Thursday, October 24, 2019
முகப்பு கட்சிகள் இதர கட்சிகள் ஒய்யாரக் கொண்டையான தமிழினவாதத்தின் உள்ளே இருப்பது என்ன?

ஒய்யாரக் கொண்டையான தமிழினவாதத்தின் உள்ளே இருப்பது என்ன?

-

இந்திய அரசின் அனுமார்களால் மீண்டும் தீக்கிரையாக்கப்பட்டு விட்டது ஈழம். மிச்சமிருக்கும் தமிழ் மக்களையும் முள்வேலிக்குள் வைத்து சிறுகச் சிறுக கொலை செய்து கொண்டிருக்கிறது சிங்கள இனவெறி அரசு.

சொல்லில் அடங்காத துயரக்கதைகளைக் கொண்டிருக்கிறது ஈழத்தமிழர்களின் நிலைமை. கண்ணிவெடியை அகற்றுகிறோம் என்ற பெயரில் ஆக்கிரமிப்புக்கு சர்வே எடுக்கவும், ஆட்காட்டிகளை உருவாக்கவும் இராணுவத்தை அனுப்பி வைத்திருக்கிறது இந்திய அரசு.

புலிகள் இயக்கத்தை ஒழித்துக் கட்டவும், சிங்கள இனவெறி அரசின் வெற்றியை உறுதி செய்யவும் இந்திய மேலாதிக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள், தமிழகத்தில் ஈழத் தமிழ் மக்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அனைவர் மத்தியிலும் ஆத்திரத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்தக் கோபம் யாரை நோக்கித் திருப்பப்பட வேண்டும்? இந்தப் படுகொலைக்குத் திட்டம் வகுத்துக் கொடுத்த காங்கிரசு அரசை, அதற்குத் துணை நின்ற தி.மு.க.வை, நம்பவைத்துக் கழுத்தறுத்த அ.தி.மு.க.வை, பச்சோந்தி வேடம் போட்ட பாரதிய ஜனதாவை.. இன்ன பிறரை நோக்கித் திரும்ப வேண்டும்.

இவர்கள் மீதெல்லாம் நம்பிக்கை வைக்குமாறு 1983இல் தொடங்கி நேற்று வரை தமிழக மக்களையும், ஈழத்தமிழ் மக்களையும், புலிகளையும் தவறாக வழிநடத்திப் படுகுழியில் இறக்கியவர்கள் யாரோ அவர்கள் மீது கோபம் வர வேண்டும். மாறாக, தமிழ் தேசியம் பேசுவோர் இந்த இலக்கைத் திசை திருப் பி, மலையாளிகள், கன்னடர்கள், தெலுங்கர்களுக்கு எதிரான கோபத்தைத் தூண்டுவதன் மூலம் தமிழ் மக்களுக்கு “இன உணர்வை’ ஊட்டும் திருப்பணியில் இறங்கியிருக்கிறார்கள்.

“தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே நாராயணனும், வெளியுறவுத் துறைச் செயலர் சிவசங்கர் மேனனும் மலையாளிகள் என்பதனால்தான் இந்திய அரசைத் தவறாக வழிநடத்தி விட்டார்கள்” என்று கூறி இந்திய மேலாதிக்க எதிர்ப்பை மலையாளி எதிர்ப்பாக மாற்றுகிறார்கள். இதன் மூலம் இந்திய அரசு, ஆளும் வர்க்கங்களுக்கு மறைமுகமாக நற்சான்றிதழ் கொடுக்கின்றார்கள். அதிகாரிகள் மலையாளிகள் என்றால், அமைச்சர்கள் தமிழர்களாக இருந்தார்களே அதற்கென்ன சொல்கிறார்கள்?

ப.சிதம்பரத்தில் தொடங்கி, தி.மு.க. அமைச்சர்கள், கடைசி நேர விற்பனையை முடித்துக் கொண்டு கல்லா கட்டிய பாமக ஆகிய தமிழர்கள் அங்கே மட்டைக்கு நாலாய் கிழித்தது என்ன? தமிழர்கள் அமைச்சர்களாக இருந்ததனால் தான் ஈழத்தமிழனுக்கு இந்த கதி என்று சொல்லாமல், இவர்களை சந்தர்ப்பவாதிகள், பதவிப் பித்தர்கள் என்று தனிநபர்களாக விமரிசித்து விட்டு, நாராயணன் முதல் டீக்கடை நாயர் வரை என்று அங்கே மட்டும் ஒரு இனத்துக்கு எதிராக நஞ்சு கக்குவது ஏன்?

கொழும்புக்குப் பறந்து போய் இந்தியாவின் மேலாதிக்கத்தைப் பற்ற வைக்கும் சிவசங்கர் மேனனும், பாதித் தூக்கத்தில் எழுந்து பாய்லர் அடுப்பைப் பற்ற வைக்கும் டீக்கடை மலையாளியும் ஒரே வர்க்கமா? இல்லை இங்கே தமிழர்கள் டீக்கடை வைக்கக் கூடாது என்று யார் தடுத்தார்கள்? மாற்றான் தோட்டத்து மல்லிகை புகழ் சரவணபவன் தமிழ் முதலாளி, மேசை துடைப்பதற்கு தமிழர் அல்லாத மாற்றாரை, நேபாளிப் பையன்களை வைத்திருக்கின்றாரே, அதென்ன தமிழரின் பெருந்தன்மையா? குறைந்த கூலிக்கு ஆள் தேடும் உழைப்புச் சுரண்ட லா?

தமிழனுக்கு ஒன்று என்றால் கேட்க நாதியில்லை என்று அங்கலாய்த்துக் கொள்கிறார்கள் இனவாதிகள். பிற இன மக்களைக் குறைந்த கூலிக்கு கசக்கிப் பிழியும் தமிழ் முதலாளிகளை இவர்கள் எப்போதாவது தட்டிக் கேட்டிருக்கிறார்களா? நாமக்கல் தவிட்டெண்ணெய் ஆலையில் தீ விபத்தில் கருகிச் செத்தார்கள் பீகார் தொழிலாளிகள். மலையாளி டீக்கடைக்காரரைப் பார்த்து காயும் தமிழினவாதிகள், கருகிய பீகார் தொழிலாளிகளின் உழைப்பில் பணம் கொழிக்கும் தமிழ் முதலாளியைக் கண்டு காய்வதில்லையே, இது தமிழின உணர்வா, அல்லது முதலாளித்துவ வர்க்க உணர்வா? ஆதிக்க வர்க்கம் மட்டுமல்ல,

ஆதிக்க சாதித்தன்மையும் தமிழினவாதத்தின் உள்ளடக்கமாக உள்ளது. டீக்கடையில் மலையாளி, உணவு விடுதி யில் கன்னடன், உயர் பதவியில் தெலுங்கன், பிற இனத்தான் என்று ஒவ்வொரு துறைக்கும் லிஸ்ட் வைத்துக் கொண்டு சோற்றுக் கையால் சொடுக்கு போடும் இந்தப் பேர்வழிகள் பீ அள்ளும் தெலுங்கன் லிஸ்டை பீச்சங்கையால் கூடக் காட்டுவதில்லையே! “தமிழன் பீயை தெலுங்கன் அள்ளலாமா?” என்று ஆர்ப்பரிப்பதில்லையே! கக்கூசுக்குள் மட்டும் முக்காமல் முனகாமல் தமிழினவாதம் பக்காவாக வெளியேறும் மர்மமென்ன?

பிற இனமக்களின் ஒடுக்கப்பட்ட பிரிவினர் காலந்தோறும் மலம் அள்ளுவதைக் கூசாமல் ஏற்கும் இனவாதத்தால், டீ போடுவதை மட்டும் தாங்கிக் கொள்ள முடியாதாம்! இனவாதத்திற்குள் ஒளிந் திருக்கும் சாதியக் கண்ணோட்டத்தை, திருப்பூரில் உலகத் தமிழின மாநாட்டில் ஆதித்தமிழர் பேரவையைச் சேர்ந்த ஒரு தோழர் மேடையிலேயே சுட்டிக்காட்டிப் பேச, தமிழ்ச் சான்றோர் விருது வாங்க வந்திருந்த பொள்ளாச்சி மகாலிங்கம் என்ற முதலாளித் தமிழரின் மனம் நோகுமென்றும், இது அநாகரிகமென்றும் அங்கேயே மாவீரன் நெடுமாறன் பேசிய தோழரைக் கண்டித்தது மறக்க முடியாத தமிழ்தேசிய நினைவல்லவா?

தமிழனுக்கு இனவுணர்வு இல்லை என்பது இவர்களது கவலை. அதைக் கெடுத்தவன் யார் மலையாளியா, தெலுங்கனா, கன்னடனா? தமிழ்ச் சமூகத்தில் நீக்கமற வேரோடியிருக்கும் சாதியல்லவா தமிழின உணர்வின் முதல் எதிரி? தமிழர்களுக்குள்ளாகவே எல்லோரும் ஒன்று கிடையாது, சமம் கிடை யாது என்ற நிலை இருக்கும் போது, இதை நேர்மையாகப் பரிசீலித்து, நேர்மறையில் ஆதிக்க வர்க்க, சாதி எதிர்ப்பு என்ற அடிப்படையில் தமிழர்களை ஒன்றுபடுத்தவும், தமிழின ஓர்மைக்கும் போராடுவதுதான் நேர்மையானது. அதை விடுத்து பிற மாநில, தேசிய இன மக்களைத் தமிழின வளர்ச்சிக்குத் தடையாகவும், பகையாகவும் காட்டிக் கொடுப்பது என்பது ஆளும்வர்க்கத்தின் ஐந்தாம் படை வேலை.

எப்படி ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி, பாரதிய ஜனதா கும்பல் சாதியப் பிளவுகளைக் கடந்து இந்துக்களை ஒன்றுதிரட்ட முடியாதென்பதால், முசுலீமையும் கிறித்தவரையும் எதிரியாகக் காட்டி மதவெறிக்கு ஆள் பிடிக்கிறதோ, அதே போல தமிழின ஓர்மைக்குத் தடையாக உள்ள உண்மையான காரணிகளை எதிர்த்துப் போராடும் நேர்மையில்லாத இனவாதிகள் பிற தேசிய இன மக்களை எதிரியாகக் காட்டியே தமிழின ஒற்றுமையை உருவாக்க முயற்சிக்கிறார்கள்.

ஈழத் தமிழன் செத்ததற்கு வடநாட்டு தலித் கேட்டானா என்கிறார் மணியரசன். இங்கிருக்கும் தமிழன் (தலித்) செத்ததற்கு சக தமிழர்கள் என்ன செய்தார்கள்? செந்தட்டி தலித் படுகொலைக்கு தமிழகம் குமுறியதா? கயர்லாஞ்சிக்கு முற்றுகை உண்டா?

பாப்பாபட்டி, கீரிப்பட்டி பிரச்சினையில் ஆதிக்க சாதிவெறியைக் கடைபிடிக்கும் சாதிக்கு இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று ஒரு நிர்ப்பந் தத்தை ம.க.இ.க முன்வைத்தவுடனேயே.. ஆகா இது மறைமுகப் பார்ப்பனியம் என்கிறார் மணியரசன். பார்ப்பன தேசிய நாயகன் ராமனை தமிழ் பழங்குடி கடவுள் என்று அவர் கொண்டாடுவதும், பார்ப்பன இந்திய தேசியத்தைக் கட்டிக் காக்கும் ஒரு அம்சமான சாதியமைப்பு முறையை ஒழிக்காமல் தமிழ்த் தேசியம் பேசுவதும் நேர்முகப் பார்ப்பனியம் அல்லவா?!

இந்த லட்சணத்தில் வடநாட்டு தலித் மாயாவதி போன்றவர்கள் இந்தியா என்பதை ஏற்றதன் மூலம் பார்ப்பனியத்தை ஏற்று விட்டார்கள்.. எனவே இனி தமிழன் யாரையும் நம்பிப் பயனில்லை. உலகெங்கும் உள்ள தமிழன் தானே போராடுவதைத் தவிர வேறு வழியில்லை. .. வா.. வா.. தமிழ் நாட்டு விடுதலைக்கு தயாராவோம் என்று துண்டைப் போட்டுத் தாண்டுகிறார் மணியரசன்.

இங்கிருக்கும் தனிச்சுடுகாடு, தனிக்குவளை, தனிக்கோவில், உள்ளிட்டவைகளைத் தகர்க்க கொங்கு வேளாளக் கவுண்டர்களையும், தேவரையும், இன்ன பிற ஆதிக்கசாதி வெறியையும் அகற்றுவோம் வா! அதுவே தமிழ் தேசியக் கடமைக்கு முதற்படி என்று வீதியில் இறங்கத் தயாராக இல்லாமல், வடக்கு முதல் தெற்கு வரை இந்திய தேசியமாகக் காட்சியளிக்கும் சாதிவெறியைத் தகர்க்காமல் பிற தேசிய இன மக்களைப் பகையாகக் காட்டி தமிழ்த் தேசியத்தைக் கட்டித் தூக்குவதற்காக சாதிப் பூணூலையே இனமாகத் திரிப்பதற்கு இவர்கள் படாதபாடு படுகிறார்கள்.

“தமிழன் வாழாத நாடில்லை.. ஆனால் தமிழனுக்கென்று ஒரு நாடில்லை..” என்பது இவர்களுடைய முத்திரை முழக்கம். மலையாளிக்கும், தெலுங்கனுக்கும், மராத்தியனுக்கும் எல்லா தேசிய இனமக்களுக்கும் தனித்தனியாக ஒரு நாடு இருப்பது போலவும், தமிழனுக்குத்தான் தனிநாடு தரவில்லை போலவும் என்ன ஒரு பம்மாத்து? இந்தியாவின் எல்லா இனங்களின் மீதும் தான் இந்து தேசிய ஒடுக்குமுறை இருக்கிறது, சுய நிர்ணய உரிமை இல்லை. தமிழன் மட்டுமா, பல்வேறு இன மக்களும் தான் இந்தியா முழுவதும், ஏன் இந்தியாவைத் தாண்டியும் எல்லாத் திசைகளிலும் நாடோடிகளாகப் பிழைப்பு தேடி ஓடுகிறார்கள்.

பீகார், ஒரிசா தொழிலாளிகள் தமிழகத்திலும், தமிழர்கள் மகாராஷ்டிரா கடலை மிட்டாய் கம்பெனிகளிலும், ஆந்திரா, பெங்களூரு குவாரிகளிலும், நேபாளிகள் கொட்டாம்பட்டியிலும், ஆசிய நாட்டு மக்கள் வளைகுடாவிலும் என இனம் கடந்து, எல்லை கடந்து மக்களை விரட்டுகிறது மூலதனம். உலகமயமாக்கத்தால் விவசாயமும் உள்ளூர் தொழில்களும் அழிக்கப்பட்டு உழைக்கும் மக்கள் விசிறியடிக்கப்படுவது தமிழனுக்கு மட்டுமா நடக்கின்றது? இந்த நிலைமையை மாற்ற, யதார்த்தத்தில் வர்க்கமாக மக்களைத் திரட்டுவதற்குப் பதிலாக, “தமிழா.. தமிழா” என்ற தனியாவர்த்தனம் வாசித்து என்ன பயன்?

“வந்தாரை வாழவைத்த தமிழ்நாடு இது! இன்று தமிழன் கூலிவேலைக்கு கேரளா போகின்றான்” சொந்த மண்ணில் வாழ முடியாமல் பிழைப்பு தேடி ஓடும்படி தமிழகத்தை விட்டு அவனைப் பிடித்துத் தள்ளியது யாரோ அவர்களை எதிர்த்தல்லவா போராட வேண்டும்? யார் பிடித்துத் தள்ளியது? மலையாளியா, கன்னடனா? கேரளா எஸ்டேட்டுகளுக்கு வேலைக்குப் போகும் தேனி மாவட்ட விவசாயிகளைக் கேட்டுப் பாருங்கள். “இங்கேயை விட அங்கே கூலி அதிகம், தொழிற்சங்கம் இருப்பதால் ஏதாவது ஒன்று என்றால் தட்டிக் கேட்கிறார்கள், மரியாதை இருக்கிறது” என்று எதார்த்தமாக அவர்களுடைய அனுபவத்தை விளக்குவார்கள். இந்த உழைப்பாளித் தமிழர்களெல்லாம் இனத்துரோகிகளா?

வந்த தொழிலாளிகளையெல்லாம் எந்த மாநிலத்து முதலாளியும் கசக்கிப் பிழிவதுதான் உண்மை. சென்னை பாலம் கட்டும் வேலைகளிலும் வடசென்னை கனரகத் தொழில்களிலும் வாட்டி வதைக்கப்பட்டு, உயிரையும் இழக்கும் நிலை தான் வடநாட்டுத் தொழிலாளர்களுக்கு. இதே நிலைதான் வேறு மாநிலம், நாடுகளுக்குப் பிழைக்கப் போகும் தமிழ்த் தொழிலாளிகளுக்கும்!

“வந்தாரையெல்லாம் வாழ வைத்தது தமிழகம்” என்று வசனம் வேறு! படையெடுத்து வந்த மன்னர்களையும், பார்ப்பனர்களையும் ஆதிக்க சாதிகளையும் அவர்களது கலாச்சாரத்தையும் பன்னாட்டு மூலதனத்தையும் வாழ வைத்துவிட்டு இந்த மானக்கேட்டை பெருந்தன்மை போல சித்தரித்துக் கொள்கிறார்கள். அன்றைய மன்னர்கள் மட்டுமா, இன்றைய கல்வி வள்ளல்களும் கூடத்தான் வந்தாரை வாழவைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள சுயநிதிக் கல்லூரிகளில் தமிழர்களை மட்டுமே சேர்க்காமல், எல்லா இனத்துக்காரனுக்கும், வெளிநாட்டாருக்கும் தாராளமாக சீட்டு கொடுக்கிறார்களே, இது வந்தாரை வாழ வைக்கும் பண்பா, அல்லது “வந்தவரை’ இலாபம் என்று பணத்தை அள்ளும் வணிகமா? கல்விக் கொள்ளைக்கு வட நாட்டு மாணவர்களை தமிழ் முதலாளி வளைத்துப் பிடிப்பதில் வெளிப்படுவது வர்க்கமா? இனமா?

சுரண்டும் முதலாளி தமிழனாய் இருந்தால் புரவலர் என்று பல்லைக் காட்டுவது, சுரண்டப்படும் தொழிலாளி வேறு இனம் என்பதால் பல்லைக் கடிப்பது இதுதான் தமிழ்த்தேசிய குடி நாயகப் பண்போ?

தம்மை யாரும் ஆதிக்கம் செய்யலாகாது என்று கருதுபவர்கள், நாம் பிறரை ஆதிக்கம் செய்யலாகாது என்றும் கருதவேண் டும். அத்தகைய ஆதிக்க மரபுகளை இழிவாகவும் கருதி நிராகரிக்கவும் வேண்டும். தமிழன் அன்று கங்கை கொண்டான், கடாரம் கொண்டான், இமயத்தில் புலிக்கொடி நாட்டினான்.. என்று ஊரை அடித்து உலையில் போட்டதைப் பெருமையாகப் போற்றுகிறார்கள். யவனப் பெண்களை அடிமையாக வாங்கி அரண்மனை, அந்தப்புரங்களில் “கொண்டி மகளிர்’ ஆக்கியதை எண்ணிப் புளகாங்கிக்கிறார்கள்.

“பேராற்றல், பெரும்படை, வாள்வீச்சு, வேல்வீச்சு எல்லாமிருந்தும், ஏங்க பின்னே தமிழன் ஆட்சி வீழ்ந்தது?” என்று கேட்டால், “பார்ப்பான் பொம்பளையக் காட்டி மயக்கிட்டான்’ என்று பதிலளிக்கிறார்கள் “ஆம்பிள சிங்கம்தான்.. ஆனா பொம்பள விசயத்துல வீக்கு!” என்பது போல. மன்னர்கள் என்றழைக்கப்படும் இத்தகைய திருடர்களையும் பொறுக்கிகளையும் இனப்பெருமையின் நாயகர்களாகச் சித்தரிப்பவர்களிடமிருந்து ஒரு முற்போக்கான இன விடுதலையை எதிர்பார்க்க முடியுமா?

வரலாற்றில் தேசியம், தேசிய உணர்வு என்பதெல்லாம், முடியாட்சியையும் அதன் எச்சங்களை அகற்றி, நிலவுடைமை ஆதிக்கத்தையும் அதன் மரபுகளையும், மத நிறுவனங்களின் ஆதிக்கத்தையும் ஒழித்துக் கட்டிய பின்னர்தான் வந்திருக்கிறது. பிரெஞ்சுப் புரட்சியைக் கொண்டாடுவோர் லூயி மன்னர் பரம்பரயைத் தமது மரபாகப் போற்றுவதில்லை. அந்த மரபை ஒழித்ததிலிருந்துதான் பிரெஞ்சு தேசியம் வந்திருக்கிறது. இங்கோ தமிழ்த் தேசியவாதிகளின் எண்ணமும், கருத்தும் இன்னும் மன்னராட்சி மயக்கத்திலிருந்து விடுதலை பெறவில்லை. புரட்சிகரமான தேசிய உணர்வைத் தோற்றுவிக்கத் தேவையான சுயேச்சையான முதலாளித்துவம் இந்தியாவில் வளரவில்லை.

