Monday, August 18, 2025
முகப்பு பதிவு பக்கம் 779

சமச்சீர் கல்வி போராட்டம்: தடியடி, 600 பேர் கைது!!

சமச்சீர் பொதுப்பாடத்திட்டத்தை ஒழித்துக்கட்டும் நோக்கில் அதற்கு எதிரான அத்தனை சதிவேலைகளையும், நீதிமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் மும்முரமாகச் செய்து வரும் பாசிச ஜெயா அரசுக்கு எதிராக தொடர்ந்து போராடிவரும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, சென்னை, தாசப்பிரகாஷ் ஓட்டல் அருகே, மாணவர்கள், பெற்றோரை அணிதிரட்டி போர்க்குணமிக்க மறியலை இன்று(1.8.2011)  நடத்தியது.

காலை 10.30 மணிக்கு தாசப்பிரகாஷ் ஓட்டல் அருகே சிக்னலில் மறியல் நடத்துவதென முடிவு செய்து, அப்பகுதியைச் சுற்றிலும் நேற்றே வீச்சான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டதால் நூற்றுக்கணக்கான பெற்றோர் திரண்டு வந்தனர். சரியாக 10.30 மணிக்கு பல்வேறு பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த தோழர்களும், மாணவர்களும் பேருந்திலிருந்து இறங்கி, முழக்கமிட்டபடியே  சாலையை மறித்து நின்றனர். இதே சமயத்தில் சந்தோஷ் நகர் பகுதியிலிருந்து நூற்றுக்கணக்கான பெற்றோர், போலீசின் தடையை உடைத்து கொண்டு, சாலைக்கு வந்து, மாணவர்களுடன் கரம் கோர்த்தனர்.

பு.மா.இ.மு சென்னைக்கிளை செயற்குழுத் தோழர்கள் கார்த்திக்கேயன், நெடுஞ்செழியன், மாநில அமைப்புக்குழு உறுப்பினர் தோழர் சரவணன் ஆகியோர் தலைமையில் தொடங்கிய இம்மறியலால் நாற்புறமும் போக்குவரத்து ஸ்தம்பித்ததைக் கண்ட போலீஸ் உடனடியாக செய்வதறியாது திகைத்தது. 10 நிமிடத்திற்குள் போக்குவரத்து மேலும் தேங்குவதுடன் போராட்டத்தில் ஈடுபடுவோர் எண்ணிக்கையும் அதிகரித்ததால், உடனடியாக முன்னணியாளர்களைக் குறிவைத்துக், களத்தில் இறங்கியது போலீஸ். சிவப்பு சட்டை அணிந்தவர்களை எல்லாம் தரதரவென இழுத்து வந்து வேனில் ஏற்ற முயல, தோழர்கள் வர மறுத்தபோது லத்தியால் அடித்தும், வேனில் படியில் நின்று முழக்கமிட்டவர்களை தாக்கியும் கட்டுப்படுத்த முயன்று தோற்றனர். தோழர்கள் ஏற்றப்பட்ட வேனை, மற்றவர்கள் முற்றுகையிட்டு மறித்ததும், அங்கிருந்த பள்ளி மாணவர்களை கழுத்தைப் பிடித்துத் தள்ளியும், சங்கிலிபோல் நிற்பவர்களை உடைக்கவும் முயன்றது போலீசு.

ஆனால் பள்ளி மாணவர்களோ, “முதல்ல எங்களுக்கு புத்தகம் கொடு” , “எங்கள எதுக்கு இழுக்கற, ரோட்டுக்கு வரவச்ச கவர்மெண்ட போய் கேளு” என வாக்குவாதம் செய்து வாயடைத்தனர். ஏறத்தாழ 100 க்கும் மேற்பட்ட போலீஸ் குவிக்கப்பட்டு, ஒவ்வொரு தோழரையும் மிருகத்தனமாக இழுத்துச் சென்றும், சிலரை 5,6 பேர் சேர்ந்து இழுத்துச் சென்றும் வேனில் ஏற்றினர். நாலாபுறமும் வாகன நெரிசல், பொதுமக்கள் மத்தியில் மேலும் போலீசும், வேனும் கொண்டுவரப்பட்டு பெற்றோர்கள், மாணவர்கள், தோழர்கள் என 600க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் வெவ்வேறு இடங்களில் மூன்றாகப் பிரித்து வைத்ததோடு, தோழர்கள் மீது வழக்கு பதிவு செய்து ரிமாண்டு செய்யவும் முயன்று வருகிறது, பாசிச ஜெயா அரசு. மீண்டும் ஒரு முறை புழல் சிறையைப் பிரச்சார மேடையாக்க தயாராகிவிட்டனர் பு.மா.இ.மு தோழர்கள்.

உச்சநீதிமன்றத்தில் சமச்சீர் வழக்கு முடிவை நெருங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில், தமிழக அரசு தீயாய் வேலை செய்து தடைபெற துடிக்கிறது. ஆனால் தமிழக அரசின் திமிரை உடைக்கத் தயாராகி வருகின்றனர், பு.மா.இ.மு தலைமையிலான மாணவர்கள்.  அறியப்பட்ட பெரிய ஒட்டுக்கட்சிகளெல்லாம் வாய்மூடி மௌனமாக இருக்கும் நிலையில் தோழர்கள் அன்றாடம் போராட்டத்தை வீச்சாக வளர்த்து வருகின்றனர். புரட்சியாளர்களின் தலைமையில் அணிதிரளும் இந்த மாணவப்படை பாசிச ஜெயாவின் திமிருக்கு ஆப்பு வைப்பது உறுதி.

படங்களை பெரியதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்

108 ஆம்புலன்ஸ் – சேவையா? சுரண்டலா??

23

108 ஆம்புலன்ஸ்

  • விபத்துக்களினாலோ, நோய்களினாலோ, மனிதர்கள் உயிருக்குப் போராடுகின்ற மிக ஆபத்தான சூழ்நிலைகளிலே அவர்களைக் காப்பாற்றுகிற மிகவும் பொறுப்பு வாய்ந்த பணியினை அர்ப்பணிப்போடு செய்யும் பணியாளர்கள் மூலமாக மிகக் குறுகிய காலத்தில் தமிழக மக்களின் மனதில் மிக ஆழமாகப் பதிந்துவிட்ட ஒரு எண் 108.
  • 108-ன் மூலம் மக்களுக்குக் கிடைக்கிற சேவைகளை ஏற்கனவே நீங்கள் அறிவீர்கள். கடந்த தி.மு.க அரசு குறிப்பாக கருணாநிதி, ஏதோ தெருத்தெருவாக தானே சென்று செய்துகொண்டிருக்கிற மிகப்பெரும் சேவை என்பது போல 108 குறித்து விளம்பரம் செய்து கொண்டார். தற்போதைய ஜெயாவோ, இதை இன்னும் சிறப்பானதாக ஆக்கப் போவதாக, அதாவது தானே வீடுவீடாகச் சேவை செய்யப்போவது போலக் கூறியிருக்கிறார்.
  • ஆனால், இந்த மகத்தான சேவைகளை மக்களுக்குத் தரக்கூடிய 108-ன் ஊழியர்கள் நிர்வாகத்தால் கசக்கிப் பிழியப்படுகின்ற துயரமும், இந்தச் சேவையைப் பயன்படுத்தி ஜி.வி.கே.இ.எம்.ஆர்.ஐ (G.V.K.E.M.R.I) என்கிற தனியார் நிறுவனம் அடிக்கும் கொள்ளையும் யாரும் அறியாதது.
  • அவசரகால மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி மையம் (Emergency Management and Research Institute- EMRI) என்கிற நிறுவனத்தை அவசர உதவிக்காக அழைக்கும் தொலைபேசி எண்தான் 108. இந்த அவசர உதவி மையமானது, தமிழகம் முழுவதும் 411 வாகனங்களை ஊருக்கு ஊர் நிறுத்தி வைத்திருக்கிறது. நாளொன்றுக்கு  சுமார் 3000 க்கும் மேற்பட்டவர்களுக்கு அவசர சிகிச்சை அளித்து வருகிறது.
  • திடீரென நடைபெறுகின்ற சாலைவிபத்துக்கள், மாரடைப்பு, தீக்காயங்கள், நோய்களினால் உருவாகின்ற ஆபத்துக்களுக்கான அவசர உதவிகள் மற்றும் பிரசவகால அவசரங்கள் உள்ளிட்ட அனைத்து விதமான மருத்துவ சிகிச்சைகளுக்கான அவசரஉதவிகளை 108-ன் ஊழியர்கள் செய்கிறார்கள்.
  • விலை உயர்ந்த நவீனக்கார்கள் எதிலும் இல்லாத; வேறு எந்த தனியார் மற்றும் அரசு மருத்துவமனை ஆம்புலன்சிலும் இல்லாத; அவ்வளவு ஏன், பெரும்பாலான தனியார் மருத்துவக் கிளினிக்குகளிலும் இல்லாத, அதி நவீன மருத்துவக்கருவிகள்; உயிர் காக்கும் மருந்துகள்; மற்றும் சிறப்புப் பயிற்சி பெற்ற அவசரகால மருத்துவ நிபுணர்களோடு ஒரு நவீன மருத்துவமனைக்கு இணையாக 108- வாகனங்கள் இயங்கி வருகின்றன.
  • ஒரு 108- வாகனத்தில் ஒரு ஓட்டுனர்(pilot), மற்றும் ஒரு அவசரகால மருத்துவப் பணியாளர் (Emergency Medical Technician) ஆக, இரண்டு ஊழியர்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் ஒரு நாளைக்கு ஒரு ஷிப்ட் (shift) வேலை செய்கிறார்கள். ஒரு ஷிப்ட் என்பது காலை எட்டு மணி முதல் இரவு எட்டு மணி வரையிலான பனிரெண்டு மணி நேரமாகும். ஷிப்ட் முடியப்போகும்போது ஏதேனும் ஒரு கேஸ் வந்தால் அதையும் முடித்துவிட்டுத்தான் இவர்கள் வீட்டிற்குச் செல்கிறார்கள். இதனால் ஏற்படும் கூடுதலான வேலைக்கான கூடுதல் சம்பளம் எதுவும் இவர்களுக்குக் கிடையாது. மேலும் இதற்கான நேரத்தை இவர்கள் அடுத்த ஷிப்ட் வரைக்குமான ஓய்வு நேரத்தில்தான் கழித்துக்கொள்கிறார்கள். அதாவது தொடர்ச்சியாக அடுத்த ஷிப்டிற்கு மீண்டும் மறுநாள் காலை எட்டு மணிக்கு வேலைக்கு வந்து விடுகிறார்கள்.
  • மிகச்சரியாகக் காலை எட்டு மணிக்குத் துவங்கும் முதல் ஷிப்டில் பணியாற்ற வீட்டிலிருந்து 108-வாகனம் இருக்கும் இடத்திற்கு வரும் இவர்களுக்கு பயணப்படியோ, பஸ்பாஸோ வழங்கப்படுவது கிடையாது. மேலும் இவர்களின் சொந்த ஊரிலோ, அல்லது அதன் அருகாமையிலுள்ள ஊர்களிலோ, இவர்களுக்கு பணி தருவதும் கிடையாது. தமிழகத்தில் எங்கு போய் வேலைசெய்யச் சொன்னாலும் அங்கே இவர்கள் போயாக வேண்டும்.
  • வேலைக்கு வந்ததும் இ.எம்.டி யாக வேலை பார்ப்பவர்  முதல் வேலையாக மருத்துவ உபகரணங்கள், மருந்துகள், மற்றும் பதிவேடுகளைச் சரிபார்த்து பெற்றுக் கொள்கிறார். அதுபோல ஓட்டுனரும் வழக்கமான சோதனைகளைச் செய்து வண்டியை பொறுப்பெடுத்துக் கொள்கிறார். எவ்வளவு போக்குவரத்து நெருக்கடியிலும், மோசமான சாலைகளிலும் சிரமங்கள், நெருக்கடிகளைச் சமாளித்து சாமர்த்தியமாகவும், துரிதமாகவும் வாகனங்களை  ஓட்டக்கூடிய இளைஞர்கள்தான் இப்பணிக்கு நியமிக்கப்படுகிறார்கள். ஆனால், முறையான பராமரிப்பு எதுவும் வாகனங்களுக்கு நடைபெறுவது இல்லை. டயர், பிரேக் உள்ளிட்ட முக்கியப் பாகங்கள் கூட பராமரிக்கப்படாமல் இருப்பதால் ஏராளமான வாகனங்கள் அடிக்கடி விபத்திற்குள்ளாகின்றன.
  • 108 வாகனமானது, ஒவ்வொரு ஊரிலும் உள்ள  போலீஸ் ஸ்டேசன், அரசு மருத்துவமனை, ஊரின் மையமான பகுதி, ஒரு பொதுவான இடம் ஆகிய ஏதேனுமொரு இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். 108-ன் ஊழியர்கள் எப்போதும் வண்டியின் உள்ளேதான் இருக்க வேண்டும் என்பது நிர்வாகத்தின் விதி. இவர்களுக்கு வாகனத்திற்கு வெளியே ஓய்விடமோ, கழிப்பறை ஏற்பாடோ கிடையாது. இதனால்ஈ.எம்.டி-க்களாக வேலை செய்கின்ற பெண்கள் படும்பாடு தனித்துயரம்.
  • வேலை நேரத்தினிடையே, தேனீர் நேரமோ, உணவு இடைவேளையோ கிடையாது. வண்டியினுள்ளேயே அமர்ந்துகொண்டுதான் சாப்பிடுகிறார்கள். அப்படிச் சாப்பிடத்துவங்கும் போது, அழைப்பு வந்தால் ஒரு நிமிடத்திற்குள் புறப்பட்டு விடுகிறார்கள். அடுத்த முப்பது நிமிடத்திற்குள் சம்பவ இடத்திற்குச் சென்று விடுகிறார்கள். பாதிக்கப்பட்டவரைப் பரிசோதனை செய்கிறார்கள். அவரைச் சுற்றி உணர்ச்சி வசப்பட்ட நிலையிலே கூடியிருக்கிற உறவினர்களைச் சமாளிக்கிறார்கள். பாதிக்கப்பட்டவரை வண்டியில் ஏற்றுகிறார்கள். ஒடிக்கொண்டிருக்கும் வண்டியிலேயே பாதிக்கப்பட்டவருக்கு அவசர சிகிச்சை அளிக்கிறார்கள்.  குறிப்பிடப்பட்டுள்ள மருத்துவமனைக்கோ, அல்லது தகுந்த மருத்துவமனைக்கோ, அல்லது பாதிக்கப்பட்டவர் அல்லது அவருடைய உறவினர்களின் விருப்பப்படியான மருத்துவமனைக்கோ சென்று சேர்க்கிறார்கள். இதற்குள் பாதிக்கப்பட்டவர் குறித்த தகவல்களைப் பதிவேடுகளில்  பதிவு செய்கிறார்கள். மொத்தம் 22 பதிவேடுகளில் பதிவு செய்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களால் வாகனத்தினில் ஏற்படுகின்ற ரத்தக்கறை, வாந்தி, மலம், மூத்திரம், மற்றும் பிரசவமேற்பட்டால் உண்டாகும் அதன் கழிவுகள் ஆகிய அனைத்தையும் இவர்களே சுத்தம் செய்கிறார்கள். நாளொன்றுக்கு சுமாராக ஐந்திலிருந்து பத்து வரையிலான நபர்களைக் கையாளுகிறார்கள். இவர்களுக்கு எந்தவிதமான பாதுகாப்புக் கருவிகளோ, மருந்துகளோ வழங்கப்படுவதில்லை. ஒருமுறை கழட்டி மாட்டினால் கிழிந்துவிடுகிற அளவிற்கு மட்டரகமாகத் தயாரிக்கப்பட்ட கையுறையைத்தான் இவர்கள் பயன் படுத்துகிறார்கள்.
  • இப்படி கூடுதலான பணிச்சுமையிலும், பொறுப்பாகப் பணிசெய்யும் இவர்களுக்கு மிகவும் துயரத்தைக் கொடுப்பது இவர்களின் வேலைப்பளு அல்ல, மாறாக, இவர்களைக் கொடுமையாகச் சுரண்டுகிற நிர்வாகம்தான்.
  • 108-எனும் இந்த அவசரகால மருத்துவச் சேவையைச் செய்வதற்காக தமிழக அரசு ஜி.வி.கே.ஈ.எம்.ஆர்.ஐ எனும் நிறுவனத்துடன் ஓர் ஒப்பந்தத்தை செய்துள்ளது. அது சாதாரண ஒப்பந்தமல்ல, நாம் அடிக்கடி செய்தித்தாள்களிலே படிக்கிறோமே அந்த புரிந்துணர்வு ஒப்பந்தம். அது என்ன புரிந்துணர்வு ஒப்பந்தம்? இலாப, நட்டமில்லாமல் சேவை நோக்கோடு அரசும் தனியார் நிறுவனங்களும் செய்து கொள்கின்ற ஒப்பந்தத்தைத்தான் புரிந்துணர்வு ஒப்பந்தம் என்று கூறுகிறார்கள். ஒரு மக்கள் நல அரசு என்று சொல்லிக்கொள்கின்ற அரசு அப்படி ஒரு ஒப்பந்தம் போட்டு சேவை செய்வதை நாம் புரிந்து கொள்ளலாம். ஆனால், ஒரு முதலாளி எப்படி சேவை செய்கின்ற ஒரு ஒப்பந்தத்திற்கு முன் வருவான்? விற்க முடியுமென்றால், அதுவும் லாபத்தோடு விற்க முடியுமென்றால் தன் மனைவியையும், பிள்ளைகளையும் கூட விற்கத் துடிப்பதுதானே முதலாளித்துவத்தின் சிறப்பியல்பு. உண்மை இவ்வாறு இருக்க எதனால் அந்த முதலாளி  சேவை செய்ய முன் வந்தார்? 108-ற்காக சேவை செய்ய ஒப்பந்தம் போட்டுள்ளவர் ஜி.வி.கே.ஈ.எம்.ஆர்.ஐ (G.V.K.E.M.R.I) என்னும் நிறுவனத்தின் முதலாளியான  ஜி.வி.கிருஷ்ணராம ரெட்டி என்பவர்.
  • இந்த சேவைக்காக, ஆண்டு தோறும் அரசிடமிருந்து ஜி.வி.கே.யின் முதலாளி பெறுகிற பராமரிப்புத் தொகை மட்டும் ரூபாய் நாலாயிரத்து இருநூறு கோடி. இது தவிர, பிரசவம் நடந்தால் இரண்டாயிரம் ரூபாயும், மற்ற பிரச்னைகளுக்கு ஆயிரத்து ஐநூறு ரூபாயும் பெற்றுக் கொள்கிறார். சரி, மொத்தமாக ஜி.வி.கே.ஈ.எம்.ஆர்.ஐ நிறுவனத்தின் வரவு, செலவு எவ்வளவு?

முதலில் செலவைப் பார்ப்போம்.

ஒரு மாதத்திற்கு ஒரு வாகனத்திற்கு ஆகும் செலவு:

எரிபொருள்                                                                    ரூ. 20,000

பராமரிப்பு                                                                       ரூ.    5,000

2 பைலட்டுகள் சம்பளம்                                        ரூ.   11,400

2 இ.எம்.டி. களுக்கான சம்பளம்                        ரூ.   13,000

வார விடுமுறையில் மாற்றம் செய்யும்

பைலட் மற்றும் இ.எம்.டிக்கான சம்பளம   ரூ.     5,000

மருந்து மற்றும் கருவிகளுக்கான செலவு  ரூ.     2,000

இதர செலவுகள்                                                           ரூ.     3,600

ஆக, மொத்தம்                                                              ரூ. 60,000

400 வாகனங்களுக்கு, 400 X 60,000 =            ரூ. 2,40,00,000.

ஒரு ஆண்டிற்கு, 12 X 2,40,00,000 =                ரூ. 28,80,00,000.

இனி வரவாக அரசிடம் பெறும் கட்டணத்தைப் பார்க்கலாம்.

மொத்தமுள்ள 411 வாகனங்கள் மூலமாக, ஒரு நாளைக்கு வரும் மொத்த கேஸ்கள் சுமார் 3,000.

ஒரு கேஸுக்கு அரசிடம் பெறும் கட்டணம் ரூபாய் குறைந்தபட்சமாக ரூபாய் 1,500 என வைத்துக் கொண்டால்
ஒரு நாளைக்கு 3,000 X 1,500= 45,00,000 ரூபாய்
ஒரு மாதத்திற்கு 30 X 45,00,000= 13,50,00,000 ரூபாய்.
அப்படியானால் ஒரு ஆண்டிற்கு 12 X 13,50,00,000= 162 கோடி ரூபாய்

ஆக, ஒரு ஆண்டிற்கான மொத்த வரவு, செலவு விவரம்:
வரவு         = 162.00 கோடி.
செலவு     =   28.80 கோடி.

ஆக, ஆண்டொன்றிக்கு நிகர லாபம் 133 கோடியே 20 லட்ச ரூபாய்கள். இது குறைந்த பட்சத்தொகை என்பதை மறந்துவிடக்கூடாது.

இவ்வளவு லாபம் அடைகின்ற முதலாளி, ஈ.எம்.டி.க்குத் தரும் மாதச்சம்பளம் வெறும் 6,310 ரூபாய். பைலட்டுக்குத் தருகிற மாதச்சம்பளம் வெறும் 6,000 ரூபாய் மட்டும்தான். இதுதான் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வரவு செலவுப் பின்னணி. உள்ளூர் புரிந்துணர்வு ஒப்பந்தமே இந்த லட்சணமென்றால் மாதத்திற்கொன்றாக பன்னாட்டுக் கம்பனிகளிடம் போடப்படுகின்ற மத்திய, மாநில அரசுகளின் புரிந்துணர்வு ஒப்பந்தமெல்லாம் என்ன யோக்யதையில் இருக்குமென நாமே யூகித்துக்கொள்ளலாம்.

108 ஒரு அரசு நிறுவனமா?

108 வாகனத்தில் தமிழக அரசின் சின்னம் இருப்பதால் 108 ஒரு அரசு நிறுவனமென்றும், 108 வேலை ஒரு அரசு வேலை என்றும் மக்கள் நம்புகிறார்கள் அப்படி நம்பித்தான் அதில் வேலைக்கும் சேருகிறார்கள். ஆனால், 108 வேலை ஒரு தனியார் நிறுவன வேலைதான். 2008 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதி அண்ணாத்துரை பிறந்த நாளில் 108 சேவை தொடங்கப்பட்டபோது, மிகப்பிரபலமான சத்யம் கம்ப்யூட்டர்ஸ்தான் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டிருந்தது. பின்னர் சத்யம் போண்டியாகிப்போய் மஞ்சள் நோட்டீஸ் கொடுத்ததால் சத்யம் முதலாளியின் மச்சானான ஜி.வி. கிருஷ்ணராம ரெட்டிக்கு இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் மாற்றப்பட்டிருக்கிறது. தமிழகம் உள்பட மொத்தம் 18 மாநிலங்களிலே ஜி.வி.கே இது போன்ற சேவைகளை நடத்திவருகிறான்.

