த இந்து மதவெறிக் குண்டர்களுடன் தற்போது போலீஸ், பொதுப்பணித்துறை உள்ளிட்ட அரசின் உறுப்புகளும் இணைந்து சட்டப்பூர்வத் தாக்குதல் தொடுப்பது புதிய போக்காக வளர்ந்து வருகிறது. இவையன்றி, ஜனநாயக நிறுவனங்கள் என்று சொல்லப்பட்டவை அனைத்தும் பாசிச மோடி அரசின் அடியாள் படையாக மாறிவிட்டது என்பதை மக்கள் தங்களது சொந்த அனுபவத்திலிருந்து உணர்ந்து வருகின்றனர். இச்சூழலில் தான் தலையிடவில்லை எனில் ஒட்டுமொத்த அரசுக் கட்டமைப்பின் மீதே மக்களுக்கு நம்பிக்கை இழப்பு ஏற்பட்டுவிடும் என்ற அச்சத்தினால் உச்சநீதிமன்றம் பெயரளவிலான சில உத்தரவுகளையும் தீர்ப்புகளையும் வழங்குகிறது.

நீதித்துறையின் கரசேவை

வழிபாட்டுத் தலங்கள் தொடர்பாக புதிய வழக்கு தொடரத் தடைவிதித்த உச்சநீதிமன்றத்தின் உத்தரவு பாசிச சக்திகளுக்கு எந்த வகையிலும் கடிவாளமிடாது என்பதையும் தாண்டி, வழிபாட்டுத் தலங்கள் 1991 சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு விசாரணையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது இங்கு கவனிக்கத்தக்கதாகும்.

பாபர் மசூதி இடிப்பு சம்பவமானது இந்தியாவின் மதச்சார்பின்மையின்மை என்ற முகமூடியைக் கிழித்து தொங்கவிட்டது. இதனை தடுப்பதற்காக ஓடோடிவந்த உச்சநீதிமன்றம், 1991-ஆம் ஆண்டு மத வழிபாட்டுச் சட்டத்தில், “நாடு ‘விடுதலை’ பெற்ற ஆகஸ்டு 15, 1947 தினத்தன்று இருந்த நிலையிலிருந்து, எந்த வழிபாட்டுத் தலத்திலும் மாற்றங்கள் கொண்டுவரத் தடை விதிக்கப்படுகிறது. அன்றைய தினத்தில் இருந்த நிலை அப்படியே தொடர வேண்டும். எந்த வழிபாட்டுத் தலங்களையும் வேறு பிரிவினருக்கோ, ஒரு பிரிவுக்குள் உள்ள மற்ற பிரிவுக்கோ முழுமையாகவோ, பகுதியாகவோ வழங்கி மாற்றங்களை மேற்கொள்ளத் தடை விதிக்கிறது. வழிபாட்டுத் தலங்களில் மாற்றங்கள் கோரி ஏதேனும் வழக்கு, மேல்முறையீடு மனுக்கள் தொடுக்கப்பட்டிருந்தால் அவை காலாவதியாகிறது. இனிமேல் புதிதாக வழக்குகள் தொடரத் தடை விதிக்கப்படுகிறது” என்று குறிப்பிட்டது. இந்த உத்தரவு பாபர் மசூதி தவிர பிற வழிபாட்டுத் தலங்கள் அனைத்திற்கும் பொருந்தும் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில், 2019-ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிப்பு இறுதித் தீர்ப்பின்போதும் இக்கூறுகள் வலியுறுத்தப்பட்டன. இச்சட்டம் இஸ்லாமிய மக்களின் வழிபாட்டு உரிமையை பாதுகாக்கும் சட்டமாக பலராலும் பார்க்கப்பட்டு வருகிறது.

ஆனால், வாரணாசியில் உள்ள சுமார் 350 ஆண்டுகள் பழமையான ஞானவாபி மசூதியில் காவிக் குண்டர்கள் வழிபாட்டு உரிமை கோரிய வழக்கு விசாரணையின் போது, “ஒரு வழிபாட்டுத் தலத்தின் தன்மையைக் கண்டறிவதை சட்டம் (வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991) தடுக்கவில்லை. அதன் தன்மையை மாற்றுவதை மட்டுமே தடை செய்கிறது” என்று அப்போதைய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் புதிய வியாக்கியானத்தை அளித்தபோதே இச்சட்டம் நீர்த்துப்போனது குறிப்பிடத்தக்கது. ஏனெனில், சந்திரசூட்டின் இந்த வாய்மொழி விளக்கத்தை சட்ட உரிமையாக எடுத்துக்கொண்டு கீழமை நீதிமன்றங்கள் மதுரா மசூதி உள்ளிட்ட பல மசூதிகளுக்குள் காவிக் குண்டர்களை அனுமதித்தன. ஞானவாபி மசூதி உள்ளிட்ட மசூதிகளில் காவிக் குண்டர்கள் வழிபாடு நடத்துவதும், நாடுமுழுவதும் உள்ள பல மசூதிகளை அபகரிக்க நாக்கைத் தொங்கவிட்டு காத்துக் கிடப்பதும் புது போக்காகியுள்ளது.

இருப்பினும், இச்சட்டத்தை தொடக்கத்திலிருந்தே எதிர்த்துவரும் காவிக் கும்பல் முற்றிலுமாக ரத்து செய்யத் துடிக்கிறது. இந்த பாசிச நோக்கத்திலிருந்துதான் வழிபாட்டுத்தலங்கள் சட்டமானது, நீதி பெறுவதற்கு தடையாக இருப்பதாகவும் இச்சட்டத்தின் சில பிரிவுகளை இரத்து செய்ய வேண்டும் என்றும் இந்துத்துவா அமைப்புகளும் சுப்பிரமணிய சுவாமியும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இத்தகைய வழக்குகளை ரத்து செய்வதற்குப் பதிலாக, சிரமேற்கொண்டு வழக்கு விசாரணையை நடத்திக்கொண்டிருக்கிறது உச்சநீதிமன்றம். இது இஸ்லாமிய மக்களுக்கு இழைக்கப்படும் அப்பட்டமான துரோகமாகும். இத்தகைய வழக்கு விசாரணையில் அளிக்கப்பட்ட உத்தரவை இஸ்லாமிய மக்களுக்கான அரண் என்று முன்னிறுத்துவது மிகவும் ஆபத்தானதாகும்.

எனவே, நீதிமன்றங்கள் இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்களை பாதுகாப்பதற்கு எந்த முன்னெடுப்புகளையும் செய்யவில்லை என்பதை விட, சங்கப் பரிவாரக் கும்பல்களின் கரசேவைக்கு சட்ட வடிவம் கொடுத்து கரசேவையில் தனது பங்கை உறுதிப்படுத்தியுள்ளன என்றுதான் சொல்ல வேண்டும்.

போராட்டங்களே பாசிஸ்டுகளின் கோட்டைகளை நொறுக்கும்

உண்மையில், இஸ்லாமிய மக்களின் மத வழிபாட்டுத் தலங்கள் காவிக் கும்பலால் குறிவைக்கப்படுவதும் கட்டடங்கள் இடித்து நாசமாக்கப்படுவதும் பாசிசக் கும்பலின் இந்துராஷ்டிரம் என்ற கனவுடன் இணைந்ததாகும்.

இந்துராஷ்டிரத்தில் இஸ்லாமிய மக்களை இரண்டாந்தரக் குடிமக்களாக்கத் துடித்துக்கொண்டிருக்கும் காவிக் கும்பல், அதற்காக இஸ்லாமிய மக்களின் மத வழிபாட்டு உரிமைகளையும் அரசியல், பொருளாதார அதிகாரங்களையும் பறித்துவருகிறது.

அதேபோல், இந்தியாவில் நாடு முழுவதும் சுமார் 1.2 இலட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள வக்ஃப் சொத்துகளின் மீதான இஸ்லாமிய மக்களின் அதிகாரத்தைப் பறித்து அதனை கைப்பற்றிக் கொள்வதற்காக வக்ஃப் சட்டத்திருத்தத்தையும் நிறைவேற்றத் துடிக்கிறது காவிக் கும்பல். இத்தனை கோடி ரூபாய் சொத்துகளையும் அபகரிப்பதுடன், இஸ்லாமியர்களின் பொருளாதார அடிக்கட்டுமானங்களை தகர்த்து சொந்த மண்ணிலேயே அவர்களை இரண்டாந்தரக் குடிமக்களாக்கும் பாசிஸ்டுகளின் இந்துராஷ்டிரக் கனவுக்கான அடித்தளத்தை அமைப்பதற்காகவே இந்த சட்டத்திருத்தம் கொண்டுவரப்படுகிறது.

இஸ்லாமியர்களை தேர்தலில் வேட்பாளராக பாசிசக் கும்பல் நிறுத்தாததும், பா.ஜ.க. ஆளும் உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் எந்தவித கேள்வியுமின்றி இஸ்லாமிய மக்களின் வீடுகளை இடித்து அவர்களை சொந்த நாட்டிற்குள்ளேயே அகதிகளாக்குவதும் இந்த நோக்கத்துடன் இணைந்ததே ஆகும்.

பாசிசமயமாகியிருக்கும் நீதித்துறையானது பாசிசக் கும்பலின் நோக்கத்திற்கு பக்கபலமாகவே நிற்கிறது. சூழல் இப்படி இருக்கையில், நீதிமன்றத்தின் மூலம் இஸ்லாமிய மக்களின் உரிமையையும் அதிகாரத்தையையும் நிலைநாட்டிவிட முடியும் என்று கருதுவது இஸ்லாமிய மக்களை பாசிசத்திற்கு பலியிடுவதிலேயே சென்று முடியும்.

எனவே, இனியும் பாசிசமயமாகிவரும் நீதிமன்றமும் இஸ்லாமிய மக்களுக்கான ஜனநாயகத்தைப் பெற்றுத்தராது. அது கரசேவை அமைப்பாக எப்போதோ மாறிவிட்டது. இந்த பாசிஸ்டுகளின் இஸ்லாமிய விரோத மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக களப்போராட்டங்களைக் கட்டியமைப்பதே உடனடி தீர்வுக்கு வழிவகுக்கும்.