ஆங்கிலக் காலனியாதிக்கவாதிகளால் மேலிருந்து திணிக்கப்பட்ட முதலாளித்துவ அரசு வடிவமும், வெள்ளையனுக்குத் துணை நின்ற தரகு முதலாளித்துவ வர்க்கமும், அவர்களுடைய இந்து தேசியமும் எந்த இனத்திலும் ஜனநாயகப்பூர்வமான இன உணர்வைத் தோற்றுவிக்கவில்லை. இதனை இனிமேல்தான் உருவாக்க வேண்டியிருக்கிறது என்பதே உண்மை. அதன் எதிரிகளான ஏகாதிபத்தியம், தரகு முதலாளித்துவம், நிலப்பிரபுத்துவம் ஆகியவற்றை எதிர்த்துப் போராடாமல், மலையாளி.. கன்னடன் என்று இனவெறியைத் தூண்டி விடுவதுதான் இவர்களது அரசியலாக இருக்கிறது.

தமிழினம் தனது உரிமைகளை ஒடுக்கும் அரசுக்கு எதிராகப் போராடுவதன் மூலமும், பிற தேசிய இன மக்களிடம் தங்களது நியாயத்தை வலியுறுத்தி அய்க்கியப்படுவதன் மூலமுமே தன்னை பலப்படுத்திக் கொள்ள முடியும். “இதைச் செய்யத் தவறுவதுடன் மலையாளி, கன்னடன், தெலுங்கன் என்று மக்களுக்கு இடையிலான பிளவையும், பிரிவையும் அதிகப்படுத்துவது ஆளும் வர்க்கத்துக்கு உதவுவதாகும்” என்று நாம் கூறினால், உடனே, “தமிழன்னா இளிச்சவாயனாடா! பட்டத்து யானையை அவுத்து விடுங்கடா” என்று ஆர்ப்பரிக்கிறார்கள். எப்போது வாயைத் திறந்தாலும் “அவன் மலையாளி, இவன் கன்னடன், அதோ பாரு தெலுங்கன்” என்று உசுப்பேற்றி விட்டு அடிவாங்கும் போது மட்டும் “அவன் கேட்டானா? இவன் கேட்டானா?” என்று பேசுவதில் அர்த்தமுள்ளதா?

இன்னும் ஒருபடி மேலே போய், “ராஜ் தாக்கரே பாணிதான் சரி. அவன் பீகாரிகளை அடிச்சு துரத்தியது மாதிரி இங்கேயும் நடக்க வேண்டும்” என்கிறார்கள். இந்த மனநிலை ஒரு குட்டி பாசிசம் இல்லையா? மும்பைக்குப் பிழைக்க வரும் பீகார் தொழிலாளிகளை பிய்த்து உதறும் சண்டியர் ராஜ் தாக்கரே யார்? பால் தாக்கரேக்கு போட்டியாக முகேஷ் அம்பானியால் வளர்த்து விடப்படும் ஏவல் நாய். குஜராத்திலிருந்து வந்த பனியாவும், இந்தியாவையே கொள்ளையடிக்கும் தரகு முதலாளியுமான அம்பானியை அனுமதித்து விட்டு, அவனிட ம் காசும் வாங்கிக்கொண்டு குரைக்கும் இந்தப் பிராணி, மராத்திய இனவுணர்வின் எடுத்துக்காட்டா, தரகு முதலாளியின் கைக்கூலியா? ராஜ் தாக்கரேயைப் பார்த்துப் புல்லரிக்கும் இவர்களுக்கு வட்டாள் நாகராஜுவப் பார்த்தும் புல்லரிக்குமா?

ராஜ் தாக்கரேயும், வட்டாள் நாகராஜுவும் ஒரு வகையில் யோக்கியர்கள். தங்களைப் பச்சையான ஆளும்வர்க்க இனவெறியர்களாக மட்டும்தான் அவர்கள் அடையாளம் காட்டிக் கொள்கிறார்கள். மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் படத்தை வைத்துக் கொண்டு தங்களைப் பொதுவுடைமைக் கட்சி என்று கூறிக்கொள்வதில்லை. வர்க்க அரசியலுக்கு நேர் எதிரான இனவாத அரசியலைப் பேசிக்கொண்டே, பொதுவுடைமைக் கட்சி போல பம்மாத்துப் பண்ணும் இந்த வேலையைத்தான் இலங்கையில் ஜனதா விமுக்தி பெரமுன செய்கின்றது.

இடதுசாரி வேடமிட்ட இந்த இனவாதிகளுக்கு ஈழம் உட்பட எந்த ஒரு விவாதத்திலும், நாம் வர்க்கம் என்று சொன்னா எரிச்சல் வருகிறது. ஈழ விடுதலையை நசுக்குவதில் இந்திய அரசின் வர்க்கநலன் இருக்கிறது என்றால், இது போகாத ஊருக்கு வழி என்று நம்மைப் புறம் பேசி விட்டு, ஈழ விடுதலையை வாங்கிவர இவர்கள் போகும் வழி கடைசியில் போயஸ் கார்டனில் போய் முடிகிறது. ஈழமாக இருக்கட்டும், காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு பிரச்சினையாக இருக்கட்டும், தமிழ் மக்களின் உரிமைகளுக்கான போராட்டம் நம்மைப் போல உரிமைகள் மறுக்கப்படும், ஒட்டச் சுரண்ட ப்படும் பிற தேசிய இன மக்களையும் விலக்காத தன்மையைக் கொண்டிருக்க வேண்டும். தமிழகத்தின் நீர் உரிமையைப் பிடுங்கும் பிற மாநில அரசுகள், அரசியல் நோக்கத்துக்காக இனவுணர்வை விசிறி விட்டாலும், அந்தத் தண்ணீரை மக்களுக்கு வாரி வழங்குவதில்லை.

மாறாக அந்த மாநில தொழில் முதலைகளும், பன்னாட்டுக் கம்பெனிகளுமே இதனை உறிஞ்சுகிறார்கள் என்பது எதார்த்தம். இங்கே சென்னைக் குடிநீருக்கு என்று கொண்டுவரப்படும் வீராணம் தண்ணீர் ஐ.டி பார்க்குகளுக்கும், புதிய பணக்கார சாடிலைட் நகரங்களுக்கும் திருப்பி விடப்படுவதைப் போலத்தான்.

வர்க்க ஒடுக்குமுறையின் மருவிய வடிவமாக இன ஒடுக்குமுறை வெளிப்படுவதை இனவாதிகள் அங்கீகரிப்பதில்லை. பன்னாட்டு தேசங்கடந்த மூலதனத்தின் கொலைக்கருவியாக உள்ள இந்த அரசை, ஏகாதிபத்திய அடிமைத்தளையை அழித்தொழிக்கும் பாட்டாளி வர்க்க அரசியல் கண்ணோட்டத்தையும் அவர்கள் ஏற்பதில்லை. அதனால்தான், ஒபாமாவிடம் பூங்கொத்து தந்தோ, ஜெயலலிதா, அத்வானியின் காது கடித்தோ இன விடுதலையைச் சாதிக்க முடியும் என்று நம்புகிறார்கள்.

தமிழன் ஒன்றுபடத் தடையாக இருக்கும் சமூகத் தடைகளான சாதி ஆதிக்கம், பார்ப்பன மதவெறி, குறுந்தேசிய இனவாதம் ஆகியவற்றுக்கு எதிராக மக்களைத் திரட்டாமல், “போதையில் கொஞ்சுவானாம், சுதி இறங்குனா புள்ளையப் போட்டு அடிப்பானாம்” என்ற கதையாக, ஒரு மூச்சு பழம்பெருமையும் சவடாலும் பேசுகிறார்கள், பிறகு ” தமிழனுக்கு சூடு இல்லை, சொரணையில்லை” என்று வசை பாடத் தொடங்குகிறார்கள்.

______________________________________________

· பரிதி, புதிய கலாச்சாரம் – செப்டம்பர் 2009
_______________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

 1. இன்றைக்கு ஈழத்தின் பிரச்சனையில் யாரையும் ஆதரிக்கும் நிலையில் இருக்கிறது தமிழ்தேசியமும்,விடுதலைப்புலி ஆதரவாளர்களும். அதற்காக பார்ப்பனர்களின் காலை விழவும் தயங்கமாட்டார்கள்.
  ஏகாதியபத்திய நாடுகளுக்கு அடிமையாக மாறவும் தயாராக இருக்கிறார்கள்.பணம்,அதிகார அரசியல்வாதிகளை மடக்கி ஈழத்தை மலரவைக்க கனவு காண்கிறார்கள் ஒரு வகையராக்கள்.மற்ற தமிழ்தேசியவாதிகள் இதை வைத்து ஆள் பிடித்து தமிழ்நாட்டில் புரட்சிசெய்யலாம் என்று பகல் கனவு காணும் மற்றொரு வகையராக்கள். இப்படி இரண்டு பேரும் சேர்ந்து தமிழ்நாட்டு மக்களை குழப்பிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இந்த இரண்டு வகையராக்களும் முதலாளித்துவத்திற்கு சேவை செய்வதிலும் அவர்களுக்கு ஆதரவு தருவதிலும்,அதற்காக இனவெறியை தூண்டிவிடுவதிலும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக இருப்பவர்கள்.இவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்தாமல் வர்க்க அரசியல் சாத்தியமே இல்லை.

  • ஏகாதியபத்திய நாடுகளுக்கு அடிமையாக மாறவும் தயாராக இருக்கிறார்கள்.பணம்,அதிகார அரசியல்வாதிகளை மடக்கி ஈழத்தை மலரவைக்க கனவு காண்கிறார்கள் ஒரு வகையராக்கள்/////
   .
   .
   அப்படியா?சரி கம்யூனிச சோஷலிச அரசு ஏதாவது ஈழ தமிழனுக்கு உதவ முன்வருதா?க்யூபா ரசியா சீனா இவர்களின் நிலை இலங்கயுக்கு ஆதரவுதானே!!வேற யாரை உதவிக்கு நாட சொல்றீங்க?சும்மா இங்க ஒக்காந்துகினு என்ன வேணும்னாலும் சொல்லலாம்!!ஏதோ ராஜபக்சேவை சோசலிசத்தின் தந்தை போல பேசுவது ரொம்ப ஓவர்!!

   • //கம்யூனிச சோஷலிச அரசு ஏதாவது ஈழ தமிழனுக்கு உதவ முன்வருதா?க்யூபா ரசியா சீனா இவர்களின் நிலை இலங்கயுக்கு ஆதரவுதானே!!//
    க்யூபாவிலேயும் சீனாவிலேயும் சோசலிசம் இருக்குன்னு உங்களுக்கு யாருங்க சொன்னது? “விஞ்ஞானி” அப்துல் கலாமா?

    ரஷ்யாவிலே முதலாளித்துவ மீட்சி 1990 இல் நடந்ததே..நினைவில்லையா?
    என்னது இந்திரா காந்திய சுட்டுட்டாங்களா? அப்படீங்கிறீங்களா?

    • சரி எங்கேயும் கம்யூனிச ஆட்சி இல்லையா?ஒ அதனாலதான் ஈழத்துளையாவது அந்த இஸத்த கொண்டு வரணும்னு நெனக்குரீங்க போல!!

  • //ஏகாதியபத்திய நாடுகளுக்கு அடிமையாக மாறவும் தயாராக இருக்கிறார்கள்.பணம்,அதிகார அரசியல்வாதிகளை மடக்கி ஈழத்தை மலரவைக்க கனவு காண்கிறார்கள்//

   ஏற்கனவே இப்படித்தான் இந்தியாவின் அடிமையாக இருந்து அடியாட்களாக செயல்பட்டு பிறகு வாங்கிக் கட்டிக் கொண்டார்கள்

  • சரியான அரசியல் கணிப்பீடு !!! இன்று புலம்பெயர் நாடுகளிலும், இந்தியாவிலும் ஈழ தமிழ் தேசியத்தின் பெயரால் நடைபெறும் கூத்தை மீரா சுருக்கமாக கூறியுள்ளார் !

 2. நீங்கள் சொல்லும் சாதியப்பிளவு, வர்க்கப்பிளவு, கலாச்சாரப்பிளவு, பன்னாட்டு மூலதனப்பிளவு, வணிகப்பிளவு, ஆதிக்கப்பிளவு, காலனியாதிக்கப்பிளவு இவற்றாலெல்லாம் தமிழன் ஒன்று படாமல் கிடக்கிறான் என்பது உண்மைதான். அதற்காக அவனை இன உணர்வு இல்லாதவன் என்றே சொல்லக்கூடாது என்றோ அந்த உணர்வு வரவேண்டும் என்பதற்காக சிலர் போராடக்கூடாது என்றோ நீங்கள் சொல்வது எப்படி நியாயமானது என்பது புரியவில்லை. நீங்கள் சொல்லும் அத்தனைப் பிளவுகளும் மற்ற மொழிக்காரனிடமும் இருக்கிறது.மற்ற மொழிக்காரர்களும் சாதிப்பிளவுகளாலும் மற்ற வர்க்கப்பிளவுகளாலும் வேறுபட்டுத்தான் கிடக்கிறார்கள். ஆனால் அவர்கள் இனத்துக்கெதிராகவோ, அவர்கள் மொழிக்கு எதிராகவோ ஏதாவது அவர்கள் வட்டத்தில் போய்ச்சொல்லிப்பாருங்கள். அத்தனைப் பிளவுகளையும் விட்டுவிட்டு அவர்கள் எப்படி ஒன்றுபடுகிறார்கள் என்பது அப்போது தெரியும். அத்தகைய உணர்வு தமிழனுக்கு இல்லை என்பதுதான் இன உணர்வாளர்களின் ஆதங்கம்.
  கர்நாடகத்திலும் நீங்கள் குறிப்பிடும் அத்தனைப் பிளவுகளும் பிரிவுகளும் இருக்கின்றன. ஆனால் அந்த மொழிக்கெதிராக இங்கே ஒரு குன்றிமணியை அசைத்துப்பாருங்கள். என்ன நடக்கிறது என்பது அப்போது தெரியும்.
  இப்போதுகூட கேள்வி என்னவென்றால் இலங்கையில் தமிழனுக்கெதிராக நடந்ததுபோல் வேறு மொழி பேசுபவனுக்கு எதிராக ஏதாவது நடந்திருந்தால் இந்திய அரசும் அந்த மாநில அரசும் இப்படி வாளாவிருந்திருக்குமா என்பதுதான். அந்த மொழி பேசும் மக்கள் தமிழனைப்போல் பேசாமல் இருந்திருப்பார்களா என்பதுதான். இலங்கையில் நடந்ததுபோல் பேரழிவுகள் நடக்கும்போதாவது இந்த இனத்தைச் சேர்ந்தவர்களை ஒன்றுபடுத்திப் போராடலாம் என்ற உணர்வைத் தூண்டுபவர்களையும் இப்படி உள்குத்து அரசியல் பேசி மட்டுப்படுத்திவிடலாம் என்று நினைப்பது சரியானதாகப் படவில்லை

  • சரியான பதில் சார்…இன உணர்வு பத்தி பேச இவருக்கு தகுதியில்லை!!

  • /////இப்போதுகூட கேள்வி என்னவென்றால் இலங்கையில் தமிழனுக்கெதிராக நடந்ததுபோல் வேறு மொழி பேசுபவனுக்கு எதிராக ஏதாவது நடந்திருந்தால் இந்திய அரசும் அந்த மாநில அரசும் இப்படி வாளாவிருந்திருக்குமா என்பதுதான்//////

   ஈழத்தமிழனுக்கு இந்திய உதவியுடன் ராஜபட்சே செய்யதது என்னவோ அதை இந்திய அரசாங்கமே இந்திய குடிமகன்களுக்கு செய்து வருகிறது பார்க்க https://www.vinavu.com/2010/11/29/armed-forces-special-powers-act-afspa/

   https://www.vinavu.com/tag/operation-green-hunt/

   இத்தகைய இந்திய அரசாங்கத்திடம், அதன் பிரதிநிதிகளான சோனியா முதல் ஜெயலலிதாவரை அனைவரிடமும் மடிப்பிச்சை ஏந்தி நிற்பதுதான் போராட்ட உத்தியா

   ///இந்த இனத்தைச் சேர்ந்தவர்களை ஒன்றுபடுத்திப் போராடலாம் என்ற உணர்வைத் தூண்டுபவர்களையும் ////

   தமிழன் என்ற முறையில் ஒரு தேவர் சாதி பெண்ணுக்கு தலித் பையனை கலியாணம் செய்து கொடுக்கச்சொல்லி போராடினால் சுலபமாய் தமிழன் ஒன்றாகிவிடுவானே, தமிழன் என்ற முறையில் தமிழக முதலாளிகள் அனைவரும் தமிழக தொலிலாளர்களுக்கு கூலியை பலமடங்கு உயர்த்தி கொடுத்து கம்பெனியில் பங்கும் கொடுக்கச்சொன்னால் கொடுப்பார்களே, கேட்கவேண்டியதுதானே….

   நாங்க ஒன்னும் அவனுக்கு இன உணர்வு வரக்கூடாது என்று சொல்லவில்லை, நீங்களே சொல்லும் இந்த //சாதியப்பிளவு, வர்க்கப்பிளவு, கலாச்சாரப்பிளவு, பன்னாட்டு மூலதனப்பிளவு, வணிகப்பிளவு, ஆதிக்கப்பிளவு, காலனியாதிக்கப்பிளவு /// இத்தகைய பிரிவுகளை வைத்துக்கொண்டே அதன் மேல் கட்டமைக்கப்படும் அந்த இன உணர்வு செயற்கையானது, போலியானது, அது வரவே வராது என்கிறோம். அப்படிப்பட்ட போலித்தனத்தை மூதலனாக போட்டு தமிழனை சுரண்டி ஏமாற்றும் சந்தர்ப்பவாத அரசியல் சக்திகளை தனிமைப்படுத்தி முறியடிக்கச் சொல்கிறோம்.

  • அய்யா அமுதவன் அவர்களே

   //தமிழின ஓர்மைக்குத் தடையாக உள்ள உண்மையான காரணிகளை எதிர்த்துப் போராடும் நேர்மையில்லாத இனவாதிகள் பிற தேசிய இன மக்களை எதிரியாகக் காட்டியே தமிழின ஒற்றுமையை உருவாக்க முயற்சிக்கிறார்கள்.//
   இப்படி வினவு தோழர்களின் வரிகளை வாசித்த போது உளறல் என்று நினைத்தேன் ஆனால் உங்களுடைய கீழுள்ள கருத்துரை அதை உண்மைப் படுத்துகிறது

   //கர்நாடகத்திலும் நீங்கள் குறிப்பிடும் அத்தனைப் பிளவுகளும் பிரிவுகளும் இருக்கின்றன. ஆனால் அந்த மொழிக்கெதிராக இங்கே ஒரு குன்றிமணியை அசைத்துப்பாருங்கள். என்ன நடக்கிறது என்பது அப்போது தெரியவரும்//

  • //கர்நாடகத்திலும் நீங்கள் குறிப்பிடும் அத்தனைப் பிளவுகளும் பிரிவுகளும் இருக்கின்றன. ஆனால் அந்த மொழிக்கெதிராக இங்கே ஒரு குன்றிமணியை அசைத்துப்பாருங்கள். என்ன நடக்கிறது என்பது அப்போது தெரியும்.// சரியான காமெடி இதுதான். அங்கே கன்னட மொழி என்ற பேனருக்கு பின்னே இருந்து கொண்டு சிலர் பொறுக்கி அரசியல் செய்கிறார்கள். அவ்வளவுதான் மற்றபடிக்கு தமிழ் மொழியில் நிகழும் மொழி சார் செயல்பாடுகளில் 100ல் ஒரு பங்கு கூட அங்கு கன்னட மொழியை வளர்ப்பதில் நிகழ்வதில்லை.

   கன்னட மொழி அங்கு அரசியல் வியாபாரத்துக்கான சரக்கு அவவளவுதான். அம்மொழி தமிழ், இந்தி, சம்ஸ்கிருதம், ஆங்கிலத்தின் தாக்குதலில் சின்னாபின்னமாகிக் கொண்டிப்பதற்கு எதிராக ஒலிக்கும் குரல்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

   • இன்னம்பூர் மனோகரன்
    அய்யா கர்னாடகத்தில் பேருந்தில் முகப்பில் கன்னட எழுத்தும்,இலக்கமும் தான் எழுதுகிறார்கள், 5 வகுப்பு வரை தாய் மொழி கன்னடத்தில் வேற்று மானிலத்தவர் ஆனாலும் படித்தே ஆக வேண்டும்,தொடர் வண்டி நிலையத்தில்,விண்ணப்ப படிவம் கன்னடத்தில் தான் பூர்த்தி செய்தாக வேண்டும்.பெங்களூரில் தமிழ் நாட்டு இந்திய தேசிய பாட்டாளி வர்க்கத்தை அடித்து விரட்டுகிறானே,அவர்கள் இன்னமும் அந்த மானிலத்தின் அடிமையாய் தானே இருக்கிறார்கள்.உங்களுக்கு துணிவிருந்தால் பெங்களூர் சென்று தமிழன் எல்லாம் இந்திய தேசிய இந்தியன் அவன் மேல் கை வைத்தால் நான் பாரதமாதாவிடம் புகார் செய்வேன்,பிறகு பாரதமாதா கடும் கோபாமாகி ஒரு மணி நேரத்தில் இந்திய் தேசிய ராணுவத்தை அனுப்பி வைப்பார் என்று கூறி பாருங்கள் பார்க்கலாம்.[என்ன செய்வது இந்த பிழைக்க போன தமிழ் நாய்கள் வாயையும்,…தையும் பொத்திக்கொண்டு இருக்கவேண்டியது தானே]
    இன்னம்பூர் மனோகரன்

 3. இலங்கைக்கு இன அழிப்பு செய்ய ஆயுதம் வழங்கி உதவிய ரசியா சீனா போன்ற கம்யூனிஸ்டுகளும் பாகிஸ்தான் இந்தியா போன்ற நாடுகள்!!அப்புறம் இலங்கயுக்கு ஆதரவளிக்கிறது கம்யூனிஸ்டு க்யூபா!!ஆக கம்யூனிஸ்டுகளின் லட்சணம் இதில் விளங்குது.உதவி செய்ய மாட்டீங்க ஆனா இங்கிலாந்து உதவ முன்வந்தா அதை ஒப்புகொள்ளகூடாதுன்னு சொல்ல மட்டும் ஓங்க க்ரூப்புரெடி!!நீங்க அகில இந்திய அரசியல் செய்வதால் தமிழன் உணர்வு புரியாது.எனவே தயவு செஞ்சி இலங்கை விஷயத்தை பேசுவதை தவிர்க்கலாம்!!வரலைன்னா உட்டுடனும்.கிஷஞ்சி “ஏண்டா இலங்கை விவகாரத்த பேசலை” நு கேக்க போறதில்லை!!