ஊழியர்களின் பரிதாப நிலமை:

பணியில் சேரும் ஊழியர்களை முதல் ஒரு வருட காலத்திற்குப் பல மாவட்டங்களிலும் அதன் பின்னர் சொந்த மாவட்டத்திற்கும் பணியாற்ற  அனுப்பப்படுகிறார்கள். ஆனால், வாகனங்களில் எதாவது ஒரு பிரச்னை ஏற்பட்டால் முதலில் நிர்வாகம் செய்வது ஊழியர்களை இடம் மாற்றுவதுதான். ஊழியர்களை அதிகாரிகளுக்கு அடிமைகளாக்கவே நிர்வாகம் நிர்ப்பந்திருக்கிறது. வேலையில் முறையாக இருந்து, அதிகாரிகளின் கேள்விகளுக்கு முறையாகப் பதில் சொன்னாலோ, அல்லது அவசியமான கேள்விகள் எதையும் கேட்டாலோ, உடனடியாக மாவட்டத்தலைமை அலுவலகத்திற்கு வரவழைக்கிறார்கள். தானே தவறு செய்ததாக நிர்ப்பந்தம் செய்து மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கி வைத்துக் கொள்கிறார்கள். அல்லது இனிமேல் தவறு செய்யக்கூடாது என்று எச்சரிக்கைக் கடிதம் கொடுக்கிறார்கள். இவ்வாறு மூன்று எச்சரிக்கைக் கடிதங்கள் பெறுகின்ற ஊழியரை வேலையை விட்டு நீக்குகிறார்கள்.

அதிகாரிகளின் அயோக்கியத்தனம்:

இப்படியெல்லாம் ஊழியர்களிடம் கெடுபிடியாகவும்  கறாராகவும் நடந்து கொண்டு, 40,000 முதல் 50,000 ரூபாய்களுக்கும் கூடுதலாகச் சம்பளம் வாங்கி, ரெட்டியிடம் நல்லபேரை எடுக்கிற ஜி.வி.கே அதிகாரிகளின் அசல் சேவையுள்ளத்தைச் சிறிது பார்க்கலாம்.

1) வாகனங்களுக்கு மாதாமாதம் வழங்குகின்ற மருந்து மற்றும் கருவிகளைக் குறைந்த எண்ணிக்கைகளில் வாங்கி அதிமான எண்ணிக்கையில் வாங்கியதாகப் பில் எழுதிப் பணம் திருடி ரெட்டியை ஏமாற்றுகிறார்கள்.

2) அப்படியே வாங்கப்படும் மருந்துகளில் காலாவதியான மற்றும் காலாவதித் தேதிக்கு மிக அருகில் இருக்கும் மருந்துகளே மிக மிக அதிகமாக இருக்கிறது. இதன் மூலமாகவும் பணம் சுருட்டுகிறார்கள்.

3) வாகனங்களில் ஏற்படும் சிறு சிறு குறைபாடுகளுக்கும் பல ஆயிரக்கணக்கான தொகைக்கு பில்எழுதி ரெட்டியை ஏமாற்றுகிறார்கள்.

4) ஊழியர்களின் சம்பளங்களில் பிடித்தம் செய்யப்படுகின்ற பிராவிடண்ட் தொகை மற்றும் ஈ.எஸ்.ஐ-த் தொகைகளை வேலையிலிருந்து நின்று விட்ட எந்த ஊழியர்களுக்கும் இதுவரை வழங்கியதில்லை.அதிகபட்சமாக மூன்று ஆண்டுகளுக்கு மேல் எந்த ஊழியர்களையும் வேலை செய்யவும் விடுவதில்லை.

இந்தப் புரிந்துணர்வுக்குப் பிறந்த அதிகாரிகள்

பிரசவக்காரியங்களுக்கு அதிகக் கட்டணம் கிடைக்கிறது என்பதால் பிரசவக் கேசுகளாக ஏத்துங்கள் என மானங்கெட்டதனமாக ஊழியர்களை  நிர்ப்பந்திக்கிறார்கள்.

  • திருச்சி டோல் கேட் பகுதியில் 108 பைலட் ஒருவர் வேறு வாகனத்தால் மோதப்பட்டு உயிரிழந்தார். அவரின் குடும்பத்திற்கு ஜி.வி.கே ரெட்டி எந்த ஒரு உதவியையும் செய்யவில்லை. ஆனால், அவரது குடும்பத்திற்காக, பிற ஊழியர்கள் திரட்டிக் கொடுத்த தொகையான 3,25,000 ரூபாயைத் தானே கொடுத்ததாக ஜி.வி.கே ரெட்டி பத்திரிகைகளில் செய்தி கொடுத்தார். அவ்வளவு யோக்கியமான ரொட்டி அவர். சொந்த விமானத்தில் மாநிலம் மாநிலமாகப் பறக்கிற அவரது யோக்கியத்தனமும் அப்படித்தான் பறக்கிறது. சரி, ரெட்டியின் யோக்கியதையே இப்படி இருக்கும் போது, அவனைத் தாஜா செய்து வேலை பார்க்கின்ற அதிகாரிகள் மட்டும் யோக்கியனாக இருப்பானா என்ன?
  •  சமச்சீர்க் கல்வித் திட்டம் போன்ற கருணாதியின் சிறந்த பல திட்டங்களை ஜெயலலிதா காழ்ப்புணர்வோடு ரத்து செய்வதாக பல நடுத்தட்டுகள் தமிழகத்தில் அங்கலாய்த்துக் கொள்கின்றன. இதோ, ஜிவிகே ரெட்டியென்னும் கொள்ளையனுக்கு மக்கள் வரிப்பணத்தை அள்ளி ,அள்ளிக்கொடுக்கிறது கருணாநிதி போட்ட 108 புரிந்துணர்வு ஒப்பந்தம். அதை ரத்து செய்வாரா ஜெயலலிதா? மாட்டார். ஆனால் என்ன செய்திருக்கிறார் தெரியுமா? குழந்தைகளுக்கான 108 என்று அதை விரிவாக்கி இன்னும் கூடுதலாக இரண்டு வண்டிகள் வாங்கிக் கொடுத்திருக்கிறார். இதைத் தமிழ்நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யப் போவதாகவும் அறிவித்திருக்கிறார்.

இதுவரை 108-ன் பின்னால் மறைந்துகிடக்கிற ஊழியர்களின் துயரத்தையும், ஜிவிகே ரெட்டி நிறுவனம் அடிக்கிற கொள்ளையையும் பார்த்தோம்.

  • 108-ன் ஊழியர்களின் துயரங்களுக்கு ஜெயலலிதா முடிவுகட்டுவாரா? சென்ற ஆட்சியின் போது சாலைப் பணியாளர்களையும், அரசு ஊழியர்களையும் நடத்தியதைப் பார்க்கும் போது, அவர் எதை முடிவு கட்டுவார் என்பது யாருக்கும் தெரியாது. ஆக, 108-ன் பணியாளர்கள் தங்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?
  • உயிரைப் பயணம் வைத்து பாதிக்கப்பட்டவரைக் காப்பாற்ற வாகனம் ஓட்டும் பைலட்டுகளும், பாதுகாப்பு வசதியில்லாததால், பாதிக்கப்பட்டவர் மூலமாக, தனக்கு ஏதேனும் நோய் தொற்றுமோ எனக் கவலைப்படாமல் பணியாற்றுகின்ற ஈ.எம்.டிக்களும் ஆக, ஒட்டுமொத்தமாக 108-ன் பணியாளர்களும் எப்படி இந்த பிரச்சினையைப் பார்க்கவேண்டும்?
  • 108 ஊழியர்களின் பிரச்சினை அவர்களுக்கு மட்டுமே உரிய பிரச்சினை அல்ல. என்று இந்தியாவில் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற கொள்கை கொண்டுவரப்பட்டதோ, அன்றிலிருந்து  விவசாயிகள், தொழிலாளிகள், நெசவாளர்கள், சிறுவியாபாரிகள், மீனவர்கள், மாணவர்கள், என பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிற பல்வேறு மக்கள் பிரிவினரின் பிரச்சினையோடு இணைந்ததுதான், 108 ஊழியர்களின் பிரச்சினை. இதை 108 -ன் ஊழியர்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். எனவே 108-ன் ஊழியர்களாக இருந்து போராடுகிற அதே வேளையில், இதே காரணத்தினால், பாதிக்கப்பட்டுப் போராடிக் கொண்டிருக்கிற மக்களோடும் அவர்கள் இணைந்து போராட வேண்டும். அப்போது மட்டுமே நிரந்தரமாக இப்பிரச்சினைக்கு ஒரு முடிவு கட்டமுடியும். அதற்கு முதலில் சரியானதொரு சங்கத்தை அவசியம் நீங்கள் உண்டாக்கியாக வேண்டும்.
  • அந்தச்சங்கம் 108 ஊழியர்களின் துயரங்களை, கோரிக்கைகளை மக்களிடம் கொண்டு செல்லவேண்டிய அதே நேரத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக நடத்தப்படுகின்ற பிற போராட்டங்களிலும் பங்கேற்க வேண்டும்.

108-ன் ஊழியர்களாகிய உங்கள் மீது மக்கள்   கொண்டிருக்கும் நல்லெண்ணமும் மதிப்பும் நீங்கள் அவர்களுக்காகப் போராடும்போது உங்களது போராட்டங்களுக்கான ஆதரவாக அது வெளிப்படும்.

சங்கமாகுங்கள்!
மக்களிடம் செல்லுங்கள்!
மக்களுக்காக நில்லுங்கள்!

__________________________________________________________________

– கடற்கரைத்தோழன்.

___________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

ஆசிரியர் அடித்து மாணவன் கொலை! போராடிய தோழர்கள் கைது!

தி.மு.க பிரமுகர் – பினாமியான சாமிக்கண்ணு என்பவருக்கு சொந்தமான ஏழுமலை தொழில் நுட்பக் கல்லூரி விழுப்புரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. இக்கல்லூரியில் புதுச்சேரியைச் சேர்ந்த பிரபாகரன் வயது 19, ஆட்டோமொபைல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

இவரது வகுப்பாசிரியராக பணியாற்றும் குணசேகரன் தொட்டதுக்கெல்லாம் மாணவர்களை காட்டுமிராண்டித்தனமாக அடிப்பது வழக்கம். அப்படித்தான் 27.7.2011 அன்று கேள்வி கேட்டு பதில் சொல்லவில்லை என்று பிரபாகரனை பளார் என கன்னத்திலும், தலையிலும், கழுத்திலும், வயிற்றிலும் ஆத்திரம் தீர அடித்திருக்கிறார்.

அடிபட்ட வலி தாங்காமல் கண் இருட்டி விழுந்த மாணவனின் மூக்கிலிருந்து இரத்தம் வழிந்தது கண்டு சக மாணவர்கள் அதிர்ச்சியில் சத்தம் போடத் துவங்கினர். பதறிய நிர்வாகம் உடனே மாணவர் பிரபாகரனை சிகிச்சைக்கு கொண்டு செல்வதாக சமதானப்படுத்த முயன்றது. ஆனால் மாணவனைத் தூக்கும்போதே அவன் இறந்து விட்டான் என்பதைத் தெரிந்து கொண்ட மாணவர்கள் முழு கல்லூரியையும் அணிதிரட்டி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் செய்தனர்.

நிர்வாகமோ மாணவன் பிரபாகரன் வலிப்பு வந்து இறந்து விட்டதாகவும் பின்னர் அவன் சாகவில்லை என்று சொல்லியும் கதை கட்டி போராட்டத்தை முடிக்க நினைத்தது. இந்நிலையில் இப்பகுதியில் செயல்பட்டு வரும் பு.மா.இ.மு தோழர்கள் தலையீட்டின் பேரில் போராட்டம் மேலும் தீவிரமடைந்தது.

சுமார் 2 மணிநேரம் நடந்த சாலை மறியலால் போக்கு வரத்து முற்றிலும் முடங்கியது. போலீசும் போக்குவரத்தை மாற்றுப்பாதையில் திருப்பிவிட்டது. பின்னர் ஏராளமான போலீசாரைக் கொண்டு சாலையில் இருந்த மாணவர்களை தடியடி நடத்தி பலரை காயப்படுத்தி விரட்டினார்கள். போராட்டத்திற்கு தலைமை தாங்கிய பு.மா.இ.மு தோழர்கள் எட்டு பேரை பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்திருக்கிறது.

இந்த கைது வழக்கிற்கு அஞ்சாமல் பு.மா.இ.முவும் மாணவர்களும் நீதி கிடைக்கும் வரை போராடுவதாக உறுதி பூண்டிருக்கிறார்கள். இதற்கு முன்னோட்டமாக ஆசிரியர் குணசேகரன் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

_________________________________________________________

– புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, விழுப்புரம்

___________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

‘தேசபக்தி’யை கற்பழித்த ஜொள்ளு!!

45
ஹீனா ரப்பானி கார் - எஸ்.எம்.கிருஷ்ணா
எஸ்.எம்.கிருஷ்ணாவுடன் ஹீனா

விவர்மாவின் அந்தக்கால அல்ட்ரா மாடர்ன் பட்டுடை உடுத்திய காளிதேவி போன்ற ஷேப்பில் இருக்கும் பாரதமாதாவை பார்த்திருக்கிறீர்களா? இல்லையென்றால் ஆர்.எஸ்.எஸ் அம்பிகளின் வீடுகளுக்குச் சென்றால் தவறாமல் தரிசிக்கலாம். கோவில் சிலைகளில் அம்மணத்தை ஆடையாகக் கொண்டு ஆடிய பழங்குடியான காளி, பாரதமாதாவான கதை தனிக்கதை! ஆனால் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பாரதமாதாவை, பர்தா போட்டு வந்த ஒரு பாகிஸ்தான் தேவதை வென்றுவிட்டாள்! பாரத் மாதா கி நகி! பாக் அழகி கி ஜெய்!

34 வயதானா ஹீனா ரப்பானி கார் எனும் பாகிஸ்தானின் முதல் பெண் வெளியுறவு அமைச்சர், டெல்லி விமானப்படை தளத்தில் (சரி, இந்திய விமானப்படைத் தளத்தில் பாக் விமானம் இறங்கினால் எல்லா இரகசியங்களையும் செல்போனில் சுட்டுவிடுவார்களே என்று யாரும் ஏன் கேட்கவில்லை) இறங்கி வந்து ஒரு பேஷன் ஷோ மங்கை போல கைப்பையை தூக்கிக் கொண்டு நடந்து வந்தாரா…… அவ்வளவுதான் முழு இந்தியாவும் அதன் மனசாட்சியுமான இந்திய ஊடகங்களும் அவுட்! மூன்றாவது அம்பையர், டி.ஆர்.எஸ் இதிலெல்லாம் சோசோதித்தறிய தேவையில்லாத கிளீன் போல்டு! தேசபக்தியை வீழ்த்திக் காட்டிய அழகு!

தமிழ்ப் பதிவுலகம் நன்கறிந்த ஜொள்ளர்களெல்லாம் சினிமா நடிகைகளை ஜொள்ளுவதையெல்லாம் கிண்டலடித்து வந்த ”ஹை கிளாஸ்” அம்பிகளெல்லாம் ஹீனா ஜன்னி பிடித்து சமூக வலைத்தளங்களை பிராண்டுகிறார்கள். டிவிட்டரில் இரண்டு நாட்களாக ஹீனாதான் பேரரசியாக கோலேச்சுகிறார். கசாப்பை தூக்கில் போடு, அப்சல் குருவை சுட்டுப்போடு என்று டெம்பிளேட் தேசபக்தி முழக்கங்களை காப்பி அடித்துப் போடும் இந்திய டவிட்டர்கள் இன்று ஹீனாவை மாய்ந்து மாய்ந்து உருகுகிறார்கள். “இந்தியா – பாக் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் பேச்சுவார்த்தையில் எந்தப் பிரச்சினையையும் பேசித் தீர்க்க முடியாது, ஏனெனில் ஹீனா என்றொரு அழகான பிரச்சினை இருக்கும் போது வேறு எதைப்பற்றி பேசுவது?” இது ஒரு டிவிட். எனில் மற்ற ஜொள் (டிவிட்டு) களைப் பற்றி விளக்கத் தேவையில்லை.

  • “பாகிஸ்தான் தனது அழகான முகத்தை இறக்கியிருக்கிறது” – இது டைம்ஸ் ஆப் இந்தியா.
  • “மாடல் நடிகையைப் போன்ற அமைச்சரால் இந்தியாவே வேர்த்துக் கிடக்கிறது” – இது இந்தி நாளிதழான நவபாரத் டைம்ஸ்.
  • “அனைவரது விழிகளும் அந்த கவர்ச்சியான பாக் அமைச்சர் மேல், அழகும்-சிந்தனையும் கச்சிதமாக கலந்தவள்தான் அந்தப் பெண் என்பது மட்டும் நிச்சயம்” இது ரீடிப் இணையத்தளம்.
  • “காலநிலைக்கு பொருத்தமான நீலநிற உடையில் அந்த 34 வயது அமைச்சர் டெல்லி விமான நிலையத்தை அடைந்தபோதே, ஆடை அலங்காரப் பிரிவில் முழு மதிப்பெண்களையும் பெற்றுவிட்டார் என்றே சொல்ல வேண்டும்” – இது மெயில் டுடே.
  • புதன்கிழமை காலையில் டெல்லியில் பெய்த மழையைப் போன்று ஹீனாவுக்கான கவரேஜூம் இருந்தது என்று கூறுகிறார், பத்திரிகையாளரும் எழுத்தாளருமான சீமா கோஸ்வாமி.
  • “ரசிக்கத்தக்க உபகரணங்கள், ரோபெர்ட்டோ கவாலி சன்கிளாஸ், பெரிய எர்மெஸ் பிர்கின் பை, பாரம்பரிய முத்து மாலை – எல்லாம் சேர்ந்து அவளது கவர்ச்சிக்கு மெருகூட்டுகிறது” – இது ஒரு பத்திரிகை செய்தி.

என்னதான் கசாபின் மண்ணிலிருந்து வந்தவரென்றாலும் இந்த அழகு தேவதையை ஆராதிக்கவில்லை என்றால் யூத் உலகோடு இடைவெளி வந்துவிடும் என்பதாலோ என்னமோ பா.ஜ.க தலைவர் அத்வானியும் அழகான ஒரு பொக்கேயை கொடுத்து போட்டோ எடுத்துக் கொண்டார். இந்தியா – பாக் நாடுகளின் சண்டை வரலாற்றை கிண்டல் செய்யும் வண்ணம், ” இந்தியாவில் இறங்கிய பாக் குண்டு” என்று குறிப்பிட்டது, மும்பையின் மிரர் பத்திரிகை.

79 வயது வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, தனது விலையுயர்ந்த டிசைனர் கோட்டு சூட்டுடன் பெருமையாக உலா வந்தாலும், ஹீனாவுடன் சேர்ந்து புகைப்படம் எடுக்கப்பட்ட போதெல்லாம் அவரால் மற்றவர் கவனத்தை கவர்ந்திழுக்க முடியவில்லையாம்.

இப்படியாக ஹீனா ரப்பானி காரின் சௌந்தரிய புராண விளக்கத்தை இந்திய ஊடகங்கள் விதவிதமாக வருணித்து அதையும் தலைப்பு செய்தியாக வெளியிட்டிருக்கின்றன. பாக்கிற்கு எதிரான இந்திய வெத்துவேட்டு தேசபக்திக் கூச்சலை ஒரு இயக்கமாக பரப்புகின்ற டைம்ஸ் ஆப் இந்தியாதான் இந்த அலங்கார வருணணைகளை தொகுத்து அளித்திருக்கிறது! தேசபக்தி நாணயத்தின் மறுபக்கம் அள்ள அள்ளக் குறையாத ஜொள்ளு! இது நகை முரணல்ல, இயல்பான உள்ளத்தைக் காட்டும் கண்ணாடி!

இரு குழந்தைகளுக்குத் தாயான ஹீனா ஒரு உலக அழகி போல ரசிக்கப்படுவார் என்று தெரிந்துதான் பாக் அரசு அனுப்பியிருக்கிறதோ என்னமோ! பெனாசீர் பூட்டோ போல பாக்கின் பஞ்சாப் மாநிலத்தின் செல்வாக்கு மிக்க நிலவுடமை குடும்பத்தைச் சேர்ந்தவர் ஹீனா. இந்தியாவைப் போல பாக்கிலும் இத்தகைய பாரம்பரிய பணக்காரக் குடும்பங்களே அரசியலிலும், தொழிற்துறையிலும் கோலேச்சுகின்றன.

அந்த வகையில் ஹீனாவின் வருகை ஒன்றும் அதிசயமல்ல. ஆனால் அவர் அமைச்சராக்கப்பட்ட நேரம்தான் முக்கியமானது. பின்லேடன் மரண நாடகத்திற்குப் பிறகு பொதுவெளியில் அமெரிக்க – பாக் உறவு எள்ளும் கொள்ளும் வெடிப்பதான பாவனையில் இருக்கும்போது உலக மகா ஜொள்ளர்களான அமெரிக்கர்களை குஷப்படுத்துவதற்கும், அப்படியே உள்ளூர் ஜொள்ளர்களான இந்தியர்களின் பேச்சை மாற்றுவதற்கும் கூட ஹீனா பயன்படவேண்டுமென்று பாக் ஆளும் வர்க்கம் நினைத்திருக்கலாம்.

இருந்தாலும் ஒரு உண்மையை ஒத்துக் கொள்ளவேண்டும். பாக்கிலிருந்து யார் வந்தாலும் அது முஷராப்போ, ஜர்தாரியோ, நவாஸ் ஷெரிப் என்று யாராக இருந்தாலும் அவர்களது ஆளுமை, பேச்சு, வாதம் எல்லாம் இந்திய அம்பிகளை விட மேம்பட்டே இருக்கிறது. டைம்ஸ் நௌவின் அம்பி ஆர்னாப் கோஸ்வாமி உள்ளூர் அரசியல்வாதிகளையெல்லாம் டி.டி.எஸ் அலறில் கடித்துக் குதறுவார். அப்படிப்பட்ட அம்பியே பின்லேடன் மரணம் தொடர்பாக முஷராப்புடன் பேசும் போது அடிபட்ட பாம்பு போல அடங்கிக் கிடந்தார். எதிர்த்துக் கேட்க ஆளில்லாத மேடையில் மட்டும்தான் இந்திய திறமை பளிச்சிடும் என்பதை ஜனநாயகம் வளராத பாக்கின் தலைவர்கள் நிரூபித்திருக்கிறார்கள்.

சரி பாக், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்கள் அப்படி என்ன பேசி சாதிக்கப் போகிறார்கள்? வந்த செய்திகளைப் பார்க்கும் போது “இதுவரை பேச்சு வார்த்தை திருப்தி அளிக்கிறது, இனி தொடர்ந்து பேசுவதற்கு ஊக்கமூட்டுகிறது” இதுதான் அந்த சாதனையின் சிகரம். பேசுனோம், பேசிகிட்டு இருக்கோம், பேசுவோம் என்பதுதான் சாதனை என்றால் அர்த்தமில்லாமல் வளவளவென்று பேசும் எப்.எம் ரேடியோ ஜாக்கிகளையே அமைச்சராக்கலாமே?

தீவிரவாதத்தை எதிர்க்க இருநாடுகளும் இணைந்து பணிபுரிய பேசுவார்களாம். பணிபுரிவது இருக்கட்டும், மும்பை 26/11 தாக்குதலுக்காக பாக்கில் உள்ள குற்றவாளிகளை ஒப்படைக்க வேண்டுமென்று இந்தியா கேட்டால், சம்ஜூத்தா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பிற்கான இந்திய குற்றவாளிகளை பாக் கேட்கிறது. மும்பையில் கொல்லப்ப்பட்டது இந்தியக் குடிமகன்களென்றால், சம்ஜூத்தாவில் கொல்லப்பட்டது பாக் குடிமகன்கள். அடுத்து காஷமீர் பிரச்சினை குறித்து இந்தியா ஏதாவது வாயைத் திறந்தால் மாட்டிக் கொள்ளும். முழு காஷ்மீரத்து மக்களும் ஏகோபித்த நிலையில் இந்திய ஆக்கிரமிப்பை எதிர்க்கும் போது அங்கும் பாக்கின் கையே ஓங்கி நிற்கிறது. தற்போது காஷ்மீர் மக்கள் இயக்க பிரதிநிதிகளை ஹீனா சந்தித்ததை இந்திய அரசு கண்டித்திருப்பதாக செய்தி வந்திருக்கிறது. காஷ்மீர் மக்கள் பிரதிநிதிகளை பிரிவினைவாதிகள் என்று சொல்லும் இந்திய ஊடகங்கள் இதனாலொன்றும் ஹீனாவை அவ்வளவாக கண்டித்து விடவில்லை. மேலும் இந்தியா வந்து காஷ்மீர் போராட்டக்காரர்களை சந்திப்பதற்கு ஒரு தில் வேண்டுமே?