மேலும், இந்துராஷ்டிரம் அமைக்கப்படுவது என்பது வெறுமனே இஸ்லாமிய மக்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினை அல்ல, அது தொழிலாளர்கள், விவசாயிகள், பழங்குடிகள், தலித் மக்கள் என கோடானுகோடி உழைக்கும் மக்களை நரகத்திற்குள் தள்ளுவதாகும். இஸ்லாமியர்கள் பாசிஸ்டுகளின் முதல் பலி மட்டுமே. எனவே, அனைத்து மக்களும் ஒன்றிணைந்து பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசை அமைப்பதை நோக்கமாகக் கொண்ட, நாடு தழுவிய பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியைக் கட்டியமைப்பதே உடனடி தேவையாகும்.


பாரி

(புதிய ஜனநாயகம் – ஜனவரி 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



திருப்பரங்குன்றம்: எச். ராஜாவை கைது செய் – ஜனநாயக சக்திகள் மனு

திருப்பரங்குன்றம்: எச். ராஜாவைக் கைது செய் – ஜனநாயக சக்திகள் மனு

சென்னை:

மதுரை:

காணொளிகளை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 16-31 ஜூலை, 1987 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 02, இதழ் 17 | 1987 ஜூலை 16-31 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: ராஜீவுக்கு வலை வீசும் ரஷிய வல்லரசு
  • அரியணையில் செருப்பு! ஆள்வது பரதன்!!
  • சீக்கிய பயங்கரவாதம் தீரவில்லை; தீவிரமாகிவிட்டது
  • கோதாவில் இறங்கிய நாற்காலி கம்யூனிஸ்டுகள்
  • நில்! கவனி! எச்சரிக்கை! பெருகிவரும் சாலை விபத்துக்கள்
  • கொத்தடிமைகளாக அஞ்சல் துறை ஊழியர்கள் துரோகிகளாக மஞ்சள் தொழிற்சங்கங்கள்
  • அச்சுறுத்தும் அவசர நிலை அபாயம்!
  • வீரம் செறிந்த மாபெரும் தெலுங்கானாப் போராட்டமும், விவசாயப் புரட்சியும் போலிக் கம்யூனிஸ்டுகளின் துரோகத்தனமும் (1946—51)
  • போடப்படும் சட்டங்கள் மீறப்படுவதற்கே!
  • போலிக் கம்யூனிஸ்ட் கட்சிகளில் பிளவும் மோதலும்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



திருப்பரங்குன்றத்தில் என்ன நடந்தது? உடைத்து பேசும் தோழர் அமிர்தா

திருப்பரங்குன்றத்தில் என்ன நடந்தது?
உடைத்து பேசும் தோழர் அமிர்தா

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 1-15 ஜூலை, 1987 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 02, இதழ் 16 | 1987 ஜூலை 1-15 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: மேற்கில் வீசும் பிற்போக்கு அலை
  • காங்கிரசின் ஐந்தாம் படையாக போலிக் கம்யூனிஸ்டுகள்!
  • வாழ்வதற்காக சாகிறார்கள்
  • படுதோல்வி முன்னே… பாசிச அடக்குமுறை பின்னே…
  • ஊழல்! ஊழல்!! “ஊழலை ஒழிக்கமுடியாது! அதனுடன் ஒத்துப் போக கற்றுக்கொள்ளுங்கள்!”
  • மிதமிஞ்சி வழியும் வாய்க்கொழுப்பு
  • ஜனாதிபதி: நேரு – இந்திரா குடும்பத்தின் விலையுயர்ந்த விளையாட்டு பொம்மை
  • வளைகுடாவில் வட்டமிடும் அமெரிக்க ஆதிக்கக் கழுகு
  • வீரம் செறிந்த மாபெரும் தெலுங்கானாப் போராட்டமும், விவசாயப் புரட்சியும் போலிக் கம்யூனிஸ்டுகள் துரோகத்தனமும் [1946 – 51]
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 16-30 ஜூன், 1987 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 02, இதழ் 15 | 1987 ஜூன் 16-30 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: தமிழக போலீஸ் கொள்கை: சாராய உடையாருக்கு மரியாதை! சாமானிய ஏழைக்குத் தண்டனை!
  • ஆதிக்க வெறியர்களின் சதிக்குப் பலியாவதா? ஐக்கியப்பட்டு போராடுவதா?
  • போலிக் கம்யூனிஸ்டுகளின் அரசியல் நாகரீகம் நாறுகிறது!
  • தண்ணீர் பஞ்சமோ தலைவிரித்தாடுகிறது! குடிநீர் வாரியமோ ஊழலில் மிதக்கிறது!
  • பிரதமர் போர்வையில் கிரிமினல் குற்றவாளி
  • மீரட் கலவரம்: முஸ்லீம் மக்களுக்கு எதிராக
  • ஈழ இயக்கத்தை சீர்குலைக்கும் இந்திய உளவுப் படை ‘ரா’
  • இந்தியப் பொருளாதாரம்: பாதாளத்தை நோக்கிய பாய்ச்சல்!
  • அடியிழந்த மரம் அதிகமாக ஆடுகிறது!
  • வறட்சியின் நடுவே திராவிட வாரிசுகளின் வசூல் வேட்டை
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 1-15 ஜூன், 1987 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 02, இதழ் 14 | 1987 ஜூன் 1-15 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: அடிப்படையும் இல்லை! அருகதையும் இல்லை!!
  • பிஜி நாட்டில் நடந்த ராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு: இன்னும் ஒரு இலங்கை உருவாகிறது
  • இந்திய இடதுசாரிப் போக்கு – ஒரு கண்ணோட்டம் (சென்ற இதழின் தொடர்ச்சி…)
  • எழுந்து நின்றால் வீழ்த்துவார்! இல்லையேல் வாழ்த்துவார்!
  • ஈழம்: ஒரு திருப்பு முனை!
  • சோசலிசம் பேசியே சுரண்டிக் கொழுக்கும் காங்கிரசு கும்பல்!
  • பைனான்ஸ் கம்பெனிகள் பிளேடு பக்கிரிகள்
  • மதவெறியர்களின் காலடியில்…
  • காட்டாத்தி கூட்டுறவு விவசாய சங்கத்தில் விவசாயிகளுக்கு அண்ணா நாமம்!
  • தமிழக போலீஸ் கொள்கை: மாஃபியா குண்டர்களுக்கு மரியாதை! புரட்சிகர இளைஞர்களுக்கு சித்திரவதை!!
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



நீதிமன்றங்களா? பாசிசக் கையாட்களின் கூடாரங்களா?

மோடி அரசின் கடந்த பத்தாண்டுகால ஆட்சியில், இந்திய போலி ஜனநாயக அரசுக் கட்டமைப்பை பாசிசமயமாக்குவதற்காக அனைத்துத் துறைகளிலும் காவி பாசிஸ்டுகள் நுழைக்கப்பட்டு வருகின்றனர். அதிலும், நீதித்துறையில் உச்சநீதிமன்றம் முதல் கீழமை நீதிமன்றம் வரை ஆர்.எஸ்.எஸ். அடியாட்கள் நுழைக்கப்பட்டிருக்கின்றனர்.

ஏற்கெனவே, தங்களுக்கான கடைசி புகலிடமாக நீதிமன்றத்தை அணுகும் சிறுபான்மை இஸ்லாமிய மக்களின் முதுகில் குத்திய வரலாறுதான் இந்திய (அ)நீதித்துறையின் வரலாறு. அப்சல் குரு வழக்கு, காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கம் குறித்த வழக்கு, பாபர் மசூதி இடிப்பு வழக்கு ஆகியவை அதற்கான சாட்சியங்களாகும்.

இதில் நீதித்துறை முழுவதும் கருப்பு கவுன் அணிந்த காவிகள் புகுத்தப்பட்டால் அதன் எதிர்விளைவு எத்துணை கோரமானதாக இருக்கும் என்பதை, சமீபத்திய இந்துத்துவ தீர்ப்புகளும், நீதிபதிகளின் இஸ்லாமிய வெறுப்பு-இந்துமதவெறிக் கருத்துகளும் எடுத்துரைக்கின்றன.

இது இந்துக்களின் நாடு’ (மனு)நீதிபதியின் கொக்கரிப்பு

கடந்த டிசம்பர் 8-ஆம் தேதியன்று உத்தரப்பிரதேசத்தின் அலகாபாத் உயர்நீதிமன்ற நூலக அரங்கில், பயங்கரவாத இந்துத்துவ அமைப்பான விஸ்வ இந்து பரிஷத் சார்பில், ‘பொது சிவில் சட்டத்தை வலியுறுத்தும் அரசியலமைப்பு’ என்ற தலைப்பில் ஒரு கூட்டம் நடைபெற்றது. அதில் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அவ்வுரையில், “இது ஒரு இந்துஸ்தான் நாடு என்பதைக் கூற எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. இங்கு பெரும்பான்மையாக வாழ்பவர்களுக்கு ஏற்றவகையில்தான் இந்நாடு செயல்படும். இதுதான் சட்டம். இதை ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி சொல்வதாக யாரும் கருதக் கூடாது. சட்டம் பெரும்பான்மைக்கு ஏற்பச் செயல்படுகிறது. ஒரு குடும்பம் அல்லது சமூகப் பின்னணியில் இதைக் கவனியுங்கள்-பெரும்பான்மையினரின் நலன் மற்றும் மகிழ்ச்சியை உறுதிப்படுத்துவது மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

ஆனால் இந்த வெறியர்கள் (கத்முல்லா)… இது சரியான வார்த்தையாக இல்லாமல் இருக்கலாம்… ஆனால் நாட்டிற்கு கேடு விளைவிப்பதால் நான் அதைச் சொல்ல தயங்கமாட்டேன். அவர்கள் நாடு முன்னேறுவதை விரும்பாதவர்கள், அவர்களிடமிருந்து நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

நமது கலாச்சாரத்தில், குழந்தைகள் கடவுளை நோக்கி வழிகாட்டுதலுடன் வளர்க்கப்படுகிறார்கள், வேத மந்திரங்களைக் கற்றுக் கொள்கிறார்கள், அகிம்சையின் விழுமியங்களுடன் வளர்க்கப்படுகிறார்கள். இருப்பினும், வேறு சில கலாச்சாரங்களில், குழந்தைகள் விலங்குகளைப் படுகொலை செய்வதைக் கண்டே வளர்கிறார்கள். இதனால் அவர்கள் சகிப்புத்தன்மையையும் இரக்கத்தையும் வளர்த்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பது கடினம்” என்று அப்பட்டமாக தனது இஸ்லாமிய வெறுப்புணர்வைக் கக்கினார்.

அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியின் இந்த இந்துமதவெறி நச்சுப் பேச்சானது, அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில், அவர் எடுத்துக்கொண்ட உறுதிமொழிக்கு எதிரானது என்று மூத்த வழக்கறிஞர்கள் பலரும் கடும் கன் கண்டனம் தெரிவித்தனர்.நீதிபதிகளை நியமிக்கின்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான கொலீஜியமும் சேகர் குமாரை நேரில் வரவழைத்து விசாரித்தது. ஆனால், தற்போதுவரை நீதிபதி சேகர் குமார் மீது கண்துடைப்பு நடவடிக்கைகளைக்கூட உச்சநீதிமன்றம் மேற்கொள்ளவில்லை.

அதேபோல், நீதிபதிகள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் கொண்ட நீதிபதிகள் விசாரணைச் சட்டம் 1968-இன் படி, நீதிபதி சேகர் குமாரை பதவிநீக்கம் செய்ய வேண்டுமென, கபில் சிபல் தலைமையில் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த 55 மாநிலங்களவை உறுப்பினர்கள் தீர்மானம் கொண்டுவந்தனர். ஆனால், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் ஆதரித்தால் மட்டுமே இத்தீர்மானத்தை நிறைவேற்ற முடியும் என்பதால், நாடாளுமன்றத்தின் மூலம் சங்கி சேகர் குமார் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்று எதிர்பார்ப்பதும் கானல் நீரே ஆகும்.

மசூதிக்குள் ஜெய் ஸ்ரீ ராம் வெறிக்கூச்சல் குற்றமில்லையாம்..

2023-ஆம் ஆண்டு செப்டம்பர் 24-ஆம் தேதி இரவு 10:50 மணியளவில், கர்நாடகாவின் தட்சிண கன்னடா மாவட்டத்திலுள்ள பதன்யா ஜூம்மா மசூதிக்குள் நுழைந்த கும்பலொன்று, ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று வெறிக்கூச்சலிட்டது. ‘உங்களை விட்டு வைக்க மாட்டோம்’ என்று பெரி சமூக இஸ்லாமியர்களை மிரட்டியது. இதுகுறித்து ஹைதர் அலி என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இருவர் கைது செய்யப்பட்டு, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது.

செப்டம்பர் 13, 2024 அன்று, இவ்வழக்கை விசாரித்த நீதிபதி நாகப் பிரசன்னா, “‘ஜெய் ஸ்ரீராம்’ என்று யார யாராவது கோஷங்களை எழுப்பினால் அது எப்படி மற்றவர்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் என்பது அப்பகுதியில் இந்துக்களும், நல்லிணக்கத்துடன் புகார்தாரரே வாழ்ந்து கூறியுள்ள இந்தச் சம்பவத்தை எந்த புரியவில்லை. முஸ்லிம்களும் வருவதாக நிலையில், வகையிலும் வெறுப்புணர்வை ஏற்படுத்துவதாகக் கூற முடியாது” என்று காவிக் கும்பலுக்கு சாதகமாக தீர்ப்பெழுதினார்.

அத்துடன், இவ்வழக்கில், பிரிவுகள் 447 (அத்துமீறல்), 295A (மத நம்பிக்கைகள் அல்லது மதத்தை அவமதிக்கும் நோக்கில் செய்யப்பட்ட செயல்), 505 (பொது அமைதியின்மையைத் தூண்டும் செயல்), பிரிவுகள் 503 (மிரட்டல்), 506 (மிரட்டல் விடுத்ததற்கான தண்டனை) மற்றும் 34 (பொது நோக்கம்) ஆகியவற்றை பதிவதற்கான முகாந்திரமில்லை என்று கூறி ‘இந்துராஷ்டிர’ நீதியை நிலைநாட்டினார்.

இத்தீர்ப்பை எதிர்த்து ஹைதர் அலி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததையடுத்து, டிசம்பர் 16, 2024 அன்று நீதிபதிகள் பங்கஜ் மிட்டல் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோரின் அமர்வில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, “ஒரு மதம் சார்ந்த குறிப்பிட்ட வார்த்தையையோ அல்லது பெயரையோ முழக்கமிடுவது எவ்வாறு கிரிமினல் குற்றமாகும்?” என்று கேள்வியெழுப்பியதன் மூலம் உச்சநீதிமன்றமும் தன் பங்கிற்கு ஹைதர் அலியின் முதுகில் குத்தியது. அத்துடன், குற்றவாளிகள் வழக்குரைஞர்களாக மாறி குற்றவாளிகளுக்கு வக்காலத்து வாங்கிய நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைத்தனர்.

இதே ‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கமிட்டு இந்து மதவெறிக் குண்டர்கள் பாபர் மசூதியை இடித்தனர்; குஜராத்தில் இஸ்லாமிய மக்களைப் படுகொலை செய்தனர்; ‘ஜெய் ஸ்ரீராம்’ சொல்லச் சொல்லி அப்பாவி இஸ்லாமியர்களை நாள்தோறும் அடித்துப் படுகொலை செய்கின்றனர்.

அத்தகைய கொலைவெறிக் கூச்சலை மசூதிக்குள் எழுப்புவதில் என்ன தவறு எனக் கேள்வியெழுப்புகிறது இந்திய இக்கேள்விக்குப் பின்னால், நீதித்துறை. இந்தியா இந்துக்களுக்கானது, இஸ்லாமியர்கள் இரண்டாம்தரக் குடிமக்கள், அவர்களுக்கு எந்த உரிமையுமில்லை என்ற இந்துத்துவ சித்தாந்தமே ஒளிந்திருக்கிறது. இதிலிருந்தே இவ்வழக்கின் தீர்ப்பு, பாசிசக் கும்பலுக்குச் சாதகமாகவே அமையும் என்பது உறுதியாகிவிட்டது.

000

இந்த சம்பவங்கள் மட்டுமின்றி, முதலாளித்துவ தாராளவாதிகளால் கொண்டாடப்பட்ட ‘ஜனநாயகவாதியாக’க் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், பாபர் மசூதி இடிப்பு வழக்கிற்கு தீர்ப்பு வழங்க கடவுளை வேண்டினேன் என்று சமீபத்தில் கூறியது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதேபோல, கடந்த மே மாதம் 20-ஆம் தேதியன்று தன்னுடைய பணி ஓய்வு நிகழ்வில் உரையாற்றிய கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி சித்தரஞ்சன்தாஸ், தான் ஆர்.எஸ்.எஸ்-இல் பணியாற்றி வந்ததையும் மீண்டும் பணியாற்ற விரும்புவதையும் பகிரங்கமாக அறிவித்தார்.

தமிழ்நாட்டில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதியாக உள்ள ஜி.ஆர்.சுவாமிநாதனின் தீர்ப்புகளும், பேச்சுகளும் அவர் ஓர் அப்பட்டமான சங்கி என்பதைப் பட்டவர்த்தனமாகக் காட்டுகின்றன. ஜனநாயக சக்திகளின் எதிர்ப்பை மீறி, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட விக்டோரியா கெளரி பா.ஜ.க. மகளிரணியில் செயல்பட்டவர் என்பது ஊரறிந்த உண்மை.

இவையெல்லாம், பொதுவெளியில் அம்பலமானவை மட்டுமே. கடந்த பத்தாண்டு கால மோடி ஆட்சியில் நமது மது கவனத்திற்கு வராத நூற்றுக்கணக்கான கருநாகங்கள் நீதித்துறையில், அதுவும் உயர் பொறுப்புகளில் நுழைக்கப்பட்டிருக்கின்றன. இந்த நீதிபதிகளின் சங்கித்தனங்கள் வெளிப்படும்போதும், பணி ஓய்விற்குப் பிறகு முக்கிய பொறுப்புகளில் நியமிக்கப்படும் போதும்தான் அவர்கள் ஆர்.எஸ்.எஸ்-காரர்கள் என்பதை மக்களால் அடையாளம் காண முடிகிறது.

இவ்வாறு நீதித்துறை முழுவதும் காவிக் கும்பலைச் சார்ந்தவர்கள் புகுத்தப்படுவதென்பது, தற்போது நிலவுகின்ற இந்தப் போலி ஜனநாயக அரசுக் கட்டமைப்பிற்கு பதிலாக, இந்துராஷ்டிரக் கட்டமைப்பை நிறுவத் துடிக்கும், ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க பாசிசக் கும்பலின் திட்டத்துடன் இணைந்ததாகும். பாசிசக் கும்பலின் இத்திட்டத்திற்கு நிலவும் போலி ஜனநாயக கட்டமைப்பும் அரசியலமைப்பும் பக்கபலமாகவும் பாசிசத்தை அடைகாக்கும் கருவிகளாகவும் உள்ளன என்பதே யதார்த்தமாகும்.

சான்றாக, நீதிபதிகள் நியமன ஆணையம் ஒன்றை அமைப்பதன் மூலம் தமது கையாட்களை நீதித்துறையில் ஆதிக்கம் பெற வைக்க விரும்பியது, மோடி-ஷா கும்பல். அதற்கான வாய்ப்புகள் உடனடியாகக் கிடைக்காத நிலையில், பழைய கொலீஜியம் அமைப்பின் மூலமாகவே ஆர்.எஸ்.எஸ். கையாட்களை புகுத்தி, கடந்த பத்தாண்டுகளில் இந்திய நீதித்துறையை சங்கப் பரிவாரக் கும்பல்களின் கூடாரமாக மாற்றிவிட்டது.