  • //சியா சீனா போன்ற கம்யூனிஸ்டுகளும் // சோனியா, ஒபமா, ராஜபக்சே போன்ற ‘கம்யூனிஸ்டு’களை விட்டுவிட்டீர்கள் யுவர் ஆனர்.

 4. தமிழனுக்கு இனவுணர்வு இல்லை என்பது இவர்களது கவலை. அதைக் கெடுத்தவன் யார் மலையாளியா, தெலுங்கனா, கன்னடனா? /////////.
  .
  .
  ஆமா ஒங்களுக்கு கம்யூனிச உணர்வை ரசியா சீனாவிலிருந்து இருக்குமதி செய்யலியா?அப்படிதான்!!ஒன்களுக்கென்ன கவலை?

  • ரவி//

   உங்களுக்கு கம்யுனிசம் என்றால் என்னவென்றே தெரியவில்லை. நீங்கள் சீனா,ரஸ்சியாவை எல்லாம் கம்யூனிச நாடு என்று சொன்னால் அது உங்களுடைய அறியாமை அறிவை தான் காண்பிக்கிறது. எ.கா: உங்களுடைய அம்மாவின் பெயரை யாராவது வைத்துக்கொண்டால் அவர்கள் எல்லாம் உங்கள் அம்மா என்று நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? அல்லது அந்த அம்மா தன் உங்களை பெற்ற மகன் என்று ஏற்றுக்கொள்வாரா? பெயரில் கம்யூனிசம்,கம்யூனிஸ்ட் என்று பெயர் வைத்துக்கொள்பவர்கள் எல்லாம் கம்யுனிஸ்ட்டுகள் ஆகாது. தத்துவம் நடைமுறையை வைத்து தான் சொல்லவேண்டும் யார் கம்யுனிஸ்ட்டுகள் எனபதை.

   • கம்யூனிச நாடுன்னு தங்களை தாங்களே அறிவித்துக்கொண்ட நாடுகள்தான் எனக்கும் தெரியும்!!நீங்கள் சொல்வதுபோல நூத்துக்கு நூறு கம்யூனிச கொள்ளுகைய கொண்ட நாடு மேப்புளையே இல்லை!!என்ன செய்ய?

    • //நூத்துக்கு நூறு கம்யூனிச கொள்ளுகைய கொண்ட நாடு மேப்புளையே இல்லை!!என்ன செய்ய?//
     நூத்துக்கு நூறு தமிழ்க் கொள்கையுள்ள தமிழனை முதல்ல காட்டுங்க சார்.

     கட்டுரை சொல்லுது:
     இங்கிருக்கும் தனிச்சுடுகாடு, தனிக்குவளை, தனிக்கோவில், உள்ளிட்டவைகளைத் தகர்க்க கொங்கு வேளாளக் கவுண்டர்களையும், தேவரையும், இன்ன பிற ஆதிக்கசாதி வெறியையும் அகற்றுவோம் வா! அதுவே தமிழ் தேசியக் கடமைக்கு முதற்படி.

     • அதை யாரு எதிர்த்தா?செய்ங்க.செய்யணும்.அதே நேரம் ஏய்ட்ஸ் நோயாளிகளை விட்டு தமிழச்சிங்க புனரப்படுகின்றனர்.பலருக்கு கர்ப்பப்பை அகற்றப்பட்டுவிட்டது.இத்கு இன அழிப்பில்லையா?இதையும் நாம் கவனிக்க வேண்டாமா?

  • கேப்புடன் விசயகாந்துக்கும் ராணுவ கேப்டனுக்கும் புரட்சித் தலிவிக்கும் புரட்சிக்கும் நாஜிக்கும் சோசலிசத்துக்கும் என்ன ஒற்றுமையோ அதேதான் இதற்கும் உள்ள ஒற்றுமை.

   எங்கோ வினவு கட்டுரையில் படித்தது.

 5. //கொழும்புக்குப் பறந்து போய் இந்தியாவின் மேலாதிக்கத்தைப் பற்ற வைக்கும் சிவசங்கர் மேனனும், பாதித் தூக்கத்தில் எழுந்து பாய்லர் அடுப்பைப் பற்ற வைக்கும் டீக்கடை மலையாளியும் ஒரே வர்க்கமா?//

  அருமையான வரிகள்
  ஆனாலும் மலையாளிகளுக்கு இன உணர்வு அதிகம் அதை நான் அனுபவபூர்வமாக பார்த்து இருக்கிறேன்

 6. ம‌லையாளிக‌ளுக்கு இன‌ உண‌ர்வு அதிக‌ம் தான் நானும் அனுப‌வ‌த்தில் க‌ண்டுள்ளேன்.ம‌ற்ற‌ மாநில‌த்த‌வ‌ர்க‌ள் எல்லாம் ந‌ம்மை போல்.

  அவ‌ர்க‌ளுக்குள் அடித்துக் கொள்வார்க‌ள்.ஆனால் ஒரு ம‌லையாளியை இன்னொரு ம‌லையாளி விட்டுகொடுக்க‌ மாட்டார்க‌ள்.

  கேர‌ளாவில் ந‌ட‌க்கும் விச‌ய‌ம் எல்லாம் ம‌லையாள செய்தி தாள்க‌ளில் ம‌ட்டும் தான் வ‌ரும். ஆங்கில‌ செய்திதாளில் கூட‌ வ‌ராது. அவ்ளோ அழ‌கா அவ‌ங்க‌ உள்நாட்டு பிர‌ச்ச‌னைய‌ அவ‌ங்க‌ளுக்குள்ளே முடிச்சுக்குவாங்க‌. ஆனா த‌மிழ்நாட்டு செய்திக‌ளையும் போட்டு கூட‌வே ந‌ல்லா காறீ துப்பி தான் வெளியிடுவார்க‌ள். இதுக்கு பேரு என்ன‌?

 7. ம‌லையாளிக‌ள்னாலே டீக்க‌டை வைத்திருப்ப‌வ‌ர்க‌ள் ம‌ட்டும் தானா? அவ‌ங்க‌ டீக்க்டை தான் வ‌ச்சிருப்பாங்க‌ன்னு யாரு சொன்னா அது எல்லாம் அந்த‌ கால‌ம்.எந்த‌ கால‌த்துல‌ வாழ்ந்திட்டு இருக்கீங்க‌? ஒரு முறையாவ‌து ஒரு த‌மிழ‌னாக‌ கேர‌ளாவில் 1 வ‌ருட‌ம் அம்ம‌க்க‌ளோடு ப‌ழ‌கி வாழ்ந்து விட்டு சொல்லுங்க‌ள். உங்க‌ள் க‌ருத்துக‌ளை ஒத்து கொள்கிறோம். இல்லைனா அனுப‌வ‌ப‌ட்ட‌வ‌ங்க‌ பேச்சை கொஞ்ச‌ம் காது கொடுத்து கேளூங்க‌ள்.

 8. 2009ல் எழுதப்பட்ட இக்கட்டுரை அப்படியே வெளியிடப்பட்டிருக்கிறது.

  இன்றைக்கு ஈழத்தில் ஒரு தமிழினப்படுகொலை நடந்ததைக் கூட தட்டிக் கேட்கும் சுரணையற்று வாழும் தமிழர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்பதே தலையாய இனக் கடமை. இன்றைய காலகட்டத்தில் இன உணர்வாளர்கள் அதைத்தான் செய்ய முயல்கின்றார்கள். ஆனால் யாரும் முழுமையான ஈடுபாட்டுடன் இல்லை. இனத்திற்குள் ஜாதி,மதச்சண்டைகள் போகட்டும். ஆனால் தம் இனத்தோர் லட்சக்கணக்கானோர் படுகொலை செய்யப்படுவதைக் கூட உணரும் தன்மை தமிழனுக்கு ஏன் வரவில்லை என்பது தான் இங்கிருக்கும் இன உணவாளர்களின் கேள்வி. இது உலகில் எந்த இனத்திற்கும் ஏற்பட்டிராத ஒரு குணம். ஆஸ்திரேலியாவில் கொல்லப்படும் ஒரு சீக்கியனுக்காக பஞ்சாப் மாநிலம் முழுதும் ஏன் டெல்லியிலும் மக்கள் பதைபதைக்கிறார்கள். ஊர்வலம் போகிறார்கள். ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். ஆனால் நாம்..?

  கேரளாவிலும், ஆந்திரத்திலும் ஜாதிகள் உண்டு, பிரிவினைகள் உண்டு. அதையும் தாண்டி வேறொரு இனத்தவருடன் ஒப்பிட நேர்கையில் தனது இனத்துக்கே முன்னுரிமை தரும் மனம் அவர்களிடம் எப்படி வந்தது? ஜாதி உணர்வு, மத உணர்வு எல்லாவற்றையும் ஒழித்து முடிப்பதற்குள் மொத்த தமிழனும் அழிந்துவிட்டால் பரவாயில்லையா? யதார்த்தத்தில் தமிழன் என்கிற இன உணர்வு, ஜாதி, மதம், போன்ற உணர்வுகளுடன் சேர்ந்தே தான் இருக்கிறது.

  தமிழின வாதிகள் ஜாதி மதத்துக்கு எதிரான போராட்டத்தையும் செய்ய வேண்டும். அப்போது தான் இன உணர்வு மேம்படும். மற்றபடி தமிழின வாதிகளைக் குறித்த உங்கள் கணிப்பு சரியென்றே படுகிறது.

  ஆனால் இந்த இன அழிப்புப் போரில் கம்யூனிசச் சீனாவும், கியூபாவும், வியட்நாமும், இந்தோனேசியாவும், பாகிஸ்தானும் இலங்கையுடன் கைகோர்த்து நின்றதில் தான் கம்யூனிஸ்ட்டுகளின் மீதான நம்பிக்கை தகர்கிறது. ஐநாவில் இலங்கைக்கு ஆதரவாக இந்நாடுகள் வாக்களித்ததை ஏன் இந்தியாவிலிருந்து எந்தக் கம்யூனிஸ்ட்டு கட்சியும் (ம.க.இ.க உட்பட) எதிர்க்கவில்லை ? அவர்களுடன் தொடர்புகொண்டு இது மிகப்பெரும் அநீதி என்று எடுத்துரைக்கவில்லை ? இடது கம்யூனிஸ்ட்டுகள் இது அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கு எதிரான கூட்டணி, அதனால் இந்நாடுகள் இலங்கையை ஆதரிக்க வேண்டியிருக்கிறது. இ.கம்யூனிஸ்ட்டுகளும் அமெரிக்காவை (மட்டும்) எதிர்ப்பவர்கள் ஆதலால் அமெரிக்காவின் ஈழ ஆதரவு முயற்சிக்கு எதிராக இருப்போம் என்கிற பாணியான பதில் சரியா ?

  ஐயா, இனப்படுகொலை என்கிற ஒன்றைப் பற்றி இங்கு யாரும் பேசவில்லை. எத்தனை லட்சம் பேர் செத்தாலும் கவலையில்லை. நீ யார் கட்சி ? அமெரிக்காவா இல்லை சீனாவா ? அமெரிக்கா என்றால் அவன் எத்தனை உயிர் கொடுத்தாலும் தப்பு என்கிற ரீதியிலும், சீனா என்றால் அவன் எத்தனை உயிர் எடுத்தாலும் தப்பில்லை என்கிற ரீதியிலும் பார்க்கும் இந்தப் ‘பார்வை’ என்ன கம்யூனிசமோ?

  நீங்களாவது(வினவு) 2009ல் ஈழப்போர் நடைபெற்ற போது அதை சகட்டுமேனிக்கு கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்த கியூபா, சீனா போன்ற நாடுகளுடன் பேசி நிலைமையை விளக்க ஏதாவது செய்தீர்களா ?

  • அய்யா அம்பேதன்

   ////, இனப்படுகொலை என்கிற ஒன்றைப் பற்றி இங்கு யாரும் பேசவில்லை. எத்தனை லட்சம் பேர் செத்தாலும் கவலையில்லை. நீ யார் கட்சி ? அமெரிக்காவா இல்லை சீனாவா ? அமெரிக்கா என்றால் அவன் எத்தனை உயிர் கொடுத்தாலும் தப்பு என்கிற ரீதியிலும், சீனா என்றால் அவன் எத்தனை உயிர் எடுத்தாலும் தப்பில்லை என்கிற ரீதியிலும் பார்க்கும் இந்தப் ‘பார்வை’ என்ன கம்யூனிசமோ?

   நீங்களாவது(வினவு) 2009ல் ஈழப்போர் நடைபெற்ற போது அதை சகட்டுமேனிக்கு கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்த கியூபா, சீனா போன்ற நாடுகளுடன் பேசி நிலைமையை விளக்க ஏதாவது செய்தீர்களா ?////

   சீனா க்யூபா என்ற திரும்ப திரும்ப பேசுபவர்களுக்கு அவர்களை வினவுத் தோழர்கள் கம்யூனிஸ்ட்களாக ஏற்றுக் கொள்வதே இல்லை என்பது வினவை நீண்ட நாள் வாசிப்பவர்களுக்கு தெரிந்த விஷயம்

   நீங்கள் புதியவராக இருந்தால்

   வினவின் வலைத்தளத்தில் இடது புறத்தில் கம்யூனிஸ போலிகள் என்ற வசகத்தை சுட்டுங்கள் உங்களுக்கு இதற்கான விடை கிடைக்கும்

   • அவர்களை நீங்கள் போலிக் கம்யூனிஸ்ட்டுகள் என்று முத்திரை குத்திவிட்டதால் அவர்களை உலகம் முழுதும் அப்படியே கருதிவிடவில்லை.
    இந்நாடுகள் ஈழப் போரின் விளைவுகளில் அவை ஆற்றிய பங்கும் மாறிவிடப் போவதில்லை.

    எனவே என்னுடைய கேள்வி, நீங்கள் சீனா, கியூபா போன்ற நாடுகளை எப்படிக் கருதிப் பேசாமல் போனாலும் விளைவு என்னவோ நம்மைத் தான் பாதிக்கும். அந்தத் தருணங்களில் தென்னமெரிக்க நாடுகளும் இலங்கையை ஐநாவில் ஆதரித்திருந்தன. இங்கிருந்த சில இலக்கிய ஆர்வலர்கள் பலர் தென்னமெரிக்க இலக்கியங்களை தமிழில் மொழிபெயர்த்தவர்கள் உடனே அங்கிருக்கும் இலக்கிய ஆர்வலர்களுடன் தொடர்பு கொண்டு உங்கள் நாட்டின் இலங்கைக்கு ஆதரவான முடிவு ஒரு இனப் படுகொலையை ஆதரித்தது போலாகும் எனவே இதை நிறுத்த முயலுங்கள் என்று எடுத்துக் கூறினார்கள்.

    அவர்களால் எதுவும் சாதிக்க முடிந்ததா இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால் இகம், வகம்யூக்களுக்கு எடுத்துச் சொல்லியும் வராத அந்தப் பார்வை வினவுக்கும், மகஇகவுக்கும் இருந்திருக்கலாமே என்பது என் ஆதங்கம்.

 9. தோழர் வனக்கம்
  இனம் இனம் என்று இனவெறி என்று கூறும் தாங்கள் சாதி சாதி என்று கூறு போட்டு சாதி வெறியை தூண்டுவது எந்த ஊர் நியாயம்? முல்லை பெர்யாறு, நெய்யாற்ற்ங்கரை பிரச்சினை,தமிழக வாகன ஓட்டுனர்களை அச்சுறுத்தல்,செங்கோட்டை அடுத்த மணலாறு அருவியில் தமிழக பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து மொபைலில் படமெடுத்து இண்டெர்னெட்டில் பரப்பி விட்டானே யார் அவன்? இந்திய தேசியனா? தமிழ் நாட்டு மணலையும்,ரேஷன் அரிசியையும் கேரள செக் போஸ்ட்டில் ஒரு பிரச்சினையும் செய்யாது அனுமதிப்பது இந்திய தேசியமா? வட நாட்டுக்காரன் மதராசி என்று தான் அழைக்கிறான் வாடா இந்தியனே என்று அழைப்பது இல்லை. நீங்கள் கூறுவது போல் தமிழ் நாட்டில் கூலியாய் வதை படும் வேற்று மானிலத்தவரை எந்த தமிழனும் வரவேற்பது இல்லை நீங்கள் வேண்டுமானால் அவற்றில் ஏதேனும் சாதி பிரச்சினை கிளப்பி விடலாமா என யோசிப்பீர்கள்.

  • //இனம் இனம் என்று இனவெறி என்று கூறும் தாங்கள் சாதி சாதி என்று கூறு போட்டு சாதி வெறியை தூண்டுவது எந்த ஊர் நியாயம்? // ஆனைக்கு அர்ரம்னா குதிரைக்கு குர்ரம்னு சொன்ன கதையால்ல இருக்கு? அப்பொ மக்கள் பிரிந்து கிடப்பது எதனால் என்று கேள்விக்கு பதில் என்ன?

 10. Excellent Post. It answered all the questions lingering in my mind regarding these tamil nationalists. These are number one Hypocrites. Tamil nationalism is a stupid agenda… Evry state people have their own share of problems. As you pointed out, People involved in Construction, Sanitation, Brick Factories, SSI’s are predominantly from Bihar, Orissa, WB, Nepal… The sheer agony that they’re put through by these A***le Tamil Mudhalis can’t be expressed in words. Their life is as much as struggling like the unfortunate victims of war in srilanka….
  Thanks Vinavu for bringing this issues into the limelight and this is one post I can’t complain much about…

 11. I plead with the commenters not to mix communist agenda with the burning issue here. This has got nothing to do with communism. You just need to use your head rationally if you wanna understand this problem of Hypocrisy of Tamil nationalists..
  We can discuss communism in a different post…

  • நைனா மொதல்ல நீ தமிழ்ல எழுத கத்துக்க அப்புறம் பேசலாம்!!

   • நைனா நீ மொதல்ல பதிவ படி புரிஞ்ஜிதுனா பதில் சொல்லு இல்ல வாய பொதிகிட்டு கிலம்பு

 12. வினவே
  காவிரி தண்ணீரையும்,கிருஷ்ணா நதி நீரையும்,பாலாற்றுத் தண்ணீரையும்,முல்லை பெரியாறு நீரையும் உங்கள் ஒருங்கிணைந்த இந்திய தேசியத்தால் பெற்றுத் தந்து தேனி, திண்டுக்கல், இராமனாதபுரம்,திருச்சி,தஞ்சை,வடமாவட்ட ஒடுக்கபப்ட்ட,தாழ்த்தப்பட்ட நம்
  மக்களின் பசியையும்,பிணியையும் போக்குவீர்களாக.அப்படியே உங்கள் ராஜபட்சேவிடம் [நீங்கள் சொன்னா உங்க அண்ணண் ராஜபட்சே ரொம்ப நல்லாவே கேட்டுப்பாரு] சொல்லி சிங்களரைப் போலவே நம் தமிழ் மக்களையும்,[அய்யோ தப்பு,தப்பு மன்னிக்கனும் தெரியாம நம் தமிழ் மக்கள்னு சொல்லிபிட்டேன்]ஒன்றுபட்ட இலங்கை மக்களையும் வேலை வெட்டி எல்லாம் கொடுத்து எல்லா உரிமையும் கொடுத்து மகிழ்ச்சியா வச்சிக்க சொல்லுங்கள். ] இங்க லூசு பசங்க எதாவது தமிழ்,தமிழ்னு உளறிகிட்டு இருப்பானுங்க

 13. க. மனோகரன்//

  நீங்கள் உங்கள் பிழைப்பை ஓட்டுவதற்கும்,அதை காத்துக்கொள்வதற்கும் என்னவெல்லாம் படிகிறீங்க,அறிவை எப்படியெல்லாம் வளர்த்துக்கொள்கிறீர்கள். அதே போல இனம் என்கிற உணர்வு என்பது என்ன? சாதி என்பது என்ன? முதலாளி,தொழிலாளி என்பது என்ன? ஒரு நாட்டில் தேசிய இனப்போராட்டம் ஏன் தோல்வி அடைகிறது? அதற்கு காரணம் என்ன எனபதை எல்லாம் படித்துவிட்டு வாருங்கள். எதுவும் தெரியாமல் மூளையை சும்மா காலியாக வைத்துக்கொண்டு வினவை திட்டுவது உங்களின் அறியாமையே.