ஆக இறுதியில் என்னதான் பேசினார்கள்? இரண்டு காஷ்மீர்களிலிருந்தும் மக்கள் வணிக, பக்தி சுற்றுலாவிற்கு வந்து போகலாம், பஸ் விடலாம், வர்த்தகத்தை அதிகப்படுத்தலாம் என்பதைத்தான் பேசியிருக்கிறார்கள். இவையெல்லாம் நல்ல விடயங்கள்தான். ஆனால் மக்கள் வந்து போகும் இந்த விசயத்தைக் கூட செய்ய முடியாதபடி இந்திய தேசபக்தி வெறி அவ்வப்போது சாமியாடுகிறதே? அதைத் தீர்ப்பது எப்படி? பாக்கும் கூட காஷ்மீரின் தோழன் என்று தனது உள்நாட்டு பிரச்சினைகளை திசை திருப்புவதற்கு பயன்படுத்துகிறது, அதை யார் கேட்பது? மதச்சார்பற்ற முறையில் போராடிய காஷ்மீர் மக்களை மதம் சார்ந்து திணித்த பாவத்தை இருநாடுகளும் குறைவில்லாமல் செய்திருக்கின்றன.

ஒன்று மட்டும் உண்மை. இந்திய பாக் கவுரவப் பிரச்சினைகள் இருநாட்டு ஆளும் வர்க்கங்களுக்கும் கிடைத்திருக்கும் வரப்பிரசாதம். அதை வைத்து மக்களை திசைதிருப்புவதற்கு அவர்களுக்கு கிடைத்திருக்கும் அழியாத சாக்கு. அதனால்தான் நேற்று வரை பாக் காஷ்மீரில் குண்டு போட்டு அழிக்க வேண்டும் என்று சாமியாடிய இந்திய ஊடகங்கள் இன்று பாக்கிலிருந்து வந்திருக்கும் தேவதையை ஆராதிக்கின்றன. அந்த வகையில் இந்த பேச்சு வார்த்தையில் முழு வெற்றி அடைந்திருப்பது பாகிஸ்தான்தான்.

இந்திர பதவிக்கு ஆப்பு வைத்த மாமுனிவர்களின் தவத்தை கலைத்த ரம்பா, ஊர்வசி, மேனகை என உலகின் முதல் ஜெள்ளாயுத்தை தயாரித்த இந்த புண்ணிய பூமிக்கு இது  வெட்கக்கேடல்லவா? அவர்களில் ஒருவர் யாராவது வெளியுறவு அமைச்சராக இருந்தால் இந்தியாவும் பேச்சு வார்த்தையில் வெற்றி வாகை சூடலாமே? அப்படி ஒன்றும்  இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பணி என்பது கஷ்டமானதில்லையே? ஐ.நா சபையில் பக்கத்து சீட்டில் இருந்து வேறு ஒரு நாட்டு பிரதிநிதியின் உரையை எடுத்து படித்தவர்தானே நம்ம எஸ்.எம். கிருஷ்ணா? இந்த ஈயடிச்சான் காப்பி வேலையை பாலிவுட், கோலிவுட், டோலிவுட் முதலிய இந்திய வுட்களின் நடிகைகள் யாராவது செய்ய முடியாதா என்ன?

கமான் இந்தியா, கமான்… ஒரு அழகு தேவதையை தேர்ந்தெடு, உலக அழகி போட்டிகளிலெல்லாம் வென்று காட்டிய உன் நாட்டில் அழகிகளுக்கா பஞ்சம்? அழகியை அமைச்சராக்கு, பாக்கை வென்று காட்டு! ஜொள் ஹிந்த்!

____________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

போலீசின் பொய்க் கதையை வெளியிட்ட தினத்தந்தி அலுவலகம் முற்றுகை!

“மாணவ-மாணவிகளை வேனில் கடத்திச்சென்று சமச்சீர் கல்விக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் 9 பேர் கைது” என்று தினத்தந்தி நாளிதழ் விரிவாக ஒரு பொய்ச் செய்தியை வெளியிட்டிருந்தது. இதையே மற்ற ஊடகங்கள் சிறு செய்தியாக, குழந்தைகளின் புகைப்படங்களோடு வெளியிட்டிருந்தன.

கடந்த சில நாட்களாக மாநிலம் முழுவதும் பு.மா.இ.முவினர் மாணவர்களை திரட்டி பாசிச ஜெயா அரசாங்கத்தைக் கண்டித்தும், சமச்சீர் பாடப்புத்தகங்களை உடனே வழங்கக் கோரியும் போராடி வருகின்றனர். இதில் சில இடங்களில் பெற்றோர்களும் கூட கலந்து கொண்டிருக்கின்றனர். இப்படி மாணவர்களும், பெற்றோர்களும் கலந்து கொள்வதனாலேயே போலீசு எந்தப் போராட்டத்தையும் விரும்பியபடி தடை செய்ய முடியவில்லை. மாணவர்களை கைது செய்தால் தமிழகம் முழுவதும் போராட்டம் முன்னிலும் பெரிதாக வெடிக்கும் என்று அவர்களுக்கு தெரியும்.

ஆனாலும் இனி போராட்டங்கள் எங்கும் நடக்கக் கூடாது என்று பாசிச ஜெயா தனது ரவுடி போலீசுக்கு உத்திரவிட்டுள்ளார். அதன்படியே போலீசு உருவாக்கிய இந்த பொய்ச் செய்தியை தினத்தந்தி வெளியிட்டிருக்கின்றது. மேலும் திருச்சி பு.மா.இ.முவினரை கைது செய்வதற்கென்றே உள்ளூர் அ.தி.மு.க பிரமுகர்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஆய்வாளர் உதவியுடன் பொய் மனு அளித்திருக்கின்றனர். அதற்காகவே ஒரு பெண் தோழரை உள்ளிட்டு எட்டு பு.மா.இ.மு தோழர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். எப்படியும் இந்தப் போராட்டத்தை சிதைக்க வேண்டுமென்பது காவல்துறையின் நோக்கமென்பதால் இந்த பொய்ச்செய்தியை உருவாக்குவது ஒன்றும் அவர்களுக்கு புதிதல்ல.

இந்த கடைந்தெடுத்த பொய்யை பெரியதாக வெளியிட்டிருக்கும் தினத்தந்தி, பு.மா.இ.மு மாணவர்கள் சென்னை பள்ளிக் கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்ட செய்தியை ஒரு குறுந்துணுக்கு செய்தியாக வெளியிட்டிருக்கிறது. அம்மா புகழ் பாடும் பஜனை கூட்டத்தில் நான்தான் முன்னணி என்று காட்டுவது தினத்தந்தியின் நோக்கம்.

இந்தச் செய்தி வந்த உடனேயே பு.மா.இ.மு தோழர்கள் சென்னை தினத்தந்தி அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். தினத்தந்தி செய்தி ஆசிரியரை சந்தித்து தங்களது மறுப்பை வெளியிடுமாறும் கோரினர். தினத்தந்தி ஆசிரியர் அவ்வாறே நாளை வெளியிடுவதாக கூறியதும் தோழர்கள் ஆர்ப்பாட்டத்தை முடித்துக் கொண்டு திரும்பினர்.

இங்கே அனைத்து ஊடகங்களுக்கும் பு.மா.இ.மு சார்பில் அளிக்கப்பட்ட மறுப்பு செய்தியை வெளியிடுகிறோம்.

 

படங்களை பெரியதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்


அய்யா,

நேற்று காலை 26.07.2011 காலை 10 மணியளவில் சமச்சீர் பாடப்புத்தகங்களை உடனடியாக மாணவர்களுக்கு  வழங்கக்கோரி புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் பள்ளிக் கிளைகள் சார்பாக திருச்சி மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. ஆனால் அங்கு பெற்றோர்களுக்கு தெரியாமல் மாணவர்களை அழைத்து வந்து போராட்டத்தில் ஈடுபடுத்தினோம் என்ற முகாந்திரத்தில் எங்கள் அமைப்பின் மீது அவதூறு பரப்பும் நோக்கத்தில் மக்கள் மத்தியில் நேர்மையான அமைப்பு என்று அங்கீகரிக்கப்பட்டிருக்கும் எங்கள் மீது தவறான கருத்தை  உருவாக்கும் எண்ணத்தோடு திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலைய ஆய்வாளர் கண்ணதாசன் உண்மைக்கு புறம்பான செய்தி வெளியிடும்படி பத்திரிக்கைக்கு தவறான தகவல் கொடுத்துள்ளார்.

இது குறித்து பு.மா.இ.மு திருச்சி மாவட்ட நிர்வாகக்குழுவின் அவசரக்கூட்டம் நேற்று மாலை 4 மணியளாவில் கூட்டப்பட்டு இப்பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

இதில் திருச்சி பீம நகரில் உள்ள ஒரு பள்ளியிலும் வண்ணாரப்பேட்டையில் உள்ள பள்ளியிலும் பெற்றோர்களுக்கு அறிவிக்காமல் மாணவர்களை அழைத்து வந்து போராட்டத்தில் ஈடுபடுத்தியதால் அது ஏதோ திட்டமிட்ட கடத்தல் நடவடிக்கை எனவும், கதறி அழுத  மாணவர்களை  போலீசார் தனிப்படை அமைத்து விரைந்து மீட்டு சாகசம் புரிந்ததைப் போலவும், அப்பட்டமான ஒரு பொய்யை திருச்சி காந்திமார்க்கெட் காவல் நிலைய ஆய்வாளார் பரப்பி உள்ளார்.

போலீசின் இந்த அவதூறையே சில பத்திரிக்கைகள் வெளியிட்டு உள்ளது எங்களுக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. சமச்சீர் கல்விக்காக ஆர்ப்பாட்டம், அரங்கக்கூட்டம், கொடும்பாவி எரிப்பு, கைது, சிறையில் உண்ணாவிரதம், பள்ளிக்கல்லூரி மாணவர்களை திரட்டி போராட்டம் என்று தொடர் நடவடிக்கைகளில் நாங்கள் இந்த அரசின் தவறான செயல்பாடுகளுக்கு எதிராக சிறிதும் சமரசமின்றி போராடி வருகின்றோம் என்பதை பத்திரிக்கை  துறையினராகிய நீங்கள்  நன்கு அறிவீர்கள். எனவே எங்கள் மீது அவதூறு பரப்புவதன் மூலம் மக்கள் மத்தியிலிருந்து எங்களை தனிமைப்படுத்தும் நோக்கில்  போலீசு அளித்த பொய்ச்செய்தியை வெளியிடவேண்டாம் எனக்கோருகின்றோம்.

கல்லூரி படிக்கும் மாணவர்களே நிர்வாகத்திற்கும், பெற்றோருக்கும் பயந்துகொண்டு முகத்தில் துணியைக்கட்டிக்கொண்டு போராட்டம் நடத்தி வருவது நாம் அறிந்த ஒன்று. மாநிலம் தழுவிய அளாவில் சமச்சீர் கல்விக்காக பள்ளி-கல்லூரி மாணவர்கள் போராடிக்கொண்டு இருக்கும்  இந்த கொந்தளிப்பான சூழலில், ஒரு பள்ளியில் தன்னுடைய மாணவர் அமைப்பின் உறுப்பினர்களாக இருக்கும் மாணவர்களை பெற்றோர்களின் அனுமதிபெற்ற பின்னர்தான் ஒரு மாணவர் அமைப்பு போராட்டத்தில் ஈடுபடுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியல்ல என்று கருதுகிறோம். இச்சம்பவத்தில் தங்கள் குழந்தைகள் கடத்தப்பட்டதாக போலீசு கொடுத்த தவறான தகவல் காரணமாக அச்சமடைந்த பெற்றோர்கள் சம்பவ இடத்திற்கு வந்து உண்மை நிலையினை அறிந்து பின்னர் புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணியின் செயல்பாடு குறித்து போலீசு அவதூறாக பேசியது ஏன் என்று வினா எழுப்பியும், பு.மா.இ.மு-வினர் குழந்தைகளை கடத்திச்செல்லவில்லை என்று கூறியுள்ளனர். ஆனால் போலீசின் தூண்டுதலின் பேரில் இந்த அவதூறையே சில பத்திரிக்கைகள் செய்தியாக வெளியிட்டு உள்ளன.

பு.மா.இ.முவின் நியாயமான செயல்பாடுகள் குறித்து நாங்கள் பத்திரிக்கையாளார்கள் முன்பு விளக்கமளிக்கத் தயார் என்று பெற்றோர்களும் கூறியுள்ளனர். எனவேதான் போலீசில் எந்தப்புகாரையும் நாங்கள் அளிக்கவில்லை, பள்ளியின் தலைமை ஆசிரியரை மிரட்டி, காவல்துறையே இப்பொய் புகாரை பெற்றுள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். தலைமை ஆசிரியர் புகாரின் பேரில்தான் வழக்கு போட்டுள்ளனர். இதில் பெற்றோர்கள் யாரும் புகார் அளிக்கவில்லை என்பது உறுதி ஆகிறது. ஆக எங்கள் அமைப்பின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் வெளியிடப்பட்டிருக்கும் செய்திகள் குறித்து பத்திரிக்கையாளர்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் பத்திரிக்கையாளர் சந்திப்பை எங்கள் அமைப்பின் முன்நின்று நடத்த தயாராக உள்ளோம். அந்தசந்திப்பின் போது, சம்பந்தப்பட்ட இரு பள்ளிகளில் உள்ள எங்கள் பிரதிநிதிகளும், பெற்றோர்களும் கலந்து கொண்டு பதில் அளிக்க உள்ளனர்.

எங்கள் அமைப்பின் மீது அவதூறு பரப்பி பொய்வழக்கு போட்ட காந்திமார்க்கெட் காவல் துறையினர் மீது சட்டரீதியான நடவடிக்கை  எடுப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். மேலும் பொய் வழக்கில் கைது செய்யப்ப்ட்ட தோழர்களை விடுதலை செய்யக்கோரியும், போலீசின் இந்த அவதூறுக்கு எதிராகவும் மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். ஆகவே போலீசின் அவதூறுக்கு மறுப்பு செய்தியை வெளியிடுமாறு பு.மா.இ.மு வின் மாநில அமைப்புக்குழு சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி

இப்படிக்கு
த.கணேசன்
மாநில ஒருங்கிணைப்பாளர்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி

________________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

சமச்சீர் புத்தகங்களை வழங்கு! தமிழகமெங்கும் மாணவர்கள் போராட்டம் !

சமச்சீர்கல்விக்கான புத்தகங்களை வழங்கக் கோரியும், பாசிச ஜெயா அரசைக் கண்டித்தும் தமிழகமெங்கும் மாணவர்கள் போராடத்துவங்கியுள்ளனர். அவற்றின் சில பதிவுகள் இங்கே……….
படங்களை பெரியதாக பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்

______________________________________________________

விருத்தாசலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி

சமச்சீர் புத்தகங்களை வழங்கு! தமிழகமெங்கும் போராட்டங்கள்!!

விருத்தாசலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில் நூற்றுக்கணக்கிலான மாணவிகள் 26.7.2011 செவ்வாய்க்கிழமை அன்று போராட்டம் நடத்தினர். காலையில் இருந்தே பெற்றோர் சங்கம் மற்றும் மனித உரிமைப் பாதுகாப்பு மையத் தோழர்கள் பள்ளி முன் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனர். பின்னர் மதிய உணவு இடைவெளியின் போது மாணவிகள் தெருவுக்கு வந்து போராட்டம் நடத்தினர். விருத்தாசலத்தில் உள்ள எல்லா பள்ளிகளிலும் இப்படி போராட்டம் தொடர்வது காவல் துறைக்கு பெரும் சிக்கலை தோற்றுவித்துள்ளது. எல்லா பள்ளி தலைமை ஆசிரியர்களையும் கல்வித்துறை மிரட்டி வருகிறது. எனினும் இதையெல்லாம் மீறி தோழர்களின் முயற்சியால் போராட்டம் தொடர்கிறது.

______________________________________________________

விருத்தாசலம் டேனிஷ்மிஷன் மேல்நிலைப்பள்ளி

சமச்சீர் புத்தகங்களை வழங்கு! தமிழகமெங்கும் போராட்டங்கள்!! சமச்சீர் புத்தகங்களை வழங்கு! தமிழகமெங்கும் போராட்டங்கள்!! சமச்சீர் புத்தகங்களை வழங்கு! தமிழகமெங்கும் போராட்டங்கள்!!

25.07.2011 திங்கட்கிழமை, விருத்தாசலத்தில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியான டேனிஷ்மிஷின் பள்ளியின் மாணவ மாணவிகள் சமச்சீர் புத்தகங்களை வழங்கக் கோரி உற்சாகத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து ஸ்தம்பித்தது. மாணவர்களது கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்க தலைவர் வெங்கடேசன், செயலாளர் செந்தாமரைக்கந்தன், மற்றும் கதிர்வேல் ஆகியோர் காலை பள்ளி துவங்கும் முன் பிரசுரத்தை மாணவர்கள் முன்னிலையில் விநியோகித்தனர். 50க்கும் மெற்பட்ட மாணவர்கள் ஆதரவு தெரிவித்து வாயிலில் நின்றனர்.

தலைமை ஆசிரியர் மாணவர்களை மிரட்டி உளளே அழைத்து சென்று விட்டார். உடனே தலைமை ஆசிரியரிடம் சென்று நமது நிர்வாகிகள் மாணவர்களை தடுக்கக்கூடாது என்றும் புத்தகம் கேட்டு மாணவர்களை போராட வைப்பது பெற்றொர்களாகிய எங்களது கடமை என்றனர். ஆசிரியர்கள் மாணர்களின் நலன்களை காப்பதில் இருந்து தவறி விட்டனர் என்று வாதம் செய்தனர். உச்சநீதிமன்ற உத்தரவை அமுல் படுத்தாமல் அரசே தவறு செய்யும் போது பாதிக்கப்படும் மாணவர்கள் போராடுவதில் தவறுஇல்லை, என்று பேசி மதிய உணவு இடைவெளியில் வருவோம், நீங்கள் தடுக்கக்கூடாது என்றனர்.

அதேபோல மதியம் உணவு இடைவேளையில் மாணவர்ளை திரட்டி சாலை மறியல் நடத்தப்பட்டது. ஏற்கனவே அரசு பள்ளி மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் புகைப்படத்தை பிரசுரமாக அடித்து விநியோகிக்கப்பட்டது. அது மாணவர்களை மேலும் உணர்வூட்டியது. டி.எஸ்.பி, ஆர்.டி.ஓ., தாசில்தார், ஆய்வாளர், என அரசு இயந்திரம் அனைத்தும் சுற்றி வளைத்தது. ஆனால் உள்ளே வந்து மாணவர்களிடமும், பெற்றோர் சங்கத்தினரிடமும் கெஞ்சியது. மாணவர்கள் கலைந்து போகுமாறு நேரடியாக மிரட்டிப் பார்த்தனர். புத்தகம் கொடு, போகிறோம் என முகத்தில் அடித்தாற் போல் பதிலளித்தனர் மாணவர்கள். அதிகாரிகளின் கெஞ்சல் மேலும் கீழிறங்கியது. மாணவர்களின் முழக்கம் அந்த பகுதியையே  அலறடித்தது. இதனால் பொதுமக்கள் பெருந்திரளாக கூட தொடங்கினர். ஆசிரியர்கள் சோகமாக காட்சியளித்தனர். பிறகு அரசு அதிகாரிகள் மாணவர்களிடம் புத்தகம் வழங்க விரைந்து ஏற்பாடு செய்கிறோம் என்று உறுதி அளித்ததின் பேரில் மாணவர்கள் கலைந்து சென்றனர்.

அது கூட தோழர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்கத்தான் மாணவர்கள் வகுப்பறைக்குத் திரும்பினர். பெற்றோர் சங்கத்தின் சார்பில் மாணவர்களுடன் முழக்கமிட்டு கொண்டு சென்று அந்தந்த வகுப்பறையில் அமரவைக்கப்பட்டது. தலைமை ஆசிரியரிடம் சென்று மாணவர்கள் போராடியதற்காக பாகுபாடு காட்டவோ தண்டிக்கவோ கூடாது என தோழர்கள் வலியுறுத்தினார்கள். மாணவர்களோ அரசு புத்தகம் வழங்கவில்லையென்றால் மீண்டும் போராட்டம் செய்வோம் என்று உணர்ச்சி பொங்க கூறினார்கள்.

______________________________________________________

தருமபுரியில் மாணவர்கள் ஆர்பாட்டம்

சமச்சீர் புத்தகங்களை வழங்கு! தமிழகமெங்கும் போராட்டங்கள்!! சமச்சீர் புத்தகங்களை வழங்கு! தமிழகமெங்கும் போராட்டங்கள்!!

சமச்சீர் பாடப்புத்தகங்களை உடனே வழங்க கோரி தரும்புரி மாவட்டத்தில் இயங்கும் மனித உரிமைப் பாதுகாப்ப்பு மையம், விவசாயிகள் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புகள் இணைந்து பென்னாகரம் பேருந்து நிலையத்தில் 26.07.2011 காலை பெற்றோர், மாணவர்களை அணிதிரட்டி ஆர்ப்பாட்டம் செய்த்தனர். இந்த ஆர்பாட்டத்திற்கு மனித உரிமைப் பாதுகாப்பு மைத்தின் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஆர்.ஜானகிராமன் தலைமைதாங்கினார். விவசாயிகள் விடுதலை முன்னணியின் பென்னாகரம் செயலாளர் கோபிநாத் கண்டன உரையாற்றினார். பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட இந்த ஆர்பாட்டம் மக்களிடையே குறிப்பாக கல்லூரி மாணவர்களிடத்தில் மிகுந்த வரவேற்பை பெற்றது.

______________________________________________________

விழுப்புரம் அரசு கல்லூரி, அரசு நடுநிலைப்பள்ளி

26.07.11 செவ்வாய்க்கிழமை  உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சமச்சீர் பாட புத்தகங்களை உடனே  வழங்கக்கோரி  விழுப்புரம்- சோழகனூர் கிராம  நடுநிலைப்பள்ளியை மாணவர்கள் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சமச்சீர் புத்தகங்களை வழங்கு! தமிழகமெங்கும் போராட்டங்கள்!!சமச்சீர் புத்தகங்களை வழங்கு! தமிழகமெங்கும் போராட்டங்கள்!!சமச்சீர் புத்தகங்களை வழங்கு! தமிழகமெங்கும் போராட்டங்கள்!!சமச்சீர் புத்தகங்களை வழங்கு! தமிழகமெங்கும் போராட்டங்கள்!!
அதேபோல் விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசினர் கலைக்கல்லூரி    மாணவர்கள் சமச்சீர் பாட புத்தகங்களை உடனே  வழங்கக்கோரி வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.இரண்டு  போராட்டங்களையும் புரட்சிகர மாணவர்-இளைஞர்  முன்னணி விழுப்புரம் கிளை தோழர்கள் நடத்தினார்கள்.