அதேபோல், பாசிசக் கும்பல் விரும்பும் ‘மனுநீதி’யை நிலைநாட்டும் வகையிலான மூன்று புதிய குற்றவியல் சட்டங்களும் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டுவிட்டன. இதன்காரணமாக, இத்தனை ஆண்டுகளாக ஒளிந்துகொண்டிருந்த நீதித்துறைக்குள் ஆர்.எஸ்.எஸ்-காரர்கள், மோடியின் மூன்றாம் முறை ஆட்சிக்குப் பிறகு முகமூடிகளை எல்லாம் கழற்றி எறிந்துவிட்டு தங்களது பாசிச முகத்தை பட்டவர்த்தனமாக வெளிக்காட்டி வருகின்றனர்.

இதன்காரணமாக, வருங்காலங்களில் இஸ்லாமியர்களை இரண்டாந்தரக் குடிமக்களாக்கி இந்தியாவை இந்துராஷ்டிரமாக்கும் பாசிஸ்டுகளின் திட்டத்தை நிறைவேற்ற இந்திய நீதித்துறை முன்னணியில் நிற்கும் என்பது திண்ணம். சமீபகாலமாக, “வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991-ஆனது உண்மையான மதத் தன்மையை நிர்ணயிப்பதைத் தடுக்கவில்லை” என்ற சந்திரசூட்டின் வாய்மொழி உத்தரவைப் பயன்படுத்தி, காவிக் கும்பல் நாடுமுழுவதுமுள்ள மசூதிகளை குறிவைத்துவருவதும், அதற்கு நாடுமுழுவதிலுமுள்ள நீதிமன்றங்கள் பக்கபலமாக நிற்பதும் கவனிக்க வேண்டியதாகும்.

ஆனால், பாசிசத்தை வீழ்த்தப் போவதாகக் கூறும் எதிர்க்கட்சிகளோ, நீதித்துறை பாசிசமயமாகி வருவது குறித்து துளியும் கவலைப்படுவதோ வாய்திறப்பதோ இல்லை. மின்னணு வாக்கு இயந்திர மோசடி, தேர்தல் மோசடி, நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றுவது என எதுவாயினும் நாடாளுமன்றம் மற்றும் நீதிமன்றத்தை அணுகுவதன் மூலம் திரும்பத் திரும்ப பாசிஸ்டுகளிடம் மண்டியிடுகின்றனர். இதுகுறித்தெல்லாம் வாய்திறந்தால், நிலவுகின்ற கட்டமைப்பின் மீது மக்களுக்கு நம்பிக்கை போய்விடும், இதே கட்டமைப்பை வைத்துப் நாட்டை ஆள வேண்டுமென்ற தமது விருப்பத்திற்கு இணங்கி வாக்களிக்க மாட்டார்கள் என அஞ்சி மக்களுக்கு துரோகம் இழைக்கின்றன.

ஆனால், பாசிஸ்டுகள் வளர்வதற்கும், பாசிசம் அரங்கேறுவதற்கும் சாதகமாக உள்ள இக்கட்டமைப்பிற்குள் தங்களது பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள முடியாது என்பதை மக்கள் தங்களது சொந்த அனுபவத்திலிருந்து உணர்ந்துகொண்டு வீதிக்கு வரும் காலம் வெகுதொலைவில் இல்லை. எனவே, உண்மையான ஜனநாயகத்தை வழங்குகிற பாசிச எதிர்ப்பு ஜனநாயகத்தை நிலைநாட்டுகின்ற மாற்றுக் கட்டமைப்பை குறித்து மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டியது, இந்தியாவிலுள்ள பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகளின் கடமையாகும்.


அப்பு

(புதிய ஜனநாயகம் – ஜனவரி 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 01-31 மே, 1987 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 02, இதழ் 12-13 | 1987 மே 01-31 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: பாசிசம் அரங்கேறும் மேடையாக சட்டமன்றம்
  • திருவள்ளுவர் பள்ளி நிர்வாகியின் திமிர்த்தனம்
  • பர்னாலா ஆட்சி நீக்கம்! ரிபைரோ ஆட்சி பிரகடனம்!
  • தொழிலாளர் வர்க்க துரோகியின் மரணம்!
  • கல்வராயன் மலைக்காடுகள்: வேட்டையாடப்படும் மலைவாழ் மக்கள்
  • மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு: பாசிச எத்தணிப்புக்கு எதிரான போர்க்குரல்
  • அடிமைத்தனம் அற்பக்கூலி அவலவாழ்வு – கசக்கிப் பிழியப்படும் கரும்பாலைத் தொழிலாளர்
  • ஓட்டுக் கட்சிகளை அச்சுறுத்தும் ‘புதிய’ சக்திகள்!
  • இந்திய இடதுசாரிப் போக்கு – ஒரு கண்ணோட்டம்
  • தேசத்துக்கு ஆபத்து… ராஜீவ் கும்பலால்!
  • கோட்டு சூட்டுக்குள் குற்றவாளிகள்
  • மேநாள் சூளுரை!
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



அதானியின் லஞ்ச ஊழல்: அம்பலமாவது அதானியின் மின்சாரத்துறை ஆதிக்கம்

ஹிண்டன்பர்க், ஓ.சி.சி.ஆர்.பி., ஃபைனான்சியல் டைம்ஸ் என பல்வேறு அமைப்புகளும் பத்திரிகைகளும் அதானியின் மோசடிகளை அம்பலப்படுத்தி அறிக்கைகளை வெளியிட்டுவந்த நிலையில், கடந்த நவம்பர் மாதத்தில் அதானியின் லஞ்ச ஊழல் மோசடியை அம்பலப்படுத்தி குற்றப்பத்திரிகையை வெளியிட்ட அமெரிக்க நீதிமன்றம் அதானிக்கு கைது ஆணையை பிறப்பித்திருந்தது.

இது சர்வதேச அளவில் பெரும் பேசுபொருளானதையடுத்து, அதானி குழுமத்தின் பங்குகள் சரிந்து ரூ.2.5 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. இதனைக் கண்டு பதறிப்போன அதானி குழுமம், அமெரிக்க நீதிமன்றத்தின் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றது என மறுத்தது.

அதானி குழுமத்தின் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் வெளியானவுடன் எதிர்க்கட்சிகள் மற்றும் ஜனநாயக சக்திகள் மத்தியிலிருந்து எதிர்ப்புகளும் கண்டனங்களும் எழத்தொடங்கின. எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி, “அதானி மற்றும் செபி தலைவர் மாதபி பூரி புச் ஆகியோரை கைது செய்ய வேண்டும்; இந்த விவகாரத்தை விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழுவை அமைக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டன. சிலர் அதானி அமெரிக்க அரசால் கைது செய்யப்படலாம் என்று கூட கருத்து தெரிவித்தனர்.

ஆனால், விழியை இமை காப்பது போல அதானியை காத்துக்கொண்டிருக்கும் மோடி அரசோ, நாடாளுமன்றத்தில் அதானி மீதான குற்றச்சாட்டுகளை விவாதிக்க மறுப்பது; அதானி மீது குற்றவழக்கு பதிவு செய்யாமல் இருப்பது; அதானியின் லஞ்ச ஊழல் முறைகேடுகளை பற்றி பேசுபவர்களை தேசத்திற்கு எதிரானவர்களாக சித்தரிப்பது என தனக்கே உரிய பாசிசத் திமிருடன் அதானி குழுமத்தைக் காப்பாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

அதானியின் லஞ்ச ஊழலும் பாதுகாக்கும் மோடி அரசும்

இந்திய பொதுத்துறை நிறுவனமான “சூரிய ஒளி மின்னுற்பத்திக் கழகத்திற்கு” (SECI – Solar Energy Corporation of India) 12 ஜிகாவாட் சூரிய ஒளி மின்சாரம் தயாரித்துத் தருவதற்கான ஒப்பந்தம் ஒன்று கடந்த 2019 டிசம்பர் முதல் 2020 ஜூலை இடைப்பட்ட காலத்தில் கையெழுத்தாகிறது. இந்த ஒப்பந்தமானது, அதானிக்கு சொந்தமான “அதானி கிரீன் எனர்ஜி” (Adani Green Energy) நிறுவனத்திற்கும் இந்தியாவில் சூரிய ஒளி மின்சார உற்பத்தி தொழிற்சாலையைக் கொண்டுள்ள அமெரிக்காவைச் சார்ந்த “அசூர் பவர்” (Azure Power) நிறுவனத்திற்கும் வழங்கப்படுகிறது.

இந்த ஒப்பந்தத்தில், 12 ஜிகாவாட் சூரிய ஒளி மின்சாரம் தயாரிப்பில் எட்டு ஜிகாவாட் மின்சாரத்தை அதானி நிறுவனமும் நான்கு ஜிகாவாட் மின்சாரத்தை அசூர் பவர் நிறுவனமும் உற்பத்தி செய்துத்தர வேண்டும் எனவும் ஒன்றிய அரசின் எஸ்.இ.சி.ஐ. நிறுவனம் அம்மின்சாரத்தை மாநில மின் பகிர்மானக் கழகங்களுக்கு விற்பனை செய்யும் எனவும் உடன்பாடு எட்டப்படுகிறது.

ஆனால், மின்சாரத்தின் அநியாய விலை காரணமாக “மாநில மின் பகிர்மானக் கழகங்கள்” எஸ்.இ.சி.ஐ-யிடமிருந்து மின்சாரத்தை கொள்முதல் செய்ய முன்வராமல் ஒப்பந்தம் கிடப்பில் போடப்பட்டது. இதனால், அதானி நிறுவனத்தின் தலைவர் கௌதம் அதானி உள்ளிட்டு அதானி குழுமம் மற்றும் அசூர் பவர் நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகள் அடங்கிய குழு ஒன்று, ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் அதிகாரிகள், அரசியல்வாதிகளை சந்தித்து சுமார் ரூ.2,200 கோடியை (260 மில்லியன் டாலர்) லஞ்சமாகக் கொடுத்து, எஸ்.இ.சி.ஐ-யிடமிருந்து அதிக விலைக்கு சூரிய ஒளி மின்சாரத்தை வாங்க வைத்துள்ளது.

இவ்வாறு லஞ்சம் வழங்குவதை அசூர் பவர் நிறுவனத்தின் சார்பாக அதானி நிறுவனமே மேற்கொண்டுள்ளது. இந்த லஞ்சப் பணத்தை, அசூர் பவர் நிறுவனம் 7 மில்லியன் டாலர்கள் பணமாகவும், 2.3 ஜிகாவாட் மின்சார உற்பத்திக்கான ஒப்பந்தமாகவும் அதானிக்கு திருப்பி செலுத்தியிருக்கிறது. இந்த ஒப்பந்தத்தை எஸ்.இ.சி.ஐ. அதிகாரிகளிடம் பேசி அதானி நிறுவனம் பெற்றுக் கொண்டுள்ளது.