 14. வினவு தளத்தில் வருகிற அனைத்து கட்டுரைகளும் சிறப்பாக இருக்கின்றன.. ஆனால் இலங்கை பிரச்சனை என்று வருகிற போது தான் தன்னை அல்லாமல் அரசியல் ரீதியாக பிற இயக்கங்களுக்கு இளைஞர்கள் சென்று விடுவார்களோ என்ற ஒரு வித தவிப்போடு எழுதப்படுவது போலிருக்கிறது..தமிழ் தேசிய வாதிகள் தவறு செய்கிறார்கள்.இல்லை என்கவில்லை. ஆனால் நீங்கள் எழுதுகிற கட்டுரைகள் உங்களுக்கே புரிகிறதா அல்லது எனக்கு தான் அறிவு போதவில்லையா? என்று தெரியவில்லை கியூபா வும் சீனா வும் கம்யுனிஸ்ட் கம்யுனிஸ்ட் நாடுகள் இல்லை இந்திய மாவோயிஸ்ட் களும் தவறு செய்கிறார்கள் சாகச வாதிகள் சாரு மஜும் தாரும் சரியான கம்யுனிஸ்ட் இல்லை இங்கிலாந்தும் அமெரிக்காவும் முதலாளித்துவ நாடுகள். ம.க.இ.க வின் 100 பேர் மட்டும் தான் கம்யுனிஸ்ட் களா? உங்களின் உதவியோடு தான் செய்திருக்க வேண்டுமா? ஈழப் பிரச்சனையில் மாவோயிஸ்ட் கள் ஏன் குரல் கொடுக்கவில்லை என்று கேட்டால் நீங்கள் அவர்களுக்கு கொடுத்தீர்களா என்கிறீர்கள் கொடுத்தால் தான் தருவேன் என்பதுதான் கம்யூனிசம் மா? தாமிர பரணி ஆறு விசயத்தில் 15,000 பேரை திரட்டி போராட்டம் நடத்தினீர்கள். இலங்கை பிரச்சனைக்கு ஏன் அது போல் பெரிய அளவில் செய்யவில்லை? ஏன் இலங்கை பிரச்சனைக்கும் ஒரு தமிழ் மக்கள் இசை விழாவை நடத்த வில்லை? பெயரில் மட்டும் தான் தமிழ் மக்களா? ஒருவன் எதன் பெயரால் ஒருவன் ஒடுக்கப்படுகிரானோ அதன் பெயரால் அவன் எழுவான் அதுதான் இயல்பு. நான் ஒரு தலித். தலித் பிரச்சனைகளில் நான் என்னை தலித் ஆக உணர்கிறேன். தொழிலாளராக பாதிக்கப்படும் போது கம்யுனிஸ்ட் ஆக செயல்பட விரும்புகிறேன். அதே நான் தமிழனாய் ஒடுக்கப்படும் போது தமிழனாய் உணர்கிறேன். மனிதாபிமான விசயங்களில் மனிதனாக உணர்கிறேன்.சோ சிம்பிள்.இதில் இன வாதம் மன வாதம் என்று பேச ஒன்றும் இல்லை.நான் கண்ணுக்கு கண் என்பதையும் சமமான எதிர்வினையை யும் எதிர்க்கிறேன். சட்டக்கல்லூரி மாணவர் மோதலையும் ஏதோ ஒரு வெளி மாநிலத்தில் நிறுவனத்தில் மேலாளரை தொழிலாளர்களே ஒன்று சேர்ந்து கொன்று போட்டதையும் எதிர்வினையாக பார்க்க நீங்கள் தான் எனக்கு கற்று கொடுத்தீர்கள்,உசுப்பேற்றிநீர்கள். அவைகளை பாராட்டி கட்டுரை எழுதினீர்கள். ஆனால் முல்லை பெரியாறு காவிரி நதி நீர் ஒக்கேனக்கல் குடிநீர் என எதற்கும் தமிழர்கள் எதிர்வினை ஆற்றியவர்கள் இல்லை. ஆனால் எங்கோ யாரோ ஒருவரை தமிழர் அல்லாததால் அடித்ததாக சொல்லி தமிழர்கள் இன வெறி பிடித்து திரிவது போல் காட்ட முயல்கிறீர்கள்.தலித் பிரச்சனைகளை முதலில் கம்யுனிஸ்ட் கள் எடுக்காததால்தான் தலித் கட்சிகள் உருவாகி இன்று அவர்கள் நீங்கள் சொல்வதுபோல் பிழைப்பு வாதிகள் ஆகியிருக்கலாம். அதே போல் இலங்கை பிரச்சனையிலும் நீங்கள் செய்யும் தவறே தமிழ் தேசியவாதிகளை பலப்படுத்தும். ராஜபக்சே வை எதிர்க்கும் கட்டுரைகளை விட புலிகளையும் தமிழ் தேசியவாதிகளையும் எதிர்க்கிற கட்டுரைகள் தான் நாளுக்கு நாள் வினவில் வந்த வண்ணம் இருக்கின்றது. காலத்தை தவறாக பயன்படுத்தி விடாதீர்கள். என்னை போன்றவர்கள் தலித் கட்சியிலோ, தமிழ் தேசிய கட்சிகளிலோ இணையாமல் இவைகளை புரிந்து கொண்ட கம்யுனிஸ்ட் இயக்கங்களை தான் தேடுகிறோம் அது சாத்தியமற்ற சூழ்நிலையில் எந்த பிரச்சனை அதிகமாக இருக்கிறதோ அந்த இயக்கத்தில் செயல்படுகிற சூழ்நிலைதான் உருவாகும்.ஆனால் ஒன்று ஈழம் விசயத்தில் pjp,cpim,தங்கபாலு வரைக்கும் ஆதரவு வேஷம் போடுகிற இந்த அரசியலில் உங்களின் எந்த கருத்தாயிருந்தாலும் அந்த கருத்துக்களில் திடத்தையும் நேர்மையை யும் கடைபிடிப்பது எனக்கு வினவை தொடர்ந்து பிடிப்பதற்கு காரணம் என்பதை ஒப்பு கொள்கிறேன்.நான் வயதில் சிறியவன் தான் உங்களின் சமூக பணிக்கு முன் நான் ஒரு தூசி கூட இல்லை தான் இருந்தாலும் கேட்க வேண்டும் என்று மனதில் பட்டதை சொல்லியிருக்கிறேன்,கேட்டிருக்கிறேன் பதில் சொல்லுங்கள்.இதே கேள்விகள் அனைவரிடமும் இருந்தால் அவர்களும் பயன் பெறட்டும்.நாளையே ம.க.இ.க வில் நான் சேருவது பற்றி முடிவெடுக்கிறேன்…

  • நண்பர் அவர்களுக்கு

   நான் உங்கள் அளவுக்கு அரசியல் தெளிவு பெற்றவன் இல்லை வினவு தோழர்கள் பதில் சொல்லும் முன் நண்பனாக சில கேள்விகள்

   ஈழ விஷயத்தில் ஆயுதத்தை எடுத்து தோற்று போய் விட்டோம்
   வட்டார மேலாண்மையை எதிர்பார்த்த அரசுகளை நம்பி ஏமாந்து விட்டோம்
   மொழிரீதியாக இனரீதியாக போராடி ஒரு பலனும் இல்லை

   என்னுடைய கேள்வியேல்லாம் ஏன் ஒருமுறை வர்க்கரீதியாக ஒருங்கினைந்து போராடி பார்க்கக் கூடாது முயற்சி பன்னி பார்ப்போமே ஏனென்றால் உழைக்கும் வர்க்கம் எல்லா சமூகத்திலும் எல்லா இனத்திலும் இருக்கிறார்கள்.

   முயற்சியில் செய்து பார்க்கலாமே

   • //நான் உங்கள் அளவுக்கு அரசியல் தெளிவு பெற்றவன் இல்லை//

    நானும் தான் நண்பரே?

    உழைக்கும் வர்க்கமாய் இலங்கை தமிழர்களை மற்ற உழைக்கும் வர்க்கம் நினைத்து வீதிக்கு வர வில்லை என்பது தானே பிரச்சனை.

    நண்பா, என் நண்பன் ஒருவன் முன்பு cpim இல் இருந்தவன் அவன் கேட்பது இதுதான். நாங்கள் சுள்ளி பொருக்கி கொண்டிருந்த போது கேஸ் விலை ஏறிவிட்டது மறியலுக்கு வா என்றாய் வந்தோம். நாங்கள் சைக்கிளில் ஓட்ட கற்று கொண்டிருந்த போது விமான டிக்கெட் விலை ஏறிவிட்டது மறியலுக்கு வா என்றாய் வந்தோம். நாங்கள் மாநிலத்தின் தலை நகரை கூட பார்த்திராத போது பாலஸ்தீனத்தில் பிரச்சனை வா என்றாய் வந்தோம். கருப்பு சோடா வையே வைத்து வலிக்கு தான் குடிக்கும் போது ஏதோ கோக்கு பெப்சி எதிர்ப்பு என்றாய் அதற்கும் வந்தோம்.மேற்கு வங்கத்தில் பிரச்சனை வா என்றாய் குஜராத்தில் பிரச்சனை வா என்றாய் இப்படி நி கூப்பிட கூப்பிட தான் அப்படி ஒரு ஊரும் ஒரு பொருளும் இருப்பதே எங்களுக்கு தெரியவரும். கூட்டணி இலைக்கு ஒட்டு போடு சூரியனுக்கு ஒட்டு போடு என்றாய் நாங்கள் எங்கள் கட்சி சின்னம் அரிவாள் சுத்தியல் சின்னத்தையே மறந்து போனோம். இலங்கையில் சொந்த ரத்தம் வலியில் துடிப்பதை கவர்மெண்டு டிவி ல பார்த்து கட்சி அதே போல் அழைக்கும் என்று காத்திருந்தேன் எல்லாம் முடிந்து செத்து ஒழிந்த பிறகு இலங்கை பிரச்னைக்கு தீர்வு என பிரகாஷ் காரத் கூப்புட்ட போது தான் நான் ஏமாற்ற பட்டது தெரிந்து கொண்டேன். ஒப்புக்கு சப்பாணியாய் ஆர்பாட்டங்கள் இரண்டையும் நடத்திட்டு கலையுறாங்க கேள்வி கேட்ட பல பேர் இப்போ கட்சியில இல்லையினு சொல்லி வருத்தப்பட்டான். இது என் கருத்தல்ல அப்பாவியாய் அவன் கேட்ட கேள்விக்கு நீங்கள் பதில் தந்தால் நான் அவனிடம் கூறி விடுகிறேன்.

    //ஈழ விஷயத்தில் ஆயுதத்தை எடுத்து தோற்று போய் விட்டோம்//

    அதனை முறியடிக்க எத்தனை நாடுகள் ஒன்று சேர வேண்டியிருந்தது நண்பா. இன்னும் சொல்ல போனால் இடதும் வலதும் என்று சொல்லி எதிரிகளாக இருந்த நாடுகளையெல்லாம் இணைத்திருக்கிறது ஈழப்போர்.

    • அவன் மேலும் சொன்னது எங்களுக்கு உலகில் தெரிந்த நாடுகள் ரஷ்யா,சீனா,கியூபா,மாநிலம் வெஸ்ட் பெங்கால், திரிபுரா, கேரளா, எங்கள் குழந்தைக்கு பேரு கூட ரஷ்யா சீனா மாஸ்கோ,என்று தான் வைப்போம்.

     • ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்ட அளவிற்கு, கம்யூனிச நாடுகளின் பெயர்களைத் தெரிந்துகொண்ட அளவிற்கு உங்கள் நண்பர் கம்யூனிசத்தைக் கற்கவில்லை அல்லது அதற்கு அவர் முயற்சிக்கவில்லை அல்லது அவருக்கு அந்த அமைப்பால் கற்றுக்கொடுக்கப்படவில்லை.

      • உங்கள் விளக்கத்தை அவரிடம் அப்படியே சொல்லி விடுகிறேன். அதனை கேட்டு அவரும் உடனே மனம் மாறி இயக்கத்தில் சேர்ந்து விடும் வாய்ப்பை பெறட்டும்..

   • Listen Every one…!

    I try to inform LTTE if any one exists, to change their name from LTTE into Ma Ka E Ka….Now you satify(vinavu)?

    every one come under the name of MAo….like ma ka e ka….

    then only “vinavu support them”…

  • நண்பர் க. யோவ் அவர்களுக்கு,
   சில விஷயங்களை நீங்கள் வசதியாக மறந்து விட்டு கருத்தை பதிய விட்டுள்ளீர்கள் என்று நினைக்கிறேன். மாற்று அரசியல் முன்னெடுப்புகளை கவனித்து வருபவன் என்ற முறையில் ஈழப்பிரச்சினையில் ம.க.இ.க வின் போராட்டங்கள் அறியப்பட்ட எந்த தமிழ் இனவாத அமைப்பை விடவும் அதிகமானது என்றே கருதுகிறேன். பு. மா.இ. மு கணேசன் போன்ற தோழர்கள் போலீசின் கொலை வெறி தாக்குதலுக்கு ஆளானார்கள். இது குறித்த செய்திகளுக்கு நீங்கள் வேறு எங்கேயும் போக வேண்டாம்; வினவு தளத்திலேயே ஆதாரங்கள் உள்ளன. அவற்றை மீண்டும் ஒரு முறை பார்வையிட பரிந்துரைக்கிறேன். மணியரசன் செய்தது என்ன? வை.கோ கூட்டங்களில் பங்கு பெற்று வீர உரை ஆற்றியது தவிர. சீமான் பல முறை சிறை சென்றது சாதாரணமானது அல்ல தான். ஆனால் சிங்கள பெண்கள் கற்பழிக்கப்பட வேண்டும் என்பதும், ஜெயலலிதாவிடம் சரணடைந்து கிடப்பதற்கும் குறித்த உங்கள் கருத்தை அறிய விழைகிறேன்.

   நீங்கள் இன்னொரு உண்மையையும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். பல தமிழ்த் தேசிய அமைப்புகளுக்கும் ஒற்றை அஜெண்டாவே உள்ளது. அதாவது ஈழம் மலர வேண்டும், அவ்வளவு தான். அதற்கு யார் காலிலும் அவர்கள் விழ தயார். ஆனால் கம்யூனிஸ்ட்கள் அணுகுமுறை வேறுபட்டது. அவர்களிடம் ஒருங்கிணைந்த பார்வை உள்ளது. இந்திய மேலாதிக்க் மனப்பான்மை, இந்திய பெரு முதலாளிகளின் வர்க்க நலன், இந்து மதவெறி பாசிசத்தின் அகண்ட பாரத கனவு இவற்றோடு பின்னி பிணைந்த ஒன்றாகவே ஈழப் பிரச்சினையை கம்யூனிஸ்ட்கள் பார்க்கிறார்கள். ஒரு fashion க்காக ஈழத்தை எதிர்க்கும் அ. மார்க்ஸ் போன்ற நபர்களிடமிருந்து பெரிதும் வித்தியாசப்பட்டது இது என்பதை அறிவீர்கள் என்று நினைக்கிறேன்.

   மாவோயிஸ்ட்கள் குறித்த உங்கள் விமர்சனமும் தவறு. அவர்கள் புலிகளை எந்த விமர்சனமும் இன்றி ஆதரிப்பவர்கள் என்று கருதுகிறேன். இந்து பாசிசம், மறு காலனியாக்கம் போன்ற பிரச்சினைகளில் உங்கள் கருத்து என்ன?

   • /ஏன் அது போல் பெரிய அளவில் செய்யவில்லை? /

    என்றுதான் கேட்டேன் செய்யவேயில்லை என்று சொல்லவில்லையே பல போராட்டங்களில் நானும் உடன் இருந்திருக்கிறேன்.

    /சில விஷயங்களை நீங்கள் வசதியாக மறந்து விட்டு கருத்தை பதிய விட்டுள்ளீர்கள்/

    நீங்களும் அதையே செய்கிறீர்களே..நான் எழுப்பியவைகளுக்கு பதில் தராமல் அதைப் பற்றி சொல்லுங்கள் என்று திசை திருப்புகிரீர்களே.. கடந்த 10 மாதங்களாக வினவின் பெருவாரியான கட்டுரைகளில் எனது ஆதரவு பின்னூட்டம் இருக்கும் அதனை நீங்களும் பார்க்கலாமே..

    /ஜெயலலிதாவிடம் சரணடைந்து கிடப்பதற்கும் குறித்த உங்கள் கருத்தை அறிய விழைகிறேன்/

    //தமிழ் தேசிய வாதிகள் தவறு செய்கிறார்கள்.இல்லை என்கவில்லை// இதைதான் மேலேயே சொல்லிவிட்டேனே..

    ஆனால் உங்கள் கருத்தில் ஒன்றை ஒப்பு கொள்கிறேன் அவர்களில் பலருக்கு சாதிய தலித்திய பார்வையில் குறைபாடுகள் இருக்கவே செய்கின்றன..

    ஆனால் அவர்களை விட நீங்கள் தான் அதிகம் போராட்டம் நடத்தியவர்கள் என்பதனை ஏற்க முடியாது. அவர்களும் இல்லை என்றால் என்னால் நினைத்து பார்க்க முடிய வில்லை..

    • ///ஏன் அது போல் பெரிய அளவில் செய்யவில்லை? /

     என்றுதான் கேட்டேன் செய்யவேயில்லை என்று சொல்லவில்லையே பல போராட்டங்களில் நானும் உடன் இருந்திருக்கிறேன்.//

     பெரிய அளவு என்றால்?

     • /பெரிய அளவு என்றால்?/

      அதுதான் 15,000 பேர் கலந்து கொண்ட தாமிரபரணி மறியல்னு சொல்லி விட்டேனே!

      இதற்க்கு மேல் விளக்கம் வேண்டும் என்றால் உங்களுக்கு கோனார் தமிழ் உரை தான் போட வேண்டும்..

      • ///பெரிய அளவு என்றால்?/

       அதுதான் 15,000 பேர் கலந்து கொண்ட தாமிரபரணி மறியல்னு சொல்லி விட்டேனே!

       இதற்க்கு மேல் விளக்கம் வேண்டும் என்றால் உங்களுக்கு கோனார் தமிழ் உரை தான் போட வேண்டும்..
       //

       15,000 பேர் மாநாடுக்கு அரசு பயந்ததை விட ஈழப் போராட்டத்தில் பு ம இமு மாணவர்களை இறக்கி விடத் துவங்கியவுடன் அரசு பயந்து கல்லூரிகளை மூடியதுதான் எனக்கு பெரிய அளவாக தெரிகிறது. யோவுக்கு எப்படி என்று தெரியவில்லை.

   • /மாவோயிஸ்ட்கள் குறித்த உங்கள் விமர்சனமும் தவறு./

    அவர்கள் நல்லவர்கள் என்று நான் முக நூலில் எழுதினேன். அவர்களை கண்மூடித்தனமாக ஆதரிக்காதீர்கள் அவர்களும் பல தவறுகளை செய்கிறார்கள் அதாவது பொது மக்களை கொலை செய்தல் என்று ம.க.இ.க தோழர் என் கருத்தை தவறு என்றார் நீங்கள் அமைப்புக்குள் இருந்தால் அவரை உங்களுக்கு தெரிய வாய்ப்புண்டு. இப்போது அதனை நான் ஏற்றுக்கொண்டு அவர்கள் சில தவறு செய்கிறார்கள் என்கிறேன் நீங்கள் தவறான கருத்து என்கிறீர்கள். எனக்கு விவாதம் செய்வதா வேண்டாமா என்று தெரியவில்லை.

    /அவர்கள் புலிகளை எந்த விமர்சனமும் இன்றி ஆதரிப்பவர்கள் என்று கருதுகிறேன்/
    அப்படியா? விளக்க முடியுமா?

  • யோவ்
   \\\இந்த அரசியலில் உங்களின் எந்த கருத்தாயிருந்தாலும் அந்த கருத்துக்களில் திடத்தையும் நேர்மையை யும் கடைபிடிப்பது எனக்கு வினவை தொடர்ந்து பிடிப்பதற்கு காரணம் ///
   தோழர் யோவ் ம.க.இ.க ஈழ பிரச்சினையில் நேர்மையாக் இருப்பதாக கருதிக்கொண்டு நேர்மை தவறுகிறார்கள்.குறிப்பாக அவர்கள் க்ருத்துப்படி பிரபாகரன் சர்வாதிகாரி ஆனால் அங்கிருக்கிற மக்கள் மனிதர்கள் தானே, பாட்டாளி வர்க்கம் தானே,அவர்களை தமிழர்களாக கூட பார்க்க வேண்டாம் குறைந்த பட்சம் இலங்கையர் என்ற கோணத்தில் பார்க்கலாமே? அங்கு அவர்களுக்கான் உரிமை மறுக்கபட்டு, நசுக்கப்படுகிறார்கள் ஒரு ஒற்றை மனிதன் பிரபாகரனை ஆயுததாரி என புறக்கணிக்கிறார்கள்,ஆனால் அதே சமயம் ஒட்டுக்குழுக்களான மற்ற குழுக்களுக்களூம் ஆயுதம் ஏந்தியவை தானே அவர்களை ஏன் ஆதரிக்கிறார்கள்?