___________________________________________________________

விருத்தாசலம் மங்களம்பேட் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

சமச்சீர் புத்தகங்களை வழங்கு! தமிழகமெங்கும் போராட்டங்கள்!!

இந்தப்பள்ளியிலும் 26.7.2011 செவ்வாய்க்கிழமை அன்று மதிய உணவு இடைவெளியில் பெருந்திரளான மாணவர்கள் கலந்து கொண்ட போராட்டம் நடைபெற்றது. சமச்சீர் புத்தகங்கள் வழங்கப்படவில்லை என்றால் போராட்டம் தொடர்ந்து செய்வோம் என்று மாணவர்கள் உறுதி ஏற்றனர்.

____________________________________________________________________

திருச்சியில் பள்ளி கல்வித்துறை அலுவலகம் – பு.மா.இ.மு முற்றுகை!

சமச்சீர் புத்தகங்களை வழங்கு! தமிழகமெங்கும் போராட்டங்கள்!!

திருச்சியில் இருக்கும் பள்ளி கல்வித்துறை அலுவலகத்தை பு.மா.இ.மு தோழர்கள் தலைமையில் மாணவர்கள் முற்றுகை இட்டு போராட்டம் நடத்தினர். இதில் திரளான பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கு கொண்டனர். முற்றுகையின் போது அலுவலகம் முற்றிலும் செயல்படாமல் முடங்கிக் கிடந்தது. மாணவர்கள் எழுப்பிய முழக்கங்கள் அந்த வட்டாரத்தையே கலங்கச் செய்தன.

____________________________________________________________________________________

சென்னை பள்ளிக்கல்வித்துறை DPI அலுவலகத்தை பு.மா.இ.மு முற்றுகை

சமச்சீர் புத்தகங்களை வழங்கு! தமிழகமெங்கும் போராட்டங்கள்!! சமச்சீர் புத்தகங்களை வழங்கு! தமிழகமெங்கும் போராட்டங்கள்!! சமச்சீர் புத்தகங்களை வழங்கு! தமிழகமெங்கும் போராட்டங்கள்!! சமச்சீர் புத்தகங்களை வழங்கு! தமிழகமெங்கும் போராட்டங்கள்!! சமச்சீர் புத்தகங்களை வழங்கு! தமிழகமெங்கும் போராட்டங்கள்!!

சமச்சீர்கல்விக்கான பாடப்புத்தகங்களை வழங்கக்கோரியும், உச்சநீதிமன்றத்தில் சமச்சீர் கல்விக்கு தடையேற்படுத்த முயலும் பாசிச ஜெயா அரசை கண்டித்தும் சென்னையில் உள்ள DPI வளாகத்தை பு.மா.இ.மு மாணவர்கள் 26.7.2011 செவ்வாய்க்கிழமை முற்றுகை இட்டனர். இதில் குரோம்பேட்டை மற்றும் மதுரவாயம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் அரை டவுசர் போட்ட மாணவர் சிங்கங்களும் உண்டு. நெடுநேரம் தமது முழக்கத்தால் அந்த இடத்தையே போராட்டக்களமாக்கிய மாணவர்கள் காவல்துறை கைது செய்து பின்னர் மாலையில் விடுதலை செய்தது.

—————

கோவையில் வழக்கறிஞர்கள் போராட்டம்

சமச்சீர் புத்தகங்களை வழங்கு! தமிழகமெங்கும் போராட்டங்கள்!!

கோவையில் மனித உரிமைப்பாதுகாப்பு மையம் HRPC    சார்பாக சமச்சீர் கல்வி தொடர்பாகத் தொடர்ந்து பல போராட்டங்களை நடத்தி வருகிறது. அதன் அடிப்படையில்   மாணவர்களுக்கு உடனடியாக சமச்சீர் பாடபுத்தகங்களை வழங்க வேண்டியும் இணையத்தளத்தில் சமச்சீர் கல்வி பாடம் மீண்டும் பதிவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும்  மனித உரிமை பாதுகாப்பு மையம் 25/07/11 திங்கள்கிழமை  காலை 11மணி செஞ்சிலுவை சங்கம் முன்பாக கண்டன ஆர்பாட்டம் நடத்தியது.  இந்த போராட்டத்தில் மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டத்திற்கு வர வேண்டும் என்ற முழக்கம் இடப்பட்டது. ஆர்பாட்டத்தில் திரளான பேர் கலந்து கொண்டனர்.    HRPC  தொடர்ந்து  மாணவர்களையும் பெற்றோர்களையும் போராட்டத்திற்கு அணிதிரட்டி வருகின்றது.

______________________________________________________

மதுரையில் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் ஆர்பாட்டம்

________________________________________________________

ஜூலை 26 அன்று உச்ச நீதிமன்றத்தில் இவ்வழக்கின் இறுதி விசாரணை (Final hearing) தொடங்குகிறது.  இந்தப் போராட்டத்தைப் பொருத்தவரை இது இறுதிச் சுற்று. எதிரியின் பணபலத்தையும் அதிகார பலத்தையும், நியாயம் தானாகவே வென்றுவிடாது. நமது தரப்பிலும் மூத்த வழக்குரைஞர்களை அமர்த்த வேண்டும்.  இந்த வழக்கில் சமச்சீர் கல்வி பொதுப் பாடத்திட்டத்துக்கு ஆதரவாக வாதாடுவதற்கும், போராடுவதற்கும் உங்களிடம் வழக்கு நிதி கோருகிறோம்.

வழக்கு நிதி தாரீர்

இணையம் மூலம் பாதுகாப்பாக நன்கொடை அளிக்கும் வகையில் பேபால் (PAYPAL) வசதியை ஏற்படுத்தியிருக்கிறோம் “DONATE” பட்டனை அழுத்தி நீங்கள் விரும்பும் தொகையை அளிக்கலாம். BANK TRANSFER மூலம் வங்கி கணக்கில் செலுத்த விருப்புவோருக்கான விவரம்

Name: KANNAIAN RAMADOSS
Bank Name: ICICI BANK LTD
Account Number: 612801107389
IFSC Code: ICIC0006128
Branch Location: TANJORE IFSC-ICIC0006128
MICR Code: NONMICRLO
Account Type: Savings

நன்கொடை அளிப்பவர்கள் அனைவருக்கும் இரசீதுகள் அனுப்பி வைக்கப்படும்.

________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் பள்ளி முதலாளிக்கு எதிரான போராட்டம் !

சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர்கள் கடந்த 1 வருடமாக கூடுதல் கட்டணத்திற்கு எதிராக போராடி வருகிறார்கள். இந்தப் பள்ளிக்கு நீதியரசர் கோவிந்தராஜன் கமிட்டி கட்டணம் 4500 என்றால் கூடுதலாக 12000 கொடுத்தால் தான் வாங்குவேன் என பள்ளி தாளார் லட்சுமிகாந்தன் கூறுகிறார்.

அரசு கட்டணத்தை வாங்க மறுத்து விட்டு கட்டணம் கட்டாத மாணவர்கள் என்று வருகை பதிவேட்டில் கூப்பிடாமல் அவர்களை தனியே அமர வைக்கிறார் இந்த பள்ளி முதலாளி. முன்நின்று போராடும் பெற்றோர்களுக்கு கட்டாய டிசியை பதிவு தபாலில் அனுப்புகிறார். ஆசைவார்தை காட்டி பிறகு பெற்றோர்களை  மிரட்டவும் செய்கிறார். இந்த லட்சுமி காந்தன் தனியார் மெட்ரிக் பள்ளி முதலாளிகள் சங்கத்தின் கடலூர் மாவட்ட தலைவர், முன்னால் மேலவை உறுப்பினர், அண்ணாமலை செட்டியாரின் நேர்முக உதவியாளர் இராஜேந்திரனின் நெருங்கிய உறவினராவார்.

இந்நிலையில் 50க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் அரசு கட்டணத்தை தவிர கூடுதலாக தரமாட்டேன் என்று உறுதியாக போராடுகிறார்கள், 12-ம் வகுப்பு முடித்த 2 இஸ்லாமிய மாணவர்களுக்கு 24500 ரூபாய் கொடுத்தால்தான் மதிப்பெண் பட்டியல், டி,சி கொடுப்பேன் என்று மிரட்டினார், நமது சங்கம் தலையிட்டு காவல்துறையிடம் அச்சுறுத்தி பணம் பறிக்கிறார் என்று புகார் கொடுத்து அரசு கட்டணம் ரூபாய் 11000 மட்டும் செலுத்து பெற்றுக் கொடுத்தது. மேலும் சங்கத்தினுடைய சிதம்பரம் நகர பொருளார் நடராஜன் மகன் நான்காம் வகுப்பு படிக்கும் டேவிட்ராஜா என்பவருக்கு பள்ளி திறந்த 2வது நாளே சக மாணவனை கிள்ளி விட்டான் என்று ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதாக கூறி டிசி கிழித்து  பதிவு தபாலில் அனுப்பி வைத்தது பள்ளியின் நிர்வாகம். நமது புகாரின் பேரில் 20.6.2011 மெட்ரிக்பள்ளியின் ஆய்வாளர் அருள்மொழிதேவி பள்ளி முதல்வரிடமும் தாளாளர் லட்சுமி காந்தனிடமும் விசாரணை நடத்தினார். சிதம்பரம் நகர போலீசும் பஞ்சாயத்து பேசியது.

50க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். பெற்றோரான நடராசன் என்பவர் நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பதாக மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்தால் சேர்த்து கொள்கிறோம் என்று கூறினார். நமது சங்கம் தரப்பில் தவறு செய்தது பள்ளி நிர்வாகம், மாணவனை திரும்ப சேர்த்து கொள்ள வேண்டும், மன்னிப்பு கடிதம் கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை என்று உறுதியாக நின்றோம். கூடுதல் கட்டணம் தொடர்பாக பள்ளி ஆய்வாளர் கேள்விகளுக்கு பள்ளி தாளாளர்,” ஆடிட்டரை கேட்டு சொல்லுகிறேன், லாயரை கேட்டு சொல்லுகிறேன்” என்று திமிராக பேசி அதிகாரியை எரிச்சலூட்டி அனுப்பி விட்டார்.

இது தொடர்பாக ஆட்சியரிடம் சென்று நமது சங்கம் புகார் கொடுக்கப்பட்டு முதன்மை கல்வி அலுவலர் அமுதவள்ளியும் ஆய்வாளர் அருள்மொழிதேவியும் சேர்ந்து விசாரிக்க உத்தரவிட்டார். 24,6,2011 அன்று நடந்த விசாரணையின் போது கடந்த ஆண்டு காமராஜ் மெட்ரிக் பள்ளி பலமடங்கு கூடுதலாக வசூலித்ததை ஆதாரங்களுடன் பெற்றோர்கள் சார்பில் புகார் மனுவுடன் கொடுக்கப்பட்டது. இந்த ஆண்டு பல மடங்கு ரசீது இல்லாமல் வசூலிப்பதும் ஆதாரத்துடன் கொடுக்கப்பட்டது. விசாரணையில் பள்ளி முதல்வர்கள் அப்பட்டமாக பொய் சொல்லுவதும் பணிபுரியும் ஆசிரியர்களிடம் உங்கள் சம்பளம் எவ்வளவு, எத்தனை வருடமாக பணிபுரிகிறீர்கள் என்று கேட்டால் தெரியாது என்று சொல்லுகிறார்கள். இதே போல் காமராஜ் சிறப்பு பள்ளியில் அரசு கட்டணத்தை விட 20000 அதிகம், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்குஅனுமதி இல்லாமல் நடத்துகிறீர்கள் என்று அந்த பள்ளி முதல்வரை கேட்டதற்கு இங்கு நடத்தவில்லை என்றதோடு வகுப்பறையில் உள்ள மாணவர்களை காலை 10,30 மணிக்கு பேஸ்கட் பால் விளையாடுவதற்கு அனுப்பிவிட்டார். இவர்களெல்லாம் வேறு பள்ளியில் இருந்து இங்கு விளையாட வந்திருக்கிறார்கள் என்று பொய் சொன்னார். மாணவர்களையும்  அவ்வாறே பொய் சொல்ல பயிற்றுவித்திருக்கிறார்கள்.

ஆனால் முதன்மை கல்வி அதிகாரி மாத தேர்வு தாள்களையும் வருகை பதிவேடுகளையும் ஆசிரியர்களின் பதிவேடுகளையும் ஆட்சேபணையை புறம் தள்ளி கைப்பற்றினார்.

அதேபோல் தாளாளரிடம் விசாரித்தபோது கட்டணம் கூடுதலாக வசூலிக்க எனக்கு உரிமை உண்டு, கல்வி கட்டணத்தை தவிர கூடுதலாக ஸ்மார்ட் கிளாலஸ் என்று பல்வேறு தலைப்புகளில் வாங்கலாம் என்று ரவிராஜ் பாண்டியன் குறிப்பிட்டுள்ளார், இதுதொடர்பாக மேலும் விபரங்களை ஆடிட்டரையும், லாயரையும் கன்சல்ட் பண்ணித்தான் சொல்லமுடியும் என்று சொல்லிவிட்டார். மேலும் காமராஜ் சிறப்பு பள்ளியில் அங்கீகாரம் இல்லாமல் மேல்நிலை வகுப்பு நடத்துவது குறித்தும், ஒரே இடத்தில் பள்ளியையும், ஆசிரியர் பயிற்சி நடத்துவது தவறு  என்றும் அதிகாரிகளுடைய கேள்விகளுக்கு நான் உரிய விளக்கம் அனுப்புகிறேன் என்று அதிகாரிகளை எரிச்சலூட்டி விசாரணையை பாதியிலேயே முடிக்க வைத்தார்.  விசாரணைக்கு வந்திருந்த 100க்கும் மேற்பட்ட பெற்றொர்கள், மாணவர்கள்ர மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர்க சங்கத்தின் நிர்வாகிகள், மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் காலவரையற்ற உள்ளிருப்பு போராட்டதை தெடங்கினர்.

அரசு உத்திரவை மாவட்ட நிர்வாகமும் அமுல் படுத்த எதிர்ப்பு தெரிவிக்கும் தாளாளர் லட்சுகாந்தன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கையுடன் அமர்ந்தனர். காவல் துறை மிரட்டிப்பார்த்தது. அரசு உத்தரவை அமுல்படுத்தவே இப்போராட்டம், அமுல்படுத்த மறுக்கும் லட்சுமி காந்தன் மீது நடவடிக்கை எடுங்கள் பார்ப்போம் என்றதும் போலீசு அதிகாரிகள் வாச்சுமேன்னாக விலகி நின்றார்கள். மாலைமதிய உணவின்றி தொடர்ந்த இப்போராட்டம் மாலை 6 மணிக்கு சிதம்பரம் கோட்டாச்சியர் கல்விதுறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் ஒன்றாக வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இங்கு வந்து பேசினால் அவர் பணிய மறுக்கிறார், அதிகாரிகள் அலுவலகத்திற்கு வரவழைத்து பேசுவோம் உங்கள் தரப்பில் இருந்து 5 பிரதிநிதிகள் வாருங்கள். கட்டணம் தொடர்பாக சுமுக முடிவு எட்டப்படாவிட்டால் பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கிறோம் என்று உறுதி அளித்தன் பேரில் பெற்றோர்கள் ஏற்றுக்கொண்டு  உரிய நடவடிக்கை இல்லையென்றால் அடுத்தநாள் முதல் போராட்டம் தொடரும் என பெற்றோர்கள்அறிவித்தனர்.  இதற்கும் உள்ளூர் பத்திரிக்கையாளர்கள் வராமல் கடலூரில் இருந்து ஒருசிலர் மட்டுமே வந்து நாளிதழ்களில் வெளியிட்டனர். இந்த விசாரணை, போராட்டத்திற்கு முன்பாக பெற்றோர்களின் அச்சத்தை போக்க அரசு உத்தரவை மயிரளவும் மதிக்காத காமராஜ் பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய், பெற்றோர்கள், மாணவர்களை கூடுதல் கட்டணத்திற்காக துன்புறுத்தும் தாளார் லட்சுமி காந்தனை குண்டர் சட்டத்தில் கைது செய் என மாவட்டம் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டது.

மேலும் சமீபத்தில் நடந்த தனியார் மெட்ரிக் பள்ளி முதலாளிகள், அவர்கள் கட்டணம் தொடர்பாக பேசுவதற்கு சிறப்பு கல்வி மாநாடு என்ற பெயரில் தங்கள் பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியர்களை வைத்து கூட்டம் நடத்தினார்கள். இந்த மாநாட்டிற்கு எதிராக நமது சங்கத்தின் சார்பில்  பெற்றோர்களின் தாலி அறுத்து கட்டண கொள்ளை அடிக்கும் கல்வி வியாபாரிகளுக்கு கல்வி மாநாடு தேவையா என சிதம்பரம் நகரம் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டது. சிதம்பரத்தில் பெற்றோர்கள் அனைவரும் உற்சாகம் அடைந்து நூற்றுக்கும் மேற்ப்ட்ட பெண்களும் ஆண்களும் வீதியில் இறங்கு போர்க்குணமாக நமது தலைமையில் போராடி வருகிறார்கள். இந்த வெற்றியின் முலம் தமிழக மெட்ரிக் பள்ளி முதலாளிகளுக்கும் கள்ளம் மெளனம் காக்கும் அரசுக்கும் ஒரு பாடமாக அமையும் என கருதுகிறோம்.

_____________________________________________________________

தகவல்: மாணவர்களின் கல்வி உரிமைக்கான சங்கம்,
மனித உரிமைப் பாதுகாப்பு மையம், சிதம்பரம்.

______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

சமச்சீர் புத்தகங்களை வழங்கு! பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்!!

நாளை செவ்வாய்கிக்கிழமை பாசிச ஜெயாவின் தமிழக அரசாங்கம் தொடுத்துள்ள சமச்சீர்கல்வியை முடக்கும் வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இதற்காக நாடறிந்த பிரபலமான வழக்கறிஞர்களை அமர்த்தி கோடிக்கணக்கான ரூபாய் செலவழித்து தமிழக அரசு வழக்காடுகிறது. இத்துடன் தனியார் பள்ளி முதலாளிகளும் பல்வேறு பிரபல வழக்கறிஞர்களை சேர்த்துக் கொண்டு வாதாடுகின்றனர்.

கடந்த இருமாதங்களாக நீதிமன்றத்திலும், மக்கள் அரங்கிலும் எமது அமைப்புகள் சமச்சீர்கல்வியை அமல்படுத்துமாறு போராடி வருகின்றன. அதன் அங்கமாக இன்று முதல் தமிழகமெங்கும் பல்வேறு கல்லூரி, பள்ளி மாணவர்கள் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் தலைமையில் சமச்சீர் பாடப்புத்தகங்களை உடனே வழங்குமாறு வேலை நிறுத்தமும், போராட்டமும் செய்து வருகின்றனர்.

இரு மாதங்களாக பள்ளி மாணவர்களின் படிப்பு பாழாகி வருவதையும், அதற்கு காரணமாக பாசிச ஜெயாவை அம்பலப்படுத்தியும், உடனே புத்தகங்களை வழங்குமாறும் மாணவர்களிடையே பு.மா.இ.மு பிரச்சாரம் செய்து வருகிறது. இந்தக் கோரிக்கையின் நியாயத்தை புரிந்து கொண்டு பல்வேறு பள்ளி, கல்லூரிகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இன்று திங்கட்கிழமை 25.07.2011 காலை  10.30 மணிக்கு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. கல்லூரியில் திரண்ட மாணவர்களின் முன் இந்தப் போராட்டத்தின் அவசியத்தை வலியுறுத்தி பு.மா.இ.மு தோழர்கள் விளக்கிப் பேசினர். இதையறிந்த பல்வேறு பேராசிரியர்கள் மனமுவந்து மாணவர்களை போராட்டத்திற்கு அனுப்பி வைத்தனர். வாழ்த்தும் தெரிவித்தனர்.

பின்னர் நூற்றுக்கணக்கில் மாணவர்கள் கல்லூரியின் முன் உள்ள பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அணிதிரண்டு மறியல் செய்தனர். கிட்டத்தட்ட அரைமணிநேரம் சாலை முடக்கப்பட்டது. சில மாணவர்கள் நிறுத்தப்பட்ட வாகனங்கள், பேருந்துகளில் ஏறி இந்தப் போராட்டத்தின் அவசியத்தை விளக்கினர். அதன் பின்னர் பொதுமக்களும் இந்தப் போராட்டத்தை ஆதரித்தது இங்கே குறிப்பிடத்தக்கது.

பின்னர் போலீசு வந்து செய்வதறியாது திகைத்து நின்றது. பிறகு மறியலை முடித்துக் கொண்டு கல்லூரி வளாகத்தின் முன்னர் வெகுநேரம் முழக்கமிட்டவாறு மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். இங்கே அதன் வீடியோவை இணைத்திருக்கிறோம். பள்ளி மாணவருக்கான நியாயத்தை உணர்ந்து கல்லூரி மாணவர்கள் இப்படி போராடத் துணிந்திருப்பது மிகவும் மகிழ்ச்சிக்குரியது. இந்தத்தீ தமிழகமெங்கும் பரவட்டும். பாசிச ஜெயாவின் ஆணவம் ஒழியட்டும். தனியார் பள்ளி முதலாளிகளின் கொட்டம் அழியட்டும்.

ஜூலை 26 அன்று உச்ச நீதிமன்றத்தில் இவ்வழக்கின் இறுதி விசாரணை (Final hearing) தொடங்குகிறது.  இந்தப் போராட்டத்தைப் பொருத்தவரை இது இறுதிச் சுற்று. எதிரியின் பணபலத்தையும் அதிகார பலத்தையும், நியாயம் தானாகவே வென்றுவிடாது. நமது தரப்பிலும் மூத்த வழக்குரைஞர்களை அமர்த்த வேண்டும்.  இந்த வழக்கில் சமச்சீர் கல்வி பொதுப் பாடத்திட்டத்துக்கு ஆதரவாக வாதாடுவதற்கும், போராடுவதற்கும் உங்களிடம் வழக்கு நிதி கோருகிறோம்.

வழக்கு நிதி தாரீர்
[paypal-donation purpose=”Donation for Samacheer Kalvi Campaign”]

இணையம் மூலம் பாதுகாப்பாக நன்கொடை அளிக்கும் வகையில் பேபால் (PAYPAL) வசதியை ஏற்படுத்தியிருக்கிறோம் “DONATE” பட்டனை அழுத்தி நீங்கள் விரும்பும் தொகையை அளிக்கலாம். BANK TRANSFER மூலம் வங்கி கணக்கில் செலுத்த விருப்புவோருக்கான விவரம்

Name: KANNAIAN RAMADOSS
Bank Name: ICICI BANK LTD
Account Number: 612801107389
IFSC Code: ICIC0006128
Branch Location: TANJORE IFSC-ICIC0006128
MICR Code: NONMICRLO
Account Type: Savings

நன்கொடை அளிப்பவர்கள் அனைவருக்கும் இரசீதுகள் அனுப்பி வைக்கப்படும்.

_______________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

ஆண்டவனின் வறுமையா? ஆலயக் கொள்ளைக்கு உரிமையா?