மேலும், ஒப்பந்தப்படி சூரிய ஒளி மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்காக மூன்று பில்லியன் டாலர்களை (ரூ.20,000 கோடி) அமெரிக்க வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து அதானி நிறுவனம் கடனாகப் பெற்றிருக்கிறது.

எனவே, லஞ்சமானது இந்தியாவில் உள்ள அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருந்தாலும் அமெரிக்க வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் இதில் சம்பந்தப்பட்டிருப்பதால் வெளிநாட்டு ஊழல் நடைமுறைகள் சட்டத்தின்படி அமெரிக்க நீதிமன்றம் இவ்வழக்கை தொடுத்துள்ளது. மேலும், அமெரிக்காவின் கிராண்ட் ஜூரியின் முன்அனுமதியைப் பெற்று தற்போது கௌதம் அதானி உள்ளிட்ட எட்டு பேர் மீது கைது ஆணையையும் பிறப்பித்துள்ளது.

அதேபோல், அதானி கிரீன் மற்றும் அசூர் பவர் நிறுவனத்தின் நடவடிக்கைகளைக் கண்காணித்து வந்த அமெரிக்க பங்கு பரிவர்த்தனை ஆணையம் (US Securities and Exchange Commission) இந்நிறுவனங்களிடம் இதற்கு முன்னரே சில விளக்கங்களை கேட்டிருக்கிறது.

ஆனால், லஞ்சப் பரிவர்த்தனைகளை மறைத்து இந்நிறுவனங்கள் தவறான ஆவணங்கள் மூலம் விளக்கமளித்துள்ளன. மேலும், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின்போது நடத்தப்பட்ட தொலைபேசி, மின்னஞ்சல் உரையாடல்கள், யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது போன்ற தகவல்களை அழித்து தடையை விசாரணைக்கு ஏற்படுத்தின என்று அமெரிக்க நீதிமன்றம் குற்றஞ்சாட்டுகிறது.

ஓராண்டிற்கு முன்பே அமெரிக்க பங்கு பரிவர்த்தனை ஆணையம் மற்றும் பிற அமெரிக்க நிறுவனங்கள் அதானி குழுமத்தின் மீது விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக செய்திகள் வெளியாகின. ஆனால், இவ்விவகாரமே இப்போதுதான் தெரியவந்தது போல் நாடகமாடுகிறது இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் (செபி). ஏற்கெனவே, அதானி குழுமத்தின் பங்குச்சந்தை மோசடிகளுக்கு செபியின் தலைவரான பூரி மாதபி புச் உடந்தையாக இருந்தது ஹிண்டன்பர்க் அறிக்கையின் மூலம் அம்பலமாகியிருக்கும் நிலையில், தற்போது இவ்விவகாரம் அதானி குழுமத்தின் தொங்குசதையாக செபி மாறியுள்ளது என்பதைக் காட்டுகிறது.

அதேபோல், இம்முறைகேட்டில் முக்கியப் பங்காற்றிய எஸ்.இ.சி.ஐ. அமெரிக்க நீதிமன்றக் குற்றப் பத்திரிகையில் உள்ள குற்றச்சாட்டுகள் குறித்த எந்த ஆவணமும் தமக்குக் கிடைக்கவில்லை என்றும் ஒப்பந்தங்கள் ஏதேனும் மீறப்பட்டதா என்பது உறுதியாகத் தெரியவில்லை என்றும் அப்பட்டமாக பொய்யுரைத்துள்ளது.

ஒருபுறம் அதானிக்கு எதிராகப் பேசுவதை தேசவிரோத செயலாக சித்தரிக்கும் காவிக்கும்பல், மறுபுறம் அதானியின் லஞ்ச ஊழல் குறித்து அமெரிக்காவுடன் எந்த விவாதங்களும் மேற்கொள்ளவில்லை என்றும் அதானி மீதான வழக்கை அமெரிக்க நீதித்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள், தனிநபர்களுக்கு இடையேயான வழக்காகவே பார்ப்பதாகவும் ஒன்றிய வெளியுறவுத்துறை மூலம் திமிர்த்தனமாக அறிவித்துள்ளது.

மேலும், அதானியின் லஞ்ச ஊழல் முறைகேடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளை துளி அளவுகூட மதிக்காத மோடி-அமித்ஷா கும்பல், எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபடுகிறார்கள் எனக்கூறி நாடாளுமன்றக் கூட்டத்தொடரை ஆறு நாட்களுக்கு ஒத்திவைத்தது. அதானி பற்றி விவாதிப்பதற்கு பதிலாக அமெரிக்க கார்ப்பரேட் முதலாளியான ஜார்ஜ் சோரஸுடன் இணைந்து இந்தியாவை சீர்குலைக்க ராகுல் காந்தி முயற்சிப்பதாக விவகாரத்தை திசைதிருப்பியது பாசிச மோடி அரசு.

அதானிக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் எதிர்க்கட்சிகள்

ஹிண்டன்பர்க் அறிக்கை உள்ளிட்ட அதானி நிறுவனத்தின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் வெளிவரும் போதெல்லாம் ஒன்றிய மோடி அரசும் செபி உள்ளிட்ட அதன் அடியாள் நிறுவனங்களும் நெருக்கடிக்கு உள்ளாவதும் அக்குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்குமாறு எதிர்க்கட்சிகள் ஏக குரலில் முழங்குவதும்தான் வழக்கம்.

ஆனால், தற்போதைய அமெரிக்க நீதிமன்றத்தின் குற்றச்சாட்டு வெளிவந்தபோது தி.மு.க., ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், காங்கிரஸ் உள்ளிட்ட பா.ஜ.க-வின் எதிர்க்கட்சிகளும் நெருக்கடிக்கு உள்ளானது கவனிக்கத்தக்கதாகும்.

ஏனெனில், அதானியிடமிருந்து லஞ்சம் வாங்கியப் பட்டியலில் காங்கிரஸ் ஆட்சி செய்த சத்தீஸ்கர், தி.மு.க. ஆட்சியிலிருக்கும் தமிழ்நாடு, நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் ஆட்சி செய்த ஒடிசா, ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி செய்த ஆந்திரா மற்றும் குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் இருந்த ஜம்மு காஷ்மீர் ஆகிய அரசுகள் இடம்பெற்றிருந்தன. அதில் ஆந்திரா மின்சார வாரிய அதிகாரிகளுக்கு மட்டும் ரூ.1,750 கோடி லஞ்சமாக வழங்கப்பட்டுள்ளது. மீதிபணம் மற்ற மாநில மின்சார வாரிய அதிகாரிகளுக்கும் பிரித்து வழங்கப்பட்டுள்ளது.

இந்த லஞ்ச ஊழல் விவகாரம் அம்பலமாகிய நிலையில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகள் என்ன விளக்கம் கொடுப்பது என்று தெரியாமல் விழிபிதுங்கின. தெலுங்கானாவை ஆளும் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு, தன்னுடைய மாநிலத்தில் திறன் மேம்பாட்டுப் பல்கலைக்கழகம் அமைக்க அதானி குழுமம் அளித்த ரூ.100 கோடி நன்கொடையை திருப்பியளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, முதல்வர் ஸ்டாலினும் அதானியும் இரகசியமாக சந்தித்துக் கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து, சட்டமன்றத்தில் பேசிய ஸ்டாலின், “அதானி விவகாரத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என்னை வந்து அவர் சந்திக்கவும் இல்லை; நானும் அவரைப் பார்க்கவில்லை” என்றார்.

ஆனால், அதானி ஊழல் விவகாரம் குறித்து விளக்கமளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, “கடந்த மூன்று ஆண்டுகளாக, அதானி நிறுவனத்துடன் தமிழ்நாடு மின்சார வாரியம் எந்த ஒப்பந்தத்தையும் மேற்கொள்ளவில்லை. தமிழ்நாடு மின்வாரியத்தின் தேவையை கருத்தில்கொண்டு ஒன்றிய அரசின் மின்சார வாரியத்தின் மூலம் சுமார் 1,500 மெகாவாட் மின்சாரம் பெறுவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது” என்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அமெரிக்க நீதிமன்றத்தின் குற்றச்சாட்டே, ஒன்றிய மின்சார வாரியத்திடமிருந்து மின்சாரத்தை கொள்முதல் செய்வதற்கு லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதுதான். அப்படியெனில், செந்தில் பாலாஜி அவர்களே ஒன்றிய அரசின் மின்சார வாரியத்திடமிருந்து மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்பதை ஒப்புக்கொண்டுள்ளார். அதாவது, பேச்சுவார்த்தை நடத்தி அதானியுடன் முறைகேட்டிற்கு துணைபோனதை மறைத்துவிட்டு பொய்யுரைக்கிறது தி.மு.க. அரசு.

ஒருபுறம் இக்குற்றச்சாட்டுக்கு நேர்மையாக பதில் அளிக்காத அதேவேளையில் மறுபுறம் தனது இணையப்படை மூலம் “ராமதாஸ் மோடி அரசை விமர்சிக்காமல் இருப்பது ஏன்?”, “கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ஒரு யூனிட் ஏழு ரூபாய்க்கு அதானியுடன் போட்டுக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய குரல் கொடுப்பார்களா”, “நுங்கு தின்றவனை விட்டுவிட்டு அதை நோண்டித் தின்றவனை பிடித்துக் கொண்டார்கள்” என விவாதத்தை திசைதிருப்பியது தி.மு.க.