 15. எத்தைத் தின்னால் பித்தம் தெளியும்னு தெரியாம தமிழ்த் தேசிய வியாதிகள் அலைவது கண்கூடாகத் தெரிகிறது.. ஒபாமா இலங்கையைக் கண்டித்து ஒரு வரி பேசினதுக்காக ‘ரோசாப் பூச் செண்டாலே’ மாவீரன் அமெரிக்கத் தூதரகத்துல நின்னாரு..ஒத்தை வரி தீர்மானம் போட்டு அதே நேரத்தில் பிரபாவைத் தூக்கிலிடச் சொன்னவளும் நான்தான்ன்னு பாப்பாத்தி சொன்னவுடனே கிளம்பிருச்சு தமிழ்த் தேசீயம்..அம்மான்னா சும்மாவாங்குது ஒன்னு..புரட்சித்தலைவர்தான் புலிகள் இயக்கத்தையே ஆரம்பித்தவர்ங்குது ஒன்னு.. அப்பேர்ப்பட்டவரின் கீப்பை புலிகள் கொல்ல நினைப்பார்களான்னு மாவீரம் பேசுது..மக்கள்திலகம்னு ஒன்னு எழுதுது..அப்போ எங்கே போச்சு மலையாள வெறுப்புன்னு புரியல..சிவசங்கர் மேனன் மலையாளி..தமிழன அழிக்காங்கிறே..எம் ஜி ஆர் என்ன உகான்டாக்காரனா? அவரும் மலையாளிதானே..அவரு மட்டும் புலிகளின் தலைவரா? அப்போ ஈழத்திலே நடந்ததே இரண்டு மலையாளிகளின் சண்டையா? நடந்ததெல்லாம் நிழல் யுத்தமா? (பிராக்சி வார்)..தமிழ்த் தேசியம்னா அடிப்படை என்ன? தமிழர், தமிழரின் தாய் மொழி..இரண்டுக்கும் வேட்டு வைக்குது அம்மா..அந்த அம்மாதான் ஈழத்தை ஈனப்போகும் தாய்ன்னு முதுகு சொறியறதெல்லாம் தேசிய உணர்வா? பிழைக்கத் தெரிந்த பித்தலாட்டமா?

 16. ‘மலையாளிகள் என்றால் அவர்கள் டீக்கடை வைத்திருப்பவர்கள்’-என்பது இன்றைக்கு ஒரு மிகச்சிறிய அடையாளத்திற்கு மட்டும்தான். இன்றைய இந்திய ஆட்சிமுறையில் மொத்த இந்திய அரசியலமைப்பையும், மட்டுமின்றி அந்நிய நாட்டு தொடர்புகளையும் நிர்வகிக்கும் இடங்களிலும் பொறுப்புக்களிலும் அவர்கள்தாம் இருக்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. மலையாளிகளை நாம் நமக்கெதிரானவர்களாகக் கருதத்தேவையில்லை. ஆனால் இரண்டு மூன்று மலையாள அதிகாரிகள்தாம் இலங்கைப்பிரச்சினையை இந்த அளவுக்குக் கொண்டுவந்தவர்கள் என்பதையும் கவனத்தில் இருத்திக்கொள்ளத்தான் வேண்டும். ஒரு ஆட்சியின் பெரும்பாலான முடிவுகளை அமைச்சர்களைவிடவும் பெரிய பொறுப்பிலிருக்கும் அதிகாரிகள்தாம் எடுக்கிறார்கள். அல்லது அரசியல் ரீதியாக அமைச்சர்கள் முடிவெடுத்துவிட்டாலும் அதனை தொடர்ந்து நடத்துவதும் திசைமாற்றுவதும் பெரும்பாலும் ஐஏஎஸ் போன்ற உயர்நிலை அதிகாரிகளே.
  பொதுவாழ்வில்கூட மலையாளிகள்மீது தமிழர்களுக்கு இருக்கும் நேயமும் நல்லெண்ணமும் நிச்சயமாக தமிழர்கள்மீது மலையாளிகளுக்கு இருப்பதில்லை.
  வேலைக்குத்தேர்வு செய்யும் பொறுப்பில் ஒரு மலையாள அதிகாரி இருக்கும் இடத்தில் ஒரேயொரு தமிழனை வேலைக்குத் தேர்வு செய்திருக்கிறார்கள் என்று எந்தச் செய்தியாவது இருக்கமுடியுமா என்பதைப் பாருங்கள்.
  மலையாளிகள் மட்டுமில்லை இன்றைக்கு தமிழனுக்கு எதிராக ஏகப்பட்ட சக்திகள் செயல்படுகின்றன என்பது உண்மைதான்.இதில் பல்வேறு சக்திகள் தமிழனுக்குள்ளேயே இருக்கின்றன என்பதும் உண்மைதான்.

  • அய்யா அமுதவன் அவர்களுக்கு.

   //ஆனால் இரண்டு மூன்று மலையாள அதிகாரிகள்தாம் இலங்கைப்பிரச்சினையை இந்த அளவுக்குக் கொண்டுவந்தவர்கள் என்பதையும் கவனத்தில் இருத்திக்கொள்ளத்தான் வேண்டும்.//

   மூன்று மலையாளிகள் இருந்துக் கொண்டு இந்திய அரசின் வெளிஉறவு கொள்கையை மாற்றி விட்டார்கள் என்று தங்கள் சொல்வது சரியா? சினிமாத்தனமாக இருக்கிறது.

   //இதில் பல்வேறு சக்திகள் தமிழனுக்குள்ளேயே இருக்கின்றன என்பதும் உண்மைதான்.//

   இது சரியான வார்த்தை மொழிரீதியாக, அரசியல்ரீதியாக,இனரீதியாக இப்படி

 17. ஆமா காலியான சீட்டுல துண்டு போட்டு வைப்பது போல அங்க ஈழம்னு மலர்ந்தா அதுல சொசியளிசத்த கொண்டு வர இப்பவே துண்டு போட்டு வைக்குரீங்க போல.!!ஆகா ஈழ தமிசனை யாரும் ஒரு மனிதனாக பார்க்கலை.சிலர் முதலாளித்துவ ப்ராடச்டாகவும் வினவு சோசியலிச ப்ராடச்டாகவும் மாற்ற பார்க்கின்றன.இரண்டுமே தவறான பார்வை.அந்த மக்களுக்கு உங்களை எதுவும் செய்ய சொல்லலை.தயவு செஞ்சி இது போன்ற கட்டுரைகளை தவிர்க்கலாம்!!

 18. அதே போல இனம் என்கிற உணர்வு என்பது என்ன? சாதி என்பது என்ன? முதலாளி,தொழிலாளி என்பது என்ன? ஒரு நாட்டில் தேசிய இனப்போராட்டம் ஏன் தோல்வி அடைகிறது? அதற்கு காரணம் என்ன எனபதை எல்லாம் படித்துவிட்டு வாருங்கள். எதுவும் தெரியாமல் மூளையை சும்மா காலியாக வைத்துக்கொண்டு வினவை திட்டுவது உங்களின் அறியாமையே.///////
  .
  .
  அதே போல சோசியலிசம் ஏன் சோவியத் யூனியனிலும் சீனாவிலும் தோற்றது!!ஏன் நக்சலைட்டுகளால் இந்தியாவில் ஆட்சியை பிடிக்க முடியவில்லை இதையும் படிக்கலாமே!!

 19. //தாமிர பரணி ஆறு விசயத்தில் 15,000 பேரை திரட்டி போராட்டம் நடத்தினீர்கள். இலங்கை பிரச்சனைக்கு ஏன் அது போல் பெரிய அளவில் செய்யவில்லை? //

  நண்பரே..ஈழத்தின் இறுதிப்போர் உச்சத்தில் இருந்தபோது அதைக் கூட்டணி சேர்க்கும் உத்தியாக தா.பா. மாற்றியபோது இந்திய ராணுவத்துக்கு ஆளெடுக்கும் அலுவலகம் முன் சாலை மறியல் செய்து ‘இந்திய அரசே போரை நிறுத்து’ எனப் போராடியதும், சென்னையில் 3500 பேரைத் திரட்டி சைதையில் ஆர்ப்பாட்டம் நடத்தியதும், கல்லூரிகள் முழுக்க வெளிநடப்புப் போராட்டத்தை நடத்தியதும், இந்திய அரசின் கொலைமுகத்தைத் திரைகிழித்து வீடியோப் பிரச்சாரம் செய்ததும் யார்? சற்றே பின்னோக்கி 2009 ஆம் ஆண்டைய வினவு கட்டுரைகளில் பாருங்க இவற்றுக்கெல்லாம் ஆதாரங்கள் உள்ளன

  • 15000, 3500 பரவாயில்லை நண்பரே? அப்படியே என்னுடைய மற்ற கேள்விகளுக்கும் உங்களுக்கு தோன்றுகிற பதிலை சொல்லுங்கள்..நான் விதண்டாவாதம் பேசுவதில்லை..

   • //15000,// இந்த நம்பர எங்க புடிச்சாருன்னு தெரியல. தாமிரபரணி போராட்டத்திற்கு வந்திருந்த கூட்டம் 5000லிருந்து 7000 வரை இருக்கும். எண்ணிக்கை இங்கு விசயமல்ல என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். யோவ் போன்றவர்கள் தாம் பிடித்த முயலுக்கு மூனு கால் என்று சொல்ல இது போல எண்களை பிடித்து தொங்கிக் கொண்டிருப்பதை என்னவென்று சொல்ல?

    • ////15000,// இந்த நம்பர எங்க புடிச்சாருன்னு தெரியல. தாமிரபரணி போராட்டத்திற்கு வந்திருந்த கூட்டம் 5000லிருந்து 7000 வரை இருக்கும். எண்ணிக்கை இங்கு விசயமல்ல என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். யோவ் போன்றவர்கள் தாம் பிடித்த முயலுக்கு மூனு கால் என்று சொல்ல இது போல எண்களை பிடித்து தொங்கிக் கொண்டிருப்பதை என்னவென்று சொல்ல?//

     மேலும் தாமிரபரணி கோக் எதிர்ப்பு போராட்டத்தை விட வீச்சிலும், தன்மையிலும் ஈழப் போர் எதிர்ப்புப் போராட்டத்தை ம க இக வீரியமாகவே பல்வேறு தளங்களில் நடத்தியது. சிறப்பு வெளியீடுகள், மாணவர்கள்-வக்கீல்கள் போராட்டம், மறியல் ஆர்பாட்டம், அரங்கக்கூட்டங்கள், ஈழம் பற்றிய வரலாற்று தொகுப்பு நூல்(புதிய ஜனநாயகத் தொகுப்பு). இதனை புரிந்து கொள்ளத்தான் வினவு தளத்தில் உள்ள கட்டுரைகளையாவது படியுங்கள் என்று ஒரு தோழர் யோவிடம் சொன்னார். யோவ் கேட்டால்தானே?

 20. இங்கே எல்லா இசமும் தோற்றுவிட்டதாக கூறும் நீங்கள் கம்யூனிசம் இன்றைய உலகில் என்ன நிலையில் உள்ளது அது ஏன் இந்த நிலைமைக்கு ஆளானது என்பதை எல்லாம் ஆய்வு செய்ங்க.அப்புறம் தமிழனை கிண்டல் பண்ணலாம்!!அகில இந்திய அரசியல் கட்சியின் பேச்சுக்கும் உங்களின் எழுத்துக்கும் ஒரு வேறுபாடும் இல்லை!!
  சிவ்யத் யூனியன் செசன்யா ukrain uzbekistan போன்ற நாடுகளை படுத்திய பாடு தெரியாதா?அப்புறம் ச்டாளினுக்கப்புரம் நீங்கள் மதிக்கும் ஒரு தலைவரையும் கம்யூனிச கொள்கை உருவாக்கவில்லையே!!உங்கள் இயக்கம் தலைவர்களை நம்பி இல்லை.தெரியும்.ஆனால் இய்காத்தை ஒருங்கிணைக்க தலைவரின் தேவை அவசியம் இல்லையா?ஒரே மொழி பேசும் ஒரு சோவியத் யூனியநிலேயே பல வேறுபாடு!!

  • //ஒரே மொழி பேசும் ஒரு சோவியத் யூனியநிலேயே பல வேறுபாடு!!// நல்ல வரலாற்று, பூகோளவியல், சமூகவியல் அறிவு. பின்ன ஏன் சோவியத் ‘யூனியன்’ என்று பெயர் வந்ததாம் ?

 21. அப்புறம் நாளைக்கு வெள்ளிகிழமை மறக்காம ஆர் எஸ் எஸ் எதிர்ப்பு கட்டுரை போடுங்க வினவு.நன்றி

 22. திரு.ரயாகரன் எழுதிய தேசியம் என்றூம் எப்பொழுதும் முதலாளித்துவ கோரிக்கை தான் பாட்டாளி வர்க்க கோரிக்கை அல்ல என்ற புத்தகத்தை படிக்கவும்.

 23. ஆனைமுத்து,பெரியார் தி.கவினர் சாதிக்கு எதிராகவும் நிற்கிறார்கள்,பழம்பெருமை பேசும் தமிழ் தேசியத்தையும் எதிர்க்கிறார்கள்.அவர்களுdaன் ம.க.இ.க ஏன் சேர்ந்து போராடுவதில்லை.உங்களுடைய அணுகுமுறை எல்லோரையும் குறை சொல்வது, அசல் புரட்சியாளர்கள் நாங்கள்தான் என்பதாக இருக்கிறது.சாதியை ஒழித்துவிட்டுத்தான்,ஏகாதிபத்தியத்தை வீழ்த்திவிட்டுத்தான்,இந்திய தேசியத்தை தூக்கி எறிந்துவிட்டுத்தான் எல்லாவற்றிற்கும் தீர்வு என்பது போகாத ஊருக்கு வழி.

  • பாட்டாளி வர்க்கத்திற்காகப் போராடுவதற்கு தெளிவான மார்க்சியக் கொள்கையுடைய ஒரே ஒரு கட்சிதான் இருக்கமுடியும்

  • ///ஆனைமுத்து,பெரியார் தி.கவினர் சாதிக்கு எதிராகவும் நிற்கிறார்கள்,பழம்பெருமை பேசும் தமிழ் தேசியத்தையும் எதிர்க்கிறார்கள்.அவர்களுdaன் ம.க.இ.க ஏன் சேர்ந்து போராடுவதில்லை.//

   இதை அவர்களிடம்தான் கேட்க வேண்டும். எல்லா போராட்டங்களிலும் அவ்ர்களை ம க இக கூப்பிடத்தான் செய்கிறது. ஈழப் போராட்டத்தில் அம்மாவின் காலடியே சரணம் என்று சென்ற மேற்படி ஆட்களுடன் ம க இகவும் செல்ல வேண்டும் என்ற உங்களது எதிர்பார்ப்பை சரியா? அதை விமர்சனம் செய்வது தவறா?

   பதில் சென்ன கேசவன்

   • ஈழப் போராட்டம் என்பது ஒரு பொது பிரச்சினை அதில் பாதிக்கபடுவது
    பாட்டாளி வர்க்கமும் சேர்ந்து தான் என்வே பிரச்சினையை புரிந்து கொண்டு பிரச்சினையின் அடிப்படையில் போராடலாமே? உங்களுக்கு பிரச்சினை முக்கியமல்ல குறிக்கோள் முழுதும் யாரை எப்போது எப்படி குற்றம் கண்டு பிடித்து குறை சொல்லலாம் என்பதுதானே உங்கள் கட்டுரைகளிளும்,போராட்டங்களீளூம் கோரிக்கையின் சாரம்சம் 25 சதவீதம் தான் இருக்கும்,மீதம் 75 சதவீதம் சாடல்கள் மட்டும்தானே. ,
    இன்னம்பூர் மனோகரன்

 24. வினவு,

  கட்டுரையின் முதல் வரியே அதிரடி .(எப்படி இதெல்லாம் யோசிகிறீங்க?)

  தமிழ்நாட்டில் இருக்கும், தமிழ் பேசும் அனைவரும் தமிழன் தான் என்று முன்பு ஒரு கட்டுரையில் சொல்லிவிட்டு இப்போது ஒரு புது பிரட்சினைக்காக துப்புரவு தொழிலாளிகள் எல்லாம் தெலுங்கர்கள் என்று குறிப்பிடுவது எந்த வகையில் நியாயம்?

  துப்புரவு தொழில் செய்பவர், துணி வெளுப்பவர், முடி திருத்துவோர்,இசை கருவி வாசிப்போர், தச்சு தொழில் புரிவோர் , இன்னும் பல தொழில் செய்வோர் எல்லாம் ஒரு குறிப்பிட்ட பிரிவை சார்ந்தவர் தான் என்றெண்ணுவது இன்னமும் முட்டாள்தனம்.

  விடுதலை புலிகள் மற்றும் தமிழ் ஈழ தமிழ் ஆர்வலர் விஷயத்தில் உங்கள் கருத்து தான் என்ன?

  போராட்டம் என்பது உங்கள் தலைமையில் தான் நடக்க வேண்டுமா? அதையே மற்றவர் செய்தால் தவறா?

  இங்கே இருக்கும் நம்மை விட, இலங்கையில் இருந்த புலிகளுக்கே அடக்குமுறையின் உண்மையான கோர முகம் தெரிந்திருக்கும். இலங்கை அரசுக்கு எதிரான போராட்டத்தை அவர்கள் பாணியில் நடத்தினார்கள். இத்தனைக்கும் புலிகள் எந்த ஒரு இசத்தையும் ஏற்று நடக்க வில்லை. அவர்களுக்கான விதிகளையும் கோட்பாடுகளையும் அவர்களே தீர்மானித்தனர். ஆனால் இலக்கு ஒன்றாக இருந்தது.

  செத்து சுடுகாட்டுக்கு போன பின்னரும் நீங்கள் அவர்கள் மேல் நஞ்சை கக்குவது சரியாக படவில்லை.


  மாக்ஸிமம்


  மாக்ஸிமம்

 25. “பாப்பாபட்டி, கீரிப்பட்டி பிரச்சினையில் ஆதிக்க சாதிவெறியைக் கடைபிடிக்கும் சாதிக்கு இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று ஒரு நிர்ப்பந் தத்தை ம.க.இ.க முன்வைத்தவுடனேயே.. ”

  இதெல்லாம் எப்போப்பா முன்னாடி வச்சீங்க?

  யாரோ ஒருத்தன் குண்டு வச்சா அதை தனி மனித தவறாகத்தான் கருதவேண்டுமே ஒழிய, அவன் சார்ந்த மதத்தின்,இனத்தின் தவறாக எடுத்துகொள்ள கூடாது னு நீட்டி முழக்கிய வினவா இதை சொல்வது?

  புரிஞ்சி போச்சு, நல்லா புரிஞ்சி போச்சு. ம்ம்ம் , நடத்துங்க….

  அதே போல எவனாவது பிக் பாக்கெட் அடிச்சான்னா , பென்சில் திருடிட்டான்னா, கொலை பண்ணிட்டான்னா , அவனவன் சாதிக்கான இட ஒதுகீட்டயும் ரத்து பண்ணனும் னு கோரிக்கை வைங்க.

  எப்படியும் தலித் இல்லாத எல்லா சாதியிலையும் இருக்குறவன் கண்டிப்பா ஏதோ ஒரு தப்பு பண்ணுவான். அப்புறம் எல்லாருக்கும் இட ஒதுக்கீட்டையும் ரத்து பண்ணிட்டு எல்லாத்தையும் நீங்களே எடுத்துக்கலாம்.

  எல்லாமே உங்களுக்குத்தான். உங்களுக்கே உங்களுக்குதான். என்ஜாய் …


  மாக்ஸிமம்

 26. ஈழப் பிரச்சனைக்காக தமிழகத்தில் வழக்கறிஞர்கள் சமரசமின்றி மூன்று மாத காலம் போராடியதை அறிவீர்கள்.அப்போராட்டம் தன்னிச்சையாக நடந்து விடவில்லை.தமிழகத்தில் அமைப்பு ரீதியாக வழக்கறிஞர்களைத் திரட்டிச் செயல்படும் ம.க.இ.க.வின் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் அப்போராட்டத்தை முன்தள்ளிச் சென்றதில் முக்கியப் பங்கு வகித்தது.அதேபோல் ம.க.இ.க.வின் பு.மா.இ.மு. மாணவர்களை அணிதிரட்டி போராட்டத்தில் ஈடுபட்டது.இவ்வாறாக பல்வேறு அரங்குகளில் போராட்டத்தை ம.க.இ.க.நடத்தியது.

 27. கட்டுரையை ஏற்கனவே படித்திருந்தாலும் இம்முறை பின்னூட்டங்களின் மூலம் பலரின்
  கருத்துக்களை தெரிந்து கொண்ட போது பலரின் கையறு நிலையை உணர முடிகிறது. ஈழப் பிரச்சனையிலும், கேரள-கர்நாடக-ஆந்திர மாநிலங்களுடன் உள்ள பிரச்சனைகளிலும் தமிழன் ஒன்றுபடவில்லையே என்கிற ஆதங்கம் புரிந்து கொள்ளக்கூடியதுதான்.

  மேற்கண்டபிரச்சனைகளுக்கு மட்டுமல்ல ஏனைய பல பிரச்சனைகளிலும் ஒட்டு மொத்தத் தமிழனும் ஒன்றுபடுவதில்லை என்பதையும் ஒப்புக் கொண்டுதான் ஆகவேண்டும். ஒட்டு மொத்தத் தமிழன்தான் ஒன்றுபடவில்லையே தவிர தமிழர்கள் ஒன்றுபட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். ‘பறத்’ தமிழன் ஒன்றுபட்டுவிட்டால் அவனை வீழ்த்த பிற தமிழர்களெல்லாம் ஒன்றுபடவில்லையா? பள்ளித் தமிழன் (வன்னியர்களை இப்படித்தான்
  அழைப்பார்கள்) ஒன்றுபட்டுவிட்டால் அவனை வீழ்த்த முதலித்தமிழன் ஒன்றுபடவில்லையா? கீழ்நிலைத் தமிழன் அதிகாரத்துக்கு வந்துவிட்டால் பார்ப்பனத் ‘தமிழன்’ ஒன்றுபடவில்லையா? இப்படி தமிழனுக்கு எதிராய் தமிழன் ஒன்றுபட்டுக்
  கொண்டுதான் இருக்கிறான்.