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 7

மசூதிசர்ச் போன்றவற்றின் சொத்துக்கள் கிறித்தவ, முசுலீம் மதத்தினர் வசமே உள்ளது. ஆனால், இந்துக் கோவில்களின் சொத்துக்களை மட்டும் அரசு வைத்திருக்கிறது. கோவிலுக்காக பக்தர்கள் செலுத்தும் வருவாயை அரசின் அனைத்துத் திட்டங்களுக்கும் செலவழிக்கிறார்கள். வெளிநாட்டுப் பணத்தின் உதவியால் மசூதிகளும், சர்ச்சுகளும் புதிது புதிதாகத் தோன்றும்போது, இந்துக்களின் கோவில்கள் மட்டும் பூசைக்குக்கூட வழியில்லாமல் தவிக்கின்றன. எனவே கோவில் சொத்துக்களை மீண்டும் இந்துக்களிடமே ஒப்படைக்க வேண்டும். இந்துக் கோவில்கள், மடங்கள், ஆசிரமங்கள் அனைத்திற்கும் வருமான வரி விலக்கு அளிக்கப்பட வேண்டும்.

இந்து முன்னணியின் மேடைகளில் இராம.கோபாலன் தவறாமல் முன்வைக்கும் ஒரு முழக்கம்.

ஈரேழு பதினாலு உலகங்களைப் படைத்த கடவுளுக்கு, மனிதன் விளைநிலங்களைப் பட்டா போட்டுத் தருவதும், அதை வைத்து கடவுள் கஞ்சி குடிப்பதும் எத்தகைய வேடிக்கை! பக்தர்கள் சிந்திக்கட்டும். அப்படி கடவுளர்களுக்கு எழுதி வைக்கப்பட்ட சொத்தில் மதப் பாகுபாடு இருப்பது பற்றித்தான் இந்து முன்னணி முறையிடுகிறது.

சொத்துக்ளுக்கு மதங்களில்லை

மதங்களுக்குரிய சொத்துக்களை அந்தந்த மதத்தைச் சார்ந்த ஆட்சியாளர்கள் மட்டுமல்ல, ஏனைய மதங்களைச் சார்ந்தவர்களும் அளித்திருக்கின்றனர். மசூதிகள், தர்ஹாக்களின் சொத்துக்கள் நவாப்புகள், குறுநில இந்து மன்னர்களால் கொடுக்கப்பட்டன. கிறித்தவ நிறுவனங்களுக்குரிய சொத்துக்கள், இந்து மன்னர்கள் மற்றும் ஆங்கிலேயர்களால் தரப்பட்டவை. இந்துக் கோவில்களுக்கு நகையும், நிலமும் இந்து, முசுலீம் மன்னர்களால் அளிக்கப்பட்டன. விளைநிலங்ளில் கணிசமான அளவும், பல ஆயிரக்கணக்கான கிராமங்களின் வருவாயும் – அதாவது கோடிக்கணக்கான மக்களின் உழைப்பும் – பல்வேறு மன்னர்களால் பெரும் கோவில்களுக்குக் கொடுக்கப்பட்டன. இந்து மதவெறியர்களால், இசுலாமிய மத வெறியராகச் சித்தரிக்கப்படும் மொகலாய மன்னரான அவுரங்கசீப், பல இந்துக் கோவில்களுக்கும், பார்ப்பனர்களுக்கும் மானியம் அளித்ததைப் புள்ளி விவரங்களுடன் வரலாறு தெரிவிக்கின்றது.

கோவில் கொள்ளை நிறுத்தப்பட்ட வரலாறு

இந்திய உழைக்கும் மக்களின் உழைப்பில் உருவான கோவில் சொத்துக்களை அறங்காவலர் என்ற பெயரில் பார்ப்பன ‘மேல்’ சாதியினர்தான் பல நூறு ஆண்டுகளாக அனுபவித்து வந்தனர். தமிழ் நாட்டைப் பொறுத்தவரை கொள்ளையடிக்கப்படும் கோவில் சொத்துக்களைப் பாதுகாக்க, 1930களில் நீதிக்கட்சி ஆட்சியின்போது அரசு சார்பிலான இந்து அறநிலையத்துறை உருவாக்கப்பட்டது. அப்போதுதான் பல கோவில்களின் வருவாய் எவ்வளவு அதிகமென்பதும், இதுநாள்வரை அவை கொள்ளை போன கதையும் வெளி உலகிற்குத் தெரிய வந்தது.

அதுவும் தமிழ்நாடு, மற்றும் கேரளாவில் மட்டும்தான் அரசு அறநிலையத்துறை ஆரம்பிக்கப்பட்டு கோவில் சொத்துக்கள் பாதுகாக்கப்பட்டதே ஒழிய, ஏனைய மாநிலங்களில் இன்றளவும் கொள்ளை தொடருகின்றது. இங்கும் கூட அறநிலையத்துறை அதிகாரிகளுடன் கூடவே பரம்பரை அறங்காவலர்கள் என்ற பெயரில் முன்னாள் மன்னர்கள், ஜமீன்தார்கள், மடாதிபதிகள், பார்ப்பன ‘மேல்’ சாதியினர் முந்தையக் கொள்ளையை முடிந்தவரை தொடரத்தான் செய்கின்றனர்.

மேலும் கோவில் சொத்துக்களுக்கு நிகராக சங்கர மடங்கள், திருவாவடுதுறை, தருமபுரம், திருப்பனந்தாள், மதுரை, குன்றக்குடி போன்ற ஆதீனங்களுக்கும் ஏராளமான சொத்துக்கள் உள்ளன. இம்மடங்களுக்கு காசி முதல் கன்னியாகுமரி வரை நூற்றுக்கணக்கான கிளை மடங்களும், பல்லாயிரம் ஏக்கர் விளை நிலங்களும், பல நகரங்களில் கட்டிடங்களும் சொந்தமாக உள்ளன. பார்ப்பன ‘மேல்’சாதியினர் அனுபவித்து வரும் இச்சொத்துக்களை இன்றுவரை அரசு எடுக்கவில்லை என்பது முக்கியம். நில உச்சவரம்புச் சட்டத்திலிருந்து இம்மடங்கள் மட்டும் விலக்குப் பெற்றுள்ளன. ‘ஊழுபவனுக்கே நிலம் சொந்தம்’ என்ற இந்திய விவசாயிகளின் உயிராதாரமான போராட்டத்தை இத்தகைய மத நிறுவன்களுக்கு எதிராகவும் நடத்த வேண்டியிருக்கிறது.

மக்கள் பணத்தை வீணடிப்பது யார்?

அரசாங்கம் இந்துக் கோவில்களின் வருவாயை எடுத்துப் பொதுநலத்திட்டங்களுக்குச் செலவழிக்கிறது என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை; உண்மையும் இல்லை. ஆனால், எதிர்காலத்தில் அப்படித்தான் செலவழிக்கப்பட வேண்டும் என்கிறோம். மாறாக தேர்த்திருவிழா, மகாமகம், கும்பமேளா, குடமுழுக்கு போன்ற விழாக்களுக்கும் காசி, பத்ரிநாத்,அமர்நாத் போன்ற யாத்திரைகளுக்கும், இப்போது இந்து முன்னணியின் விநாயகர் ஊர்வலத்துக்கும் அரசாங்கம்தான் பொதுப்பணத்தை அள்ளி வீசுகிறது. பாதுகாப்பு, சுகாதாரம், விபத்துக்களுக்கான நட்ட ஈடு என்ற பெயரில் மக்களின் வரிப்பணம் கோடிக்கணக்கில் கொட்டப்படுவதைத் தடை செய்வதுதான் சரியானது.

பக்தியில் பிழைப்புவாதம்

பல கோவில்களில் பூசைக்கே வழியில்லாமல் போனதற்கு பக்தர்களின் புறக்கணிப்புத்தான் காரணமே ஒழிய அரசாங்கம் அல்ல. திருப்பதி, சபரிமலை, பழனி, திருச்செந்தூர் போன்ற பணக்கார சாமிகளுக்கு அள்ளி வழங்கும் பக்தர்கள், வௌவால் குடியிருக்கும் பல கோவில்களுக்கு எட்டிப் பார்ப்பதில்லை. இறைவழிப்பாட்டிலும் பிழைப்புவாதம் வந்து விட்டதற்கு அரசாங்கமோ, சிறுபான்மை மக்களோ என்ன செய்ய முடியும்? மேலும் கோவில் நிலங்கள், கடைகளுக்குரிய குத்தகைவாடகை பாக்கியை வைத்திருப்பவர்கள் பட்டை போட்ட இந்து பக்தர்கள்தான், நாத்திகம் பேசுபவர்கள் அல்ல என்று முன்னாள் அமைச்சர் தமிழ்க்குடிமகனே தெளிவுபடுத்தியிருக்கிறார்.

இன்னும் சமீபகாலமாக அறநிலையத்துறையின் பூசாரிகள் – கோவில் ஊழியர்கள், தங்களை அரசு ஊழியராக்கவும், ஊதிய உயர்வுக்காகவும் போராடி வருகிறார்கள்.  வேலை நிறுத்தம் செய்து இறைவனையே பட்டினி போடவும் துணிந்து விட்டார்கள் அர்ச்சகர்கள். அறநிலையத்துறையை ஒழித்து, தனியார் இந்துக்களிடம்தான் கோவில்களை ஒப்படைக்க வேண்டும என்று அவர்களிடம் இந்து முன்னணி தெரிவிக்கட்டுமே! கோவிலையே இடித்து விடுவார்கள்.

மசூதி, சர்ச் இவற்றின் சொத்து மட்டும் அம்மதங்களைச் சேர்ந்தவர்களிடம் இருக்கலாமா என்ற கேள்விக்கு ‘கூடாது‘ என்பதுதான் நமது பதில். அங்கும் ஒரு பிரிவு மேட்டுக்குடியினர்தான் சொத்துக்களைச் சுகபோகமாக அனுபவித்து வருகின்றனர். எனவே எம்மதமாக இருந்தாலும், அவற்றின் சொத்துக்களைப் பறிமுதல் செய்து மக்கள் உடைமை ஆக்க வேண்டும்; இறைவனைச் சொந்தக் காலில் நிற்கச் செய்ய வேண்டும் என்கிறோம்.

மதக் கம்பெனிகள் கோரும் வரிவிலக்கு

பிரேமானந்தா, சாயிபாபா, மேல் மருவத்தூர், ஆனந்த மார்க்கம், அமிர்தானந்தமாயி, சின்மயானந்தா, சித்பவானந்தா, ரமண மகரிஷி, யோகிராம் சூரத் குமார், ராமகிருஷ்ணா மிஷன், விவேகானந்த கேந்திரா, சங்கர மடங்கள், சைவ ஆதீனங்கள் இன்னபிற இந்துமதக் கம்பெனிகள் அனைத்திற்கும் வருமான வரிவிலக்கு வேண்டுமென இந்து முன்னணி கோருகிறது. ஏற்கனவே இக்கம்பெனிகளுக்கு முறையான வரியோ, சோதனையோ கிடையாது; விலக்கு மட்டும் உண்டு. ஹவாலா, அரசியல் தரகு, கல்வி – மருத்துவ வியாபாரம், கற்பழிப்புக்கள், கொலைகள் போன்ற தொழில்களைச் க்ஷேமமாக நடத்திவரும் இவர்கள் அனைவருக்கும் வரிபோடுமளவுக்கு வருமானமோ, சொத்துக்களோ இருக்கக்கூடாது என்கிறோம்.

தமது வாழ்க்கைத் துன்பத்திலிருந்து சுரண்டுபவர்களை ஓரளவிற்கேனும் தெரிந்துகொள்ளும் மக்கள், மத நிறுவனங்கள் கொள்ளையிடுவதை மட்டும் நேரடியாக உணருவதில்லை. அன்றைய புராதன மதங்கள் அனைத்தும் இன்றைய பன்னாட்டு நிறுவனங்களைப் போன்று வேர் விட்டிருப்பதும் அதனால்தான். ஆக மத நிறுவனங்கள், மடங்கள், அறக்கட்டளைகள், ஆசிரமங்கள் அனைத்தும் கொள்ளையிடுவதற்கான முகமூடிகள்தான்.

நில உச்சவரம்பு, வருமானவரி, சொத்துவரி, கேளிக்கை வரி ஆகியவை மதமல்லாத நிறுவனங்களுக்கும், தனி நபர்களுக்கும் பொருந்தும். இதிலிருந்து ஏமாற்றுவதற்காக பலர் சொத்துக்களை கடவுள் பெயரில் மாற்றி கணக்கு காட்டாமல் அனுபவித்து வருகிறார்கள். எனவே மேற்கண்ட வரிகள் எதுவும் மத நிறுவனங்களுக்குப் பொருந்தாது என்று உறுதியாக அறிவித்தால் என்ன நடக்கும்?

ரிலையன்ஸ் முருகன், டாடா கணபதி, ஃபோர்டு துர்க்கை, டி.வி.எஸ். பார்த்தசாரதி, ஸ்பிக் அனுமான் என்று எல்லாக் கம்பெனிகளும் கடவுள் பெயரில் அறக்கட்டளை உருவாக்கி ஜாம் ஜாம் என்று கொள்ளையடிப்பார்கள்.

– தொடரும்

____________________________________________________________

____________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

இனி வீதிதான் மாணவர்க்குப் பள்ளி! போராட்டமே மாணவர்களின் கல்வி!

10

மாணவர்களே பாடநூலைக் கேளுங்கள்!
விநியோகிக்க மறுத்தால் வீதிக்கு வாருங்கள்!
இனி வீதிதான் மாணவர்க்குப் பள்ளி!
போராட்டமே மாணவர்களின் கல்வி!

இனி வீதிதான் மாணவர்க்குப் பள்ளி ! போராட்டமே மாணவர்களின் கல்வி !

சமச்சீர் பாடநூல்களை ஜூலை 22 ஆம் தேதிக்குள் விநியோகித்து முடித்து, ஆசிரியர்கள் பாடம் நடத்தத் தொடங்கிவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஜூலை 18 ஆம் தேதி உத்தரவிட்டது. தமிழக அரசு விநியோகிக்கவில்லை. சமச்சீர் நூல்களை விநியோகிப்பதற்கு கூடுதல் அவகாசம் வேண்டும் என்று உச்சநீதிமன்றத்திடம் கேட்டது.

“சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளபடி சமச்சீர் பாட நூல்களை உடனே விநியோகிப்பதுடன், வகுப்புகளைத் தொடங்குவதற்கும் தமிழக அரசு ஏற்பாடு செய்யவேண்டும்; ஆகஸ்டு 2 ஆம் தேதிக்குள் புத்தக விநியோகத்தை முடித்து விட வேண்டும்” என்று உச்ச நீதிமன்றம் ஜூலை 21 ஆம் தேதியன்று உத்தரவிட்டது. தமிழக அரசோ இந்தக் கணம் வரை மாணவர்களுக்கு பாடநூல்களைக் கொடுக்கவில்லை.

பாடநூல்களை அடுக்கி வைத்திருக்கும் டி.இ.ஓ அலுவலகத்தின் வாசலிலேயே அமர்ந்து “எங்களுக்கு பாடநூலைக் கொடு” என்று விருத்தாசலம் மேனிலைப் பள்ளி மாணவர்கள் போராட்டம் நடத்தியிருக்கின்றனர். அதற்கும் அரசு அசையவில்லை. உச்சநீதி மன்றத்தின் உத்தரவைக் காட்டினாலும், எங்களுக்கு அரசிடமிருந்து உத்தரவு வரவில்லை என்கிறார்கள் கல்வித்துறை அதிகாரிகள்.

“ஜூலை 26 அன்று டில்லி உச்ச நீதிமன்றத்தில் இறுதி விசாரணை தொடங்குகிறது. தீர்ப்பு அரசுக்கு சாதகமாகவும் அமையக் கூடும். முடிவு தெரிவதற்கு முன்னால் அவசரப்பட்டு சமச்சீர் புத்தகங்களை விநியோகிக்க வேண்டாம் என்று அம்மா எண்ணியிருப்பார்” என்று விளக்கம் கூறினார் ஒரு அதிமுக அல்லக்கை.

அம்மாவின் சிந்தனை குறித்த அல்லக்கையின் கணிப்பில் தவறேதும் இல்லை. ஆனால் தான் செய்யவிருப்பது என்ன என்ற உண்மையை அம்மா, உள்ளது உள்ளபடியே நீதிமன்றத்தில் ஏன் உரைக்கவில்லை என்பதுதான் பிரச்சினை.

“மை லார்ட், கேஸ் முடியும்வரை நாங்கள் புத்தகங்களை கொடுப்பதாக இல்லை” என்று உச்ச நீதிமன்றத்தில் வெளிப்படையாக அறிவிக்காமல், “விநியோகிப்பதற்கு அவகாசம் வேண்டும்” என்று அங்கே ஏன் பொய்யுரைக்க வேண்டும்? இங்கே புத்தக கட்டுகள் வைக்கப்பட்டிருக்கும் அறையின் வாசலில் உட்கார்ந்து “புத்தகத்தைக் கொடு” என்று கேட்கும் பள்ளி மாணவர்களை, போலீசை வைத்து ஏன் துரத்த வேண்டும்?

அம்மாவின் கணக்குப்படி தீர்ப்பு அரசுக்கு சாதகமாக வருவதாகவே இருக்கட்டும். அதற்கு முன்னால் சமச்சீர் புத்தகங்களை மாணவர்களுக்கு விநியோகிப்பதால் அரசுக்கு ஏற்படும் இழப்பு என்ன? அவர்கள் அவற்றைப் புரட்டிப் பார்த்து விட்டால் இந்த தேசத்துக்கோ அல்லது மாணவர் சமூகத்துக்கோ ஏற்பட்டு விடக்கூடிய ஆபத்து என்ன?

அம்மா நியமித்த வல்லுநர்கள் கூட சமச்சீர் பாடப்புத்தகங்கள் “தரமானதாக இல்லை” என்றுதானே சொல்லியிருக்கிறார்கள். படத்தை ரிலீஸ் செய்! படம் தரமா, தரமில்லையா என்பதை மாணவர்கள் தீர்மானிப்பார்கள். படச்சுருளை மாணவர்களின் கண்ணிலேயே காட்டாமல் பெட்டியிலேயே பூட்டி வைத்துக் கொண்டு பூச்சாண்டி காட்டுவதற்கு, அது என்ன “மாமனாரின் இன்ப லீலைகள்” சினிமாவா?

அந்தப் புத்தகங்களை மாணவர்களின் கண்ணில் காட்டுவதற்கே அம்மாவின் அரசாங்கம் ஏன் அஞ்சி நடுங்குகிறது? இணைய தளத்திலிருந்து அவற்றை ஏன் அவசர அவசரமாக அப்புறப்படுத்துகிறது? “சமச்சீர் கல்வி என்ற வார்த்தையையே ஆசிரியர்கள் உச்சரிக்க கூடாது” என்று மாவட்ட கல்வி அதிகாரிகள் மூலம் சுற்ற்றிக்கை அனுப்பி மிரட்டுவது ஏன்?

அது சமச்சீர் புத்தகமா, இல்லை, சரோஜாதேவி புத்தகமா?

தரமில்லை என்பது இந்த அரசாங்கத்தின் கருத்து. அதுவே அறுதி உண்மை அல்ல. சமச்சீர் புத்தகங்கள் தரமா தரமில்லையா என்று வல்லுநர் படித்துப் பார்ப்பார், நீதிபதி படித்துப் பார்ப்பார், எவன் வேண்டுமானாலும் பார்ப்பான், மாணவர்கள் மட்டும் அந்தப் புதுப் பாடநூல்களை ஆசையாகத் தொட்டு..முகர்ந்து பார்க்கக் கூடாதா?

அந்த நூலைத் தொட்டாலே மாணவர்களுடைய தரம் வீழ்ந்து விடுமா?

தரமில்லாத ஒரு ரூவா அரிசிச் சோற்றைத் தின்று, தரமில்லாத அரசுப் பேருந்துகளில் தொங்கி, தரமில்லாத அரசுப்பள்ளிகளில் படிக்கும் “தரமில்லாத” ஏழை மாணவர்கள், அந்த தரமில்லாத பாடநூல்களை ஒரு முறை புரட்டித்தான் பார்க்கட்டுமே! என்ன கெட்டுவிடும்?

ஒருவேளை உச்ச நீதிமன்றம் அம்மாவுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்து விட்டால், 200 கோடி செலவு செய்து அம்மா அச்சடித்து வைத்திருக்கும் பழைய பாடத்திட்ட நூல்களையும் மாணவர்களிடம் விநியோகிக்கட்டும்!

“இனிமேல் இதுதான் பாடநூல். ஏற்கெனவே கொடுத்த சமச்சீர் பாடநூல்களை எடைக்குப் போட்டுவிடுங்கள்” என்று மாணவர்களிடம் அறிவிக்கட்டும்! அதில் என்ன நட்டம்? எல்லா புத்தகத்தையும் மொத்தமாக அரசாங்கமே பழைய பேப்பருக்குப் போடுவதற்குப் பதிலாக, தனித்தனியாக மாணவர்கள் போடப்போகிறார்கள். மேற்படி பழைய பேப்பர் விற்பனையில் கிடைக்கக்கூடிய வருவாயை அரசு இழக்க நேரிடும் என்பதைத் தவிர வேறென்ன நட்டம்?

“சமச்சீர் பாடநூல்கள் தரமற்றவை, அவை கருணாநிதியின் குடும்ப விளம்பரங்கள்” என்ற அம்மாவின் கூற்று உண்மையாயின், அந்தப் புத்தகங்களை மாணவர்களுக்கு படிக்கத் தருவதன் மூலம் தானே கருணாநிதியின் முகத்திரையைக் கிழிக்க முடியும்?

“கருணாநிதியின் முகத்திரையை மாணவர்களிடம் கிழித்துக் காட்டிய பிறகு, புத்தகங்களையெல்லாம் கிழித்து தீ வைத்துக் கொளுத்த வேண்டும்” என்று தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டால், அவர்கள் என்ன மறுக்கவா போகிறார்கள்? வள்ளுவனின் முகத்திலேயே பசை தடவிக் காகிதம் ஒட்டக் கூசாத அந்தக் கைகள், கொளுத்துவதற்கா தயங்கும்?

சமச்சீர் பாட நூல்களைப் பற்றி அவர்கள் செய்து வரும் பிரச்சாரம் மிகைப்படுத்தப்பட்ட பொய்ப் பிரச்சாரம். அந்த நூல்கள் விநியோகிக்கப்பட்டு, அவற்றை மாணவர்கள் புரட்டிப் படித்து விட்டால், மாணவர்கள் அவற்றை விரும்பத் தொடங்கிவிடுவார்கள் என்று அரசு அஞ்சுகிறது.

அரசைப் பொருத்தவரை இது வெறும் பாடநூல் பிரச்சினை மட்டும் அல்ல. அந்தப் பாடநூல்களை மாணவர்கள் கையில் கொடுத்து விட்டால், “அம்மா கொடுத்த புத்தகமா, அய்யா கொடுத்த புத்தகமா எது சிறந்த பாடநூல்?” என்ற விவாதம் தவிர்க்க இயலாமல் தொடங்கி விடும். மாணவர்களின் முடிவு அம்மாவுக்கு சாதகமாக இருக்காது என்றும் அரசு அஞ்சுகிறது.

“அம்மா அய்யா ” பிரச்சினையோடும் இந்த விவகாரம் முடிந்து விடாது. எந்தப் பாடநூல் நன்றாக இருக்கிறது, ஏன் நன்றாக இருக்கிறது என்று யோசிப்பதற்கும் விவாதிப்பதற்கும் கருத்து தெரிவிப்பதற்கும் மாணவர்களுக்கு உரிமை வழங்குவது என்பது, புலிக்கு ரத்த வாடை காட்டுவதற்கு நிகரானது என்று அஞ்சுகின்றன அரசும் ஆளும் வர்க்கமும்.