ஆனால், அதானி விவகாரத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என முதலமைச்சர் ஸ்டாலின் பேசிக்கொண்டிருக்கும் அதேவேளையில் தமிழ்நாட்டின் மின்சாரத்துறையில் அதானியின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது என்ற உண்மையை நாம் அறிந்துக்கொள்ள வேண்டியுள்ளது. தற்போது, வீடுகளில் மின்சார பயன்பாட்டை அளவிட ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் ஏலமும் அதானிக்குத்தான் வழங்கப்படப்போகிறது என்று முதலாளித்துவ ஊடகங்களே அம்பலப்படுத்துகின்றன. எரிசக்தி மற்றும் மின்சாரத்துறையில் ஏகபோகமாக வளர வேண்டுமென்று துடித்துக்கொண்டிருக்கும் அதானிக்கு சிவப்புக் கம்பளம் விரித்துக்கொண்டிக்கின்றன எதிர்க்கட்சிகள். இதற்கு முட்டுக்கொடுப்பதென்பது மக்களை பாசிசத்திற்கு பலியிடுவதன்றி வேறில்லை.

அதானிமயமாகும் மின்சாரத்துறை

தற்போது அம்பலமான அதானியின் லஞ்ச ஊழல் முறைகேடு மின்சாரத்துறையில் அதானி தனது ஆதிக்கத்தை பகாசுரமாக விரிவுப்படுத்தி வருவதை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது.

கடந்த பத்தாண்டுகால பாசிச மோடி அரசின் ஆட்சிக்காலத்தில் சூரிய ஒளி, காற்று உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்கள் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்வதில் அதானி குழுமம் மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களிலிருந்து நாள்தோறும் 11 ஜிகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. இந்த அளவை 2030-ஆம் ஆண்டிற்குள் 50 ஜிகாவாட்டாக அதிகரிக்க வேண்டும் என்று இலக்கு வைத்துள்ளது. இதற்காக குஜராத் மாநிலத்திலுள்ள கவ்தா பகுதியில் இங்கிலாந்து நாட்டின் பாரிஸ் நகரத்தை விட ஐந்து மடங்கு பெரிய பரப்பளவில் 30 ஜிகாவாட் சூரிய ஒளி மற்றும் காற்றாலை மின்சாரத்தை உற்பத்தி செய்யும் ஆலையை அமைத்து வருகிறது.

மோடி அரசும் 2030 ஆண்டிற்குள் நாட்டின் மொத்த மின்சார உற்பத்தியில் சூரிய ஒளி, காற்று உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்கள் மூலம் 500 ஜிகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டும் என்று இலக்கு வைத்துள்ளது. இந்த இலக்கை நிறைவேற்றுவதற்கு ஒன்றிய மற்றும் மாநில மின்சார வாரியங்களை ஊக்குவிப்பதற்குப் பதிலாக கார்ப்பரேட் நிறுவனங்களுடன் ஒப்பந்தமிட்டு இலக்கை நிறைவேற்றவே உறுதி பூண்டுள்ளது. அந்த இலக்கில் பெரும்பகுதியை அதானி குழுமத்திற்கே ஒப்பந்தங்களாக வழங்கும் வகையில் மோடி அரசு செயல்பட்டு வருகிறது. அமெரிக்க நீதிமன்றத்தால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அதானியின் லஞ்ச ஊழல் விவகாரங்களும் அதற்கு சிறந்த சான்றாகும்.

அதேபோல், அதானி கிரீன் நிறுவனத்திற்கும் இந்திய சூரிய ஒளி மின்னுற்பத்திக் கழகத்திற்கும் இடையிலான 8 ஜிகாவாட் ஒப்பந்தமானது, மாநில மின் பகிர்மானக் கழகங்களினூடான ஒப்பந்தமின்றி ஏற்பட்ட முதல் பெரிய ஒப்பந்தமாகும். 30 ஜிகாவாட் சூரிய ஒளி மின்னுற்பத்திக்கான ஒப்பந்தங்கள் பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களுடன் எஸ்.இ.சி.ஐ-யால் ஏற்படுத்தப்பட்டு அந்த மின்சாரத்தை வாங்க யாருமின்றி இருப்பதாக எஸ்.இ.சி.ஐ.-யின் தலைவர் கூறும் நிலையில், அதானி கிரீன் மற்றும் அசூர் பவர் நிறுவனங்களுடான 12 ஜிகாவாட் சூரிய ஒளி மின்சாரத்திற்கான ஒப்பந்தம் அதானியின் நலனுக்காகவே மோடி அரசால் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

அதுபோல, ஒன்றிய மற்றும் மாநில மின்சார வாரிய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததற்கு கைமாறாக அசூர் பவர் நிறுவனம் அதானி நிறுவனத்திற்கு வழங்கிய 2.3 ஜிகாவாட் சூரிய ஒளி மின்சாரத்திற்கான ஒப்பந்தமும் சட்ட விதிகளை மீறியே அதானி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. 2.3 ஜிகாவாட்டிற்கான ஏலம் புறக்கணிக்கப்பட்டு அந்த ஒப்பந்தம் நேரடியாக அதானி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இது பொதுத்துறை நிறுவனமான எஸ்.இ.சி.ஐ. அரசு நிறுவனத்திலிருந்து அதானியின் நிறுவனமாக மாறிப் போயுள்ளதற்கான சான்றாகும்.

மேலும், மாநில மின்வாரியங்கள் சூரிய ஒளி மின்சாரத்தை கொள்முதல் செய்யத் தயங்குவதற்கு விநியோக மற்றும் சேமிப்புக் கட்டமைப்பு இல்லாதது முக்கியக் காரணமாகும். அக்கட்டமைப்பை மேம்படுத்த எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளாத மோடி அரசானது இருக்கின்ற கட்டமைப்பையும் மின்சார சட்டத்திருத்தம்-2023 மூலம் அதானிக்கு தாரைவார்க்க விழைந்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, மின்சார சட்டம்-2003 இன் கீழ் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி மாநில மின் வாரியங்கள் தங்களின் தேவையில் குறைந்தபட்சம் 10 சதவிகிதத்தை சூரிய ஒளி மின்னுற்பத்தி நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்ய வேண்டும் எனக் கட்டாயப்படுத்துவது; அடிமாட்டு விலைக்கு நிலங்கள், வரிச்சலுகைகள், மானியங்கள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலமும் மின்சாரத் துறையில் அதானியின் ஆதிக்கத்தை நிறுவுவதற்கு மோடி-ஷா கும்பல் வேலை செய்துக் கொண்டிருக்கிறது.

சூரிய ஒளி, காற்று உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சார உற்பத்தியில் மட்டுமின்றி, அனல் மின்சார உற்பத்தியிலும் அதானியின் ஆதிக்கத்தை நிறுவும் வகையில் மோடி அரசு வேலை செய்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் பல மாநிலங்களுக்கு அதானி குழுமம் அனல் மின்சாரத்தை விநியோகம் செய்கிறது. தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநில அரசுகள் அனல் மின்சார உற்பத்திக்குத் தேவையான நிலக்கரிக்கு அதானி குழுமத்தைத்தான் சார்ந்து இருக்கவேண்டிய நிலைமை மோடியின் பத்தாண்டுகால ஆட்சியில் உருவாக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மோடி அரசானது நிலக்கரி உற்பத்தி மற்றும் விநியோகம், துறைமுகங்கள், விமான நிலையங்கள் பராமரிப்பு உள்ளிட்ட பல துறைகளில் அதானியின் ஆதிக்கத்தை நிறுவுவதற்கான வேலையில் ஈடுபட்டு வருவதைப் போல மின்சாரத் துறையிலும் அதானியின் ஆதிக்கத்தை நிறுவுவதற்கான வேலையில் ஈடுபட்டு வருகிறது.

ஆர்.எஸ்.எஸ்-பாஜக கும்பலின் பாசிசத்தை எதிர்ப்பதாக கூறிக்கொள்ளும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளும் மின்சாரத்துறை மட்டுமின்றி தங்கள் மாநிலங்களுக்குள் பல துறைகளில் அதானியின் ஆதிக்கத்தை நிறுவும் வகையில் வேலை செய்து வருகின்றன.

உழைக்கும் மக்களின் எதிரி அதானி!

ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் மின்சாரத் துறையில் அதானியின் ஆதிக்கம் நிறுவப்படும் நடவடிக்கையானது இந்திய உழைக்கும் மக்களுக்கு எதிரான நடவடிக்கையாகும். மின்சாரத் துறையில் ஆதிக்கத்தை நிறுவுவதன் மூலமும் அதானி கொள்ளையடிக்கும் பணம் உழைக்கும் மக்களின் பணமே ஆகும்.

தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் போது அதற்கு மின்சார வாரியத்தின் கடனை காரணமாகக் கூறுகின்றன. ஆனால் மின்சார வாரியத்தின் கடனிற்கே அதிக விலைக்கு மின்சாரத்தை அதானி உள்ளிட்ட கார்ப்பரேட் முதலாளிகளிடம் இருந்து கொள்முதல் செய்வது, மறுபுறம் அந்த மின்சாரத்தை குறைந்த விலைக்கு தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவற்றுக்கு விற்பனை செய்வது என்ற கொள்கையே காரணமாகும்.

மேலும், ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் ஆண்டுதோறும் மின்கட்டணம் உயரும் என்ற முறைக்கு மக்களைப் பழக்கப்படுத்துகின்றனர். இதன்மூலம் மின்சாரத்துறையில் அதானியின் ஆதிக்கம் நிறுவப்படும் போது ஒரு யூனிட் மின்சாரத்திற்கு அதிகப்படியான பணத்தை அதானி மக்களிடம் இருந்து கொள்ளையடிக்க முடியும்.

அதேபோல, மின்சார சட்டத் திருத்தம் 2023-இல் உள்ள கூறுகளை மறைமுகமாக அமல்படுத்துவது, நேரத்திற்கேற்ப மின்கட்டணம் என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டது அனைத்தும் அதானியின் இலாப நோக்கத்திற்கே ஆகும். இந்தியா முழுவதும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படுவதும் அதானியின் நலனிலிருந்தே ஆகும்.

அதுமட்டுமின்றி, உலகப்பணக்காரர் பட்டியலில் முதலிடத்தில் உள்ள எலான் மஸ்க் உடன் இணைந்து இந்திய மக்களை சுரண்டுவதற்காகவும் அதானி குழுமம் தயாராகி வருகிறது. அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்றவுடன் அதானி வாழ்த்து தெரிவித்ததும் அமெரிக்க உற்பத்தி மற்றும் எரிசக்தித் துறையில் முதலீடு செய்வதாக தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது. இது அமெரிக்க நீதிமன்றத்தில் உள்ள வழக்கிலிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்வதற்கான நடவடிக்கை என்று பலரும் கருத்து தெரிவித்தாலும், இந்தியாவில் மின்சார வாகன விற்பனை சந்தையைக் கைப்பற்றத் துடிக்கும் எலான் மஸ்க்கிற்கு விடப்படும் தூதும் ஆகும்.