  வர்ண அடிப்படையில் சாதிப்படிநிலைகளாக கட்டமைக்கப்பட்டுள்ள ஒரு சமூகத்தில் அவன்
  பேசும் மொழியை மட்டும் வைத்துக் கொண்டு ஒன்றுபடுத்திவிட முடியாது. இது பிற மொழி பேசும் இன மக்களுக்கும் பொருந்தும். பிற மாநிலங்களின் நிலைமை தெரியாமல்
  அவர்களெல்லாம் ஒன்றுபடுகிறார்கள் என்கிற அனுமானங்களால் முடிவுக்கு வருவதால் மட்டும் தமிழன் ஒன்றுபட்டுவிட மாட்டான். எங்கெல்லாம் சாதிப்பாகுபாடுகளும் மதப் பாகுபாடுகளும் நிலவுகின்றனவோ அங்கெல்லாம் இதுதான் நிலைமை. மிகச் சிறிய அளவில் வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் சாராம்சத்தில் மாற்றம் இருக்காது.

  சாதி-மதப் பாகுபாடுகளைத் தூக்கி எறிந்து விட்டு சமூக விடுதலைக்குப் போராடும் இயக்கங்கள்கூட தமிழர்களை ஒன்றுபடுத்துவதற்கு படாத பாடுபடுகிறார்கள். ஒரே வர்க்கமாய் வாழ்ந்தால்கூட ஒன்றுபட மறுக்கிறான் தமிழன். இதற்கும் சாதியப்பாகுபாடுகளே மிகப் பெரியத் தடையாக இருக்கின்றன. ஐரோப்பிய நாடுகளில் நடக்கும் மக்கள் எழுச்சிகளைப் போல இந்தியாவில் காண முடிவதில்லையே? ஏன்? பரிசீலனைக்குஉட்படுத்துங்கள்.

  சாதியப்பாகுபாடுகள் ஒழிக்கப்பட்டுவிட்டாலும் எல்லாத் தமிழனும் ஒன்றுபட்டுவிடமாட்டான். அங்கே பணக்காரத் தமிழனும் ஏழைத்தமிழனும்
  எதிரெதிராய் நிற்பான். அண்ணன்-தம்பிகளுக்குள்ளேயே சொத்துக்காக மோதிக்
  கொண்டு பிளவுபடும் போது ஏழை-பணக்காரத் தமிழன் மட்டும் எப்படி ஒன்றுபட்டுவிடுவான்? தமிழனில் ஏழைகளே அதிகம் என்பதால் ஏழைத்தமிழன் ஏராளமாய், பெருந்திரளாய் ஒன்று சேருவான். அப்பொழுதுான் அதிகத்தமிழன் ஒன்றுபடுவதைப் பார்க்க முடியும். சாதியப் பாகுபாடுகளுக்கெதிராகவும், வர்க்கப்(ஏழை-பணக்காரன்)பாகுபாடுகளுக்கெதிராகவும் நடக்கும் இப்போராட்டம் அக்கம் பக்கமாகவே
  நடத்தப்பட வேண்டும். அதுவரை “தமிழா! இன உணர்வு கொள்” என்கிற காணல் நீரைப் பார்த்து கோஷம் போடுவதா? அல்லது “ஏழைத்தமிழா!வர்க்கமாய் திரண்டெழு!” என முழக்கமிடுவதா? என்பதே நம்முன் உள்ள கேள்வி.

 28. \\
  எப்படி ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி, பாரதிய ஜனதா கும்பல் சாதியப் பிளவுகளைக் கடந்து இந்துக்களை ஒன்றுதிரட்ட முடியாதென்பதால், முசுலீமையும் கிறித்தவரையும் எதிரியாகக் காட்டி மதவெறிக்கு ஆள் பிடிக்கிறதோ, அதே போல தமிழின ஓர்மைக்குத் தடையாக உள்ள உண்மையான காரணிகளை எதிர்த்துப் போராடும் நேர்மையில்லாத இனவாதிகள் பிற தேசிய இன மக்களை எதிரியாகக் காட்டியே தமிழின ஒற்றுமையை உருவாக்க முயற்சிக்கிறார்கள்.
  \\

  மிகவும் சரியாக சொன்னீர்கள். இப்படி செயற்கையாக ஆள்சேர்க்கும் வேலையில் இவர்கள் ஈடுபடுகிறார்கள். இது தொழிலாளர் வர்க்கத்தினுள்ளே பிளவை ஏற்படுத்த எத்தனிக்கும் வேலை. சூழ்ச்சிகள்.. எச்சரிக்கை தேவை.

  • இது தொழிலாளர் வர்க்கத்தினுள்ளே பிளவை ஏற்படுத்த எத்தனிக்கும் வேலை. சூழ்ச்சிகள்.///
   ..
   .
   என்னமோ தொழிலாளர் வர்க்கம் அண்ணன் தம்பி மாதிரி இப்போ பழகிட்டு இருப்பதாகவும் இனிமேல்தான் பிளவை உண்டாக பார்ப்பதாக நீங்கள் கூறுவது கேலிகூத்து.!!மூளைக்கு மூளை ஒரு தொழிலாளர் சங்கம்.இந்த சங்கத்துக்கும் மற்றொன்னுக்கும் ஆகாது!!பல கம்பெனிகளில் சங்கமே வைக்க மாட்டோம்னுதான் எழுதி குடுத்துட்டு வேலைக்கு போய்கினு இருக்காங்க/!!

 29. ஒய்யாரக் கொண்டையான தமிழினவாதத்தின் உள்ளே இருப்பது என்ன?”ஒய்யராக் கொண்டையில் இருக்கும் ஈரும்பேனும் மாதிரி,தமிழினவாதத்தின் உள்ளே இருப்பது
  சாதிவெறியும,சந்தர்ப்பவாதமும்,பொழப்பு வாதமும், பயந்தாகொள்ளிதனமும்,வாய்சொல் வீரமும்தான். இப்படி நிறைய………..

  • அப்படியா?புடிக்கலைன்னா வேற ச்டேட்டுக்கு ஓடு!!வினவும் தான்!!

 30. இதை எழுதியவர் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட அருந்ததியர் இனத்துத் தோழர் என்பது எனது முன்முடிவல்ல, கட்டுரையைப் படித்த பின் நான் எடுக்கும் பின்முடிவு. முகம் மறைத்து எழுதுவதில் உள்ள அட்வான்டேஜ், முகமூடியின் உள்ளே சார்புத்தன்மையையும் ஒளித்துக் கொள்ளலாம். வாழ்க உமது நற்பணி!

  • //இதை எழுதியவர் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட அருந்ததியர் இனத்துத் தோழர் //

   ஏன் மலையாளம், கன்னடம், பீகார், நேபாலை எல்லாம் விட்டு விட்டீர்கள்? கட்டுரையை அரைகுறையாய் படித்ததாலோ?

   • முழுமையாகத் தான் படித்திருக்கிறேன் தோழர்.

    எனது மாநிலத்துக்கு பக்கத்து மாநிலத்தால் நீர் மறுக்கப்படுகிறது. இதற்கு இணைந்து போராட தமிழர் என்ற உணர்வு தேவையா இல்லையா?

    பக்கத்து மாநிலத்தில் தமிழர் என்பதால் தாக்கப்படும் பொழுது எம்மனிதர் ஒன்று சேர தமிழர் என்ற உணர்வு தேவையா இல்லையா?

    பக்கத்து நாட்டில் தமிழர் என்பதால் தாக்கப்படும் பொழுது எம்மனிதர் ஒன்று சேர தமிழர் என்ற உணர்வு தேவையா இல்லையா?

    மத்தியகிழக்கு நாடுகளில் கேரளத்தான் செய்யும் இனவாத அரசியலை எதிர்க்க நாங்கள் ஒன்று சேர தமிழர் என்ற உணர்வு தேவையா இல்லையா?

    சாதிகளால் பிரிந்து கிடக்கும் தமிழனை இவாறான போராட்டங்களுக்காக ஒரு குடையின் கீழ் ஒன்றிணைப்பதற்கு தமிழன் என்ற உணர்வு அவசியம்.

    நான் தமிழன் என்ற உணர்வை நான் இழக்க வேண்டுமானால் மற்றவர்கள் என்னை தமிழன் என்று இனம் பிரிப்பதை நிறுத்த வேண்டும். அவர்களை நிறுத்தச் சொல்லு, நானும் நிறுத்திக்கிறேன்.

    • இதுக்குப் பதிலா, விவேக்கு கேரளச் சேச்சிகள இழிவுபடுத்தினான் அப்ப நீ எங்க போயிர்ந்தன்னு கேட்டுடாதீங்க. அதையும் தான் எதிர்கிறேன். சாதீயத்தையும் தான். ஒடுக்கப்படுதலையும் தான்.

    • தணல், தமிழ் உணர்வு அநாவசியம் என்று சொல்லவில்லை, உணர்வு சரிதான், ஆனால் உணர்வு பெற்று என்ன செய்யப்போகிறீர்கள் என்பதுதான் கேள்வி….. பழைய பழநெடுமாறன் முதல் புதிய சீமான் வரை தமிழுணர்வால் புலியென சீறியவர்கள்தாம், ஆனால் இப்போது போயஸ் தோட்டத்து எலியாக அல்லவா இருக்கிறார்கள்?

     • இப்படி தாங்கள் தமிழுணர்வை எதிர்ப்பதன் மூலமும்,எலிகள் மீது சீறுவதன் மூலமும்
      இந்திய தேசிய உணர்வை வெளிப்படுத்தி மறைமுகமாக டெல்லி முதலாளிகளின் இலவச கைக்கூலியாகவல்லவா இருக்கிறீர்கள்.ராஜபட்சே வகையறாக்களுக்கு டெல்லிக்காரனோடும்,மலையாளியோடும், கருணானிதியோடும் மறைமுகமாக சேர்ந்து உதவுகிறீர்களே.

      இன்னம்பூர் மனோகரன்

 31. ஒன்று மட்டும் நிச்சயம். திராவிடம், பார்ப்பனர் ஆதிக்கம் என்று பழைய கதையே சொல்லி தமிழர்கள் தலையில் மிளகாய் அரைச்சுட்டாங்க.

  இந்த “திராவிட” (தமிழ்லேயே இல்லாத சம்ஸ்கிருத சொல் தான் “திராவிடம்”) கதைய கேரளா, கர்நாடக, ஆந்திரா-லே சொல்லி பாருங்க. வாயாலே சிரிக்க மாட்டாங்க.

  • இன்னம்பூர் மனோகரன்

   பாரதம்,இந்திய தேசியம் என்று சொல்லி கொண்டே தமிழன் தலையை காலால் மிதித்து கொண்டிருக்கிறார்கள் பிற மானிலத்தவர்கள் ஒத்து ஊதுவதற்க்கு தமிழ்னாடு காங்கிரஸ்காரனோடு சேர்ந்து உங்கள் ஒரு கட்சி போதுமே.

 32. தோழர்களே,
  சாதி, மதம், இனம் அல்லது எந்த ஒரு ஒடுக்குமுறையாக இருந்தாலும், உடனடியாக அதன் எதிர்ப்பைத் தெரிவிப்பது என்பது நியாயம்தான்.

  “சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக போராடும்போது, சோசலிசம் வந்தால்தான் அதைத் தீர்க்க முடியும் என்று கூறுவது அவர்களுக்கு காலங்கடந்த நீதியாகும். அது அநீதிக்கு ஒப்பானது” என்று பெரியார் நேரடியாகவே சாடுகின்றார்.

  அதன்படி, தோழர்கள் கூறும் இனப் பிரச்சனையைத் தீர்க்க, சாதீயம்தான் முதல்
  எதிரி, அதை முதலில் தீர்ப்போம் என்று கூறுவது காலங்கடந்த நீதிக்கு வழிவகுக்கும் என்றே கருதவேண்டியுள்ளது.

 33. எதுவும் தெரியாமல் மூளையை சும்மா காலியாக வைத்துக்கொண்டு வினவை திட்டுவது உங்களின் அறியாமையே.//
  இனம்,மொழி குறித்த தெளிவான அறிவு உங்களுக்குத் தான் பற்றாக்குறையாக இருக்கிறது முல்லை பெரியாறு,காவிரி நீர்,ஒகேனக்கல்,பாலாறு,கிருஷ்ணா நீர்,கேரளாவில் தமிழர்களை தாக்குதல், ,கேரளாவில் சிறுமிகளை வேலைக்கு அமர்த்தி சூடு வைத்து கொடுமை படுத்துதல்,ஆந்திராவில் மிட்டாய் கம்பெனி அடிமைகள் இவை அனைத்தும் இன பிரச்சினையா? அல்லது உரிமை பிரச்சினையா?வாழ்வாதார பிரச்சினையா? கொஞ்சம் அலசிவிட்டு வாருங்கள் மீரா உரிமையையும்,வாழ்வாதாராத்தையும் கோருவது இனவெறியா?

 34. வினவு நீங்க தொழிலாளர்களை ஒன்றுபடுத்துவதில் வெற்றி கண்டுவிட்டீர்களா?மொதல்ல அதை முயற்சி பண்ணுங்க.அப்புறம் தமிழனை தமிழ் உணர்வை பத்தி பேசலாம்!!கிஷஞ்சி கோவிச்சிக்க மாட்டார்!!அவருக்கு தமிழ் பத்தி தெரியுமா?நீங்க எழுதுவதே ஒரு தேசிய கட்சியின் மாநில உணர்வுகளை கிண்டல் பண்ணும தொனியில்தான் உள்ளது.யாரோ தெலுகு மலையாள காரங்கதான் இதை எழுதியிருக்காங்க.சரி இதையே மலயாளியை அல்லது தெலுங்கனை கிண்டல் பண்ணி அங்க ஒரு கட்டுரை வெளியிடுக பாப்போம்!!

 35. மீராவின் கருத்தையும், கட்டுரையின் உள்ளடக்கத்தையும் நிருபிப்பதாக உள்ள இந்த பேட்டியை வாசியுங்கள் தோழர்களே !

  ஈழத்திற்கு எதிரான போர் இந்தியாவுக்கும் எதிரானதே – உருத்திரகுமாரன்
  [ வெள்ளிக்கிழமை, 22 யூலை 2011, 00:40 GMT ] [ சிறப்புச் செய்தியாளர் ]
  ஈழப்போர் சாரம்சத்தில் இந்தியாவுக்கு எதிராக சிங்களர் நடத்தும்போர்தான். இந்திய கொள்கை வகுப்பாளர்கள் இந்த வரலாற்று அம்சத்தை புரிந்துகொண்டு இனியாவது இலங்கை தொடர்பான அணுகுமுறையை மாற்றவேண்டும்.

  இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் இந்தியாவில் இருந்து வெளியாகும் ‘இந்தியா டுடே’ இதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

  அதன் விபரமாவது,

  கேள்வி. தமிழ்நாட்டில் தற்போது மாறிக்கொண்டிருக்கும் ஈழ ஆதரவுச் சூழலை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

  பதில். மிகவும் உற்சாகமூட்டுவதாக இருக்கின்றது. உண்மையான கவனத்தைச் செலுத்தக்கூடிய வலுவான தலைவர் ஒருவர் இருப்பதால்தான் இயல்பாகவே தமிழ்நாட்டில் மாற்றங்கள் நடக்கின்றன என நம்புகிறேன். முதல்வர் ஜெயலலிதான நிறைவேற்றிய தீர்மானங்கள், இவைபோன்ற தீர்மானங்களை மற்ற நாடுகளில் போடுவதற்கான வினையூக்கியாக திகழ்கின்றது.

  முள்ளிவாய்க்கால் நிகழ்வுகள் மனித இனத்தின் மனசாட்சியையே உலுக்கிவிட்டிருக்கின்றன. அது ஈழத்தமிழர்களை மட்டுமல்ல உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்களை ஒன்று சேர்த்திருக்கின்றது. இதில் தமிழ்நாடு தமிழர்கள் முக்கியமான இடத்தை வகிக்கிறார்கள். எட்டுக்கோடி தமிழர்கள் நினைத்தால் தமிழீழம் சாத்தியமாகும்.

  கேள்வி. ஆனால் இந்தியாவுடனான உறவு குறித்து உங்கள் நிலைப்பாடு என்ன?

  பதில். இந்தியப் பெருங்கடல் பகுதியிலும் தெற்காசியாவிலும் இந்தியாவின் புவிசார் நலன்கள் குறித்து நாங்கள் புரிதலுடன்தான் இருக்கிறோம்.

  இலங்கையில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருவதை நாங்கள் அறிவோம். யார் நிஜமான நண்பர்கள் என்பதை இந்தியாக கருத்தில் கொள்ள வேண்டும். 1971 வங்கதேசப் போரின்போது பாகிஸ்தான் விமானங்களுக்கு கொழும்பு விமான நிலையம் திறந்துவிட்டதை நினைவூட்ட விரும்புகிறேன்.

  வரலாற்று காரணங்களாலும் மகாவம்சம் ஊட்டிய அச்சத்தாலும் சிங்களர்கள் இந்தியாவை பகைமையோடு தான் பார்க்கிறார்கள். அவர்கள் ஈழத்தமிழர்களையே இந்தியாவின் கருவிகளாகப் பார்க்கிறார்கள்.

  ஈழப்போர் சாரம்சத்தில் இந்தியாவுக்கு எதிராக சிங்களர் நடத்தும் போர்தான். இந்திய கொள்கை வகுப்பாளர்கள் இந்த வரலாற்று அம்சத்தை புரிந்து கொண்டு இனியாவது இலங்கை தொடர்பான அணுகுமுறையை மாற்றவேண்டும்.

  இந்தியாவின் நலன்களும் ஈழத்தமிழர்களின் புவிசார் அரசியலும் ஒன்றுக்கொன்று முரண்பாடானது அல்ல என நாங்கள் நம்புகிறோம்.

  கேள்வி. ஈழத்தில் அமைதியை கொண்டு வருவதற்காக இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சி எடுப்பீர்களா?

  பதில். 1986,1990,1995, 2002-2006 என பல ஆண்டுகளாக இலங்கை அரசுடன் நடந்த பேச்சுவார்த்தைகள் வீணாகப் போயின.

  இலங்கை ஒரு சிங்கள பெளத்த நாடு என்ற நினைக்கும் அந்த அரசு அதை ஒன்றை இன ஒற்றை மத நாடாக ஆக்க இப்போது முயல்கிறது.

  அதுமட்டுமல்ல முள்ளிவாய்க்கால் நிகழ்வுகள் தற்போதைய வடிவத்தில் இலங்கை அரசோடு பேசுவது பயனற்றது என்பதைக் காட்டுவதோடு அப்படி செய்வது தார்மீகமும் அல்ல என்பதைக் காட்டுகின்றது.

  ஈழத்தின் புவிசார் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை மனதில்கொண்டு நாங்கள் பிராந்திய மற்றும் சர்வதேச வல்லரசுகளோடு பேசுவதற்கான வழியைத் தான் பார்ப்போம்

 36. நண்பர் யோவ் அவர்களுக்கு

  உங்கள் கேள்விகளை பார்ப்போம்,,,,,,

  @@@@@@@@@@@@@@
  இலங்கை பிரச்சனை என்று வருகிற போது தான் தன்னை அல்லாமல் அரசியல் ரீதியாக பிற இயக்கங்களுக்கு இளைஞர்கள் சென்று விடுவார்களோ என்ற ஒரு வித தவிப்போடு எழுதப்படுவது போலிருக்கிறது..
  @@@@@@@@@@@@@@

  போயி என்ன செய்வாங்களாம்????? நீங்கள் சொல்லும் நிலை யதார்த்தமாக இருக்கிறதா என்பதை ஒன்றுக்கு இரண்டு முறை பரிசீலனை செய்யுங்கள்.நம்நாட்டில் இன ரீதியான
  ஒடுக்குமுறையை விட மக்கள் இன்னும் பலவிதமான ஒடுக்குமுறைகளை சந்திக்கிறார்கள், இனவாத அரசியலில் இதற்கான தீர்வுகள் இல்லை, எனவேதான் அவர்களால் தனிப்பெரும் கட்சியாக வளர்ந்து வர முடியாமல் எதாவது ஒரு கழகத்தின் தொங்கு சதைகளாக போய் கடைசியில் உலக பயங்கரவாதி அமெரிக்காவின் ஹிலாரி கிளிண்டனுக்கு பிளெக்சு போர்டு மாட்டும் அளவுக்கு சீரழிந்து போய் விடுகிறார்கள்.

  இது போன்ற கட்சிகளில் ஒருவன் தொண்டனாக இணைந்து நடைமுறையில் சாதிக்கப் போவது என்ன? கொஞ்சம் கட்சியை நெருக்கிப்பிடித்தால் பால்தாக்கரே ரேஞ்சுக்கு பேசுகிறார்கள், அதற்கு எத்தனை பேர் தயார்? சீமான் தேவர் சிலைக்கு மாலை சூட்டுகிறார், அவர் கட்சியில் ஒரு தலித்துக்கு என்ன வேலை? சிதம்பரத்தில் தமிழில் பாடியது தமிழர்களின் பிரச்சனை இல்லையா, அதற்கு எத்தனை நூறு தமிழனவாதிகள் திரண்டனர்? அவ்வளவு ஏன் இங்கே தமிழ்நாடே சமச்சீர் கல்வி வழக்கால் பற்றி எறிகிறது, ஆனால் சீமான் அங்கே ஈழத்தில் நடக்கும் முனிசிபாலிடி தேர்தலுக்காக அறிக்கை விடுகிறார். தமிழனின் பிரச்சனையை பற்றி தமிழினவாதிகளின் சமீபத்திய சூப்பர்ஸ்டாரின்
  புரிதலே இந்த இலட்சணத்தில்தான் இருக்கிறது….