பாடநூல் பற்றியும், பாடத்திட்டம் பற்றியும் விவாதிக்கும் வாய்ப்பை மாணவர்கள் பெற்றுவிட்டால் –

தரம், பாடத்திட்டம், பயிற்று முறை ஆகியவையெல்லாம் மாணவர்களும் பெற்றோரும் கருத்துக் கூறமுடியாத, அவர்களுடைய புத்திக்கு எட்டாத பிரம்ம ரகஸ்யங்கள் போலவும், அவற்றைப் பற்றி ஒப்பீனியன் ஷொல்லணுமானால் அவாள் மிஸஸ் ஒய்.ஜி.பி யாகவோ, மிஸ்டர் சோ ராமஸ்வாமியாகவோ இருந்தாகவேண்டும் என்றும் அவர்கள் டெவலப் பண்ணி வைத்திருக்கும் கதைகளும், கொடுத்து வரும் பில்டப்புகளும் உடைந்து விடும் என்பது இந்தக் கும்பலின் அச்சம்.

அதனால்தான் 1.25 கோடி மாணவர்களின் தலைவிதியோடு சம்மந்தப்பட்ட சமச்சீர் பாடநூல்களை மக்கள் மன்றத்தில் திறந்து காட்ட இந்த அரசு மறுக்கிறது. உச்ச நீதிமன்றத்தை ஏமாற்றுகிறது. ஆசிரியர்களை மிரட்டுகிறது. அறிவைப் பூட்டி வைத்து காவலுக்கு ஆயுத போலீசை நிறுத்தி வைக்கிறது.

 இந்த அரசு
தனியார் கல்விக் கொள்ளையர்களின் புரவலன்.
மெட்ரிக் பள்ளி முதலாளிகளின் கூட்டாளி.
இலவசக் கல்வியின் எதிரி.

“பாடநூலைக் கொடுக்க முடியாது” என்று மறுக்கும் அரசுக்கு,
“பள்ளிக்குச் செல்” என்று ஆணையிடும் உரிமை கிடையாது!

“வா” என்றால் வருவதற்கும், “போ” என்றால் போவதற்கும்
ஆடு மாடுகள் அல்ல மாணவர்கள்;

இனி வீதிதான் மாணவர்க்குப் பள்ளி! போராட்டமே மாணவர்களின் கல்வி!

சமச்சீர் கல்வியை முடக்குவதற்கு தமிழக அரசு இயற்றிய சட்டம் அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்று தீர்ப்பளித்து,
சமச்சீர் பாடநூல்களை விநியோகிக்குமாறு சென்னை உயர்நீதி மன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டு விட்டது.
அந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தொடுத்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 26) தொடங்குகிறது.

பாடநூல்களை விநியோகிக்காமல் மாணவர் சமுதாயத்தையும், உச்ச நீதிமன்றத்தையும் ஒரே நேரத்தில் ஏமாற்றும் இந்த அரசை திங்களன்றே (ஜூலை 25) வீதிக்கு இழுப்போம்!
இனி வீதிதான் மாணவர்க்குப் பள்ளி! போராட்டமே மாணவர்களின் கல்வி!

____________________________________________________________

ஜூலை 26 அன்று உச்ச நீதிமன்றத்தில் இவ்வழக்கின் இறுதி விசாரணை (Final hearing) தொடங்குகிறது.  இந்தப் போராட்டத்தைப் பொருத்தவரை இது இறுதிச் சுற்று. எதிரியின் பணபலத்தையும் அதிகார பலத்தையும், நியாயம் தானாகவே வென்றுவிடாது. நமது தரப்பிலும் மூத்த வழக்குரைஞர்களை அமர்த்த வேண்டும்.  இந்த வழக்கில் சமச்சீர் கல்வி பொதுப்பாடத்திட்டத்துக்கு ஆதரவாக வாதாடுவதற்கும், போராடுவதற்கும் உங்களிடம் வழக்கு நிதி கோருகிறோம்.

வழக்கு நிதி தாரீர்
[paypal-donation purpose=”Donation for Samacheer Kalvi Campaign”]

இணையம் மூலம் பாதுகாப்பாக நன்கொடை அளிக்கும் வகையில் பேபால் (PAYPAL) வசதியை ஏற்படுத்தியிருக்கிறோம் “DONATE” பட்டனை அழுத்தி நீங்கள் விரும்பும் தொகையை அளிக்கலாம். BANK TRANSFER மூலம் வங்கி கணக்கில் செலுத்த விருப்புவோருக்கான விவரம்

Name: KANNAIAN RAMADOSS
Bank Name: ICICI BANK LTD
Account Number: 612801107389
IFSC Code: ICIC0006128
Branch Location: TANJORE IFSC-ICIC0006128
MICR Code: NONMICRLO
Account Type: Savings

நன்கொடை அளிப்பவர்கள் அனைவருக்கும் இரசீதுகள் அனுப்பி வைக்கப்படும்.

_______________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

உச்சநீதிமன்றத்தில் சமச்சீர் வழக்கு – நிதி தாரீர்!

26

சமச்சீர் கல்வி வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை வழங்க மறுத்துவிட்டது உச்சநீதிமன்றம். எனினும், “சமச்சீர் பாடநூல்களை ஜூலை 22 க்குள் மாணவர்களுக்கு விநியோகிக்க வேண்டும்” என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு ஆகஸ்டு 2 ஆம் தேதி வரை காலநீட்டிப்பு பெற்றிருக்கிறது தமிழக அரசு. இவ்வழக்கு மீதான இறுதி விசாரணை 26 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.

அச்சிட்டுத் தயார் நிலையில் உள்ள நூல்களை விநியோகிப்பதற்கு எதற்கு கால நீட்டிப்பு? நடைமுறையில் இந்தக் “காலநீட்டிப்பு” பெறுவதன் நோக்கம் இறுதித் தீர்ப்பு வரும்வரை புத்தகங்களை விநியோகிக்காமல் தடுப்பதுதான்.  மாணவர்களையும் ஆசிரியர்களையும் “இதோ.. ..அதோ” என்று இரண்டு மாதங்களாக அலைக்கழித்து வருகிறது ஜெ அரசு. இதே காரியத்தை கருணாநிதி செய்திருந்தால் சோ, வாசந்தி, வைத்தியநாதன், எச்.ராஜா, தா.பாண்டியன் முதலான “தமிழர்கள்” தம் நாக்காலேயே நெம்பி ஆட்சியைக் கவிழ்த்திருப்பார்கள். மேற்படி அயோக்கியத்தனத்தை செய்துவருபவர் புரட்ச்சித்தலைவி என்பதால், இவர்களுடைய நாக்கு அம்மாவின் பொற்பாதங்களை சுவைத்துக் கொண்டிருக்கிறது.

நம் கண் முன்னால் 1.25 கோடி மாணவர்களை உருட்டிப் பந்தாடுகிறார் புரட்சித்தலைவி. பள்ளிகள் முடங்கிக் கிடக்கின்றன. ஒருவேளை ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைக்காக பத்து நாட்கள் வேலை நிறுத்தம் செய்திருந்தால், மாணவர்கள் அவர்களை ஆதரித்துப் போராடியிருந்தால் – என்ன நடந்திருக்கும்? 2 இலட்சம் அரசு ஊழியர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டது நினைவிருக்கிறதா? அதுதான் நடந்திருக்கும்.

தமிழக மக்களைத் தனது *@# க்குச் சமமாகத்தான் ஜெ மதிக்கிறார் என்பதைப் புரிந்து கொள்வதற்கு கூடுதல் சான்றுகள் தேவையில்லை. நீதித்துறையின் மீது அவர் கொண்டிருக்கும் மதிப்பு, மக்கள் மீது அவர் கொண்டிருக்கும் மதிப்பைக் காட்டிலும் ஒரு *@# கூடுதலாக இருக்கலாம். அவ்வளவே.

சமச்சீர் பாடப்புத்தகங்கள் தரமானவைதானா என்று கமிட்டி போட்டு ஆராய்ந்து அறிக்கை கொடுக்க வேண்டும் என்றும், அதன் அடிப்படையில் தீர்ப்பளிக்கப்படும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. அம்மா போட்ட கமிட்டி ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும்போதே, 2002 பாடத்திட்டத்தின் அடிப்படையிலா பாடநூல்களை அச்சடிக்கச் சொல்லிவிட்டார் புரட்சித்தலைவி. இது குறித்த செய்தி நாளேடுகளிலும் வந்துவிட்டது. “இப்படி செய்வது நீதிமன்ற அவமதிப்பு இல்லையா?” என்று குமுறினார் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி. “எந்தப் புத்தகத்தை கொடுக்க வேண்டும் என்று ஐயா உத்தரவு பிறப்பித்தாலும், அடுத்த கணமே கொடுத்துவிடவேண்டும் என்பதற்காகத்தான் அதையும் அடிக்கிறோம் மை லார்ட்” என்று நீதபதிக்கு பதில் சொன்னார் அரசு வழக்குரைஞர். இது எப்படி இருக்கு?

“அனாவசியமாக இன்னொரு 200 கோடி செலவு வேண்டாம். சமச்சீர் பாடத்தை இந்த ஆண்டுக்கு கொடுத்து விடுங்கள். அடுத்த ஆண்டு பார்த்துக் கொள்ளலாம்” என்று நீதிமன்றம் சொல்லிவிடக்கூடுமோ என்று அம்மாவுக்கு ஒரு ஐயம். அதனால்தான் இந்த குறுக்கு வழி, தீர்ப்பு வருவதற்கு முன்னரே இன்னொரு 200 கோடியையும் செலவு செய்யச் சொல்லிவிட்டார். நீதிமன்றத்தை உப்பு மூட்டை மேல் படுக்கப் போட்டு வீக்கம் வெளியில் தெரியாதபடி அடிப்பது என்பது இதுதான். இதை மற்றவர்கள் செய்தால் நீதிமன்ற அவமதிப்பு. அம்மா செய்தால் அதற்குப் பெயர் துணிச்சல்.

உயர்நீதி மன்றத் தீர்ப்பு வந்தவுடனே கல்வித்துறை செயலர், அட்வகேட் ஜெனரல், அமைச்சர் உள்ளிட்ட அனைவரும் டெல்லிக்கு பறந்து விட்டனர். “மனு தாக்கல் செய்யும் நேரம் ராகு காலம் எமகண்டமாக இருக்க்கூடாது. வழக்கிற்கு வழங்கப்படும் வரிசை எண்ணின் கூட்டல் தொகை 9 ஆக இருக்க வேண்டும்”. என்ற இரண்டு முக்கியமான லா பாயிண்டுகளை பின்பற்றுவதில் புரட்சித் தலைவியின் போர்ப்படைத் தளபதிகள் கவனமாக இருந்தனர்.

வெயிட் காட்டுவதன் மூலமாகத்தான் உச்ச நீதிமன்றத்தில் தடையாணை பெற முடியும் என்பதனால், இந்தியாவின் சட்டத்துறை சூப்பர் ஸ்டார்களாக அறியப்படும் வழக்குரைஞர்கள்  பலரையும் விலைக்கு வாங்கி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சுபரீம் கோர்ட்டில் இறக்கி விட்டிருந்தார் அம்மா. அரசியல் சட்ட வழக்குரைஞர் பி.பி.ராவ், முகுல் ரோகத்கி, அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், கூடுதல் அட்வகேட் ஜெனரல் குரு கிருஷ்ணகுமார் என்று ஒரு வழக்குரைஞர் படை அரசின் சார்பாக இறக்கப்பட்டிருந்த்து. ரோஹிந்தன் நாரிமன், ஆர்யமா சுந்தரம், ராஜீவ் தவான் உள்ளிட்ட இன்னொரு வழக்குரைஞர் படையைக் களத்தில் இறக்கியிருந்தனர் மெட்ரிகுலேசன் பள்ளி முதலாளிகள். இவர்களுடைய கூட்டமே நீதிமன்ற அறையில் பாதியை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது,

ஒரு முறை நாறைகாலியை விட்டு எழும்புவதற்கே சில இலட்சங்களை கட்டணமாக வசூலிக்கும் மேற்குறிப்பிட்ட வழக்குரைஞர்கள், நேற்று நெடுநேரம் கால் நோக நின்றபடியே தடையாணை கேட்டு மன்றாடினர். எனினும் நீதிமன்றம் தடையாணை கொடுக்க மறுத்தது. “தடையாணை தராவிட்டாலும் அவகாசமாவது கொடுங்கள். சமச்சீர் பாடத்திட்ட நூல்களை 22 ஆம் தேதிக்குள் விநியோகிக்க இயலாது” என்று கூறி, ஆகஸ்டு 2 ஆம் தேதி வரை அவகாசம் கோரினர்.

தயார் நிலையில் கிடங்குகளில் தூங்கும் நூல்களை எடுத்து விநியோகிப்பதற்கு எதற்கு கூடுதல் அவகாசம்? இருப்பினும், “அவ்ளோ பெரிய்ய வக்கீலுங்க, இவ்ளோ தூரம் ப்ரஸ் பண்ணி கேட்பதன் காரணமாக”, மேற்கொண்டு ஒரு பத்து நாட்களைப் போட்டுக் கொடுத்தது உச்ச நீதிமன்றம். நூல்களை விநியோகிப்பதற்கு என்று கூறி ஆகஸ்டு 2 ஆம் தேதி வரை அவகாசம் பெற்ற ஜெ அரசு, இந்த அவகாசத்தை “நூல்களை விநியோகிக்காமல் மாணவர்களை இழுத்தடிப்பதற்கான அவகாசமாக” பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.

உயர்நீதிமன்றம் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்வதையும், இரண்டு மாதங்களாக மாணவர்களைத் தெருவில் நிறுத்தியிருப்பதையும் ஜெ வின் தனிப்பட்ட குணாதிசயத்தின் விளைவாக மட்டுமே பலர் காண்கின்றனர். இப்பிரச்சினையைப் பொருத்தமட்டில் அது ஒரு அம்சம் மட்டுமே.

மேட்டுக்குடி வர்க்க மாணவர்களுக்கும், உழைக்கும் வர்க்க மாணவர்களுக்கும் பொதுவானதாக ஒரு பாடத்திட்டம் இருக்க வேண்டும் என்ற கருத்தைக் கேட்டவுடனேயே, காதில் ஈயம் காய்ச்சி ஊற்றியது போலப் பலர் துடிக்கின்றனர். மேட்டுக்குடி வர்க்கத்தினர், உயர் நடுத்தர வர்க்கத்தினர், மெட்ரிக் பள்ளி கொள்ளையர்கள், பார்ப்பனிய-புதிய தாராளவாத சித்தாந்தக் குஞ்சுகள் போன்ற பலரும் இதில் அடக்கம். ஜெயலலிதா அவர்களுடைய பிரதிநிதி. எனவே, ஜெயலலிதா இதில் காட்டும் மூர்க்கத்தனம் என்பது, சர்ச் பார்க், டான் பாஸ்கோ, பத்மா சேஷாத்ரி, டி.ஏ.வி உள்ளிட்ட மேட்டுக்குடி வர்க்கத்தின் கண்ணோட்டத்திலும் குணாதிசயத்திலும் விளைந்ததாகும். அம்மையார் பிடிவாத குணம் கொண்ட ஒரு பாசிஸ்டாக இருப்பது மெட்ரிக் பள்ளி முதலாளிகளுக்கு கிட்டிய ஒரு கூடுதல் வரப்பிரசாதம்.

மெட்ரிக் பள்ளித் தொழிலதிபர்கள் கருத்து ரீதியாக ஜெயலலிதாவுக்கு ஆதரவு தருவது மட்டுமின்றி, கோடிகளை வாரி இரைத்து உச்ச நீதிமன்றத்தில் நட்சத்திர வழக்குரைஞர்களையும் நிறுத்தியிருக்கிறார்கள். கல்வித்துறை அதிகாரிகள், அமைச்சர்கள், சட்ட வல்லுநர்கள் அடங்கிய ஒரு பெரும் கூட்டம் அரசாங்க செலவில் டெல்லியில் தங்கியிருந்து வாதிடவிருக்கும் வழக்குரைஞர்களுக்கு தேவையான அனைத்தையும் திரட்டிக் கொடுப்பதுடன், சாதகமான தீர்ப்பை வாங்குவதற்கான எல்லாவிதமான முயற்சிகளிலும் ஈடுபட்டிருக்கிறது.

பாடத்திட்டம் தரமில்லை என்று வல்லுநர் குழுவை வைத்து நிரூபிக்கும் முயற்சி உயர்நீதி மன்றத்தில் தோற்றுவிட்டது. “அரசு இயற்றிய சட்டத்திருத்தத்தை ரத்து செய்த்தன் மூலம், சட்டமன்றத்தின் அதிகார எல்லைக்குள் உயர்நீதிமன்றம் வரம்புமீறித் தலையிட்டுள்ளது” என்று இதனை ஒரு அரசியல் சட்டச் சிக்கலாக மாற்றி திசை திருப்பும் முயற்சியில் அவர்கள் இறங்கக்கூடும்.

எதிர்த் தரப்பில் அணிவகுத்து நிறுத்தப்பட்டிருக்கும் வழக்குரைஞர்களின் எண்ணிக்கை மற்றும் “வலிமை”யை ஒப்பிடும்போது, நமது தரப்பு (அதாவது சமச்சீர் பாடத்திட்டத்துக்காக வாதிடுவோரின் தரப்பு) வழக்குரைஞர்களின் எண்ணிக்கை குறைவு என்பதுடன், பலவீனமாகவும் இருக்கிறது. உச்சநீதிமன்றத்தில் பலம் பலவீனத்தை தீர்மானிப்பதில் பணமே முக்கியப் பாத்திரமாற்றுகிறது என்பதை விளக்கத்தேவையில்லை.

இவ்வழக்கைப் பொருத்தவரை முதலில் உயர்நீதிமன்றத்திலும், பின்னர் உச்சநீதி மன்றத்திலும், அதன் பின்னர் வல்லுநர் குழு அறிக்கை தொடர்பாக மீண்டும் உயர்நீதி மன்றத்திலும் வழக்கு நடத்தியிருக்கிறோம். மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் இளம் வழக்குரைஞர்கள் ஊதியமில்லாமல்தான் இதற்க்காக உழைக்கிறார்கள் என்ற போதிலும், பிரபலமான மூத்த வழக்குரைஞர்களை அமர்த்திக் கொள்ளும்போது அவர்களுக்குரிய கட்டணத்தைக் கொடுக்கத்தான் வேண்டியிருக்கிறது.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடத்த வேண்டுமானால் அதற்கு இங்கிருந்து ஒரு வழக்குரைஞர் குழுவே டெல்லி சென்று, மனுவையும், வாதுரைகளையும் தயாரிப்பதுடன், நாம் அமர்த்திக் கொள்ளும் மூத்த வழக்குரைஞர்களுக்கு வழக்கின் சாரத்தை விளக்கிப் புரியவைக்கவும் வேண்டியிருக்கிறது. அதுமட்டுமல்ல அவ்வப்போது அவர்கள் கேட்கும் ஐயங்களுக்கும் கேள்விகளுக்கும் விளக்கமளிப்பதற்காக, வழக்கு முடியும் வரை அங்கே இருக்கவும் வேண்டியிருக்கிறது.

டில்லி தமிழ்நாடு இல்லத்தில் தங்கிக் கொண்டு, தனியார் கல்விக் கொள்ளையர்களுக்கு ஆதரவாக மக்கள் பணத்தை கோடிக் கணக்கில் வாரியிரைத்து இந்த வழக்கை நடத்திக் கொண்டிருக்கிறது ஜெ அரசு. அது மக்களிடமிருந்து பிடுங்கப்பட்ட வரிப்பணம்.

இதுவரை சமச்சீர் கல்வி இரத்துக்கு எதிராக எமது அமைப்புகளின் சார்பில் தமிழகமெங்கும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும் உழைக்கும் மக்களிடமிருந்து பெறப்பட்ட நண்கொடையால்தான் சாத்தியமாயின. பிரச்சார இயக்கம், ஆர்பாட்டங்கள், மெட்ரிக் கல்விக் கொள்ளையர்களுக்கு எதிரான பல முற்றுகைப் போராட்டங்கள், சென்னை உள்ளிட்ட நகரங்களில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்ற அரங்கக்கூட்டங்கள், உயர்நீதிமன்ற, உச்ச நீதிமன்ற வழக்குகள் என்று கடந்த 2 மாதங்களாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது இப்போராட்டம்.

இந்தப் போராட்டத்தைப் பொருத்தவரை இது இறுதிச் சுற்று. எதிரியின் பணபலத்தையும் அதிகார பலத்தையும், நியாயம் தானாகவே வென்றுவிடாது. நமது தரப்பிலும் மூத்த வழக்குரைஞர்களை அமர்த்த வேண்டும்.  இந்த வழக்கில் சமச்சீர் கல்வி பொதுப்பாடத்திட்டத்துக்கு ஆதரவாக வாதாடுவதற்கும், போராடுவதற்கும் உங்களிடம் வழக்கு நிதி கோருகிறோம். தற்போதைய நிதித் தேவை குறைந்த பட்சம் 3 இலட்சம் ரூபாய்

ஜூலை 26 அன்று உச்ச நீதிமன்றத்தில் இவ்வழக்கின் இறுதி விசாரணை (Final hearing) தொடங்குகிறது. எனவே உங்கள் நன்கொடையை விரைந்து அனுப்பவும். நாம் வென்றே தீரவேண்டும் என்ற வேட்கை, நீங்கள் வழங்கவிருக்கும் நன்கொடையின் தொகையைத் தீர்மானிக்கட்டும்.

வழக்கு நிதி தாரீர் !

வெஸ்டர்ன் யூனியன் (WESTERN UNION) மூலம் அனுப்ப விரும்புகிறவர்கள் KANNAIYAN RAMADOSS என்ற பெயருக்கு பணம் அனுப்பி விட்டு விவரங்களை மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம். BANK TRANSFER மூலம் வங்கி கணக்கில் செலுத்த விருப்புவோருக்கான விவரம்

Name: KANNAIAN RAMADOSS
Bank Name: ICICI BANK LTD
Account Number: 612801107389
IFSC Code: ICIC0006128
Branch Location: TANJORE IFSC-ICIC0006128
MICR Code: NONMICRLO
Account Type: Savings

நன்கொடை அளிப்பவர்கள் அனைவருக்கும் உரிய இரசீதுகள் அனுப்பி வைக்கப்படும்.

சமச்சீர்கல்வி நூல்களை வழங்கு ! பள்ளி மாணவர்கள் முற்றுகை போராட்டம் !

சமச்சீர்கல்வி நூல்களை வழங்கு ! பள்ளி மாணவர்கள் முற்றுகை போராட்டம் !

விருத்தாசலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை – 22.7.2011 காலை மாணவர்கள் மத்தியில் நமது பெற்றோர் சங்கம் சார்பில் “சமச்சீர் பாட புத்தகத்தை வாங்கிய பிறகு வகுப்புக்குச் செல்லுங்கள். அதுவரை வகுப்பை புறக்கணியுங்கள்,” என்று பேசினோம். உடனே தலைமையாசிரியர் மாணவர்களை அடித்து மிரட்டி உள்ளே தள்ளி கதவை சாத்திவிட்டார்.

எனினும் 100க்கும் மேல் திரண்ட மாணவர்கள் உள்ளே சென்றாலும் அங்கிருந்து எங்களுக்கு கையை ஆட்டி வந்துவிடுகிறோம் என்று உற்சாகப்படுத்தினர். தொடர்நது வந்து கொண்டிருந்த மாணவர்களிடம் நாம் பேசியபொது வகுப்பின் இடைவெளையில் வந்துவிடுகிறோம் என்று கூறி சென்றனர். இடைவெளையின் பொது அனைத்து வாசல்களையும் ஆசிரியர்கள் மூடிவிட்டனர். அசராத மாணவ சிங்கங்கள் சிலர் மதில் சுவர் ஏறி குதித்து வெளியெ வந்து  மதிய உணவு இடைவெளியின் போது வந்துவிடுகிறோம் என்றுஎங்களிடம் தகவல் தந்தனர்.