இவையன்றி, பத்தாண்டுகால பாசிச ஆட்சியில் இந்திய உழைக்கும் மக்களை உறிஞ்சிக் கொழுத்து வளர்ந்த அதானி குழுமம், இன்று உலகின் பல நாடுகளில் தனது ஆக்டோபஸ் கரங்களை விரிவுப்படுத்தி வருகின்றது. கென்யா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் அதானி நிறுவனத்திற்கு எதிராக நடக்கும் மக்கள் போராட்டங்கள் இதற்கான சான்றுகளாகும்.

இந்தச் சூழலில் இந்தியாவிலுள்ள எதிர்க்கட்சிகள் அதானிக்கெதிராக மக்கள்திரள் போராட்டங்களைக் கட்டியமைப்பதற்கு பதிலாக நாடாளுமன்ற வரம்புக்குள் தங்களை சுருக்கிக்கொள்கின்றன. அதானியை எதிர்ப்பதிலும் இக்கட்சிகளிடம் ஒற்றுமை இல்லை. நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் பங்கேற்கவில்லை.

மேலும் இக்கட்சிகளுடைய அதானி எதிர்ப்பும் பெயரளவிற்கானதே ஆகும். தாங்கள் ஆளும் மாநிலங்களில் அதானியுடன் எந்த ஒப்பந்தங்களையும் இட்டுக்கொள்ளமாட்டோம் என்று அறிவிக்கக் கூட இக்கட்சிகள் தயாராக இல்லை. எனவே, அதானி குழுமத்திற்கெதிரான மாபெரும் மக்கள்திரள் போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டிய கடமை புரட்சிகர, ஜனநாயக சக்திகளிடமே உள்ளது.

மேலும், அதானியின் சொத்து மதிப்பு என்பதே நாட்டின் கோடானுகோடி உழைக்கும் மக்களைக் கொள்ளையடித்து சேர்த்த சொத்து என்பதால் அதனை பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவதே சரியான நடவடிக்கையாகும். ஆகவே, அதற்கான போராட்டங்களை புரட்சிகர, ஜனநாயக சக்திகள் கட்டியமைக்க வேண்டும்; அப்போராட்டங்களை மின்சாரத்துறையில் மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் அதானியின் ஆதிக்கத்தை அறுத்தெறியும் வகையில் வளர்த்தெடுக்க வேண்டும்.


அமீர்

(புதிய ஜனநாயகம் – ஜனவரி 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 16-30 ஏப்ரல், 1987 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 02, இதழ் 11 | 1987 ஏப்ரல் 16-30 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: விகடன் விவகாரம் வேறு கோணத்திலிருந்து!
  • உழைப்பும் பிழைப்பும்: அன்னிய நாடுகளில் அவதிப்படும் இந்தியத் தொழிலாளிகள்
  • ”ஃபேர்ஃபாக்ஸ் விவகாரம்” புதைந்து கிடக்கும் உண்மைகள்
  • படுகொலைப் பிரதேசங்கள்
  • தட்டிப் பறித்தவர்கள் தானம் செய்கிறார்கள்
  • இந்திரவல்லி: தியாகங்கள் நினைவுச் சின்னம்
  • வதையின் கதை – ஒரு நேரடி அனுபவம்
  • ஈழத்தில் ஒரு கொமய்னி!
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 1-15 ஏப்ரல், 1987 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 02, இதழ் 10 | 1987 ஏப்ரல் 1-15 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: கேரள – மேற்கு வங்க – காஷ்மீர் தேர்தல் முடிவுகள்: தனிமைப்படும் பாசிசக் கும்பல் தாக்கவே துணியும்!
  • அரியலூர் ரெயில் கவிழ்ப்பு! போலீசின் தில்லு முல்லுகள்!!
  • பொருளாதார முற்றுகை: இலங்கைக்கு ஒரு யாழ்ப்பாணம்! இந்தியாவுக்கு ஒரு பல்லியபால்!
  • பாரதிதாசன் பல்கலைக் கழகம் – துணைவேந்தரின் திருவிளையாடல்
  • நெல்லி: மறையாத வடு
  • பட்ஜெட்: சட்டப்பூர்வ வழிப்பறி
  • இந்து மதவெறிக்குப் பெருந்தீனி
  • பாராளுமன்ற சர்வாதிகாரம்
  • கமிஷனர் தேவாரம் அடிக்கும் ‘ஸ்டண்ட்’!
  • ராஜீவின் புதிய புஸ்வாணக் கொள்கை!
    2 நிமிடங்களில் 28 கோடியே 73 லட்ச ரூபாய் பாழ்!
  • குவாதமாலா: சீறியெழும் சிவப்புப் பேரலை!
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



வேங்கைவயல்: முதுகில் குத்திய தி.மு.க. அரசு

வேங்கைவயலில் தாழ்த்தப்பட்ட மக்கள் பயன்படுத்தும் குடிநீர் மேல்தேக்கத் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட கொடூரச் சம்பவத்தில், பாதிக்கப்பட்ட தலித் இளைஞர்களே குற்றவாளிகள் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அயோக்கியத்தனமாகத் தெரிவித்துள்ளது. தாங்கள் குடிக்கும் குடிநீர்த் தொட்டியில் தலித் மக்களே மலம் கலப்பார்களா என கேள்வியெழுப்பி தமிழ்நாடு மக்களும் ஜனநாயக சக்திகளும் திமுக அரசின் முகத்திரையை கிழித்து வருகின்றனர்.

2022-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சாதிவெறி கொடூரம் அரங்கேறி இரண்டாண்டுகள் ஆகியும், வழக்கை விசாரித்துவரும் தமிழ்நாடு அரசின் சி.பி-சி.ஐ.டி. போலீசு தற்போதுவரை குற்றவாளிகளைக் கைது செய்யவில்லை. வழக்கு விசாரணை நடந்துவரும் புதுக்கோட்டை மாவட்ட எஸ்.சி-எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யாமல் பலமுறை அவகாசம் கோரி இழுத்தடித்து வந்தது.

இதற்கிடையே, தமிழ்நாடு அரசின் சி.பி-சி.ஐ.டி. போலீசிடமிருந்து இவ்வழக்கை ஒன்றிய அரசின் சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டுமென சென்னை உயர்நீதிமன்ற நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஜனவரி 24 அன்று அவ்வழக்கு விசாரணைக்கு ஆஜரான தமிழ்நாடு அரசு, கடந்த ஜனவரி 20 அன்றே மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி-சி.ஐ.டி. போலீசு குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துவிட்டதாகவும், வேங்கைவயலை சேர்ந்த முரளிராஜா, சுதர்சன், முத்துக்கிருஷ்ணன் ஆகிய மூன்று தலித் இளைஞர்கள்தான் குற்றவாளிகள் எனவும் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

முத்தரையர் சாதியைச் சார்ந்த ஊர்த் தலைவரையும் அவரது கணவர் முத்தையாவையும் பழிவாங்குவதற்காக முரளிராஜா குடிநீரில் நாற்றம் அடிப்பதாகப் பொய்யான செய்தியைப் பரப்பி வந்ததாகவும், சுதர்சன், முத்துக்கிருஷ்ணன் இருவரும் குடிநீர் தொட்டியில் மலம் கலந்ததாகவும் தெரிவித்துள்ளது. சி.பி-சி.ஐ.டி. போலீசின் இந்த கேடுகெட்ட வாதத்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்படியே வாந்தி எடுத்த தமிழ்நாடு அரசு சி.பி.ஐ-க்கு வழக்கை மாற்ற வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டது. இதனையடுத்து தமிழ்நாடு அரசு சார்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறு கூறி வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தி.மு.க. அரசின் இந்த அயோக்கியத்தனமான நடவடிக்கையானது பாதிக்கப்பட்ட வேங்கைவயல் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் அப்பட்டமான துரோகமாகும்.

உண்மையில், வேங்கைவயல் தலித் மக்களைப் பழிவாங்குவதற்காக முத்தரையர் சாதியைச் சேர்ந்த முட்டுக்காடு ஊர்த்தலைவர் பத்மாவின் கணவர் முத்தையாதான் குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்ததாக சமூக செயற்பாட்டாளர்களும் பத்திரிகையாளர்களும் கள ஆய்வுகள் மூலம் அம்பலப்படுத்தியுள்ளனர்.

முத்தரையர் ஆதிக்கச் சாதி சங்கமும் சாதிவெறியன் முத்தையாவும் ஆர்.எஸ்.எஸ். உடன் நெருக்கமாக உள்ள காரணத்தால் ஆரம்பத்திலிருந்தே முத்தையாவை காப்பாற்றி தலித் மக்களைக் குற்றவாளிகளாக்க ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. தற்போது ‘சமூகநீதி காவலனாம்’ தி.மு.க. அரசும் ஆர்.எஸ்.எஸ்-இன் அடியொற்றி சட்டப்பூர்வமாகவே முத்தையாவை காப்பாற்றி தலித் மக்களைக் குற்றவாளிகளாக்கியுள்ளது.

அதேபோல், குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள முத்துக்கிருஷ்ணன், சுதர்சன் ஆகிய இரு இளைஞர்கள்தான் 2022 டிசம்பர் 26 அன்று முதன்முதலில் நீர்த்தேக்கத் தொட்டியைச் சோதனையிட்டு அதில் மலம் கலக்கப்பட்டிருப்பதை வெளிக்கொண்டுவந்தனர். நீரில் திட்டுதிட்டாக மலம் மிதப்பதையும் காணொளியாகப் பதிவு செய்திருந்தனர். அப்போதே அந்த இளைஞர்கள் பதிவு செய்திருந்த காணொளியை, “தவறு செய்தவர்களின் காணொளி” என பா.ஜ.க-வின் ஐ.டி. விங் தலைவரான சி.டி.நிர்மல் குமார் எக்ஸ் தளத்தில் பகிர்ந்ததையடுத்து, சங்கிகள் கீழ்த்தரமான பிரச்சாரத்தில் இறங்கினர். சங்கி நிர்மல் குமாரின் வெறுப்பு-பொய் பிரச்சாரத்தைக் குற்றப்பத்திரிகை வரை கொண்டுவந்துள்ளது தமிழ்நாடு போலீசு.