  இது போன்ற நிறைய உதாரணங்கள் கட்டுரையிலேயே கொடுக்கப்பட்டுள்ளது, அதை மீண்டும் பொறுமையாக வாசிக்கவும். எனக்கென்னவோ நீங்கள் இணையத்தில் மட்டும் சில காட்சிகளை பார்த்துவிட்டு தமிழின அரசியல் கோலோச்சியிருப்பதாக கருதுவதாக தெரிகிறது. தேமுதிக தொண்டனைக்க காட்டிலும் அரசியல் ரீதியாக காயடிக்கப்பட்ட அமைப்பாகத்தான் அவர்கள் உள்ளனர்.

  அடுத்தது
  @@@@@@@@@@@
  தமிழ் தேசிய வாதிகள் தவறு செய்கிறார்கள்.இல்லை என்கவில்லை. ஆனால் நீங்கள் எழுதுகிற கட்டுரைகள் உங்களுக்கே புரிகிறதா அல்லது எனக்கு தான் அறிவு போதவில்லையா? என்று தெரியவில்லை
  @@@@@@@@@@@

  என்கிறீர்கள்…
  அது என்ன தவறு, எப்படிப்பட்ட தவறு என்பது உங்குளக்கு புரிந்தால் இந்தக் கட்டுரையை புரிந்து கொள்வதில் ஒரு பிரச்சனையும் இருக்காது

  அடுத்து

  @@@@@@@@@@@@@@@@@@@
  கியூபா வும் சீனா வும் கம்யுனிஸ்ட் கம்யுனிஸ்ட் நாடுகள் இல்லை இந்திய மாவோயிஸ்ட் களும் தவறு செய்கிறார்கள் சாகச வாதிகள் சாரு மஜும் தாரும் சரியான கம்யுனிஸ்ட் இல்லை இங்கிலாந்தும் அமெரிக்காவும் முதலாளித்துவ நாடுகள். ம.க.இ.க வின் 100 பேர் மட்டும் தான் கம்யுனிஸ்ட் களா? உங்களின் உதவியோடு தான் செய்திருக்க வேண்டுமா? ஈழப் பிரச்சனையில் மாவோயிஸ்ட் கள் ஏன் குரல் கொடுக்கவில்லை என்று கேட்டால்
  நீங்கள் அவர்களுக்கு கொடுத்தீர்களா என்கிறீர்கள் கொடுத்தால் தான் தருவேன் என்பதுதான் கம்யூனிசம் மா?
  @@@@@@@@@@@@@@@@@@@

  காலங்காலமாக இருந்து வரும் புலம்பலான எல்லாரையும் குறை சொல்கிறீர்கள் என்ற கருத்தை முன்வைக்கிறீர்கள், இது குறித்து ஆனந்த விகடன் பேட்டியில் எங்கள் பொதுச்செயலாளர் அளித்த பதில் இதுதான்

  கேள்வி – ம.க.இ.க. மற்ற இயக்கங்களை, அமைப்புகளை, கட்சிகளை யாரையுமே ஏற்றுக்கொள்வதில்லை என்ற விமர்சனம் பற்றி?

  பதில் – ”ஒருத்தர் இன்னொருவரை நிராகரிப்பதால்தான் இத்தனை கட்சிகளே இருக்கின்றன. ம.க.இ.க. தெளிவாக அறிவிக்கப்பட்ட கொள்கைகளுக்காக ஒரு இயக்கமாக இருக்கிறது. தனது கொள்கைகளின் அடிப்படையில் அது மற்றவர்களை நிராகரிக்கிறது. நான் ஒரு தனிக்கட்சி வைத்திருப்பதே மற்றவர்களை நிராகரிக்கத்தான் என்றால், ஒவ்வொரு கட்சியும் மற்றவர்களை நிராகரிக்கிறது என்றுதான் போகும். எங்கள் மீது பொதுவாக சொல்லப்படுவது ‘எல்லோரையும் விமர்சிக்கிறீர்கள்’ என்பது. ‘நீங்க சொல்லியிருக்கும் விமர்சனம் தவறு’ என்று சொல்லலாமேத் தவிர, ‘நீங்கள் எல்லோரையும் விமர்சிக்கிறீர்கள்’ என்பதையே ஒரு விமர்சனமாக வைப்பது எப்படி சரியாகும்?

  ம.க.இ.க. ஒத்தக் கருத்துடன் இருக்கக்கூடிய அமைப்புகளுடன் இணைந்து அவ்வப்போது போராடுகிறது. ஆனால் ஒவ்வொரு பிரச்னைக்கும் 40, 50 அமைப்புகள் சேர்ந்து ஒரு கூட்டமைப்பு ஏற்படுத்துவது, அது அத்துடன் காணாமல் போய்விடுவது என்ற கசப்பான அனுபவங்கள் இருப்பதால் அத்தகைய கூட்டமைப்புகளில் நாங்கள் இணைவதில்லை.
  அதுவும் கூட இப்படி கருதுவதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.”

  முழு பேட்டியையும் வாசியுங்கள் – முக்கியமானது https://www.vinavu.com/2009/03/31/elec0903/

  அடுத்து ஈழப்பிரச்சனையில் இந்திய மாவோயிஸ்டுகள் ஏன் குரல்கொடுக்கவில்லை என்கிறீர்கள், அவர்கள் விடுதலைபுலிகளின் ஆதரவாளர்கள் ஆயிற்றே? இது தெரியாதா? மற்றபடி அவர்கள் அந்த நேரத்தில் ஈழத்தமிழ் மக்கள் சந்தித்த அதே போன்ற ஒரு போரை மத்திய இந்தியாவில் சந்தித்து வந்தனர். இந்தியாவின் உள்நாட்டிலேயே நடந்த
  யுத்தம் அது. அது பற்றி அறிய இதைப் படிக்கவும் https://www.vinavu.com/tag/operation-green-hunt/
  பாவம் தமிழினவாதிகளுக்குத்தான் இது பற்றி ஒன்றுமே தெரியாது 🙂

  மற்றபடி அவர்கள் குரல் கொடுத்தால்தான் நாம் குரல் கொடுப்போம் என்பதெல்லாம் உங்கள் கருத்து, நாங்கள் அப்படி நினைக்க்கஃகூட இல்லை, ராஜீவின் கொலைப்பழியையே எங்கள் மீது சூட்டினர் விடுதலைப்புலிகள். அதற்கான அடக்குமுறையை சந்தித்த அதே வேளையில்தான் இராஜீவ் கொலை சரியானது, இந்திய அமைதிப்படையை எதிர்த்த
  புலிகளின் போர் சரியானது என்று ஆதரவளித்து வந்தோம்.

  தயவு செய்து இனவாதிகளின் பொய்களுக்கு பலியாகாதீர்கள்.

  அடுத்து

  @@@@@@@@@
  தாமிர பரணி ஆறு விசயத்தில் 15,000 பேரை திரட்டி போராட்டம் நடத்தினீர்கள். இலங்கை பிரச்சனைக்கு ஏன் அது போல் பெரிய அளவில் செய்யவில்லை? ஏன் இலங்கை பிரச்சனைக்கும் ஒரு தமிழ் மக்கள் இசை விழாவை நடத்த வில்லை? பெயரில் மட்டும் தான் தமிழ் மக்களா?
  @@@@@@@@@@

  இதுவும் பொய்க்கு பலியான அல்லது தெரிந்து கொண்டே உண்மையை மறைக்கும் கூற்று. யார் ஈழத்துக்கு எதிராக அத்தகைய கூட்டத்தை கூட்டவில்லை
  https://www.vinavu.com/author/ap/ இந்த சுட்டியை பின்னாலிருந்து படித்துக்கொண்டு வாருங்கள் ஈழத்துப்போர் மற்றும் அதன் பின்னர் ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புகள் செய்த போராட்டங்களில் வினவில் பதியப்பட்டவைகளை காணலாம். இங்கு பதியப்படாத இன்னும் பல போராட்டங்கள் நடந்துள்ளன. இந்த அளவு எண்ணிக்கையில் போராட்டம் நடத்திய தனியான தமிழ் தேசிய அரசியல் கட்சி ஒன்றைக்காட்ட முடியுமா?

  நான் குறிப்பிட்ட பட்டியலிலிருந்து முக்கியமான சுட்டிகளை அளிக்கிறேன்

  இது ஜனவரி 26 – 2009, எந்த ஆர்பாட்டத்துக்கும் அனுவதி வழங்கப்படாத குடியரசு தினத்தில் நடத்தப்பட்டது.

  https://www.vinavu.com/2009/02/03/eelam20/
  ரம்மியமான ஒரு ஞாயிறு மாலை நேரத்தில் போலீசு பாதுகாப்போடு கொளுத்தப்பட்ட மெழுகுவர்த்தி ”போராட்டம்” இல்லை நிச்சயம் கைது சிறை என்ற நிலையில் நடத்தப்பட்டது.

  ஏன் தமிழ்மக்கள் இசைவிழா இல்லை என்றீர்களே, ஈழத்துயருக்கு மத்தியில் நாம் விழாவைக்கொண்டாடக்கூடாது என்று அது இரத்து செய்யப்பட்டது தெரியாதா? கூட்டத்துக்கு வரும் நபர்களின் எண்ணிக்கையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லையெனினும் நீங்கள் கேட்பதால் இதை சொல்கிறேன் … அதே தஞ்சையில் தாமிரபரணி ஆற்று போராட்டத்துக்கு இணையான எண்ணிக்கையில் சுமார் 10,000 பேர் கலந்து கொண்டு ” ஈழத்தின் மீதான இந்திய மேலாதிக்கப் போருக்கு பதிலடி கொடுப்போம்! ” என்ற முழக்கத்தின் கீழ் நடத்தப்பட்ட பிரம்மாண்ட மேதின போராட்டத்தை பற்றி தெரியாதா? தெரிந்து கொள்ளுங்கள் https://www.vinavu.com/2009/05/05/pala-mayday-tanjore/

  அடுத்தது
  @@@@@@@@@@@@@@
  ஒருவன் எதன் பெயரால் ஒருவன் ஒடுக்கப்படுகிரானோ அதன் பெயரால் அவன் எழுவான் அதுதான் இயல்பு. நான் ஒரு தலித். தலித் பிரச்சனைகளில் நான் என்னை தலித் ஆக உணர்கிறேன். தொழிலாளராக பாதிக்கப்படும் போது கம்யுனிஸ்ட் ஆக செயல்பட விரும்புகிறேன். அதே நான் தமிழனாய் ஒடுக்கப்படும் போது தமிழனாய் உணர்கிறேன்.
  மனிதாபிமான விசயங்களில் மனிதனாக உணர்கிறேன்.சோ சிம்பிள்.இதில் இன வாதம் மன வாதம் என்று பேச ஒன்றும் இல்லை.நான் கண்ணுக்கு கண் என்பதையும் சமமான எதிர்வினையை யும் எதிர்க்கிறேன்.
  @@@@@@@@@@@@@@

  நீங்கள் சொல்வது உங்கள் தரப்பு, இந்த கட்டுரை உங்களைப்பற்றிய விமரிசனமா? தமிழினவாதத்தை ஒரே அரசியல் முழக்கமாக வைத்துள்ளவர்களுக்கானது… நியாயப்படி நீங்கள் அவர்களிடம்தான் இதை சொல்லவேண்டுமே ஒழிய பண்முகத்தன்மை வாய்ந்த, நீங்கள் சொல்லும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வை முன்வைக்கும் எங்களிடம்
  அல்ல.

  அடுத்து
  @@@@@@@@@@@@@@
  சட்டக்கல்லூரி மாணவர் மோதலையும் ஏதோ ஒரு வெளி மாநிலத்தில் நிறுவனத்தில் மேலாளரை தொழிலாளர்களே ஒன்று சேர்ந்து கொன்று போட்டதையும் எதிர்வினையாக பார்க்க நீங்கள் தான் எனக்கு கற்று கொடுத்தீர்கள், உசுப்பேற்றிநீர்கள். அவைகளை பாராட்டி கட்டுரை எழுதினீர்கள். ஆனால் முல்லை பெரியாறு காவிரி நதி நீர் ஒக்கேனக்கல் குடிநீர் என எதற்கும் தமிழர்கள் எதிர்வினை ஆற்றியவர்கள் இல்லை. ஆனால் எங்கோ யாரோ
  ஒருவரை தமிழர் அல்லாததால் அடித்ததாக சொல்லி தமிழர்கள் இன வெறி பிடித்து திரிவது போல் காட்ட முயல்கிறீர்கள். தலித் பிரச்சனைகளை முதலில் கம்யுனிஸ்ட் கள் எடுக்காததால்தான் தலித் கட்சிகள் உருவாகி இன்று அவர்கள் நீங்கள் சொல்வதுபோல் பிழைப்பு வாதிகள் ஆகியிருக்கலாம்.
  @@@@@@@@@@@@@@

  இதிலும் நீங்கள் சொல்வது உண்மைக்கு மாறானது, தமிழர்கள் இனவெறி பிடித்தவர்கள் அல்ல என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. அவர்களை இனவெறி பிடித்தவர்களாக மாற்றத்துடிக்கும் தலைமைமீதுதான் எங்கள் விமரிசனம்.

  கம்யூனிஸ்டுகள் தலித் பிரச்சனையை கையில் எடுக்கவில்லை என்கிறீர்களே, கீழத்தஞ்சையில் துவங்கிய விவசாயிகள் போரடாட்டத்துக்கு பிறகு காங்கிரசுக்கு வால்பிடித்தே அழிந்த சிபிஐயும் அதன் பின்னர் சிபிஎம்மும் சீரழிந்து போனது ஊர்ரிந்ததுத்தான். ஆனால் நக்சல்பாரிகளை பொறுத்தவரை உங்கள் கூற்று மிகத்தவறானது. இன்று சீரழிந்த தலித்திய தலைமைகளை அவர்கள் தோன்றிய காலத்திலேயே அவர்கள் மேல் நாங்கள் வைத்த விமரிசனங்களை பழைய புதிய ஜனநாயக இதழ்களில் படியுங்கள். தலமை சீரழிந்து போனது என்பதால் பிரச்சனை நீர்த்து போவதில்லை, இன்றளவும் எங்கள் அரசியல் நிகழ்ச்சி நிரலில் பார்ப்பனிய பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டம் முதன்மையாகவே இருக்கிறது

  அடுத்து
  @@@@@@@@@@@@
  அதே போல் இலங்கை பிரச்சனையிலும் நீங்கள் செய்யும் தவறே தமிழ் தேசியவாதிகளை பலப்படுத்தும். ராஜபக்சே வை எதிர்க்கும் கட்டுரைகளை விட புலிகளையும் தமிழ் தேசியவாதிகளையும் எதிர்க்கிற கட்டுரைகள் தான் நாளுக்கு நாள் வினவில் வந்த வண்ணம் இருக்கின்றது.
  @@@@@@@@@@@@

  இதுவும் துளியும் உண்மையில்லாத கருத்து. ஈழத்தை பற்றிய வினவில் வந்த கட்டுரைகளை மொத்தமாக பார்தாலே அதில் உள்ள ஒட்டையை நீங்களே கண்டு பிடிக்கலாம், போல புலிகளின் மீதான விமிரிசனம் என்பது அதன் துவக்கம்
  முதலே நாங்கள் வைப்பதுதான். ஏதோ திடீரென நாங்கள் செய்த கண்டுபிடிப்புகள் அல்ல. அந்த விமரிசனங்களை தொகுப்பாக படித்தால் இன்றைய நிலையை புரிந்து கொள்ள உங்களுக்கு உதவியாக இருக்கும்.

  வினவில் புலி ஆதரவாளர் ரதி அவர்கள் கட்டுரைத்தொடர் எழுதிய போது அதை எதிர்த்து வினவும் மகஇகவும் இனவாதத்தில் சீரழிந்து போனது என்று பிரான்சு தோழர் இரயாகரன் எழுதிவந்தார், அவருக்கு வினவு அளித்த பதிலை வாசியுங்கள் உங்களுக்கு சில உண்மைகள் புரியும் https://www.vinavu.com/2009/09/04/raya3/

  அடுத்து
  @@@@@@@@@@@@@@@@
  காலத்தை தவறாக பயன்படுத்தி விடாதீர்கள். என்னை போன்றவர்கள் தலித் கட்சியிலோ, தமிழ் தேசிய கட்சிகளிலோ இணையாமல் இவைகளை புரிந்து கொண்ட கம்யுனிஸ்ட் இயக்கங்களை தான் தேடுகிறோம் அது சாத்தியமற்ற சூழ்நிலையில் எந்த பிரச்சனை அதிகமாக இருக்கிறதோ அந்த இயக்கத்தில் செயல்படுகிற சூழ்நிலைதான் உருவாகும்.

  ஆனால் ஒன்று ஈழம் விசயத்தில் pjp,cpim,தங்கபாலு வரைக்கும் ஆதரவு வேஷம் போடுகிற இந்த அரசியலில் உங்களின் எந்த கருத்தாயிருந்தாலும் அந்த கருத்துக்களில் திடத்தையும் நேர்மையை யும் கடைபிடிப்பது எனக்கு வினவை தொடர்ந்து பிடிப்பதற்கு காரணம் என்பதை ஒப்பு கொள்கிறேன்.நான் வயதில் சிறியவன் தான் உங்களின்

  சமூக பணிக்கு முன் நான் ஒரு தூசி கூட இல்லை தான் இருந்தாலும் கேட்க வேண்டும் என்று மனதில் பட்டதை சொல்லியிருக்கிறேன்,கேட்டிருக்கிறேன் பதில் சொல்லுங்கள்.இதே கேள்விகள் அனைவரிடமும் இருந்தால் அவர்களும் பயன் பெறட்டும்.நாளையே ம.க.இ.க வில் நான் சேருவது பற்றி முடிவெடுக்கிறேன்…

  @@@@@@@@@@@@@@@@

  உண்மை, நீங்கள் இணையவேண்டியது எங்களிடம்தான்….வரவேற்கிறோம்!

 37. this is a well-researched analysis of the outright opertunistic stand taken by the so called tamil-race-representatives. of course, we do need the tamil racial sense, but in a sensible manner.

 38. வடநாட்டு நக்சல் வெளியீடுகளில் எல்லாம் தமிழ் ஈழ பிரச்னை பற்றி ஒரு செய்தி கூட இருக்காது நமது மீனவர்கள் சுடப்படுவதும் இருக்காது.ஆனால் இங்கே ஒரிஸ்ஸா போஸ்கோ பிரச்னை பற்றி தாண்டேவாடா காட்டு பிரச்னை பற்றி குஜராத்தில் மனித உரிமைகள் மீறல் பற்றி கர்நாடகாவில் எடியூரப்பாவை பற்றியெல்லாம் வடக்கிலிருந்து இவர்களின் எஜமானர்கள் எழுத சொல்வார்கள் வினவு எழுதும் அவ்வளவுதான் .மற்றபடி ஈழத்தை பற்றி அவனுக்கும் தெரியாது இவர்கள் சொன்னாலும் வடக்கே அவர்கள் ஏடுகளில் எழுத மாட்டார்கள்.ஸ்கூல் காலேஜ் பிரச்னைகளில் மட்டும் மாணவர்களை ப்ரைன்வாஷ் பண்ண நமக்கு முன்னாடி போய் நின்னு சீன் போடுவார்கள்.ஒரு இனம் அழிந்து போகும் வரை வேடிக்கை பார்த்துவிட்டு,போராடுபவனையும் விமர்சனம் பண்ணுவார்கள்.

   • தோ பாற்ரா, துக்ளக் சோ———–களெல்லாம் சிரிப்பான் போடுவதை…
    மொதல்ல மும்பை தமிழன் எழுதுனதே உளரல், அதுல துளிக்கூட உண்மையில்லை என்பது வேறு விசயமென்றாலும், காலங்காலமாக ஈழத்தமிழ் போராட்டத்தை இழிவு படுத்திவரும் வலதுசாரி கும்பல்களெல்லாம் கூட்டத்தோடு கும்ம வருவதை பார்த்தால் குமட்டிக்கொண்டு வருகிறது… ச்சீய் இதுவும் ஒரு பிழைப்பா

 39. Sukdev//மாவோயிஸ்ட்கள் குறித்த உங்கள் விமர்சனமும் தவறு. அவர்கள் புலிகளை எந்த விமர்சனமும் இன்றி ஆதரிப்பவர்கள் என்று கருதுகிறேன்.//

  உங்களுக்கான பதிலும்

  கேள்விக்குறி //மற்றபடி அவர்கள் குரல் கொடுத்தால்தான் நாம் குரல் கொடுப்போம் என்பதெல்லாம் உங்கள் கருத்து//

  உங்களுக்கான பதிலும்

  ம.க,இ.க. தோழர் என்னுடனான முக நூல் விவாதத்தில் சொல்லியவைகள் :

  ///நக்சலைட்டுகள் அப்பாவி கிராம மக்களை காட்டிகொடுத்த குற்றத்திற்காக கொன்றார்கள் பள்ளிக்கு பாம் வைத்தார்கள் கொடூரமாக விவசாயிகளை சித்ரவதை செய்தார்கள் அப்படி இப்படி என்று முதலாளித்து பூர்சுவா ஊடகங்களில் தினமும் சமீப காலங்களில் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன அனால் அதனை வர்க்க பார்வையோடு உண்மையாக இருக்காது என்று நம்புகிறோம்.///

  இவற்றில் குறிப்பிடத்தக்க அளவுக்கு உண்மைகள் இருக்கின்றன என்பது மறுப்பதற்கல்ல, வர்க்கக்கண்ணோட்டத்துடன் பார்ப்பது என்கிற பெயரில் மாவோயிஸ்டுகளின் தவறுகளை ஆமோதிப்பது தவறு, அவர்கள் அவ்வாறான தவறுகளை செய்கிறார்கள், அவர்களுடைய இத்தகைய அணுகுமுறைகளை நாங்கள் என்றைக்கும் அனுமதித்ததில்லை மாறாக அவற்றை கடுமையாக விமர்சித்தே வந்திருக்கிறோம், இது தொடர்பாக எமது பத்திரிகைகளில் டஜன் கணக்கான கட்டுரைகளும், இதுவரை ஐந்து நூல்களையும் வெளியிட்டுள்ளோம். மாவோயிஸ்டுகளின் கண்ணோட்டமும் இராணுவவாதம் தான்.

  இந்தியாவிலுள்ள நேச சக்திகளை பயன்படுத்தியிருக்க வேண்டும் என்கிறீர்கள் அந்த நேச சக்திகள் போர் உச்சகட்டத்தில் மக்களெல்லாம் சாகும் போது நாங்களெல்லாம் அழுது கத்தி ஆர்ப்பாட்டம் செய்த போது தமிழ் நாட்டின் ம.க.இ.க தவிர இந்தியா முழுவதும் உள்ள உங்கள் நேச சக்திகள் ஒரு ஆர்ப்பாட்டத்தை யாவது நடத்த குரல் கொடுக்க முன் வந்தார்களா? /// நீங்கள் அவர்களுக்கு குரல் கொடுத்தால் தானே அவர்கள் உங்களுக்கு குரல் கொடுப்பார்கள். இவர்கள் காஷ்மீர் மக்களின் விடுதலைக்கோ, நாகாலாந்து, மிசோராம், அருணாச்சல் உள்ளிட்ட வடகிழக்கு மக்களின் விடுதலைக்கோ குரல் கொடுக்காமல் அவர்களை ஒடுக்கி வைத்திருக்கும் இந்தியாவுக்கு சமாதானப்புறா என்று வாழ்த்து சொல்லிக்கொண்டிருப்பார்கள் ஆனால் அவர்கள் மட்டும் உங்களுக்கு குரல் கொடுக்க வேண்டும் என்றால் எப்படி ? எதிரியின் நண்பனுக்கு யார் குரல் கொடுப்பார்கள் ?

  /காலங்காலமாக இருந்து வரும் புலம்பலான எல்லாரையும் குறை சொல்கிறீர்கள் என்ற கருத்தை முன்வைக்கிறீர்கள்/

  அது அதற்காக கேட்கப்பட்டதல்ல

  இந்தியாவிலுள்ள நேச சக்திகளை பயன்படுத்தியிருக்க வேண்டும் என்றும் இந்தியா விடம் ஈழம் கேட்டார்கள் என்பதும் உங்களின் பொதுவான கருத்தாக இருக்கிறது அதற்காக கேட்கப்பட்டது. அதனடிப்படையில் கீழுள்ளது கேட்கப்பட்டது

  ம.க.இ.க வின் 100 பேர் மட்டும் தான் கம்யுனிஸ்ட் களா? உங்களின் உதவியோடு தான் செய்திருக்க வேண்டுமா?//

  //இதிலும் நீங்கள் சொல்வது உண்மைக்கு மாறானது, தமிழர்கள் இனவெறி பிடித்தவர்கள் அல்ல என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. அவர்களை இனவெறி பிடித்தவர்களாக மாற்றத்துடிக்கும் தலைமைமீதுதான் எங்கள் விமரிசனம்.//

  தமிழ் திராவிட இயக்கங்கள் தோன்றி இதனை வருடங்களாகியும் நடக்காத அது இப்போது நடந்து விடும் அபாயம் இருப்பதாக எதனடிப்படையில் சொல்கிறீர்கள்? இவர்களை விட தனித் தமிழ் நாடு அது இது என நிறைய பேசியவர்கள் இதற்கு முன் உள்ள பழைய தலைவர்களே..அவ்வளவு பேசியும் எழுதியும் தமிழ் தமிழ் நாட்டில் எங்கேயும் கோலோச்ச முடியவில்லை இதில் தமிழர்கள் எங்கேருந்து ஆதிக்க சக்திகள் ஆகும் வாய்ப்பு தெரிகிறது?
  நாம் தமிழர் கட்சியும் ஆதித்தனாரால் தொடங்கப்பட்ட பழைய பெயரே..

  //எங்கள் அரசியல் நிகழ்ச்சி நிரலில் பார்ப்பனிய பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டம் முதன்மையாகவே இருக்கிறது//

  இல்லை என்று சொல்லவில்லை தேவைக்கு தகுந்தால் போல் போதுமானதாய் இல்லை. இருந்திருந்தால் தலித் கட்சிகள் மக்கள் செல்வாக்கை எப்படி பெற்றன.. அவைகள் மற்ற சாதி அமைப்புகள் போல சாதி உணர்வில் சேர்ந்தார்கள் என்கிறீர்களா?

  புது தலைப்புக்கு செல்வதாய் நினைத்தால் பதிலளிக்க வேண்டாம். என் கேள்வியை விளக்கியிருக்கிறேன் அவ்வளவுதான் பல இடங்களில் என் கேள்வி முழுமையாக புரிந்து கொள்ளப்படாமலேயே ம.க.இ.க. வின் சாதனைகளை சொல்லி பதிலளித்து இருக்கிறீர்கள். நிறைய சுட்டிகளையும் கொடுத்திருக்கிறீர்கள் அவைகளை படிக்க வேண்டும் என்பதால் நானே விவாதத்துக்கு வாய்தா வாங்குகிறேன்..என்னிடம் உங்களிடம் கேட்க நிறைய கேள்விகள் இருக்கின்றன. உங்களிடம் அதற்கு தகுந்த பதிலும் இருக்கலாம் இணையம் மூலம் விவாதிப்பதில் நிறைய தொல்லைகள் எல்லோருக்கும் இருக்கின்றன..நான் கேள்விகளை கேட்டால் எனக்கு அறிமுகமான ம.க.இ.க தோழர்கள் ஆளுக்கு ஒரு பதிலை சொல்கிறார்கள் அதை வைத்து பேசினால் பிறகு அது உங்கள் கருத்து என மற்றவர்கள் நிராகரிக்கிறார்கள்..இங்கு கூட யார் இயக்கத்தில் உள்ளவர்கள் யார் வெறும் ஆதரவாளர்கள் என்பதை அவசியம் வெளியிட்டு பேசுவது உதவியாக இருக்கும். எல்லோருக்கும் பதிலளிக்க வேண்டியிருக்கிறது அது விதண்டாவாததில் தான் போய் முடியும்.

  /ராஜபக்சே வை எதிர்க்கும் கட்டுரைகளை விட புலிகளையும் தமிழ் தேசியவாதிகளையும் எதிர்க்கிற கட்டுரைகள் தான் நாளுக்கு நாள் வினவில் வந்த வண்ணம் இருக்கின்றது/

  //இதுவும் துளியும் உண்மையில்லாத கருத்து. ஈழத்தை பற்றிய வினவில் வந்த கட்டுரைகளை மொத்தமாக பார்தாலே அதில் உள்ள ஒட்டையை நீங்களே கண்டு பிடிக்கலாம், போல புலிகளின் மீதான விமிரிசனம் என்பது அதன் துவக்கம்//

  10 ஒருவனை நல்லவன்னனு சொல்லவதும் 5 முறை ஒருவனை திருடன்னு சொல்வதும் ஒன்றாகாது தோழர்..

  உங்களின் புலி எதிர்ப்பு தமிழ் தேசிய எதிர்ப்பு யாருக்கு நன்மையாக போகும் என்பதையும் பாருங்கள்.. ஈழ மக்களின் எதிரிகளுக்கு அது பயன்படாதா? புலிகளா அவர்கள் எதிரிகள்?

  உங்கள் எதிர்ப்பு மக்களிடம் எப்படி போய் சேரும் தெரியுமா? சிறு உண்மை உதாரணம். ஒரு பதிவர் தன் பிளாக்கில் தேசிய கொடியை பறக்க விட்டு கொண்டு தமிழ் தேசியவாதிகளை இந்தியாவின் எதிரிகள் போலவும் இந்திய தேசியவாதிகள்தான் கடவுள்கள் என்றும் சீமானை தரக்குறைவான வகையிலும் எழுதி வந்தார். அவர் வினவுக்கு தன் மெனு பாரில் லேயே லிங்க் கொடுத்திருந்தார். வினவில் கருத்துரையும் இடுவார் என நினைக்கிறன் ஆனால் அதிகமான கருத்துரைகளை நான் பார்த்ததில்லை..பச்சிளம் சேரிச் சிறுவன் தில்சன் கொலையில் ராணுவத்திற்கு ஆதரவாக மனசாட்சியே இல்லாமல் வினவில் பின்னூட்டம் இட்ட போதுதான் அவர் எப்படிப்பட்ட வகையான சிந்தனையானர் என்பது புரிந்து போனது. அவர் தற்போது உங்கள் லிங்க் கை மெனு பாரிலிருந்து நீக்கிவிட்டார். எதற்காக சிறுவன் தில்சனின் மரணத்திற்கு நியாயம் கேட்டதற்காக, அப்படிப்பட்டவர் இவ்வளவு காலம் வினவை பற்றி என்ன விதமான புரிதல் இருந்தால் என்ன புரிதலை உங்கள் எழுத்துக்கள் அவருக்கு ஏற்படுத்தியிருந்தால் அவர் உங்களுக்கு லிங்க் கொடுத்திருப்பார். அவருடைய புரிதல் நீங்கள் தமிழ் தேசியத்தை எதிர்ப்பவர்கள் என்பது மட்டும் தான். கீழுள்ளது அவரது வரிகள் தான்

  //இந்தியா தமிழர்களுக்கு துரோகம் விளைவித்து விட்டது, இந்தியாவில் இறக்கம் இல்லை என்றெல்லாம் ஒருசிலர் பேசி அரசியல் லாபம் பெற நினைக்கின்றனர். ஒன்றை மட்டும் புரிந்துக்கொள்ளுங்கள் உலகத்தில் எந்த ஒரு நாடும் மற்ற நாட்டின் மேல் போர் தொடுக்கத்தான் விமானப்படையை பயன்படுத்தும் ஆனால் ஒரு நாடு இன்னொரு நாட்டின் அனுமதி இல்லாமல் விமானப்படையை கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியது என்றால் அது இந்தியாவாக மட்டும்தான் இருக்க முடியும்.//

  இன்னொரு முக்கியமான விசயம் அந்த பதிவருக்கு இலங்கை சிங்கள கொடி அதே போல் பறக்கும் ஒரு பதிவர் எந்த நாட்டை சேர்ந்தவர் என தெரியவில்லை தன் பிளாக்கில் முகப்பு பக்கத்தில் லிங்க் கொடுத்திருக்கிறார் எதேச்சையாக அது என் கண்ணில் பட்டது. அது எது என்று தற்போது எனக்கு நினைவும் இல்லை ஆனால் ஒரு தமிழ் பிளாக் தான். அதில் என்ன தவறு புலிக்கொடி பறந்தால் தான் தமிழனா? என்பதற்குள் நான் போக விரும்பவில்லை.இந்த லிங்க் தொடர்பு இறுதியில் எங்கே போய் முடியுமோ தெரியாது. அந்த பதிவரின் கட்டுரைகளில் பல நல்ல கட்டுரைகளும் இருப்பதை நான் இங்கே மறுக்க வில்லை.. அவரை நான் இங்கே பெயர் குறிப்பிட வில்லை தவறான அவதூரையும் செய்யவில்லை இருப்பதை மட்டுமே சொல்லியிருக்கிறேன். இதற்க்கு பதில் கொடுப்பவர்களும் பொது சபை என்பதால் பயன்படுத்த வேண்டாம். அவரே வேண்டுமானால் பதில் தந்தால் அது உதவியாக இருக்கும்.

  ஈழப் போர் உச்சத்தில் நடந்த மே மாதத்தில் என நினைக்கிறன் உங்களின் மூன்று புத்தகங்கள் வெளிவந்தன.. எந்த நேரத்தில் எதை சொல்வது என்று கூட பார்க்காமல் எழவு வீட்டில் வந்து இலங்கை தமிழர்களும் தமிழ் நாட்டு தமிழர்களும் ஒரே இனம் இல்லை அவர்கள் வேறு இவர்கள் வேறு. புலிகள் அதை செய்தார்கள் இதை செய்தார்கள் என அவதூறு கூறியது. உங்களை விமர்சிக்க வேண்டாமென கூறவில்லை விமர்சிக்கிற நேரமும் விமர்சிக்கிற நோக்கமும் மிகவும் முக்கியமானது. என்ன விதத்தில் அதனை சொன்னாலும் சொல்லப்படுகிறவனுக்கு அது புரிந்து விடும் அல்லது தப்பாக புரிந்து கொள்ளும் அபாயமும் இருக்கிறது. அப்படியே கண்கள் மூடி சற்று யோசித்தால் அவர்கள் மேலுள்ள நமது அக்கறையும் கூடவே குத்தி காட்டிய சந்தோசமும் நமக்கு கிடைத்திருப்பதை நம்மால் உணர முடியும்.

  உண்மையான நண்பன் என்பவன் நண்பன் வெற்றி பெற்ற நேரத்தில் அவனின் தவறுகளை சுட்டிக்காட்டி வெற்றியை தக்க வைத்துக்கொள்ள அறிவுரை கூறுபவன். தோல்வி அடைந்த நேரத்தில் சுட்டிகாட்டி நான் சொன்னேன்ல கேட்டியா? என்று வெருப்பெற்றி DISCOUREGE செய்பவன் அல்ல. இத்தனை பேர் சாவுக்கு புலிகளும் தான் காரணம் என்றால்? இத்தனை நாள் அவர்கள் வாழ்ததற்கும் அவர்கள் தான் காரணம். இப்போது புலிகள் இல்லாதா அந்த மண்ணில் தான் போர் முடிந்து இவ்வளவு நாள் கழித்தும் மக்கள் கொடுமை படுத்தப்படுகிறார்கள். புலிகள் தவறு செய்திருக்கிறார்கள் புலிகளின் தவறுகளை விமர்சனம் செய்யுங்கள் ஒரு பக்கம் அவர்களுடைய சரிகளை அதே அளவுக்கு ஆதரித்து கொண்டே செய்யுங்கள்..பிரபாகரனின் மரணத்திற்கு பு.ஜ.அட்டையில் ஒரு ஓரத்தில் கட்டம் போட்டு புலித் தலைமை படுகொலை என்று தப்போ சரியோ வெற்றியோ தோல்வியோ அந்த மாபெரும் போராளியை சிறுமை படுத்தாமல் உரிய மரியாதையோடு செய்யுங்கள்.. கட்டுரைக்கு சம்பந்தம் இல்லாத சில விசயங்களையும் ஒரு நல்ல நண்பனிடம் கொட்டுவது போன்ற உணர்வில் என் எண்ணங்களை வெளிப்படுத்தி இருக்கிறேன். ஏனெனில் மக்களுக்கு உங்களின் நுண்ணிய கட்டுரைகள் போய் சேராது. மக்கள் தனது நண்பன் யார் எதிரி யார்? என்ற அளவில் தான் இருப்பார்கள் சிங்களமா? ஈழமா? அதுதான் அவர்களுக்கு தெரியும் சுய நிர்ணய உரிமை பற்றி எல்லாம் அவர்களுக்கு தெரியாது.. அருவா சுத்தியல் ணா ஆட்டோ சங்கம் னு தான் அவனுக்கு தெரிய வரும், இங்கே மக்களை எதிரி துரோகினு பலரும் குழப்புறான். அதனால நான் தான் அசல் னு காட்ட வேண்டிய நிர்பந்தமும் தமிழ் தேசிய அரசியலுக்கு இருக்கிறது. பெரியார் கூடத்தான் அக்ரகாரத்துக்கு மண்ணெண்ணெய் கேனோட வா னு கூப்பிட்டாரு. அவர் என்ன அதை செய்தாரா? இல்லையே..ஆனால் அப்படி அடிப்பேன் உதைப்பேன் என பேசுவதும் தவறு தான் அதனை பக்குவமாய் சொல்லுங்கள். என் கவலைகள் எல்லாம் நண்பர்களான உங்களை இளைஞர் கள் தவறாக கருதி விடக்கூடாது என்பதுதான். மேலும் நான் sathish prabu என்ற பெயரில் வினவின்
  இலங்கையின் கொலைக் களங்கள் வீடியோ நம்மிடம் கோரும் கடமை என்ன?
  https://www.vinavu.com/2011/06/16/sri-lankas-killing-fields/ என்ற கட்டுரைக்கு வினவின் முக நூல் –ல் என் விவாதத்தை யும் பார்க்கவும்.இதற்க்கு மேல் தாங்காது கண்கள் கடுமையாக வலிக்கிறது. நாம் நேரிலேயே பேசலாமா? தோழர்…இன்னும் ஒரு வாரத்தில் சென்னை க்கு மீண்டும் வருவேன்.. அதற்குள் நீங்கள் தந்த லிங்க் களையும் நிதானமாக படித்து விட்டு வருகிறேன்…

  • யோவ்… நீங்கள் முன்வைத்த கேள்விகளுக்கு குறிப்பான பதிலை எழுதி மேலும் நீங்கள் படிக்க வேண்டிய சுட்டிகளையும் கொடுத்துள்ளேன், நிதானமாக படித்து ஒரு கருத்தை உருவாக்கிக்கொண்டு தெளிவாக உங்கள் வாதத்தை முன்வையுங்கள். ஒரு வேளை நான் உங்கள் கேள்வியை புரிந்து கொள்ளவில்லையென்றால் மீண்டும் உங்கள் கேள்வியை விளக்குங்கள்..

   மற்றபடி நீங்கள் இப்போது எழுதியிருப்பதற்கு உடனே பதில் சொல்லாமல், நீங்கள் மீண்டும் விவாதத்திற்க்கு தயாரானவுடன் பதில் எழுதுகிறேன்..

   நன்றி

 40. அய்யா வினவு, தமிழ் தேசியம் போகாத ஊருக்கு வழி சரி.உங்களது சர்வதேசியம் எப்படி இல்லாத ஊருக்கு வழியா? வர்க்கமாவது வெங்காயமாவது.இன உணர்வை பொது எதிரியை அடையாளம் கண்டு தான் முன்னெடுக்க முடியும். மலையாளிகள்,தெலுங்கர்கள்,கன்னடர்கள் பலவகைகளில் தமிழின துரோகம் புரிந்து வருகிறார்கள். இதெல்லாம் பட்டியலிட்டால் இந்த பக்கம் போதாது. முதலாளித்துவ பயங்கரவாதம் என்கிறீர்கள் அதே நேரம் இங்கு சுயேட்சையான முதலாளித்துவம் வளரவில்லை என்றும் உளறுகிறீர்கள் என்னையா வெங்காயம்?

 41. “ஒய்யாரக் கொண்டை” கட்டுரை, பிரச்சனைகளை தன்மை கொண்டு அனுகாமல் அகவிருப்பம் சர்ந்து அணுகும் முறைக்கு சிறந்த எடுத்துக் காட்டு. தமிழன் பீயை தெலுங்கன் அல்லாலமா என்கிற இடம். நானே தெலுக்கன் தான். எழுத படிக்கத்தெரியாது என்றாலும் வீட்டில் பேசுவோம். என்னாலேயே இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தமிழ்கள் சற்றி இருக்கும் அனைத்து இனங்களாலும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பது மனசாட்சி உள்ள அனைவருக்கும் நன்கு தெரியும். ஓருவர் தமிழருக்கு நெருக்காம அக்கரையோடு இருக்கிறார்கள் என்றால் அது தெலுக்கர்கள்தான்( இதை தமிழ் தேசியவாதிகள் ஒப்புக்கொள்வார்களா என்று தெரியாது). பாலாறு மட்டும் பிரச்சனையில்தான் இவர்களை எல்லாரும் அடிக்கிறார்கள் நாமும் அடித்தால் என்ன? என்பது போல் ஆந்திரா நடந்து கொள்கிறது. சிங்களன்-டெல்லியால், கன்னடனால், மார்வாடி-மலையாளியால், ஆரம்ப நிலையில் தெலுங்கனால் தமிழன் பாதிக்கப்பட்டிருப்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

  பீ வர்ர தெலுங்கனுக்கு தமிழன் குரல் கொடுக்வில்லை என்றால் எந்த தெலுங்கன் ஈழத்தமிழர்களை விடுங்கள் இந்திய தமிழ் மீனவர்களுக்காக குரல் கொடு்த்தார்கள். என் நண்பர் சொல்கிறார் இவர்கள் காஷ்மீர் பிரச்சனைக்காக போராடினார்களா? மத்தவங்க எல்லாம் ஏன் தமிழன் பிரச்சனைகளை பொருட்படுத்துவதில்லை. நதிநீர் பிரச்சனைகளில் உச்சநீதிபதிகளில் தீர்ப்புக்கள் என்னவானது.

  உங்க கட்டுரையை தொடர்ந்து படிக்க முடியவில்லை. மனசாட்சி உள்ளவர்கள் இப்படி எழுத மாட்ர்கள். உலகநாடுகளுக்கு போகும் போதுதான் மணியரசன் போன்றவர்கள் சொல்வது எந்த அளவு உண்மை நியாயம் என்பது புரிகிறது. அவர்கள் தனிப்பட்ட முறையில் எப்படியோ எனக்கு தெரியாது. அவர்களின் மொழிவழி தேசிய இன வரையறுப்பும், தமிழர்கள் இன்றைய நிலைபற்றிய வரையறுப்பும் வீட்டிற்கு வீடு,வீதிக்கு வீதி சரி. இனி மேலாவது திருந்துங்கள்.

  தமிழ் தேசியவாதிகளும் பிரிவினையை கைவிட்டு மற்ற தேசிய இனைங்களை இணைத்துக்கொண்டு ஐரோப்பிய யுனியன் போன்ற கூட்டமைப்பை உருவாக்க முயற்சிக்க வேண்டும்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க