சொன்னபடி மதியம் 1 மணியளவில் 50-ல் தொடங்கிய மாணவர்களின் எண்ணிக்கை சிறிது நேரத்தில் 200-ஐ தாண்டியது. நாம் கொடுத்த முழக்கம் மாணவர்களின் முழக்கமாக விண்னை எட்டியது. இது கேள்விப்பட்டு வந்த ஜெயா அரசின் செல்லப்பிள்ளையான காவல்துறை மாணவப் பிள்ளைகளைப் பார்த்து செய்வதறியாது திகைத்து நின்றது. மாணவர்களின் புத்தகம் வேண்டும் என்ற ஆர்வம் முழக்கமாக காட்டற்று வெள்ளமாக கரைபுரண்டது. இதை எதிர்பாராத எங்களுக்கே மாணவர்களின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியவில்லை.

தன்னெழுச்சியாக மாணர்களே பேருந்தை மறித்து முழக்கம் இட்டு ஆரவாரம் செய்தனர். நாம் அவர்களை முறைப்படுத்தி மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு ஊர்வலமாக அழைத்துச் சென்றோம். பொதுமக்களும், வியாபாரிகளும் அணிதிரண்டு வேடிக்கை பார்த்தனர். தாங்கள் செய்யவேண்டிய போராட்டத்தை மாணவர்களே முன்னின்று செய்வதை வியந்து போற்றினர். முற்றுகை போராட்டம் சூடுபிடித்த பிறகு தாசில்தார், காவல்துறை அதிகாரிகள் வந்தனர்.

படங்களை பெரியதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்

 

“பேச்சுவார்த்தைக்கு செவிசாய்க்காமல் போராட்டத்தை முழக்கங்களுடன் நடத்தலாமா” என்று அதிகாரிகள் கேட்டதற்கு ” புத்தகம் வாங்கிதான் பள்ளி செல்லவெண்டும். அது இல்லாமல் அங்கு போய் என்ன செய்யப்போகிறொம்” என்று எதிர் கேள்வி கெட்டனர். சமச்சீர் பாடத்தின் தரத்தை பற்றியும் காசு உள்ளவனுக்கு ஒரு கல்வி, ஏழைக்கு ஒரு கல்வி என்ற கல்வி தீண்டாமைக்காகதான் தங்களுக்கு புத்தகம் வழங்கப்படாமல் இருக்கிறது என்பதை எளிதாகப் புரிந்து கொண்டனர். பள்ளியில் ஆசியர்களின் அத்துமீறல்களை நம்மிடம் புகாராக கொட்டி தீர்ததனர்.

“குடிநீர் குழாயில் புழு வருகிறது என்றும், சத்துணவில் முட்டை போடுவதில்லை, பஸ் தாமதமாக வந்தாலும் வாத்தியார் எங்களை அடிக்கிறார், புத்தகம் இல்லாமலேயே படிக்கவில்லை என்று அடிக்கிறார், என்றெல்லாம் ஈட்டியாக துளைத்தார்கள். தாசில்தாரை அழைத்துக் கொண்டு தலைமை ஆசிரியரை பார்த்து இவையனைத்தும் சரி செய்ய வெண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். திங்கள் கிழமை மாணவர்களுடன் பெரும்  மாவட்டகல்வி அலுவலகத்தை முற்றுகையிடுவொம் என்று உற்சாகத்துடன் கூறி சென்றனர் அந்த மாணவர்கள்.

அரசின் கல்வித் திட்டங்களாகட்டும், இல்லை மக்கள நல திட்டங்களாகட்டும் இவை எதுவும் மக்கள் விழிப்புணர்வின்றி அமலுக்கு வராது. சமச்சீர் கல்விக்கான நூல்களை உடனடியாக வழங்க வேண்டுமென்று தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்கள் போராட ஆரம்பித்தால் அதுதான் பாசிச ஜெயாவின் திமிரை அடக்குவதற்கான மருந்தாக செயல்படும். விருத்தாசலத்தில் ஆரம்பித்த இந்த நெருப்பு மாநிலம் முழுவதும் பரவட்டும். சமச்சீர் கல்வி உரிமையை மக்கள் நிலைநாட்டுவதற்கு மாணவர்கள்தான் போராட வேண்டும். போராடுவார்கள்!

முற்றுகை போராட்ட முழக்கங்கள்:

  • மாணவர்களே! புத்தகம் வழங்கிய பிறகு பள்ளிக்கு செல்லுங்கள், புத்தகம் இல்லா பள்ளி எதற்கு?
  • தமிழக அரசே! தமிழக அரசே! புத்தகம் வழங்கு புத்தகம் வழங்கு!சமச்சீர் புத்தகத்தை உடனே வழங்கு!
  •  மாணவர்களே, மாணவர்களே! வகுப்பு எதற்கு, வகுப்பு எதற்கு! புத்தகம் இல்லா வகுப்பு எதற்கு!
  • புறக்கணிப்போம்! புறக்கணிப்போம்! புத்தகமில்லா வகுப்புகளை புறக்கணிப்போம்! புறக்கணிப்போம்!
  • ஆசிரியர்களே, ஆசிரியர்களே! அடைக்காதீர், அடைக்காதீர், புத்தகமில்லா வகுப்புகளில் மாணவர்களை அடைக்காதீர்!
  • ஆசிரியர்களே, ஆசிரியர்களே! அச்சம் தவிர்! அச்சம் தவிர்! நெஞ்சம் நிமிர், நெஞ்சம் நிமிர்!
  • மாணவர்களே, மாணவர்களே! பள்ளி செல்வோம்! பள்ளி செல்வோம், புத்தகத்துடன் பள்ளி செல்வோம்!
  • தமிழக அரசே, தமிழக அரசே! அமல்படுத்து, அமல்படுத்து! உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை அமல்படுத்து! புத்தகம் வழங்கு, புத்தகம் வழங்கு! சமச்சீர் புத்தகத்தை உடனே வழங்கு!
  • புறக்கணிப்போம், புறக்கணிப்போம்! புத்தகங்கள் கிடைக்கும் வரை வகுப்புகளை புறக்கணிப்போம்!
  • மாணவர்களே, மாணவர்களே! வாருங்கள், வாருங்கள்! வகுப்புகளை விட்டு வெளியே வாருங்கள்!
  • பள்ளிக்குச் செல்வோம், பள்ளிக்குச் செல்வோம், புத்தகத்துடன் பள்ளிக்குச் செல்வோம்!

___________________________________________________________________________________

– மனித உரிமைப் பாதுகாப்பு மையம், விருத்தாசலம்

____________________________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

சமச்சீர் கல்வி – கார்டூன்ஸ்!

8

சமச்சீர் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி  சென்னையில் நடந்த கருத்தரங்கத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த மக்கள் கலை இலக்கியக் கழக ஓவியர் முகிலனின் கார்டூன்களில் சில….

சமச்சீர் கல்வி கார்டூன்ஸ்

சமச்சீர் கல்வி கார்டூன்ஸ்

சமச்சீர் கல்வி கார்டூன்ஸ்

சமச்சீர் கல்வி கார்டூன்ஸ்

சமச்சீர் கல்வி கார்டூன்ஸ்

சமச்சீர் கல்வி கார்டூன்ஸ்

சமச்சீர் கல்வி கார்டூன்ஸ்

சமச்சீர் கல்வி கார்டூன்ஸ்

சமச்சீர் கல்வி கார்டூன்ஸ்

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

சமச்சீர் கல்வி கருத்தரங்கம் – நிகழ்ச்சிப்பதிவு, படங்கள்!

க்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகள் சமச்சீர் பொதுப்பாடத்திட்டத்தை உடனடியாக அமுல் படுத்தக் கோரி கடந்த இருமாதங்களாக மக்கள் மன்றத்தில் போராடி வருகின்றனர். சென்னையில் டிபிஐ முற்றுகை மற்றும் ஜெயா கொடுப்பாவி எரிப்பு, உயர்நீதிமன்ற முற்றுகை மற்றும் தனியார் கல்வி முதலாளிகளின் அறிக்கை எரிப்பு, எனப் பல போர்க்குண மிக்க போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் கடந்த திங்கட்க் கிழமை (18-07.11) சமச்சீர் பொதுப்பாடத்திட்டத்தை 22-ம் தேதிக்குள் நடைமுறைப்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி மற்றும் புரட்சிகர அமைப்புகள் போராடி உயர்நீதி மன்றத்தின் வாயிலிருந்து பிடுங்கிய தீர்ப்பு என்றால் அது மிகையல்ல.

களத்திலே நின்று போராடிய  பு.மா.இ.மு, ம.க.இ.க. அமைப்புகள் கருத்துக்களை, உரிமைகளை மக்களிடத்திலே கொண்டு செல்லும் விதமாக அரங்கக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்த அரும்பாக்கம் புதிய புபு மஹாலில் காலை 9 மணிக்கு தரைத்தளத்தில் ஓவியக் கண்காட்சி தொடங்கியது. தோழர் முகிலன் ஓவியங்கள் வணிகமயமாகும் கல்விக் கொள்கைக்கெதிரான போர் வாளாய் சுழன்றன. ஜெயா குரங்கு கையில் கிடைத்த பூமாலை, கல்வியை பறிக்கும் தனியார் பள்ளி முதலாளிகள், தனியார் பள்ளிகளை காக்கும் போயசு பள்ளி கல்வித்துறை, அரசு போன்ற ஓவியங்கள் பார்வையயாளர்களை ஈர்த்தன.

காலை பத்து மணிக்கு நிகழ்ச்சி முறைப்படி தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தி ஆரம்பிக்கப்பட்டது. தலைமையுரையாற்றிய புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் மாநில அமைப்பாளர் தோழர் த.கணேசன் “தாழ்த்தப்பட்ட -பிற்படுத்தப்பட்டோருக்கு கல்வியை மறுத்த மனு நீதி திரும்புகிறது. காசில்லையேல் கல்வி இல்லை, யார் அதிகம் நன்கொடை தருகிறார்களோ அவர்களை மட்டும் பள்ளிகள் சேர்த்துக்கொள்கின்றன. வியாபாரமாக கல்வி மாறிவிட்ட நிலையில் சமச்சீர் பொதுபாடத்திட்டத்தினை அமுல்படுத்து என்ற சீர்திருத்த நடவடிக்கைக்களுக்கே கூட புரட்சிகர அமைப்புகள் போராட வேண்டியிருக்கிறது. ஜனநாயகம் உள்ளதாக கூறப்படும் இந்நாட்டில் ஜனநாயகம் இருக்கின்றதா?இது ஒட்டுமொத்தக் கல்வியும் வியாபாரமான பிரச்சினை என்றும் அதற்கெதிராக போராட வேண்டும்” என கூறினார்.

பின்னர் சமச்சீர் பொதுப்பாடத்திட்டத்தை அமுல்படுத்தக் கோரி சிறை சென்ற பு.மா.இ.மு தோழர்களுக்கு பாராட்டுக்களும் பரிசுகளும்(நூல்கள்) வழங்கப்பட்டன.

அடுத்ததாக”ஏன் சமச்சீர் கல்வி வேண்டும்” என்ற தலைப்பில் தமிழகத்தின் மூத்தகல்வியாளர் திரு. எஸ்.எஸ்.ராஜகோபாலன் அவர்கள் உரையாற்றினார். அதில் “1.2 கோடி மாணவர்களின் மீது தமிழக அரசுக்கு உள்ள அலட்சியமே மேல் முறையீடு செய்யவுள்ள ஜெயா அரசின் செயல் நிரூபிக்கிறது. கடந்த 1.5 மாதமாக எந்த வகுப்பிலும் பாடங்கள் நடக்கவில்லை. அதை நீங்கள் தான் மாற்ற வேண்டும். உலகில் ஏற்பட்ட சமூக மாற்றங்களே கல்வி முறையை மாற்றியிருக்கின்றன. ஆக சமூகத்தைப் பற்றிய கல்வி கொடுக்கப்பட வேண்டும். சாதிமுறை ஒழிக்கப்படவில்லை அது  நீடிக்கிறது.  அதுதான் சமூகத்தில் பரவிக்கிடக்கிறது. அதை அகற்ற வேண்டுமெனில் பகுத்தறிவு கல்வி கொடுக்க வேண்டும். அந்தக் கல்வி இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்பதுதான் நமது கோரிக்கையாக இருக்க வேண்டும். சுயசிந்தனையை, பகுத்தறிவை வளர்த்து சமூக மாற்றத்தில் பங்குகொள்ள சமச்சீர் கல்வி அவசியம்” என்றார்.

அடுத்ததாக, கல்வி கார்ப்பரேடமயம் என்பது உலகமயம் உருவாக்கும் புதிய பார்ப்பனீயம் என்ற தலைப்பில் ம.க.இ.க மாநில பொதுச் செயலர் தோழர் மருதையன் உரையாற்றினார். “சமச்சீர் பாடத்திட்டத்திற்காக எந்த ஓட்டுக்கட்சியும்  போராடவில்லை மாறாக பு.மா.இ.மு போராடியதன் விளைவாகவே நேற்றையத் தீர்ப்பு வெளியாகியுள்ளது. அடிபட்ட மிருகம் போல அரசு தனது வெறியாட்டத்தை தொடங்கினாலும் நாம் உறுதியாக போராடவேண்டும். ஸ்பெக்ட்ரம் ஊழல் 1.2 லட்சம் கோடி எனில் கல்வியை தனியார் ஆக்குவதால் ஆண்டுக்கு 2.5 லட்சம் கோடி முதலாளிகளின் லாபவேட்டையாக அமைகிறது.”

“காட்ஸ் ஒப்பந்தம் மூலம் தண்ணீர், உணவு, மருத்துவம், கல்வி என அனைத்தும் தனியார் மயமாக்கப்பட்டன. ஆதலால் காசில்லாதவனுக்கு கல்வி மறுக்கப்படுகின்றது. அதையே தமிழக அரசு வழக்கறிஞர் “பணம் கொடுத்துப் படிப்பது உரிமை”என்றும்,அமைச்சர் ” உலகமயமாக்கலை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு ஏற்ற கல்வி” என்றும்  கூறுகிறார்கள். ஆனால் 97.5 கட்டாஃப் மார்க் வாங்கிய ஏழைத்தொழிலாளியின் மகள் மேற்கொண்டு படிக்க முடியாமலிருப்பதும், 50 லட்சம் தரமுடிந்ததால் மட்டும் டாக்டராகும் மாணவனையும் உள்ளடக்கிய இக்கல்வி முறை அதாவது காசிருந்தால் கல்வி என்ற இம்முறை ஒழிக்கப்படவேண்டும். கல்விக்கு, அதை அளிப்பதில் சமூக நோக்கம் இல்லையேல் ஏற்றத்தாழ்வுகள் நீங்காது. ஆனால் இப்போது கல்வி கையிலிருக்கும் பணத்தை பொருத்து வழங்கப்படுகின்றது.”

“19-ம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் தகுதிக்கேற்ற கல்வி வழங்கிய அம்முறையை இப்போது உலகமயம் நமக்கு வழங்குகிறது. அமெரிக்காவில் ஒவ்வொரு மாணவனையும் 50 லட்சம் முதல் 1 கோடி வரை கடன் காரர்களாக்கி வெளியில் தள்ளுகிறது அக்கல்வி முறை. இது கல்வி வியாபாரமானதின் விளைவு. உற்பத்தி தேவைக்கானதுதான் கல்வி என்ற சமூக நோக்கத்தை அழித்து வணிகமயமாக, உழைக்கின்ற மிருகமாக மனிதனை மாற்றுவதுதான் ஜெயா அரசின் திட்டம். இதை முறியடிக்க மக்களைத்திரட்டி போராட வேண்டும்” என்று கூறினார்.

இறுதியாக கட்டாய-இலவசக் கல்வி தருவது அரசின் கடமை, கல்வி தனியார்மயம் என்பது ஏழைகள் மீதான வன்கொடுமை என்ற தலைப்பில் உரையாற்றிய ம.உ.பா.மை-ன் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் சி.ராஜூ “கல்வி தனியார்மயத்தால்,கட்டணக்கொள்ளளையால் அனைத்து மக்களும் ஏன் காவல்துறையினர் உட்பட அனைவரும் பாதித்துள்ளனர்”  என்றும் கடலூர் மாவட்டத்தில் ம.உ.பா.மை மற்றும் பொற்றோர் சங்கம் போராடிய போராட்ட அனுபவங்களை கூறினார்.

“மேலும் கள்ளச்சாராய விற்பனை போல் அங்கீகாரம் வாங்கி, வாங்காமல் பள்ளிகள் புற்றீசல் போல பெருகி மக்களை கொள்ளையடித்து வருகின்றன. உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை, உச்சநீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்தக் கோரி போராடியதற்காக பு.மா.இ.மு கடலூர் தோழா;கள் கைது செய்யப்பட்டதையும் அதில் 16 வயது தோழர் 20 நாட்கள் சிறையில் இருக்க வைக்கப்பட்டதையும் கூறினார். தனியார் பள்ளிகளுக்கெதிரான போராட்டம் ஏனைய தனியார்மய கொள்ளைகளுக்கெதிரான போராட்டம் அதில் நாம் போராடி வெற்றி பெறுவோம் என்றும் சமச்சீர் பாடத்திட்ட போராட்டத் தீயை அணையாமல் காத்து நிற்கும் பெருமை ம.உ.பா.மை மற்றும் பு.மா.இ.மு வையே சாரும்” என்றார்.

இந்நிகழ்சியில் சுமார் 1000த்திற்க்கும் மேற்பட்டோர் கலந்த கொண்ட நிகழ்ச்சியில் அரங்கம் நிரம்பி வழிந்தது. மாணவர்களும், பொற்றோர்களும் மற்றும் பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு, ம.க.இ.க, பெ.வி.மு தோழர்களும் திரளாக கலந்து கொண்டனர்.  நிகழ்ச்சியின் இடையிடையே புரட்சிகர பாடல்கள் இசைக்கப்பட்டன.   இறுதியாக முறைப்படி சர்வதேசியகீதம் இசைக்கப்பட்டபின் நிகழ்ச்சி நிறைவுற்றது.

படங்களை பெரியதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்

_________________________________________________________________

– தகவல்: புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, சென்னை
_________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

ஒய்யாரக் கொண்டையான தமிழினவாதத்தின் உள்ளே இருப்பது என்ன?

இந்திய அரசின் அனுமார்களால் மீண்டும் தீக்கிரையாக்கப்பட்டு விட்டது ஈழம். மிச்சமிருக்கும் தமிழ் மக்களையும் முள்வேலிக்குள் வைத்து சிறுகச் சிறுக கொலை செய்து கொண்டிருக்கிறது சிங்கள இனவெறி அரசு.

சொல்லில் அடங்காத துயரக்கதைகளைக் கொண்டிருக்கிறது ஈழத்தமிழர்களின் நிலைமை. கண்ணிவெடியை அகற்றுகிறோம் என்ற பெயரில் ஆக்கிரமிப்புக்கு சர்வே எடுக்கவும், ஆட்காட்டிகளை உருவாக்கவும் இராணுவத்தை அனுப்பி வைத்திருக்கிறது இந்திய அரசு.

புலிகள் இயக்கத்தை ஒழித்துக் கட்டவும், சிங்கள இனவெறி அரசின் வெற்றியை உறுதி செய்யவும் இந்திய மேலாதிக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள், தமிழகத்தில் ஈழத் தமிழ் மக்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அனைவர் மத்தியிலும் ஆத்திரத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்தக் கோபம் யாரை நோக்கித் திருப்பப்பட வேண்டும்? இந்தப் படுகொலைக்குத் திட்டம் வகுத்துக் கொடுத்த காங்கிரசு அரசை, அதற்குத் துணை நின்ற தி.மு.க.வை, நம்பவைத்துக் கழுத்தறுத்த அ.தி.மு.க.வை, பச்சோந்தி வேடம் போட்ட பாரதிய ஜனதாவை.. இன்ன பிறரை நோக்கித் திரும்ப வேண்டும்.

இவர்கள் மீதெல்லாம் நம்பிக்கை வைக்குமாறு 1983இல் தொடங்கி நேற்று வரை தமிழக மக்களையும், ஈழத்தமிழ் மக்களையும், புலிகளையும் தவறாக வழிநடத்திப் படுகுழியில் இறக்கியவர்கள் யாரோ அவர்கள் மீது கோபம் வர வேண்டும். மாறாக, தமிழ் தேசியம் பேசுவோர் இந்த இலக்கைத் திசை திருப் பி, மலையாளிகள், கன்னடர்கள், தெலுங்கர்களுக்கு எதிரான கோபத்தைத் தூண்டுவதன் மூலம் தமிழ் மக்களுக்கு “இன உணர்வை’ ஊட்டும் திருப்பணியில் இறங்கியிருக்கிறார்கள்.

“தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே நாராயணனும், வெளியுறவுத் துறைச் செயலர் சிவசங்கர் மேனனும் மலையாளிகள் என்பதனால்தான் இந்திய அரசைத் தவறாக வழிநடத்தி விட்டார்கள்” என்று கூறி இந்திய மேலாதிக்க எதிர்ப்பை மலையாளி எதிர்ப்பாக மாற்றுகிறார்கள். இதன் மூலம் இந்திய அரசு, ஆளும் வர்க்கங்களுக்கு மறைமுகமாக நற்சான்றிதழ் கொடுக்கின்றார்கள். அதிகாரிகள் மலையாளிகள் என்றால், அமைச்சர்கள் தமிழர்களாக இருந்தார்களே அதற்கென்ன சொல்கிறார்கள்?

ப.சிதம்பரத்தில் தொடங்கி, தி.மு.க. அமைச்சர்கள், கடைசி நேர விற்பனையை முடித்துக் கொண்டு கல்லா கட்டிய பாமக ஆகிய தமிழர்கள் அங்கே மட்டைக்கு நாலாய் கிழித்தது என்ன? தமிழர்கள் அமைச்சர்களாக இருந்ததனால் தான் ஈழத்தமிழனுக்கு இந்த கதி என்று சொல்லாமல், இவர்களை சந்தர்ப்பவாதிகள், பதவிப் பித்தர்கள் என்று தனிநபர்களாக விமரிசித்து விட்டு, நாராயணன் முதல் டீக்கடை நாயர் வரை என்று அங்கே மட்டும் ஒரு இனத்துக்கு எதிராக நஞ்சு கக்குவது ஏன்?

கொழும்புக்குப் பறந்து போய் இந்தியாவின் மேலாதிக்கத்தைப் பற்ற வைக்கும் சிவசங்கர் மேனனும், பாதித் தூக்கத்தில் எழுந்து பாய்லர் அடுப்பைப் பற்ற வைக்கும் டீக்கடை மலையாளியும் ஒரே வர்க்கமா? இல்லை இங்கே தமிழர்கள் டீக்கடை வைக்கக் கூடாது என்று யார் தடுத்தார்கள்? மாற்றான் தோட்டத்து மல்லிகை புகழ் சரவணபவன் தமிழ் முதலாளி, மேசை துடைப்பதற்கு தமிழர் அல்லாத மாற்றாரை, நேபாளிப் பையன்களை வைத்திருக்கின்றாரே, அதென்ன தமிழரின் பெருந்தன்மையா? குறைந்த கூலிக்கு ஆள் தேடும் உழைப்புச் சுரண்ட லா?

தமிழனுக்கு ஒன்று என்றால் கேட்க நாதியில்லை என்று அங்கலாய்த்துக் கொள்கிறார்கள் இனவாதிகள். பிற இன மக்களைக் குறைந்த கூலிக்கு கசக்கிப் பிழியும் தமிழ் முதலாளிகளை இவர்கள் எப்போதாவது தட்டிக் கேட்டிருக்கிறார்களா? நாமக்கல் தவிட்டெண்ணெய் ஆலையில் தீ விபத்தில் கருகிச் செத்தார்கள் பீகார் தொழிலாளிகள். மலையாளி டீக்கடைக்காரரைப் பார்த்து காயும் தமிழினவாதிகள், கருகிய பீகார் தொழிலாளிகளின் உழைப்பில் பணம் கொழிக்கும் தமிழ் முதலாளியைக் கண்டு காய்வதில்லையே, இது தமிழின உணர்வா, அல்லது முதலாளித்துவ வர்க்க உணர்வா? ஆதிக்க வர்க்கம் மட்டுமல்ல,

ஆதிக்க சாதித்தன்மையும் தமிழினவாதத்தின் உள்ளடக்கமாக உள்ளது. டீக்கடையில் மலையாளி, உணவு விடுதி யில் கன்னடன், உயர் பதவியில் தெலுங்கன், பிற இனத்தான் என்று ஒவ்வொரு துறைக்கும் லிஸ்ட் வைத்துக் கொண்டு சோற்றுக் கையால் சொடுக்கு போடும் இந்தப் பேர்வழிகள் பீ அள்ளும் தெலுங்கன் லிஸ்டை பீச்சங்கையால் கூடக் காட்டுவதில்லையே! “தமிழன் பீயை தெலுங்கன் அள்ளலாமா?” என்று ஆர்ப்பரிப்பதில்லையே! கக்கூசுக்குள் மட்டும் முக்காமல் முனகாமல் தமிழினவாதம் பக்காவாக வெளியேறும் மர்மமென்ன?

பிற இனமக்களின் ஒடுக்கப்பட்ட பிரிவினர் காலந்தோறும் மலம் அள்ளுவதைக் கூசாமல் ஏற்கும் இனவாதத்தால், டீ போடுவதை மட்டும் தாங்கிக் கொள்ள முடியாதாம்! இனவாதத்திற்குள் ஒளிந் திருக்கும் சாதியக் கண்ணோட்டத்தை, திருப்பூரில் உலகத் தமிழின மாநாட்டில் ஆதித்தமிழர் பேரவையைச் சேர்ந்த ஒரு தோழர் மேடையிலேயே சுட்டிக்காட்டிப் பேச, தமிழ்ச் சான்றோர் விருது வாங்க வந்திருந்த பொள்ளாச்சி மகாலிங்கம் என்ற முதலாளித் தமிழரின் மனம் நோகுமென்றும், இது அநாகரிகமென்றும் அங்கேயே மாவீரன் நெடுமாறன் பேசிய தோழரைக் கண்டித்தது மறக்க முடியாத தமிழ்தேசிய நினைவல்லவா?

தமிழனுக்கு இனவுணர்வு இல்லை என்பது இவர்களது கவலை. அதைக் கெடுத்தவன் யார் மலையாளியா, தெலுங்கனா, கன்னடனா? தமிழ்ச் சமூகத்தில் நீக்கமற வேரோடியிருக்கும் சாதியல்லவா தமிழின உணர்வின் முதல் எதிரி? தமிழர்களுக்குள்ளாகவே எல்லோரும் ஒன்று கிடையாது, சமம் கிடை யாது என்ற நிலை இருக்கும் போது, இதை நேர்மையாகப் பரிசீலித்து, நேர்மறையில் ஆதிக்க வர்க்க, சாதி எதிர்ப்பு என்ற அடிப்படையில் தமிழர்களை ஒன்றுபடுத்தவும், தமிழின ஓர்மைக்கும் போராடுவதுதான் நேர்மையானது. அதை விடுத்து பிற மாநில, தேசிய இன மக்களைத் தமிழின வளர்ச்சிக்குத் தடையாகவும், பகையாகவும் காட்டிக் கொடுப்பது என்பது ஆளும்வர்க்கத்தின் ஐந்தாம் படை வேலை.

எப்படி ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி, பாரதிய ஜனதா கும்பல் சாதியப் பிளவுகளைக் கடந்து இந்துக்களை ஒன்றுதிரட்ட முடியாதென்பதால், முசுலீமையும் கிறித்தவரையும் எதிரியாகக் காட்டி மதவெறிக்கு ஆள் பிடிக்கிறதோ, அதே போல தமிழின ஓர்மைக்குத் தடையாக உள்ள உண்மையான காரணிகளை எதிர்த்துப் போராடும் நேர்மையில்லாத இனவாதிகள் பிற தேசிய இன மக்களை எதிரியாகக் காட்டியே தமிழின ஒற்றுமையை உருவாக்க முயற்சிக்கிறார்கள்.

ஈழத் தமிழன் செத்ததற்கு வடநாட்டு தலித் கேட்டானா என்கிறார் மணியரசன். இங்கிருக்கும் தமிழன் (தலித்) செத்ததற்கு சக தமிழர்கள் என்ன செய்தார்கள்? செந்தட்டி தலித் படுகொலைக்கு தமிழகம் குமுறியதா? கயர்லாஞ்சிக்கு முற்றுகை உண்டா?

பாப்பாபட்டி, கீரிப்பட்டி பிரச்சினையில் ஆதிக்க சாதிவெறியைக் கடைபிடிக்கும் சாதிக்கு இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று ஒரு நிர்ப்பந் தத்தை ம.க.இ.க முன்வைத்தவுடனேயே.. ஆகா இது மறைமுகப் பார்ப்பனியம் என்கிறார் மணியரசன். பார்ப்பன தேசிய நாயகன் ராமனை தமிழ் பழங்குடி கடவுள் என்று அவர் கொண்டாடுவதும், பார்ப்பன இந்திய தேசியத்தைக் கட்டிக் காக்கும் ஒரு அம்சமான சாதியமைப்பு முறையை ஒழிக்காமல் தமிழ்த் தேசியம் பேசுவதும் நேர்முகப் பார்ப்பனியம் அல்லவா?!

இந்த லட்சணத்தில் வடநாட்டு தலித் மாயாவதி போன்றவர்கள் இந்தியா என்பதை ஏற்றதன் மூலம் பார்ப்பனியத்தை ஏற்று விட்டார்கள்.. எனவே இனி தமிழன் யாரையும் நம்பிப் பயனில்லை. உலகெங்கும் உள்ள தமிழன் தானே போராடுவதைத் தவிர வேறு வழியில்லை. .. வா.. வா.. தமிழ் நாட்டு விடுதலைக்கு தயாராவோம் என்று துண்டைப் போட்டுத் தாண்டுகிறார் மணியரசன்.

இங்கிருக்கும் தனிச்சுடுகாடு, தனிக்குவளை, தனிக்கோவில், உள்ளிட்டவைகளைத் தகர்க்க கொங்கு வேளாளக் கவுண்டர்களையும், தேவரையும், இன்ன பிற ஆதிக்கசாதி வெறியையும் அகற்றுவோம் வா! அதுவே தமிழ் தேசியக் கடமைக்கு முதற்படி என்று வீதியில் இறங்கத் தயாராக இல்லாமல், வடக்கு முதல் தெற்கு வரை இந்திய தேசியமாகக் காட்சியளிக்கும் சாதிவெறியைத் தகர்க்காமல் பிற தேசிய இன மக்களைப் பகையாகக் காட்டி தமிழ்த் தேசியத்தைக் கட்டித் தூக்குவதற்காக சாதிப் பூணூலையே இனமாகத் திரிப்பதற்கு இவர்கள் படாதபாடு படுகிறார்கள்.

“தமிழன் வாழாத நாடில்லை.. ஆனால் தமிழனுக்கென்று ஒரு நாடில்லை..” என்பது இவர்களுடைய முத்திரை முழக்கம். மலையாளிக்கும், தெலுங்கனுக்கும், மராத்தியனுக்கும் எல்லா தேசிய இனமக்களுக்கும் தனித்தனியாக ஒரு நாடு இருப்பது போலவும், தமிழனுக்குத்தான் தனிநாடு தரவில்லை போலவும் என்ன ஒரு பம்மாத்து? இந்தியாவின் எல்லா இனங்களின் மீதும் தான் இந்து தேசிய ஒடுக்குமுறை இருக்கிறது, சுய நிர்ணய உரிமை இல்லை. தமிழன் மட்டுமா, பல்வேறு இன மக்களும் தான் இந்தியா முழுவதும், ஏன் இந்தியாவைத் தாண்டியும் எல்லாத் திசைகளிலும் நாடோடிகளாகப் பிழைப்பு தேடி ஓடுகிறார்கள்.

பீகார், ஒரிசா தொழிலாளிகள் தமிழகத்திலும், தமிழர்கள் மகாராஷ்டிரா கடலை மிட்டாய் கம்பெனிகளிலும், ஆந்திரா, பெங்களூரு குவாரிகளிலும், நேபாளிகள் கொட்டாம்பட்டியிலும், ஆசிய நாட்டு மக்கள் வளைகுடாவிலும் என இனம் கடந்து, எல்லை கடந்து மக்களை விரட்டுகிறது மூலதனம். உலகமயமாக்கத்தால் விவசாயமும் உள்ளூர் தொழில்களும் அழிக்கப்பட்டு உழைக்கும் மக்கள் விசிறியடிக்கப்படுவது தமிழனுக்கு மட்டுமா நடக்கின்றது? இந்த நிலைமையை மாற்ற, யதார்த்தத்தில் வர்க்கமாக மக்களைத் திரட்டுவதற்குப் பதிலாக, “தமிழா.. தமிழா” என்ற தனியாவர்த்தனம் வாசித்து என்ன பயன்?

“வந்தாரை வாழவைத்த தமிழ்நாடு இது! இன்று தமிழன் கூலிவேலைக்கு கேரளா போகின்றான்” சொந்த மண்ணில் வாழ முடியாமல் பிழைப்பு தேடி ஓடும்படி தமிழகத்தை விட்டு அவனைப் பிடித்துத் தள்ளியது யாரோ அவர்களை எதிர்த்தல்லவா போராட வேண்டும்? யார் பிடித்துத் தள்ளியது? மலையாளியா, கன்னடனா? கேரளா எஸ்டேட்டுகளுக்கு வேலைக்குப் போகும் தேனி மாவட்ட விவசாயிகளைக் கேட்டுப் பாருங்கள். “இங்கேயை விட அங்கே கூலி அதிகம், தொழிற்சங்கம் இருப்பதால் ஏதாவது ஒன்று என்றால் தட்டிக் கேட்கிறார்கள், மரியாதை இருக்கிறது” என்று எதார்த்தமாக அவர்களுடைய அனுபவத்தை விளக்குவார்கள். இந்த உழைப்பாளித் தமிழர்களெல்லாம் இனத்துரோகிகளா?

வந்த தொழிலாளிகளையெல்லாம் எந்த மாநிலத்து முதலாளியும் கசக்கிப் பிழிவதுதான் உண்மை. சென்னை பாலம் கட்டும் வேலைகளிலும் வடசென்னை கனரகத் தொழில்களிலும் வாட்டி வதைக்கப்பட்டு, உயிரையும் இழக்கும் நிலை தான் வடநாட்டுத் தொழிலாளர்களுக்கு. இதே நிலைதான் வேறு மாநிலம், நாடுகளுக்குப் பிழைக்கப் போகும் தமிழ்த் தொழிலாளிகளுக்கும்!

“வந்தாரையெல்லாம் வாழ வைத்தது தமிழகம்” என்று வசனம் வேறு! படையெடுத்து வந்த மன்னர்களையும், பார்ப்பனர்களையும் ஆதிக்க சாதிகளையும் அவர்களது கலாச்சாரத்தையும் பன்னாட்டு மூலதனத்தையும் வாழ வைத்துவிட்டு இந்த மானக்கேட்டை பெருந்தன்மை போல சித்தரித்துக் கொள்கிறார்கள். அன்றைய மன்னர்கள் மட்டுமா, இன்றைய கல்வி வள்ளல்களும் கூடத்தான் வந்தாரை வாழவைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள சுயநிதிக் கல்லூரிகளில் தமிழர்களை மட்டுமே சேர்க்காமல், எல்லா இனத்துக்காரனுக்கும், வெளிநாட்டாருக்கும் தாராளமாக சீட்டு கொடுக்கிறார்களே, இது வந்தாரை வாழ வைக்கும் பண்பா, அல்லது “வந்தவரை’ இலாபம் என்று பணத்தை அள்ளும் வணிகமா? கல்விக் கொள்ளைக்கு வட நாட்டு மாணவர்களை தமிழ் முதலாளி வளைத்துப் பிடிப்பதில் வெளிப்படுவது வர்க்கமா? இனமா?

சுரண்டும் முதலாளி தமிழனாய் இருந்தால் புரவலர் என்று பல்லைக் காட்டுவது, சுரண்டப்படும் தொழிலாளி வேறு இனம் என்பதால் பல்லைக் கடிப்பது இதுதான் தமிழ்த்தேசிய குடி நாயகப் பண்போ?

தம்மை யாரும் ஆதிக்கம் செய்யலாகாது என்று கருதுபவர்கள், நாம் பிறரை ஆதிக்கம் செய்யலாகாது என்றும் கருதவேண் டும். அத்தகைய ஆதிக்க மரபுகளை இழிவாகவும் கருதி நிராகரிக்கவும் வேண்டும். தமிழன் அன்று கங்கை கொண்டான், கடாரம் கொண்டான், இமயத்தில் புலிக்கொடி நாட்டினான்.. என்று ஊரை அடித்து உலையில் போட்டதைப் பெருமையாகப் போற்றுகிறார்கள். யவனப் பெண்களை அடிமையாக வாங்கி அரண்மனை, அந்தப்புரங்களில் “கொண்டி மகளிர்’ ஆக்கியதை எண்ணிப் புளகாங்கிக்கிறார்கள்.

“பேராற்றல், பெரும்படை, வாள்வீச்சு, வேல்வீச்சு எல்லாமிருந்தும், ஏங்க பின்னே தமிழன் ஆட்சி வீழ்ந்தது?” என்று கேட்டால், “பார்ப்பான் பொம்பளையக் காட்டி மயக்கிட்டான்’ என்று பதிலளிக்கிறார்கள் “ஆம்பிள சிங்கம்தான்.. ஆனா பொம்பள விசயத்துல வீக்கு!” என்பது போல. மன்னர்கள் என்றழைக்கப்படும் இத்தகைய திருடர்களையும் பொறுக்கிகளையும் இனப்பெருமையின் நாயகர்களாகச் சித்தரிப்பவர்களிடமிருந்து ஒரு முற்போக்கான இன விடுதலையை எதிர்பார்க்க முடியுமா?

வரலாற்றில் தேசியம், தேசிய உணர்வு என்பதெல்லாம், முடியாட்சியையும் அதன் எச்சங்களை அகற்றி, நிலவுடைமை ஆதிக்கத்தையும் அதன் மரபுகளையும், மத நிறுவனங்களின் ஆதிக்கத்தையும் ஒழித்துக் கட்டிய பின்னர்தான் வந்திருக்கிறது. பிரெஞ்சுப் புரட்சியைக் கொண்டாடுவோர் லூயி மன்னர் பரம்பரயைத் தமது மரபாகப் போற்றுவதில்லை. அந்த மரபை ஒழித்ததிலிருந்துதான் பிரெஞ்சு தேசியம் வந்திருக்கிறது. இங்கோ தமிழ்த் தேசியவாதிகளின் எண்ணமும், கருத்தும் இன்னும் மன்னராட்சி மயக்கத்திலிருந்து விடுதலை பெறவில்லை. புரட்சிகரமான தேசிய உணர்வைத் தோற்றுவிக்கத் தேவையான சுயேச்சையான முதலாளித்துவம் இந்தியாவில் வளரவில்லை.

ஆங்கிலக் காலனியாதிக்கவாதிகளால் மேலிருந்து திணிக்கப்பட்ட முதலாளித்துவ அரசு வடிவமும், வெள்ளையனுக்குத் துணை நின்ற தரகு முதலாளித்துவ வர்க்கமும், அவர்களுடைய இந்து தேசியமும் எந்த இனத்திலும் ஜனநாயகப்பூர்வமான இன உணர்வைத் தோற்றுவிக்கவில்லை. இதனை இனிமேல்தான் உருவாக்க வேண்டியிருக்கிறது என்பதே உண்மை. அதன் எதிரிகளான ஏகாதிபத்தியம், தரகு முதலாளித்துவம், நிலப்பிரபுத்துவம் ஆகியவற்றை எதிர்த்துப் போராடாமல், மலையாளி.. கன்னடன் என்று இனவெறியைத் தூண்டி விடுவதுதான் இவர்களது அரசியலாக இருக்கிறது.

தமிழினம் தனது உரிமைகளை ஒடுக்கும் அரசுக்கு எதிராகப் போராடுவதன் மூலமும், பிற தேசிய இன மக்களிடம் தங்களது நியாயத்தை வலியுறுத்தி அய்க்கியப்படுவதன் மூலமுமே தன்னை பலப்படுத்திக் கொள்ள முடியும். “இதைச் செய்யத் தவறுவதுடன் மலையாளி, கன்னடன், தெலுங்கன் என்று மக்களுக்கு இடையிலான பிளவையும், பிரிவையும் அதிகப்படுத்துவது ஆளும் வர்க்கத்துக்கு உதவுவதாகும்” என்று நாம் கூறினால், உடனே, “தமிழன்னா இளிச்சவாயனாடா! பட்டத்து யானையை அவுத்து விடுங்கடா” என்று ஆர்ப்பரிக்கிறார்கள். எப்போது வாயைத் திறந்தாலும் “அவன் மலையாளி, இவன் கன்னடன், அதோ பாரு தெலுங்கன்” என்று உசுப்பேற்றி விட்டு அடிவாங்கும் போது மட்டும் “அவன் கேட்டானா? இவன் கேட்டானா?” என்று பேசுவதில் அர்த்தமுள்ளதா?

இன்னும் ஒருபடி மேலே போய், “ராஜ் தாக்கரே பாணிதான் சரி. அவன் பீகாரிகளை அடிச்சு துரத்தியது மாதிரி இங்கேயும் நடக்க வேண்டும்” என்கிறார்கள். இந்த மனநிலை ஒரு குட்டி பாசிசம் இல்லையா? மும்பைக்குப் பிழைக்க வரும் பீகார் தொழிலாளிகளை பிய்த்து உதறும் சண்டியர் ராஜ் தாக்கரே யார்? பால் தாக்கரேக்கு போட்டியாக முகேஷ் அம்பானியால் வளர்த்து விடப்படும் ஏவல் நாய். குஜராத்திலிருந்து வந்த பனியாவும், இந்தியாவையே கொள்ளையடிக்கும் தரகு முதலாளியுமான அம்பானியை அனுமதித்து விட்டு, அவனிட ம் காசும் வாங்கிக்கொண்டு குரைக்கும் இந்தப் பிராணி, மராத்திய இனவுணர்வின் எடுத்துக்காட்டா, தரகு முதலாளியின் கைக்கூலியா? ராஜ் தாக்கரேயைப் பார்த்துப் புல்லரிக்கும் இவர்களுக்கு வட்டாள் நாகராஜுவப் பார்த்தும் புல்லரிக்குமா?

ராஜ் தாக்கரேயும், வட்டாள் நாகராஜுவும் ஒரு வகையில் யோக்கியர்கள். தங்களைப் பச்சையான ஆளும்வர்க்க இனவெறியர்களாக மட்டும்தான் அவர்கள் அடையாளம் காட்டிக் கொள்கிறார்கள். மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் படத்தை வைத்துக் கொண்டு தங்களைப் பொதுவுடைமைக் கட்சி என்று கூறிக்கொள்வதில்லை. வர்க்க அரசியலுக்கு நேர் எதிரான இனவாத அரசியலைப் பேசிக்கொண்டே, பொதுவுடைமைக் கட்சி போல பம்மாத்துப் பண்ணும் இந்த வேலையைத்தான் இலங்கையில் ஜனதா விமுக்தி பெரமுன செய்கின்றது.

இடதுசாரி வேடமிட்ட இந்த இனவாதிகளுக்கு ஈழம் உட்பட எந்த ஒரு விவாதத்திலும், நாம் வர்க்கம் என்று சொன்னா எரிச்சல் வருகிறது. ஈழ விடுதலையை நசுக்குவதில் இந்திய அரசின் வர்க்கநலன் இருக்கிறது என்றால், இது போகாத ஊருக்கு வழி என்று நம்மைப் புறம் பேசி விட்டு, ஈழ விடுதலையை வாங்கிவர இவர்கள் போகும் வழி கடைசியில் போயஸ் கார்டனில் போய் முடிகிறது. ஈழமாக இருக்கட்டும், காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு பிரச்சினையாக இருக்கட்டும், தமிழ் மக்களின் உரிமைகளுக்கான போராட்டம் நம்மைப் போல உரிமைகள் மறுக்கப்படும், ஒட்டச் சுரண்ட ப்படும் பிற தேசிய இன மக்களையும் விலக்காத தன்மையைக் கொண்டிருக்க வேண்டும். தமிழகத்தின் நீர் உரிமையைப் பிடுங்கும் பிற மாநில அரசுகள், அரசியல் நோக்கத்துக்காக இனவுணர்வை விசிறி விட்டாலும், அந்தத் தண்ணீரை மக்களுக்கு வாரி வழங்குவதில்லை.

மாறாக அந்த மாநில தொழில் முதலைகளும், பன்னாட்டுக் கம்பெனிகளுமே இதனை உறிஞ்சுகிறார்கள் என்பது எதார்த்தம். இங்கே சென்னைக் குடிநீருக்கு என்று கொண்டுவரப்படும் வீராணம் தண்ணீர் ஐ.டி பார்க்குகளுக்கும், புதிய பணக்கார சாடிலைட் நகரங்களுக்கும் திருப்பி விடப்படுவதைப் போலத்தான்.

வர்க்க ஒடுக்குமுறையின் மருவிய வடிவமாக இன ஒடுக்குமுறை வெளிப்படுவதை இனவாதிகள் அங்கீகரிப்பதில்லை. பன்னாட்டு தேசங்கடந்த மூலதனத்தின் கொலைக்கருவியாக உள்ள இந்த அரசை, ஏகாதிபத்திய அடிமைத்தளையை அழித்தொழிக்கும் பாட்டாளி வர்க்க அரசியல் கண்ணோட்டத்தையும் அவர்கள் ஏற்பதில்லை. அதனால்தான், ஒபாமாவிடம் பூங்கொத்து தந்தோ, ஜெயலலிதா, அத்வானியின் காது கடித்தோ இன விடுதலையைச் சாதிக்க முடியும் என்று நம்புகிறார்கள்.

தமிழன் ஒன்றுபடத் தடையாக இருக்கும் சமூகத் தடைகளான சாதி ஆதிக்கம், பார்ப்பன மதவெறி, குறுந்தேசிய இனவாதம் ஆகியவற்றுக்கு எதிராக மக்களைத் திரட்டாமல், “போதையில் கொஞ்சுவானாம், சுதி இறங்குனா புள்ளையப் போட்டு அடிப்பானாம்” என்ற கதையாக, ஒரு மூச்சு பழம்பெருமையும் சவடாலும் பேசுகிறார்கள், பிறகு ” தமிழனுக்கு சூடு இல்லை, சொரணையில்லை” என்று வசை பாடத் தொடங்குகிறார்கள்.

______________________________________________

· பரிதி, புதிய கலாச்சாரம் – செப்டம்பர் 2009
_______________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்