மற்றொரு இளைஞரான போலீசு கான்ஸ்டபிள் முரளிராஜாவையும் “வீடு தருகிறோம், பணம் தருகிறோம், குற்றவாளியாக ஒத்துக்கோ” என்று சி.பி-சி.ஐ.டி. போலீசு மிரட்டிவந்தது. அவரை ஆயுதப் படைக்கு மாற்றி வதைத்தது. இவையெல்லாம் ஏற்கெனவே அம்பலமாகியிருந்த நிலையில், அதனை நிரூபிக்கும் விதமாக அவரின் பெயரும் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளது.

இந்த அப்பட்டமான சாதிய நடவடிக்கையை அம்பலப்படுத்துவதற்குப் பதிலாக, தமிழ்நாடு ஊடகங்கள் குற்றப்பத்திரிகையில் உள்ளதையே தமிழ்நாடு மக்களுக்கு ஒப்பித்துக் கொண்டிருக்கின்றன. “நியூஸ் 18 தமிழ்நாடு” உள்ளிட்ட பல செய்தி தொலைக்காட்சிகள், குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள தலித் இளைஞர்களின் புகைப்படங்களையும், அவர்கள் தங்களது தாய் மற்றும் அத்தையுடன் பேசிய வெட்டி ஒட்டப்பட்ட கேட்பொலியையும் (ஆடியோ) பகிர்ந்து சாதிவெறியர்களுக்கு அடியாள் வேலை பார்த்துக்கொண்டிருக்கின்றன.

தி.மு.க-வின் ஐ.டி. விங் சமூக வலைத்தள பக்கங்கள் துளியும் வெட்கமின்றி அதனைப் பரப்பிக் கொண்டிருக்கின்றன. தங்களை திமுக-வின் அறிவிக்கப்படாத ஐ.டி விங்காக செயல்படும் யூடியூப் சேனல்கள் இவ்விவகாரம் குறித்து மூச்சு கூட விடாமல், எப்படியேனும் இதனை மூடிமறைத்து நிகழ்ச்சிநிரலை மாற்றுவதற்கு போராடிக் கொண்டிருக்கின்றன.

இருப்பினும், மக்களை உண்மையாக நேசிக்கும் ஜனநாயக சக்திகள் பலரும் திமுக அரசின் இந்நடவடிக்கைக்கு தங்களது கண்டனங்களை தெரிவித்தும் போராடியும் வருகின்றனர். ஆனால், தி.மு.க. அரசோ தலித் மக்கள்தான் குற்றவாளிகள் என விளக்கமளிக்கிறது. குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக்கோரி பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக தொடரப்பட்ட வழக்கில் வேங்கைவயல் மக்கள் மலம் கலந்த தண்ணீரையே குடிக்கவில்லை என அயோக்கியத்தனமாக பேசி வருகிறது.

மேலும், வேங்கைவயல் கிராமத்தை சுற்றி நான்கு அடுக்கு போலீசை குவித்து ஜனநாயக சக்திகள் ஊருக்குள்ளும் கிராம மக்கள் ஊருக்கு வெளியிலும் வராமல் தடுத்து வருகிறது. வேங்கைவயலில் மூதாட்டி ஒருவரின் இறுதிச் சடங்கிற்கு கூட உறவினர்களை அனுமதிக்காமல் அடாவடி செய்ததையடுத்து மூதாட்டியின் உடலை வைத்து மக்கள் போராட்டம் நடத்தினர். தங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என தொடர் போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றனர்.

2022-ஆம் ஆண்டு இறுதியில் இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து பெரும் பேசுபொருளானதிலிருந்தே பாதிக்கப்பட்ட தலித் மக்களைக் குற்றவாளிகளாக்கவே ஒட்டுமொத்த அரசுக் கட்டமைப்பும் முனைப்புக் காட்டி வந்தது. தலித் மக்களிடம் டி.என்.ஏ. சோதனை நடத்துவது; உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் துன்புறுத்திக் குற்றத்தை ஏற்றுக்கொள்ளும்படி கொடுமைப்படுத்தியது என பாதிக்கப்பட்ட மக்கள் அனுபவித்த கொடுமைகள் கொஞ்சநஞ்சமல்ல. உண்மையில், மலம் கலந்த தண்ணீரைக் குடித்ததைக் காட்டிலும் இந்த சாதிய அரசு அம்மக்களுக்குச் செய்த கொடுமைகள் எந்த வகையிலும் குறைவானதல்ல.

சமூக நீதி, திராவிட மாடல் என வாய்கிழியப் பேசிக்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களின் முதுகில் குத்திய தி.மு.க. அரசின் இந்த பச்சை துரோகத்தை வேங்கைவயல் தலித் மக்களும் தமிழ்நாடு மக்களும் ஒருநாளும் மன்னிக்க மாட்டார்கள்.

இச்சமயத்தில், சி.பி-சி.ஐ.டி. போலீசின் குற்றப்பத்திரிகை மீது கண்டனம் தெரிவித்துள்ள வி.சி.க., சி.பி.ஐ(எம்) உள்ளிட்ட கட்சிகள் இன்ன பிற அமைப்புகள் இவ்வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன. ஆனால், சி.பி.ஐ-க்கு வழக்கை மாற்றுவது எந்த வகையிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுத் தராது என்பதே அனுபவமாகும். சமீபத்தில் கொல்கத்தா மருத்துவ மாணவி பாலியல் வன்கொலை வழக்கிலும் உண்மையான குற்றவாளிகளையும் மருத்துவ மாஃபியா கும்பலையும் பாதுகாக்கும் விதமாகவே சி.பி.ஐ. விசாரணை அமைந்தது அம்பலப்பட்டு நாறியுள்ளது. சொல்லப்போனால், ஆர்.எஸ்.எஸ். உடன் நெருக்கமாக உள்ள முத்தரையர் சாதியைச் சேர்ந்த குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்கும் தலித் மக்களைக் குற்றவாளிகளாக்குவதற்கும் சி.பி.ஐ., போலீசு இன்னும் தீவிரமாக முயற்சிக்கும் என்பதே உண்மை.

எனவே, வேங்கைவயல் மக்களுக்கு ஆதரவாக மக்கள் போராட்டங்களைக் கட்டியமைப்பது மட்டுமே பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கான நீதியைப் பெற்றுத்தரும். உண்மையான குற்றவாளிகளுக்குத் தண்டனையைப் பெற்றுத்தரும் வழியும் அதுவேயாகும்.


தலையங்கம்

(புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 16-31 மார்ச், 1987 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 02, இதழ் 9 | 1987 மார்ச் 16-31 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: கட்டண உயர்வு அக்கிரமம்
  • போராளி பகத்சிங் நினைவாக…
  • பிரதமரின் அதிகாரத் திமிர்! ஜனாதிபதி சதி!!
  • நரகலை நக்கிக் கொண்டு நாக்கைக் கழுவிக் கொண்டு…
  • மார்க்சின் நினைவை நெஞ்சில் ஏந்துவோம்!
  • மலைத் தொடரில் இனப் படுகொலை
  • கழகங்கள் – தமிழ் நாட்டின் களங்கங்கள்
  • விமர்சனமும் விளக்கமும்
  • தமிழக வறட்சி: சொரணையற்ற ஆட்சியாளர்களால் பரிதவிக்கும் மக்கள்
  • மீண்டும் மாணவர் போராட்டங்கள்
  • மோ(ச)டி வித்தைகள்
  • மீண்டும் அநீதி!
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2025 | மின்னிதழ்

அன்பார்ந்த வாசகத் தோழர்களே,

புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2025 மின் இதழ் தேவையான நண்பர்கள், வாசர்கள் புதிய ஜனநாயகம் எண்ணிற்கு ஜிபே (G−Pay) முறையிலோ அல்லது வேறு வகையிலோ உரிய தொகையைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

எமது அலுவலக எண்ணிற்கு ஜிபே (G−Pay) மூலம் தொகையை அனுப்பிவிட்டு அதன் திரைப்பதிவை (ஸ்கிரீன் ஷாட்ஐ) எமது அலுவலக எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.

புதிய ஜனநாயகம் இதழுக்கு ஓராண்டு சந்தா, ஈராண்டு சந்தா என செலுத்தலாம்.

ஜிபே (G−Pay) முறையில் தொகை செலுத்த வேண்டிய புதிய ஜனநாயகம் இதழின் அலுவலகத் தொலைபேசி எண்: 94446 32561

தொடர்பு விவரங்கள் : தொலைபேசி / வாட்சப் : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

மின்னிதழ் விலை : ரூ.30

G-Pay மூலம் பணம் கட்ட : 94446 32561

வங்கி கணக்கு விவரம்:
Bank: SBI, Branch: Kodambakkam,
Account Name: PUTHIYA JANANAYAGAM,
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444

0-0-0

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம் – வேங்கைவயல்: முதுகில் குத்திய தி.மு.க. அரசு
  • சென்னை புத்தகக் கண்காட்சியில் பூத்துக்குலுங்கிய புதிய ஜனநாயகம் பதிப்பகம்
  • டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து: வென்றது மக்கள் போராட்டம்!
  • மாநகராட்சி விரிவாக்கம்: கார்ப்பரேட் நகர உருவாக்கமும் உழைக்கும் மக்கள் வெளியேற்றமும்
  • உயர்கல்வி மீதான யூ.ஜி.சி-யின் தொடர் தாக்குதல்கள்: தீர்வுக்கான பாதை எது?
  • காசா மீதான போர் நிறுத்தம்: காசா மீண்டது, பாலஸ்தீனமும் மீளும்!
  • அமெரிக்காவில் கும்பலாட்சி துவக்கம்: புதிய வகை மேலாதிக்கத்திற்கான அறிவிப்பு!
  • அன்று சென்னிமலை இன்று திருப்பரங்குன்றம்!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram